6 TH STD TAMIL QUESTION ANSWER TERM-2 UNIT-2

 

6.ஆம் வகுப்பு-தமிழ்-இரண்டாம் பருவம்

வினா விடைகள்

இயல்-2

நானிலம் படைத்தவன்

சொல்லும் பொருளும்

1.     மல்லெடுத்த - வலிமைபெற்ற

2.    சமர் - போர்

3.    நல்கும் - தரும்

4.    கழனி - வயல்

5.    மறம் - வீரம்

6.    எக்களிப்பு - பெருமகிழ்ச்சி

7.    கலம் - கப்பல்

8.    ஆழி - கடல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்

அ) மகிழ்ச்சி  ஆ) துன்பம்  ) வீரம்   ஈ) அழுகை

2. 'கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கல் + அடுத்து  ஆ) கல் + எடுத்து இ) கல் + லடுத்து   ஈ) கல் + லெடுத்து

3. "நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

) நா + ணிலம்   ஆ) நான்கு + நிலம்   இ) நா + நிலம்  ஈ) நாள் +நிலம்

4 . நாடு + என்ற என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்  சொல்

அ) நாடென்ற  ஆ) நாடன்ற  இ) நாடுஎன்ற   ஈ) நாடுஅன்ற

5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கலம்ஏறி ஆ) கலமறி இ) கலன் ஏறி ஈ) கலமேறி

சொற்றொடரில் அமைத்து எழுதுக

(அ) மாநிலம்  - நான் வாழும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

(ஆ) கடல்  - பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான்.

(இ) பண்டங்கள் -  குமரன் அதிகமான பண்டங்களை வாங்கித் தின்றான்

நயம் அறிக

1. நானியம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

எதுகைச் சொற்கள்:

·        ல்லெடுத்து - மல்லெடுத்த

·        ராக்கி- பேராக்கி

·        முக்குளித்தான்-க்களிப்பு

·        ண்டங்கள் - கண்டங்கள்.

·        ஞ்சாமை அஞ்சுவதை

2. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்!

·        ல்லெடுத்து -  காட்டு

·        ல்லெடுத்த - றக்கால்

·        மாநிலத்தில் - ருதம்

·        நானிலத்தைக் - நாகரிக

குறு விளா

1. நான்கு நிலங்கள் என்பன யாவை?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.

2. தமிழன் எதற்கு அஞ்சினான்?

தமிழன் தீமைகளைச் செய்ய அஞ்சினான்

3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தாள்?

தமிழன் ஏலம், மிளகு ஆகியவற்றை பெரு மகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றி வணிகத்திற்காக கண்டங்களைச் சுற்றி வந்தான்.

சிறுவினா

1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?

·        தமிழன் கற்களும் முட்களும் நிறைந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்.

·        தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.

·        ஊர்நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.

2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?

·        பழந்தமிழன் ஆழமான கடல் கடந்து பயணம் செய்தான்.

·        அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.

·        பனி சூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான்.

·        கண்டங்கள் தோறும் வாணிகம் செய்தான்.

சிந்தனை வினா

1. காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனச் சிந்தித்து எழுதுக.

·        காடுகளில் வாழ்ந்த மனிகள் ஒரே இடத்தில் நிலையாக தங்கி வாழவில்லை.

·        சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.

·        இலைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்.

·        அக்காலத்தில்தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது.

·        பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றான்.

கடலோடு விளையாடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கதிர்ச்+சுடர்  ஆ) கதிரின் + சுடர்   இ) கதிரவன் + சுடர்   ஈ) கதிர் + சுடர்

2. 'மூச்சடக்கி' என்னும்  சொல்லைப் பிரித்து எழுதக்  கிடைப்பது

அ) மூச்சு + அடக்கி  ஆ) மூச்+ அடக்கி இ) மூச் + சடக்கி ஈ) மூச்சை + அடக்கி

3. பெருமை+ வானம்  என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பெருமைவனம்   ஆ) பெருவாம் இ) பெருமானம்   ஈ) பேர்வானம்

4. அடிக்கும் அவை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) அடிக்குமலை   ஆ) அடிக்கும் அலை இ) அடிக்கிலை   ஈ) அடியலை

பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக

1. விடிவெள்ளி - (அ) பஞ்சுமெத்தை   விடை: விளக்கு

2. மணல்  - (ஆ) ஊஞ்சல்                  விடை: பஞ்சுமெத்தை

3. புயல்  - (இ) போர்வை                      விடை: ஊஞ்சல்  

4. பனிமூட்டம்  - (ஈ) விளக்கு             விடை: போர்வை

குறு வினா

1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

மீனவர்கள் கடல் அலையைத் தோழனாகவும், மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

முழுநிலவே கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகிறது.

3. மீவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?

மீனவர்கள் தமது வீடாகக் கருதுவது கட்டுமரமாகும். வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களின் செல்வம் ஆகும்.

சிந்தனை வினா

1. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.

·        எங்கள் ஊர்ப்பகுதியில் பெரும்பாலும் நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது.

·        இங்கு உள்ள மக்கள் இத்தொழிலை நம்பியே பல குடும்பங்கள் உள்ளன.

·        இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

·        பல ஊர்களிலிருந்து வந்து விருப்பத்துடன் நாங்கள் நெய்த ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.

2. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

·        நாட்டுப்புற மக்களின் இன்ப துன்பங்கள் முதலியவற்றை இசையோடு எளிமையாக இனிமையாக பாடிக் காட்டுவதே நாட்டுப்புற இலக்கியமாகும்.

·        பாமர மக்களுடைய பட்டறிவின் கருவூலமாகவும் சிந்தனைச் செல்வமாகவும் ஏட்டில் எழுதா இலக்கியமாகவும் வலம் வருகின்றன.

·        ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக்கொண்டிருக்கும் மற்றொருவர் அப்படியே மனதில் வாங்கி தானும் பாடிப்பாடி பழகி விடுவார்கள்.

 

வளரும் வணிகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வீட்டுப் பயணிபாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்

அ) நுகர்வோர்  ஆ) தொழிலாளி  இ) முதலீட்டாளர்  ஈ) நொவளளி

2. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்தெழுகக் கிடைக்கும் சொல்

அ) வணிகசாத்து  ஆ) வணிகம்சாத்து  இ) வணிகச்சாத்து ஈ) வணிகத்துசாத்து

3. பண்டம் + மாற்று  என்பதனைச் சேர்த்தெழுதக்  கிடைக்கும் சொல்

அ) பண்டமாற்று ஆ) பண்டம்மாற்று இ) பண்மாற்று ஈ) பண்டுமாற்று

4. 'மின்னணு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) மின்+னணு  ஆ) மின்ன + அணு  இ) மின்னல் + அணு  ஈ) மின்+அணு

5. விரிவடைந்த" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

அ) விரி+வடைந்த  ஆ) விரி+அடைந்த  இ) விரிவு +அடைந்த  ஈ) விரிவ்+அடைந்த

பின்வரும் சொற்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக

(அ) வணிகம் -  மனிதவாழ்வில் வணிகம் பெரும் பங்கு வகிக்கிறது.

(ஆ) ஏற்றுமதி  - நம் நாட்டு பொருட்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்ற.

(இ) சில்லறை - கொரோனா பாதிப்பால் சில்லறை வியாபாரிகள் மிகவும் துன்பப்படுகின்றனர்.

(ஈ) கப்பல்  - பழங்காலத்திலிருந்தே கப்பல் வாணிகம் இந்தியாவில் சிறந்து விளங்கியது.

குறுவினா

1. வணிகம் என்றால் என்ன?

ஒரு பொருளை பிறரிடமிருந்து வாங்குவதும் விற்பதும் வாணிபமாகும்.

2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக

·        நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும்.

·        சான்றாக, நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர்.

3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?

நாம் அன்றாடத் தேவைகளான பால், விரை காய்கறிகள், பழங்கள் முதலியவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்

சிறுவினா

1. சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக

சிறுவணிகம்:

·        சிறு முதலீட்டில் பொருள்களை வாங்கி வந்து விற்பான செய்தல், வீதியில் கொண்டு சென்று. விற்பர்,

·        சில்லறை கொள்முதல் செய்து பெரு வணிகர்களிடம் பொருள்களை பெறுவர்,

·        சிறு லாபம் ஈட்டுவர்.

·        நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வார்.

பெருவணிகம்:

·        பெரிய அளவில் கடைகள் அமைத்து விற்பது, மொத்தமாகக் கொள்முதல் செய்வர்,

·        உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே பொருட்களைப் பெறுவார்.

·        பெரும் லாபம் பெறுவர்.

·        நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது மிகவும் குறைவு.

2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?

·        பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவைகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

·        சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

·        அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

சிந்தனை வினா

1. வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?

வணிகப் பொருள்கள் தற்காலத்தில் இணைய வழியாகவும், கடல்வழி மார்க்கமாகும், வான்வெளி மார்க்கமாகவும், தரைவழி மார்க்கமாகவும், மின்னணு பரிமாற்றம் மூலம் மக்களை வந்தடைகின்றன.

கற்பவை கற்றபின்

1. உங்கள் ரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

கரும்பு, சோளம், கம்பு, பருத்தி, தென்னை, நெல், மா, வாழை, கொய்யா, திராட்சை, கேழ்வரகு, தீப்பெட்டி, ஆயத்த ஆடைகள், பால், காய்கறிகள், அழகு சாதனப் பொருள்கள், கிழங்கு வகைகள், பட்டாசுகள் முதலியனவாகும்.

2. ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.

          (எ.கா.) மதுரை - மல்லி

1.     சேலம் மாம்பழம்

2.    பவானி ஜமுக்காளம்

3.    கோவில்பட்டி - கடலை மிட்டாய்

4.    விருதுநகர் பரோட்டா

5.    ஈரோடு மஞ்சள்

6.    தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை

7.    திண்டுக்கல் பூட்டு

8.    கும்பகோணம் வெற்றிலை

9.    திருப்பாச்சி அரிவாள்

10.  ஆம்பூர் பிரியாணி

11.   ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

12.  ராஜபாளையம் நாய்

13.  மணப்பாறை முறுக்கு

14.  சிவகாசி - பட்டாசு

உழைப்பே மூலதனம்

உழைப்பே மூலதனம் கதையை சுருக்கி எழுதுக

·        பூங்குளத்தில் வாழ்ந்த வணிகர் அருளப்பர் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன், தனது மூன்று குழந்தைகளுக்கும் தலா ஐம்பது ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

·        வளவன் அந்தப் பணத்தை உழவுத் தொழிலில் பயன்படுத்தி, காய்கறித் தோட்டம் அமைத்து நல்ல லாபம் பெற்றான்.

·        அமுதா மாடுகள் வளர்த்து பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை விற்று வருமானம் சேர்த்தாள்.

·        எழிலன் மட்டும் தந்த பணத்தைப் பயன்படுத்தாமல் புதைத்து வைத்தான்.

·        பயணத்திலிருந்து திரும்பிய அருளப்பர், வளவன், அமுதா செய்த உழைப்பையும் அவர்களின் முன்னேற்றத்தையும் பாராட்டி பணத்தை அவர்களுக்கே வைத்துக் கொள்ளச் செய்தார்.

·        ஆனால் எழிலனை கடமையைச் செய்யாததற்காக கண்டித்து, உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

முடிவு:

உழைத்தால்தான் உயர்வு; உழைப்பு வாழ்க்கையின் உண்மையான மூலதனம் என்பதை இக்கதை விளக்குகிறது.

இன எழுத்துகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மெல்லினத்திற்கான இ எழுத்து இடம்பெறாத சொல்.

அ) மஞ்சள்  ஆ) வந்தான்   இ) கண்ணில்  ஈ) தம்பி

2. தறைான சொல்----

அ) கண்டான்  ஆ) வென்ரான்  இ) நண்டு   ஈ) வண்டு

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

பிழை

திருத்தம்

தெண்றல்

தென்றல்

கன்டம்

கண்டம்

நன்ரி

நன்றி

மன்டபம்

மண்டபம்

சிறுவினா

1. இன எழுத்துகள் என்றால் என்ன?

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

கற்பவை கற்றபின்

பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.

இன எழுத்துச் சொற்கள்:

தங்கப், வந்தாளே, சிங்கப், தந்தாளே, பஞ்சு, போன்ற, பண்டம், கொண்டு, பந்தல், வந்ததே, நின்றாளே, கம்பம், தென்றல், வந்ததே, தந்ததே, இன்பம்.

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக

 (அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)

·        நான் அரசு பள்ளியில் படிக்கிறேன்.

·        நான் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்.

(ஆ) பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)

·        பொன்னன் வணிகம் செய்து முன்னேறினார்.

·        பொன்னன் வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

·        பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்

அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)

நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)

நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)

நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

கடிதம் எழுதுக.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.

திருத்தணி,

05.03. 2025.

அன்புள்ள மாமா,

இங்கு நானும் என் பெற்றோரும் நலம். அங்கு நீங்களும் அத்தையும் நலமா? கடந்த மாதம் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் நான் வெற்றி பெற்றதற்குப் பரிசாக சிலப்பதிகாரம் புத்தகம் வாங்கி அனுப்பி இருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. நான் நெடு நாளாக படிக்க நினைத்திருந்த புத்தகம் அது. தாங்கள் அனுப்பி வைத்தப் பரிசுக்கு மிக்க நன்றி மாமா.

இப்படிக்கு.

தங்கள் அன்புள்ள

உறைமேல் முகவரி:

பெறுநர்:

கா.அன்பரசன்,

த/பெ கார்மேகம்,

 10. முல்லை நகர்.

தென்காசி - 1

மொழியோடு விளையாடு

பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக

நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புட்பராகம், மரகதம்,

விடை: கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்.

விடுகதைக்கு விடை காணுங்கள்

( கப்பல், ஏற்றுமதி - இறக்குமதி, தராக, நெல்மணி, குதிரை)

1. தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாகும் வந்து அமர்ந்தால் ஏற்றும் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?                              விடை: தராக

2 தண்ணிரில் கிடப்பான், தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்?     விடை: கப்பல்

3. பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு, அவன் யார்?           விடை: குதிரை

4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி: பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?          விடை: நெல் மணி

5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும், இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து

வரும். அவை என்ன?       விடை: ஏற்றுமதி இறக்குமதி

உங்களுக்குத் தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதுக. அத்தொழிலுடன் தொடர்புடைய ஐந்து சொற்களைப் பட்டியலிடுக.

(எ.கா.) 1. உழவுத்தொழில் , ஏர், கலப்பை, காளை, மாட்டுவண்டி, மண்

2. வணிகம்  - பொருள், தராசு, எடைக்கல், தரம், விலை

3. ஆசிரியர் - கரும்பலகை, மாணவன், புத்தகம், ஏடு, எழுதுகோல்

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.   -   ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.    -   ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.    -    அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.   -   அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.    -   அஃது ஓர் இனிய பாடல்.

டிப்போம்; பயன்படுத்துவோம்!

1.     பண்டம் - Commodity

2.    பயணப்படகுகள் - Ferries

3.    பாரம்பரியம் - Heritage

4.    நுகர்வோர் - Consumer

5.    கடற்பயணம் - Voyage

6.    கலப்படம் - Adulteration

7.    வணிகர் -  Merchant

8.    தொழில் முனைவோர் - Entrepreneur

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer
You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை