6.ஆம் வகுப்பு-தமிழ்-இரண்டாம் பருவம்
இயல்-1
ஆசாரக்கோவை
சொல்லும் பொருளும்
1. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
2. ஒப்புரவு
- எல்லோரையும் சமமாகப் பேணுதல்
3. நட்டல்
- நட்புக் கொள்ளுதல்
எதுகை:
நன்றியறிதல் - இன்ளாத
நல்லினத்
- சொல்லிய
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
1. பிறரிடம் நான் ----- பேசுவேன்.
அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும்
திங்கைப் பொறுத்துக்கொள்வது ---- ஆகும்.
அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ)
பொறை
3 . அறிவு + உடைமை என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிவுடைமை
ஆ) அறிவுஉடைமை இ) அறியுடைமை ஈ) அறிஉடைமை
4. இவை + எட்டும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) இவைஎட்டும் ஆ) இவையெட்டும் இ) இவ்வெட்டும் ஈ) இவ்எட்டும்
5. நன்றியறிதல் என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நன்றி + யறிதல் ஆ) நன்றி + அறிதல் இ) நன்று + அறிதல் ஈ) நன்று + யறிதல்
6. பொறையுடைமை என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொறுமை + உடைமை ஆ) பொறை + யுடைமை
இ) பொறு+யுடைமை ஈ) பொறை + உடைமை
குறு வினா
1. எந்த உயிருக்கும்
செய்யக்கூடாதது எது?
எந்த
உயிருக்கும் துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும்.
2. நாம் யாருடன்
நட்புக் கொள்ள வேண்டும்?
நாம்
நற்பண்பு உடையவர்களோடு நட்புக் கொள்ள வேண்டும்.
சிறுவினா
1. ஆசாரக்கோவை
கூறும் எட்டு வித்துகள் யாவை?
1. பிறர்
செய்த உதவியை மறவாது இருத்தல்
2. பிறர்
செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்
3. இளிய
சொற்களைப் பேசுதல்
4. எவ்வுயிர்க்கும்
துன்பம் செய்யாதிருத்தல்
5. கல்வி
அறிவு பெறுதல்
6. எல்லோரையும்
சமமாகப் பேணுதல்
7. அறிவு
உடையவராய் இருத்தல்
8. நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்
சிந்தனை வினா
1. உங்கள் நண்பரிடம்
உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக
· பொறுமை
· உதவி
செய்தல்
· விடாமுயற்சி
· இன்சொல்
பேசுதல்
· தன்னம்பிக்கை
· கருணை
2. நல்ல ஒழுக்கங்களை
வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.
· வித்து
என்பது விதையைக் குறிக்கும்.
· விதையை
மண்ணில் புதைத்தால் முளைத்து பல பெரிய மரமாகும்.
· அதேபோல
நல்லொழுக்கம் என்னும் விதைகளை நம்மனதில் விதைத்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
கண்மணியே
கண்ணுறங்கு
சொல்லும் பொருளும்
1. நந்தவனம்
-
பூஞ்சோலை
2. பார்
-
உலகம்
3. பண்
-
இசை
4. இழைத்து
- பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்
1. முத்தேன்
- கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
2. முக்கனி
-
மா, பலா, வாழை
3. முத்தமிழ்
-இயல்,இசை,நாடகம்
மோனை
நந்தவனம்
- நற்றமிழ்,
பண்ணோடு
- பார்போற்ற
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1.'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கண் + உறங்கு
ஆ) கண்ணு + உறங்கு இ) கண் + இறங்கு ஈ) கண்ணு + இறங்கு
2 . வாழை + இலை என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வாழையிலை
ஆ) வாழை இலை இ) வாழைலை ஈ) வாழிலை
3. உதித்த என்ற சொல்லிற்குரிய
எதிர்ச்சொல்
அ) மறைந்த ஆ) நிறைந்த இ) குறைந்த ஈ) தோன்றிய
குறு
வினா
1. இப்பாடலில்
குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?
1. சேர
நாடு
2. சோழ
நாடு
3. பாண்டிய
நாடு
2. நமது வீட்டிற்கு
வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
இல்லத்திற்கு வந்தவரை இன்முகத்தோடு
வரவேற்று அறுசுவை உணவளிக்க வேண்டும்.
சிறுவினா
1. தாய் தன்
குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
· தமிழ்ச்
சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி
உலகம் புகழ வந்தாயோ
· தந்தத்தால்
ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ!
· இல்லம்
வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை
உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ!
· குளம்
வெட்டி,
அணைக் கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின்
முத்தமிழோ! கண்ணே கணிமணியே கண்மூடி உறங்குவாயாக
சிந்தனை வினா
1. உங்கள் வீட்டில்
சிறுகுழந்தை இருந்தால், அதன் பராமரிப்பில் உங்களின் பங்கு
என்னவாக இருக்கும்?
· குழந்தைக்கு
அன்பும்,
ஆதரவும், கவனிப்பும் கொடுப்பேன்.
· குழந்தைகளின்
உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன்.
· அறிவை
வளர்க்கும் கதை கூறுவேன்.
· குழந்தையின்
சுகாதாரத்தைப் பேணுவேன்.
தமிழர்
பெருவிழா
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1. கதிர் முற்றியதும் ------
செய்வர்.
அ) அறுவடை
ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல்
2. விழாக்காலங்களில் வீட்டின்
வாயிலில் மாவிலையால்----- கட்டுவர்.
அ) செடி ஆ) கொடி இ)
தோரணம் ஈ) அலங்கார வளைவு
3. பொங்கல் அன்று என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று இ) பொங்கலென்று ஈ) பொங்கஅன்று
4. போகிப்பண்டிகை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும்
அ) போகி + பண்டிகை
ஆ) போ+பண்டிகை இ) போகு+
பண்டிகை ஈ) போகிப்+பண்டிகை
5. பழையன கழிதலும் - --- புகுதலும்
அ) புதியன
ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான
6. பச்சைப் பசேல் என்ற வயலைக்
காண இன்பம் தரும்.
பட்டுப் போன மரத்தைக் காண---- தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு
சொற்றொடரில் அமைத்து எழுதுக
(அ) பொங்கல் - மாட்டுப்
பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும்.
(ஆ) செல்வம் - மாடு
என்ற சொல்லுக்கு செல்வம் என்னும் பொருளும் உண்டு.
(இ) பண்பாடு -பொங்கல்
விழா நம் நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
குறு வினா
1. போகிப்பண்டிகை
எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
மார்கழி
மாதத்தின் இறுதி நாளில் வீட்டைத் தூய்மை செய்வதற்காக கொண்டாடப்படும் விழாவாகும்.
2. உழவர்கள் ஏன்
மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
· உழவர்கள்
மாடுகளைச் செல்வமாகக் கருதுகின்றனர்.
· உழவுகளுக்கும்
உழவர்களுக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. எனவே,
மாடுகளுக்கு நன்றி
செலுத்துகின்றனர்.
சிறுவினா:
1. காணும் பொங்கலை
மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
· உற்றார்
உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
· குடும்பத்தினருடன்
விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
· மேலும்
பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியனவற்றை
நடத்துவர்.
· விளையாட்டுப்
போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டி மகிழ்வர்.
சிந்தனை வினா
1. பொங்கல் விழாவின்
போது உங்கள் ஊரில் என்மொன்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
பொங்கல்
விழாவின் முதல் நாளில் ஓட்டப்பந்தயம், மிதிவண்டி
ஓட்டம், கபடி, பானை உடைத்தல், உறியடி விழா, வழுக்கு மரம் ஏறுதல், நகைச்சுவை பட்டிமன்றம், விவாத மேடை, சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள் நடைபெறும்.
2. காணும் பொங்கல்
எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?
·
காணும் பொங்கல்
நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு
உறவாடி மகிழ்வர்.
·
அவ்வாறு உறவாடும்
போது கட்டாயம் ஒற்றுமை வளரச்செய்யும்.
அறிவுசால்
ஔவையார்
அறிவுசார் அவ்வையார் எனும்
நாடகத்தை சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக
· நாட்டு
நலனையே கருதி ஆட்சி செய்த அதியமான், ஔவையாரை
நண்பராக மதித்தான்.
· ஒருநாள்
அரிய நெல்லிக்கனி கிடைத்தபோது, அதனைத் தானே
உண்ணாமல் ஔவையாருக்கே அளித்தான். ஏனெனில், அரசர்கள் பலர்
வந்தாலும் அறிவில் சிறந்த புலவர் ஒருவரை இழந்துவிட்டால் அது ஈடு செய்ய முடியாத
இழப்பு எனக் கூறினான்.
· அந்நேரத்தில்
தொண்டைமான் தமக்கெதிராகப் போருக்கு தயாராக இருப்பதை அறிந்த அதியமான்
கவலைப்பட்டான்.
· இதனை
உணர்ந்த ஔவையார், தனக்கே தூது
பொறுப்பு ஏற்று தொண்டைமானிடம் சென்றார்.
· அங்கு
அவன் படைக்கலங்களைப் பார்த்து, “அவை அழகாக
இருந்தாலும், அதியமான் படைக்கலங்கள் பல போரில் பங்கேற்று
வெற்றி கண்டவையெனும் பெருமை பெற்றுள்ளன” என்று கூறினார்.
· இதைக்
கேட்ட தொண்டைமான் தன்னால் போரிட முடியாது என்பதைக் உணர்ந்து,
அதியமான் மீது போர் புரியாமல் விலகி விட்டான். இதனால் நாட்டில்
அமைதி நிலைத்தது
மொழி
இறுதி எழுத்துகள்
1. மொழிக்கு
இறுதியில் வாரா மெய்யெழுத்துக்கள் யாவை?
க்,
ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய்
எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வாரா.
2. சொல்லின் இடையில்
மட்டுமே வரும் எழுத்துகள் எவை?
சொல்லின்
இடையில் மட்டுமே வரும் எழுத்து ஆய்த எழுத்தாகும்.
கற்பவை
கற்றபின்
மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும்
சொல்லின் இடையில் அமைந்த சொற்களைத் தொகுக்க.
(எ.கா.)
பக்கம், சங்கு, அச்சம்...
1. ஞ்
-
மஞ்சள்
2. ட்
- பட்டம்
3. ண்
- பண்டம்
4. த்
- பத்து
5. ந்
-பந்து
6. ப்
- பாப்பா
7. ம்
- பம்பரம்
8. ய்
- மெய்யெழுத்து
9. ர்
- பார்த்தான்
10. ல்
-கல்வி
11. வ்
- செவ்வாழை
12. ழ்
- தாழ்ப்பாள்
13. ள்
-
உள்ளம்
14. ற்
-வெற்றி
15. ன்
- அன்பு
மொழியை
ஆள்வோம்
கீழ்க்காணும் பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
மனிதர்களுக்கும் தேவையான பொருள்களைக் கிடைக்கச்
செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப்
பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில்
கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.
கிடைக்கும்
பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.
சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக
மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல்
என்பர்.
1. கிடைக்கும் பொருள்களின் மதிப்பை
க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
2. சிலை செதுக்கப்படும்போது
உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம்.
3. வணிகத்தின் நோக்கம் என்ன?
மனிதர்களுக்குத்
தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.
4. மதிப்புக் கூட்டுதல்
என்றால் என்ன?
கிடைக்கும்
பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.
சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால், அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோல மாவாக
மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை
எழுதுக - வணிகம்
பின்வரும் கட்டங்களில் உள்ள
சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க
நீ நான் அவன் அவள் அவர் |
ஊருக்குச்
|
சென்றாய் சென்றார் சென்றேன் சென்றான் சென்றாள் |
· நான் ஊருக்குச் சென்றேன்
· அவன்
ஊருக்குச் சென்றான்
· அவள்
ஊருக்குச் சென்றாள்
· அவர்
ஊருக்குச் சென்றார்
உரையாடலை நிறைவு செய்க
செல்வன் :
வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?
மாமா : நான் நலம். நீ எப்படி இருக்கிறாய்?
செல்வன் :
நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.
மாமா : அப்பா , அம்மா எங்கே சென்றுள்ளா ர்கள்?
செல்வன் :
இருவரும் கடை வீதிக்குச் சென்றுள்ளார்கள்.
மாமா : அப்படியா? நீ எப்படி படிக்கிறாய்?
செல்வன் :
நன்றாகப் படிக்கிறேன் மாமா.
மாமா : நாளை விடுதலை
நாள் விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?
செல்வம் :
ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
மாமா : வெற்றி பெற
வாழ்த்துகள்.
செல்வம் : நன்றி மாமா!!
நட்பு என்னும் தலைப்பில்
கவிதை எழுதுக
இன்பம் கொடுப்ப து நட்பு
ஊக்கம் அளிப்பது
நட்பு
உயர்வைத் தருவது
நட்பு
உண்மையாய் இருப்பது நட்பு.
கீழ்காணும் தலைப்பில் கட்டுரை
வரைக
பொங்கல்
திருநாள்
முன்னுரை:
இயற்கையோடு
இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்.இயற்கையை வணங்குதல் தமிழர்
மரபு.தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து
இருக்கின்றன . அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.இது தமிழர் திருநாள்
என்றும் போற்றப்படுகிறது.
போகித்திருநாள்:
வீட்டில்
உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும்
நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதிநாள் ஆகும். தீயனவற்றை
அழித்து நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்விழா கொண்டாடப் படுகிறது.
பொங்கல்திருநாள்
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும்
திருநாள் அன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலை தோரணம் கட்டுவர்.
புதுப்பாலையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கல் இடுவர். பொங்கல் என்பதற்குப் ”பொங்கி பெருகுவது” என்று பொருள்.
மாட்டுப்
பொங்கல்
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்
மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. உழவுக்கும் உழவருக்கும் உற்ற
துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்
பொங்கல் கொண்டாடப்படுகிறது.
காணும்
பொங்கல்
மாட்டுப் பொங்கல் அடுத்த நாள் காணும் பொங்கல்
ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக்
கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன்
பொழுதை கழிப்பர்
முடிவுரை
இயற்கை, உழைப்பு, நன்றி உணர்வு, பண்பாடு
ஆகியவற்றைப் போற்றும் விழாவாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும். அதற்கு நாம்
அனைவரும் உறுதி ஏற்று பொங்கல் விழாவின் மாண்பை உணர்ந்து செயல்பட வேண்டும்
கீழே
உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா.) கல்+ல்+உண்டு = கல்லுண்டு, கல்+ல்+இல்லை = கல்லில்லை ..
பல்லுண்டு,பல்லில்லை
மின்னுண்டு,மின்னில்லை
மண்ணுண்டு,மண்ணில்லை
தொடரை நீட்டி எழுதுக
1. அறிந்து கொள்ள
விரும்பு (எதையும், காரணத்துடன், தெளிவாக)
· எதையும்
அறிந்து கொள்ள விரும்பு
· எதையும்
காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு
· எதையும்
காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு
2. நான் சென்றேன்
(ஊருக்கு, நேற்று, பேருந்தில்)
· நான்
ஊருக்குச் சென்றேன்
· நான்
நேற்று ஊருக்குச் சென்றேன்
· நான்
நேற்று பேருந்தில் ஊருக்குச் சென்றேன்.
படிப்போம்;
பயன்படுத்துவோம்!
1. அறுவடை - Harvest
2. நன்றியுணர்வு- Gratitude
3. வட்டாரம் - Locality
4. தொட்டில் - Cradle
5. அரண்மனை - Palace
6. மலையுச்சி - Mountain Top
திருக்குறள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1. விருந்தினரின் முகம் ----
வாடும்.
அ) நம் முகம் மாறினால்
ஆ) நம் வீடு மாறினால்
இ) நாம் நன்கு வரவேற்றால் ஈ) நம் முகவரி மாறினால்
2. நிலையான செல்வம்
அ) தங்கம் ஆ) பணம் இ) ஊக்கம் ஈ)
ஏக்கம்
3. ஆராயும் அறிவு உடையவர்கள்---சொற்களைப் பேசமாட்டார்கள்
அ) உயர்வான ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய
4. பொருளுடைமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொருளு + டைமை ஆ) பொரு + ளுடைமை
இ) பொருள் + உடைமை
ஈ) பொருள் + ளுடைமை
5. உள்ளுவது + எல்லாம் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) உள்ளுவதுஎல்லாம் ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம் ஈ) உள்ளுவதுதெல்லாம்
5 பயன் + இலா என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பயனிலா
ஆ) பயன்னில்லா இ) பயன்இலா ஈ) பயன்இல்லா
நயம் அறிக
உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால்
கார்வேம் எனல்.
இக்குறளில் உள்ள எதுகை,
மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
எதுகை
உள்ளத்தால்,
உள்ளலும்
கள்ளத்தால்
-கள்வேம்
உள்ளத்தால்
கள்ளத்தால்
மோனை :
உள்ளத்தால்
- உள்ளலும்
கள்ளத்தால்
- கள்வேம்;
இடம் மாறியுள்ள சீர்களை
முறைப்படுத்தி எழுதுக
1.ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம்
அசைவஇலா உடையான் உழை.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.
2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து,
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
பின்வரும் கதைக்குப்
பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க
வீட்டிற்குள்
வந்த வேலனைத் தந்தை அழைத்தார். "உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக்
கூறினாயே,
பெயர் பொடுத்து விட்டாயா?" என்று
கேட்டார். "இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப்
பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை"
என்றான்
வேலன். "போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப்
போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த
அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே, நீ
போட்டியில் கலந்துகொள்" என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன் "நாளை
பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா" என்றான்.
விடை:
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்
மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
குறுவினா
1. எப்படி உண்பது
விரும்பத்தக்கது அன்று?
அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும்
உண்பது விரும்பத் தக்கது அன்று.
2. எது தீமையானது
என்று வள்ளுவர் கூறுகின்றார்?
அடுத்தவர்
பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.
3. ஆக்கம் யாரிடம்
வழிகேட்டுச் செல்லும்?
தளராத
ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது கேட்டுச்
செல்லும்.
4. நாம் எத்தகைய
சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
பயனுடைய
சொற்களை மட்டுமே பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி