7.ஆம் வகுப்பு-தமிழ்-இரண்டாம் பருவம்
இயல்-1
அழியாச்
செல்வம்
சொல்லும் பொருளும்:
1.
வைப்புழி - செல்வம்
சேமித்து வைக்கும் இடம்
2.
கோட்படா
- ஒருவரால் கொள்ளப்படாது
3.
வாய்த்து
ஈயில் - பெறும்படி கொடுத்தலும்
4.
விச்சை
- கல்வி
5.
வவ்வார்
- கவர முடியாது
6.
எச்சம் - செல்வம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ)
வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிக
2.
கல்வியைப் போல் ------- செல்வம் வேறில்லை.
அ)
விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ) தவறில்லாத
3.
வாய்த்தீயின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)
வாய்த்து+ ஈயின் ஆ) வாய் + தீயின் இ) வாய்த்து + தீயின் ஈ)
வாய்+ஈயீன்
4.
'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
கேடி +இல்லை ஆ) கே + இல்லை இ) கேள்வி+ இல்லை ஈ)
கேடு + இல்லை
5.
எவன்+ ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
எவன் ஒருவன் ஆ) எவள்ளொருவன் இ) எவனொருவன் ஈ) என்னொருவன்
குறுவினா
கல்விச் செல்வத்தின் இயல்புகளாக
நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக
· கல்வியைச்
செல்வம் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.
· ஒருவர்
பெறும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
சிறுவினா
கல்விச் செல்வம் குறித்து
நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுகூ
· கல்வியைச்
செல்வம் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.
· ஒருவர்
பெறும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
· மிக்க
சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
· ஆதலால்
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்லியே ஆகும்.
மற்றவை செல்வம் ஆகாது.
சிந்தனை வினா
"கல்விச்செல்வம் அழியாத
செல்வம்" எனப்படுவது ஏன்? -சிந்தித்து எழுதுக.
· கல்விச்
செல்வமே நிலைத்த புகழைத் தருவதாகும்.
· கல்வியை
மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாலும் குறையாது. பிறரால் திருடவும் முடியாது.
· கல்வி
ஒருவற்கு இருந்தாலும், இறந்தாலும்
நிலைத்த புகழைத் தரக்கூடியதாகும்.
தேயிலைத்
தோட்டப்பாட்டு
சொல்லும் பொருளும் :
1. ராஜரீகம்
- ஆட்சிமுறை
2. அருஞ்சேகரம்
- அரிய சேமிப்பு
3. ரட்சித்து - காப்பாற்றி
4. தயவு
- இரக்கம்
5. பிராணி
- விலங்கு
6. லங்கைத்தீவு
-இலங்கை
7. பாக்கி
- கடன்
8. கட்டுப்பாடு
- உறுதி
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்களுக்கு வருமானம் கொடுத்து
அவர்களைக் காப்பாற்றியது
அ) பற்றுவரவு ஆ) சிக்கனம் இ) கைத்தொழில் ஈ) கப்பல்
2. முற்காலத்தில் இந்திய மக்கள்
துன்பப்பட்டதற்குக் காரணம் ----இல்லாமை
அ) விளையாட்டு ஆ) கல்வி இ) கலைகள் ஈ) முயற்சி
3. நாடெங்கும் என்னும் சொல்லைப்
பிரித்து எழுத கிடைப்பது
அ) நா + டெங்கும் ஆ) நாடு +
டெங்கும் இ) நா + எங்கும் ஈ) நாடு + எங்கும்.
4. குறை + எனவே என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) குறையெனவே ஆ) குறைஎனவே இ) குறையனவே ஈ) குறைவெனவே
குறுவினா
1. இந்திய நாடு எவற்றில் சிறந்து
விளங்கியது?
இந்திய
நாடு நாகரிகத்திலும் ஆட்சி முறையிலும் பிற நாடுகள் பாராட்டுமாறு அரிய சேமிப்பைப்
போல அமைந்த செல்வங்கள் நிறையப்பெற்றுச் சிறந்து விளங்கியது.
சிறுவினா
1. மக்கள் விலங்குகளைப் போல வாழக்
காரணம் என்ன?
· இந்திய
நாட்டிற்குள் வெளிநாட்டினர் வந்து, மக்களுக்கு
வருமானம் தந்து அவர்களைக் காப்பாற்றி வந்த கைத்தொழில்களைச் சிறிது சிறிதாக
அழித்தனர்.
· மக்கள்
ஏமாந்து இருந்த நேரத்தில் அவர்களின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர்.
எனவே,
மக்கள் விலங்குகளைப் போல வாழ்ந்தனர்.
2. மக்கள் குறையில்லாமல் வாழ,
தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?
· மக்கள்
துன்பத்திற்குக் காரணம் கல்வி, ஒழுக்கம்,
நாகரிகம் இல்லாமையே.
· இனி
மக்கள் அவர்கள் குழந்தைகளுக்கு உயர்வான கல்வியைக் கற்பித்துத் தர வேண்டும்.
· ஒற்றுமையுடன்
வாழ்வது என உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
சிந்தனை வினா
1. கூலித்தொழிலாளர்களின்
வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?
· நல்ல
ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
· வேலையில்
பாதுகாப்பு, வாழ்க்கைச் சமநிலை மற்றும்
ஆரோக்கியமான வேலை நடக்கும் சூழல் ஆகியவற்றை உருவாக்கித் தர வேண்டும்.
வாழ்விக்கும்
கல்வி
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1. காலத்தின் அருமையைக்
கூறும் திருக்குறள் அதிகாரம்
அ) கல்வி ஆ) காலம் அறிதல் இ) வினையறிதல் ஈ) மடியின்மை
2. கல்வியில்லாத நாடு------வீடு
அ)
விளக்கில்லாத ஆ) பொருளில்லாத இ) கதவில்லாத ஈ) வாசவில்லாத
3. பள்ளித் தலமனைத்தும்
கோயில் செய்குவோம்'
என்று பாடியவர்
அ) திருக்குறளார் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
4. உயர்வடைவோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) உயர் + வடைவோம் ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம் ஈ) உயர்வு+ அடைவோம்
5. இவை + எல்லாம் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) இவைஎல்லாம் ஆ)
இவையெல்லாம் இ) இதுயெல்லாம் ஈ)
இவயெல்லாம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. செல்வம் - உலகில் அழியாத செல்வம் கல்விச் செல்வமாகும்.
2. இளமைப் பருவம் -
கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவமாகும்.
3. தேர்ந்தெடுத்து -
படிக்க வேண்டிய நூல்களையும் நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
குறுவினா
1. மனிதப் பிறவிக்கும் பிற
உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
· எதிர்காலத்தில்
பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச் சொல்ல முடியும்.
· ஆனால்,
மனிதப் பிறவியின் எதிர்காலத்தைக் கூறவே முடியாது.
2. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி
வள்ளுவர் கூறுவது யாது?
· கல்வி
அறிவு இல்லாதவர்கார் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
· விலங்குகள்
பகுத்தறிவு அற்றதாகும். அதே போல கல்வி அறிவு இல்லாதவன் நன்மை,
தீமை என அறியாதவன்.
3 நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
நூல்களை
நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
சிறுவினா
1. கல்வியே அழியாத செல்வம்
என்பதை விளக்குக.
· உலகத்தில்
எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும்.
· இருபதாண்டுகளுக்கு
முன்பிருந்த பெரிய ஆலமரம் காணவில்லையே என்று கேட்டால்,
சமீபத்தில்
· வீசிய
"தானே" புயலால் விழுந்துவிட்டது என்றனர்.
· நம்
ஊரில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரைக் காணோம். அதோ! வறுமையால் வாடி
உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்றனர்.
ஆகவே,
கல்விச் செல்வத்தைக் காட்டிலும் பிற செல்வங்கள் அனைத்தும்
அழிந்துவிடும்.
2. கல்வியையும் விளக்கையும்
திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
· கல்வி
ஓர் ஒளிவிளக்கு. அஃது இருக்கும் இடத்தை ஒளிமயமாக்கும்.
· ஒருவன்
கற்ற கல்வியைப் பலருக்கு அளிக்க வேண்டும். அதுவே, பலருக்கு கல்வி என்னும் ஒளியைத் தரும்.
சிந்தனை வினா
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள்
கருதுவன யாவை?
· அனைவருக்கும்
எளிதில் புரியும் வகையில் அமைதல் வேண்டும்.
· உண்மையை
விளக்குவதாகவும், நன்னெறிகளைக்
கூறுவனவாகவும் அமைதல் வேண்டும்.
பள்ளி மறுதிறப்பு
மதிவாணன் பள்ளிக்குச் செல்ல
முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
இளமையில்
கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக மாற்றும். எக்காரணத்திற்காகவும் கல்வி கற்பதைத்
தவிர்க்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதையை பிள்வருமாறு காணலாம்.
கயினும் மதிவாணனும்:
கவினும், மதிவாணனும் நண்பர்கள். ஒரே வகுப்பில் படித்து
வருகிறார்கள்.விடுமுறையில் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச்
சென்றனர். நல்ல சம்பளம், தனக்குத் தேவையானவை கிடைக்கிறது.
அதனால் கவின் பள்ளிக்குப் போவதில்லை என்று முடிவு செய்தான்.
மதிவாணனின் எண்ணம்:
நான்
கடைசி வரை தொழிலாளியாகவே இருப்பதா! பலருக்கு வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும். அம்பேத்கரும்
அப்துல்கலாமும் போல நானும் வாழ்வில் உயரவேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை
நன்கு உணர்ந்தான்.
கல்வியறிவு அவசியம்:
பேருந்து
நிறுத்தத்தில் முதியவர், பேருந்து செல்லும் ஊரை அறிய முடியாமல்
தவிப்பதைக் கண்டான். படிக்காதவர்க்கு ஏற்பட்ட அவமானத்தை மதிவாணன்
நன்கு உணர்ந்தான். கல்விதான் தன்னை தலைநிமிர்ந்து நிற்க உதவும் என்பதை உணர்ந்து,
பள்ளியை நோக்கி நடந்தான்.
முடிவுரை:
"இளமையில்
கல்வி முதுமையில் வாழ்வு" ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்ற
பொன்மொழிகளுக்கு ஏற்ப இளமையில் கல்வி கற்று, இன்று
கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புடைய கல்வியை போற்றி, வாழ்வில் உயர்வடைவோம்.
இலக்கியவகைச்
சொற்கள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1. எல்லார்க்கும் எளிதில் பொருள்
விளங்கும் சொல்
அ) இயற்சொல்
ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்
2. பலபொருள் தரும் ஒரு சொல் என்பது
அ) இயற்சொல் ஆ) திரிசொல்
இ) திசைச்சொல் ஈ} வடசொல்
3. வடமொழி என்று அழைக்கப்படும்
மொழி
அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு
பொருத்துக
1. இயற்சொல் - பெற்றம் விடை: சோறு
2. திரிசொல் - இரத்தம் விடை: அழுவம்
3. திசைச்சொல் - அழுவம் விடை:
பெற்றம்
4. வடசொல் - சோறு விடை: இரத்தம்
குறுவினா
1. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாmes?
· பெயர்
இயற்சொல்
· இடை
இயற்சொல்
· விளை
இயற்சொல்
· உரிஇயற்சொல்
2. குங்குமம்,
கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
குங்குமம்,கமலம் என்பன தற்சமய வகை வட சொற்களாகும்.
3. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை
வகைப்படும்? அவை யாவை?
· இலக்கிய
வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்.
· அவை,
இயற்சொல், திரிசொல், திசைச்
சொல், வடசொல்.
4. திரிச்சொல்லின் வகைகள் குறித்து
விளக்குக.
திரிசொல்,
ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள்
குறித்த ஒரு திரிசொல் என இருவகையாக அமைந்துள்ளன.
5. பண்டிகை,
கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
·
பண்டிகை,
கேணி என்பன திசைச் சொற்களாகும்.
·
பண்டிகை,
கேணி முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை
தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி தவிர, பிற மொழிகளில்
இருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்களாதலால் இவை திசைச் சொற்களாகும்.
மொழியோடு
விளையாடு
கீழ்க்காணும் சொற்களை அறுவகைப்
பெயர்களாக வகைப்படுத்துக
பொருள் |
இடம் |
காலம் |
சினை |
குணம் |
தொழில் |
பாரதிதாசன் வடை
அன்னம் |
நல்லூர் பள்ளி
சோலை |
ஐந்து
மணி புதன் காலை |
தோகை
இறக்கை
முகம் |
பெரியது செம்மை |
வருதல், கேட்டல்
விளையாட்டு |
பின்வரும் தொடர்களில்
பொருத்தமான இடங்களில் 'ஆல்'
என்னும் உருபைச் சேர்த்து எழுதுக.
1. கல்லணை கரிகாலன் கட்டப்பட்டது.
விடை: கல்லணை கரிகாலனால்
கட்டப்பட்டது.
2. அறிஞர் அண்ணா தமது பேச்சு வன்மை
மக்களைக் கவர்ந்தார்.
விடை: அறிஞர் அண்ணா தமது பேச்சு
வன்மையால் மக்களைக் கவர்ந்தார்.
3 . திருக்குறள் குறள் வெண்பா
என்னும் பாவகை ஆன நூல்.
விடை: திருக்குறள் குறள் வெண்பா
என்னும் பாவகையால் ஆன நூல்.
4. மற்றவர்களுக்கு என் முடிந்த
உதவிகளைச் செய்வேன்.
விடை: மற்றவர்களுக்கு என்னால்
முடிந்த உதவிகளைச் செய்வேன்.
5. அவர் களிமண் பானை வனைந்தார்.
விடை: அவர் களிமண்ணால் பானை
வனைந்தார்.
கடிதம்
எழுதுக
உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று
அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர்
ஊர்ப்பொதுமக்கள்,
மகாத்மா
காந்தி நகர்,
திருத்தணி
பெறுநர்
நூலக
ஆணையர் அவர்கள்,
பொதநூலகத்துறை,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்:
நூலகம் அமைத்துத் தர வேண்டி விண்ணப்பம்.
வணக்கம்.
எங்கள் மகாத்மா காந்தி நகர் திருவில்லிபுத்தூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு 420 குடும்பங்கள் உள்ளன. 400 மேற்பட்ட படித்த இளைஞர்களும்,
பள்ளி, கல்லூரி மாணவர்களும் உள்ளனர். அன்றாட
செய்திகளை அறிந்து கொள்ளவும் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் எங்கள்
பகுதியில் நூலகம் அமைத்துத்தர ஆவண செய்யுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி!
இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள,
ஊர்ப்பொதுமக்கள்.
இடம் :
மகாத்மா காந்தி நகர்
நாள்:
20.11.2020
உறைமேல் முகவரி:
பெறுநர்
நூலக
ஆணையர் அவர்கள்,
பொதநூலகத்துறை,
சென்னை.
கீழே உள்ள குறிப்புகளைப்
பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக
1. காலையில் பள்ளி மணி அடிக்கும்
2. திரைப்படங்களில் விலங்குகள் நடிக்கும்
காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே -
உதிக்கும்
4. நாள்தோறும் செய்தித்தாள் படிக்கும்
வழக்கம் இருக்க வேண்டும்.
ஓர் எழுத்துச் சொற்களால்
நிரப்புக
1. ஆ புல்லை மேயும்
2. தீ சுடும்
3. நா பேசும்
4. ஈ பறக்கும்
5. பூ மணம் வீசும்
பின்வரும் எழுத்துகளுக்குப்
பொருள் எழுதுக
1. தீ -நெருப்பு
2. பா – பாடல்,
செய்யுள்
3. தை - தைத்தல், மாதம்
4. வை - வைத்தல்
5. மை - அஞ்சனம்
பின்வரும் சொற்களை இருபொருள்
தருமாறு தொடரில் அமைத்து எழுதுக
ஆறு,விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
1. ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.
2. கல்வி நமக்கு ஒளி விளக்கு
அகல் விளக்கு கோவிலில் ஏற்றினோன்,
நீ நன்றாகப் படி.
3. படியில்
யாரும் உட்காராதீர்!
நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்
4. மூத்தோர் சொல் அமுதமாகும்.
சொல் பொருள் அறிக.
5. இளமையில் கல்.
உழைப்பாளி கல் உடைத்தார்.
6. கலா பூமாலை தொடுத்தாள்.
கலா மாலை நேரத்தில் விளைாயாடுவாள்
7. நேற்று இடி மின்னலுடன் மழை
பொழிந்தது.
நேற்று என்னை நண்பன் சைக்கிளில்
வரும்பொழுது இடித்துத் தள்ளிவிட்டான்.
நிற்க
அதற்குத் தக
படிப்போம்;
பயன்படுத்துவோம்!
1. Summer
Vacation - கோடை விடுமுறை
2. Moral
- நீதி
3. Child
Labour - குழந்தைத் தொழிலாளர்
4. Uniform
- சீருடை
5. Guidance - வழிகாட்டுதல்
6. Degree
- பட்டம்
7. Literacy
- கல்வியறிவு
8. Discipline - ஒழுக்கம்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி