7 TH STD TAMIL QUARTERLY EXAM ANSWER KEY RANIPET 2025

 


முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு  2025, இராணிப்பேட்டை மாவட்டம்

7.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

அ. பலவுள் தெரி                                                                                                              5×1=5

1. அ. வழி

2. ஆ. முகில்

3. இ. தெலுங்கு

4. ஆ. கோலிக்குண்டு

5. அ. ஈன்றது

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.                                                                                    6×1=6

6 தொகுதி

7. நங்கூரம்

8. கலங்கரை விளக்கம்

9. கம்மியர்

10. ஆறு   

. பொருத்துக                                                                                                                4×1=4

12. பெயர்ப் பகுபதம் – பெரியார்

13. வினைப் பகுபதம் - வாழ்ந்தான்  

14. இடைப் பகாப்பதம் - மன்  

15. உரிப் பகாப்பதம் - நனி

ஈ. ஐந்து வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக                                  5×2=10

16.

ü  தமிழ் நிறைந்த அறிவைத் தரும்

ü  கொல்லாமையைக் குறிக்கோளாகக் கொண்ட்து

ü   பொய்யாமையைக் கொள்கையாகக் கொண்டது

ü  அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.

17.

·        தமிழ்நாட்டில் தென்றல் வீசும்

·        சுவைமிகுந்த பழங்களும் தானியங்களும் விளையும்.

·        நிறைய நன்செய் நிலங்கள் உடையது.

18. வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சு மொழியாகும்

19. குளிர்ந்த நிழல் தரும் உண்ணக் கனி தரும்

20. காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், காற்று

21. எரா, பருமல், வங்கு, கூம்பு, நங்கூரம்

22. உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்

ஊ. ஐந்து வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக                                       3×4=12

23.

·        இந்தியத்தாய் சினத்துடன் தன்னுடைய கை விலங்கை உடைத்தாள்

·        பகைவரை அழித்து, தன்னுடைய கூந்தலை முடித்தாள்

·        தன் நெற்றியில் திலகமிட்டுக் காட்சியளிக்கிறான்.

24.

ü  நேதாஜியைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

ü  இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

ü  விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்

25.

ü  காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர்.

ü  திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை அறிந்தனர்

ü  கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை தோன்றும் காலங்களைக் கணித்தனர்

26.

ü  பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.

ü  நரிக் கூட்டம் ஊளையிடும்.

ü  யானைகள் தழையை உண்ணும்

ü  சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

27.

ü  குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம்

ü  தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

எ. அடி பிறழாமல் எழுதுக                                                                                                    3+2=5

28. கேட்கப்பட்ட பாடல் பாடநூலில் இடம்பெறவில்லை.

29. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

       தீமை இலாத சொலல்

எ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                           1×6=6

30. அ. முன்னுரை:

    ஆளுக்கு ஒரு வேலை என்னும் பொம்மலாட்டக் கதையைக் காண்போம்.

ஆளுக்கு ஒரு வேலை:

v  சிறுகுடும்பம் ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ளபையன் பள்ளி செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். யார் கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன்.

v  ஒரு நாள் அப்பாவும் அம்மாவும்.படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

v  அவன் வேண்டா வெறுப்பாகப் பள்ளி சென்றான்.பள்ளியை விட்டு ஓடினான். விளையாட யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

v  அப்பொழுது அந்த வழியாக எறும்பு, தேனீ பொதிமாடு,ஆமை,முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான்.

v  அவை அனைத்தும் தனக்கு வேலை உள்ளதாகச் சொல்லி,அவை விளையாட மறுத்து விட்டன.

v  பிறகு குட்டிச் சுவரில் அமர்ந்தான். அது இடிந்து பூச்சி,எறும்பு, வண்டு ஆகியன உனக்குத்தான் வேலைஇல்லை.நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!' என்றுச் சொல்லி அவனைக் கடித்தன.மனம் மாறினான்.

v  தன் அம்மாவிடம்,உலகத்தில் உள்ள அனைத்துக்கும் வேலை உள்ளது. எனக்குப் படிப்பது தான் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி பள்ளிக்குச் செல்கின்றேன் என்றான்.

முடிவுரை:

     மாணவர்களுக்குப் படிப்பது மட்டும் தான் வேலை என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

ஆ. யானை

ü  உலகில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க என இரண்டு வகையான யானைகள் உள்ளன.

ü  ஆசிய யானைகளில் ஆண்களுக்கு மட்டுமே தந்தம் உண்டு; ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் உண்டு.

ü  யானைகள் கூட்டமாக வாழும், பெண்தான் தலைவி. அவை உணவு, தண்ணீர் தேடி இடம் மாறும்.

ü  ஒரு நாள் 250 கிலோ புல், 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். நினைவாற்றல் அதிகம்

விடைக்குறிப்பைப் பதிவிறக்குக

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை