8 TH STD TAMIL QUARTERLY EXAM MODEL QUESTION PAPER-1

 

காலாண்டுப்பொதுத்தேர்வு - 2025 மாதிரி வினாத்தாள் -1

8.ஆம் வகுப்பு - தமிழ்                  

பகுதி - 1

சரியான விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடை இணையும் சேர்த்து எழுதுக          

1. கழுத்தில் சூடுவது

அ) தார்  ஆ) கணையாழி   இ) தண்டை  ஈ) மேகலை

2. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்    

) வைப்பு ஆ) கடல்   இ) பரவை   ஈ) ஆழி                      

 3. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----                                           

அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து                           

4. மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____

அ) தலை ஆ) மார்பு  இ) மூக்கு   ஈ) கழுத்து                           

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

அ) வானம் அறிந்து ஆ) வான்அறிந்த இ) வானமறிந்த  ஈ) வான்மறிந்த                                        

6. திருக்குறளில் விடுபட்ட சீர்களுள் சரியானவற்றைத் தேர்வு                                                      

            வருமுன்னர்  ------ வாழ்க்கை  எரிமுன்னர்  

------ போலக்  கெடும்                                                              

) காவாதான், வைத்தூறு  ஆ)வைத்தூறு , காவாதான்                     

7. நடப்பான்- இச்சொல்லுக்கான வேர்ச்சொல்லைத் தேர்க

) நடந்து  ஆ) நடக்க   இ) நட   ஈ) நடந்த                                                                            

8. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

அ) இளமை   ஆ) முதுமை   இ) நேர்மை   ஈ) வாய்மை

9. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.

அ) படித்தான்  ஆ) நடக்கிறான்  இ) உண்பான்   ஈ) ஓடாது

10. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று                                                     

) தலைவலி ) காய்ச்சல் ) புற்றுநோய்  )  இரத்தக்கொதிப்பு                                     

11.‘ நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ) க், ங்  ஆ) ச், ஞ்  இ) ட், ண்  ஈ) ப், ம்

12. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக் காரணமாக  அமைந்தது.

) ஓவியக்கலை  ஆ) இசைக்கலை  இ) அச்சுக்கலை  ஈ) நுண்கலை

13. 'வருமென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வரு+மென்று  ஆ) வரும் + மென்று  இ) வரும் என்று  ஈ) வரு + என்று

14. ”ஆழி” என்ற சொல்லின் பொருள் யாது?     ) யானை   ஆ) கடல்  இ) மலை  ஈ) மழை

15. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.

அ) வலிமையற்றவர்   ஆ) கல்லாதவர்   இ) ஒழுக்கமற்றவர்   ஈ) அன்பில்லாதவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                              4X1=4

16. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ------- எனஅழைக்கப்பட்டன.

17. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் -------

18. உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ------  எனும் அறிவுக்கலை

19. புறஉலக ஆராய்ச்சிக்கு ------- கொழுகொம்பு போன்றது.

பகுதி - II     பிரிவு-1

எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடை தருக                                                       6X2=12

20. பழியின்றி வாழும் வழியாகத்திருக்குறள் கூறுவது யாது?

21. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

22. ஓவிய எழுத்து என்றால் என்ன?       23. பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?

24. இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?   25. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

26. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

27. திரு. வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களைஎழுதுக.

பிரிவு-1

எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடை தருக                                                  6X2=12

28. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?                 29. மயங்கொலி எழுத்துகள் யாவை?

30. கலைச்சொல் எழுதுக   . CONSONANT  . MEDICINAL PLANT

31. பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக:   கல், பூ, மரம், புல்,

32. ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக: அ. திங்கள்  ஆ. ஆறு

34. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக:   அ. நடக்கின்றது   ஆ. போனான்

35. பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

அ. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

ஆ. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

35. திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

பகுதி - III     பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக                                              2X3=6

36. ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?

37. தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?

38. நமக்கு இருக்கவேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

பகுதி - III     பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக                                             2X3=6

39. உரைப்பத்தியைப் படித்து  வினாக்களுக்கு விடையளிக்க

    கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார்,குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

. கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்?  .கவிமணி எங்கு பிறந்தார்?  . கவிமணி படைத்த நூல்கள்யாவை?

40. நோய்கள் பெருகக் காரணம் என்ன? 41. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

பகுதி - III     பிரிவு-3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக                                                       2X3=6

42. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

43. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?     

44. பிறிது மொழிதல் அணி-விளக்குக.

பகுதி - IV

அடிபிறழாமல் எழுதுக                                                                                              2+3=5

45. “கணைகொடிது” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

46. “ கற்றோர்க்கு” (அல்லது) “ மாமழை” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக    

பகுதி - V

பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.                                                              3X6=18

47. . விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

(அல்லது)

   . குடிநீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்து தருமாறு நகராட்சித் தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக.

48. . தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக                                                                                                          

   ஆ. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

49. அ. காப்பியக் கல்வி குறித்துத்திரு. வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.      (அல்லது)

ஆ. எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

பகுதி - VI

பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.                                                               2X8=16

50. . ”வெட்டுக்கிளியும் சருகுமானும்”  என்ற கதையைச் சுருக்கி எழுதுக          (அல்லது)

ஆ. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

51. அ கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:

      முன்னுரை -  நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை                                                                                                              (அல்லது)

   . ” எனது தாய்மொழி தமிழ்என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக


 வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை