காலாண்டுத்
தேர்வு-மாதிரி வினாத்தாள்(2025-2026)
9.ஆம்
வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்:
100
பகுதி-1
(மதிப்பெண்கள்:15)
சரியான
விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1) தமிழ் விடு தூது----இலக்கிய வகையைச் சார்ந்தது
அ)தொடர்நிலைச்செய்யுள் ஆ)புதுக்கவிதை இ)சிற்றிலக்கியம் ஈ)தனிப்பாடல்
2) நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ. அகழி ஆ. ஆறு இ. இலஞ்சி ஈ. புலரி
3) திமிலுடன் கூடிய காளை ஓவியம் காணப்பட்ட இடம்
அ. கரிக்கையூர் ஆ. மேட்டுப்பட்டி
இ. சித்திரக்கல் புடவு ஈ. கோத்தகிரி
4) திணை, பால், எண் ஆகியவற்றை
உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி
அ) தமிழ் ஆ)
தெலுங்கு இ) மலையாளம் ஈ) கன்னடம்
5) பொருந்தாத தொடரைக்
கண்டறிக.
அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்.
ஆ) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள்
அழைக்கப்படுகிறார்.
இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.
ஈ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்.
6) "காலம்
பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!'இவ்வடிகளில்
பயின்று வரும் நயங்கள் -
அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை ஆ)
இயைபு,
அளபெடை, செந்தொடை
இ) மோனை, எதுகை, இயைபு ஈ) மோனை, முரண், அந்தாதி
7) சிந்தா மணி என்பதன்
இலக்கணக்குறிப்பு.
அ) வேற்றுமைத்தொகை ஆ)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை ஈ)
வினைத்தொகை
8)
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
அ. 6 ஆ. 8
இ. 10
ஈ. 12
9) பெயரடை இடம்பெறாத
தொடரைக் கண்டறிக
அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம் இ)
எந்த ஓளியம்? ஈ) கொடிய விலங்கு
10) பைங்கூழ்
வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக
அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர் இ)
கருவியாகுபெயர் ஈ) கருத்தாவாகுபெயர்
11) கல்லணையைக் கட்டியவர் யார்?
அ. பென்னி குயிக் ஆ. கரிகாற் சோழன்
இ. ஆர்தர் காட்டன் ஈ. நேரு
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
வான்
உட்கும் வடிநீண் மதில்,
மல்லல்
மூதூர் வய வேந்தே!
செல்லும்
உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம்
காவலர் தோள்வலி முருக்கி
12. இப்பாடல் இடம்
பெற்ற நூல்
அ) நீதி நூல் திரட்டு ஆ) புறநானூறு
இ) முக்கூடற்பள்ளு ஈ) முத்தொள்ளாயிரம்
13. மூதூர் இச்சொல்லிற்கான
இலக்கண குறிப்பு
அ) பண்புத்தொகை ஆ)
வினைத்தொகை
இ) ஈறுகெட்ட எதிர்மறை
பெயரெச்சம் ஈ) அன்மொழித்தொகை
14. பாடலில் இடம்பெற்ற
எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ) வான்-மல்லல் ஆ) வான் – உட்புகும் இ) மல்லல் – செல்லும் ஈ) ஞாலம் - காவலர்
15. பாடலில் ”வயவேந்தே” எனக்குறிப்பிடப்பட்ட
மன்னன்
அ) இமயவரம்பன் ஆ) இராசராசன் இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
இ)
புலிகேசி
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)
16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ) பூவின் தோற்ற நிலை
அரும்பு எனப்படும்.
ஆ)“கம்பன் இசைத்த
கவியெல்லாம் நான்” என்று பாரதி பெருமைப்படுகிறார்.
17) கண்ணி
என்பது யாது?
18) உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக்
குறிப்பிடுக
19) நிலையான வானத்தில்
தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
20) பழமணல் மாற்றுமின்:புதுமணல் பரப்புமின் -இடஞ்சுட்டிப் பொருள்
விளக்கம் தருக.
21) ‘விடல்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
22) அளபெடை
எத்தனை வகைப்படும்?
அவை
யாவை?
23) பகுபத உறுப்பிலக்கணம் தருக: கொடுத்தோர்.
24) மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக அ.மேடும் பள்ளமும் ஆ.நகமும் சதையும்
25). தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:
1. இளமையில்
கல்வி ---- 2. சித்திரமும்
கைப்பழக்கம் ------.
26) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை
நிரப்புக.
எண்ணெய் ஊற்றி----விளக்கு ஏற்றியவுடன்,இடத்தை விட்டு-----
27) ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.
அ. விரிந்தன - விரித்தது. ஆ. குவிந்தனர் - குவித்து
28) கலைச்சொல் எழுதுக : அ. Consonants ஆ. Irrigation
Technology
பகுதி-3
(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) ஏறுதழுவுதல் , திணை நிலை
வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
30) மூன்று என்னும்
எண்ணுப்பெயர் பிற திராவிடமொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
31) பத்தியைப்
படித்துப் பதில் தருக:-
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர்.
போர் அறம் என்பது வீரமற்றோர்,
புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப்
போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல்
கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்
மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ. போர் அறம் என்பது
எவற்றைக் குறிக்கிறது?
ஆ. ஆவூர் மூலங்கிழார்
போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?
இ. போரில் யாருக்கெல்லாம்
தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய
வினா)
32) தமிழ்விடு
தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.
33) நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
34)
அ. காடெல்லாம்- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக
(அல்லது)
ஆ. தித்திக்கும் - எனத் தொடங்கும் பாடலை
அடிமாறாமல் எழுதுக
பிரிவு-3
2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான
விடையளிக்க:
35) அளவையாகுபெயர்களின்
வகைகளை விளக்குக.
36) வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில்
எழுதுக.
அ. இந்திய மொழிகளின்
மூலமும் வேருமாகத் தமிழ் ---- (திகழ்)
ஆ. வைதேகி நாளை
நடைபெறும் கவியரங்கில் ---- (கலந்துகொள்)
இ. உலகில் மூவாயிரம்
மொழிகள் ---- (பேசு)
37) அகழ்வாரைத் தாங்கும்
நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - இக்குறட்பாவில் பயின்று வந்த அணியை விளக்குக
பகுதி-4
(மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25
38)
அ) பெரியபுராணம் காட்டும்
திருநாட்டுச் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) காலந்தோறும்
தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக
39)
அ. உங்களின்
நண்பர்,
பிறந்தநாள்
பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த
கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
(அல்லது(
ஆ. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக
ஆ) பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A
nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma
Gandhi
2. The art
of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
3. The
biggest problem is the lack of love and charity – Mother Teresa
4. You
have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
5. Winners don’t do different things;
they do things differently – Shiv Khera
41) நீங்கள் பாராட்டு பெற்ற சூழல்கள்
சிலவற்றைப்பட்டியலிடுக
42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5
(மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43)
அ) ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .
(அல்லது)
ஆ) வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக
44)
அ) புலம் பெயர்ந்த
மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்புத் தெரிகின்றது என்பதை ஆறாம்
திணை வாயிலாக விவரிக்க.
(அல்லது)
ஆ) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி
எழுதுக.
45)
அ . பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற
விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை எழுதுக.
(அல்லது)
ஆ.
உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா
சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள்
(பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றிளை
வடிவமைக்க,
வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி