10 TH STD TAMIL ONE WORD QUESTION ANSWER KEY UNIT-4

 இயல்-4  ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறள் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

2. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி  ஆ) பால் வழுவமைதி  இ) திணை வழுவமைதி  ) கால வழுவமைதி

4. இரவிந்திரநாத தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலிய-==-மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ) ஆங்கில வங்காளம் ) வங்காள, ஆங்கில 

இ) வங்காள, தெலுங்கு  ) தெலுங்கு, ஆங்கில

5. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம் ஆ) நீவிர்  ) அவர்  ) நாம்

6) ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை  வேறொருமொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர்

அ) அகத்தியலிங்கம்  ஆ)மணவை முஸ்தபா    இ) கால்டுவெல்   ஈ) மா பொ சி 

7) ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் மொழிபெயர்ப்பு அவசியம் என்றவர்

அ) மணவை முஸ்தபா  ஆ) அகத்தியலிங்கம்   இ) மு.கு. ஜகந்நாதராஜா  ஈ) பாவாணர் 

8) மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர்---------- குறிப்பிடுகிறார்.

அ) மரபியலில்  ஆ) கிளவியாக்கத்தில்  இ) எழுத்தி்யலில்   ஈ) தொடரியலியல் 

9) மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்’ என்னும் குறிப்பு எச்செப்பேட்டில் உள்ளது

அ) உத்திரமேரூர் செப்பேடு  ஆ) ஆதிச்சநல்லூர் செப்பேடு  இ) சின்னமனூர் செப்பேடு 

10) சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப்  புலப்படுத்தும் செப்பேடு

அ) ஆதிச்சநல்லூர் செப்பேடு ஆ) சின்னமனூர் செப்பேடு  இ) மாமல்லபுரத்து செப்பேடு 

11) வடமொழிக் காப்பியத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியத்தைத் தேர்ந்தெடு 

அ) பெரியபுராணம்  ஆ) சிலப்பதிகாரம்  இ) கலிங்கத்துப்பரணி  ஈ) சீவக சிந்தாமணி 

12) தேசிய உணர்வு  ஊட்டுவதற்கும்,ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் பயன்பட்ட கருவி 

அ) தேசபக்தி   ஆ) மொழிபெயர்ப்பு    இ) பாடல்கள்   ஈ)கவிஞர்கள்

13) பின்வருவனவற்றுள் தொடர்பில்லாததைக் கண்டுபிடி

அ) சாகித்திய அகாதமி ) தேசிய புத்தக நிறுவனம் 

இ) மைய நூலகம்  ஈ) தென்னிந்திய புத்தக நிறுவனம் 

14)’மொகுசாஸ்டுஎன்ற ஜப்பானியச் சொல்லின் சரியான தமிழாக்கம்

அ) விடைதர அவகாசம் வேண்டும்       

ஆ) சரணடைய மறுக்கிறோம்                                                                        

இ) சரணடைய விருப்பமில்லை            

ஈ) இறுதிவரை முயற்சிப்போம் 

15) தங்களுடைய  இலக்கியம், பண்பாடு, கலை, தொழில் வளர்ச்சி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழியை கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருபவை

அ) பள்ளிகள்  ஆ) பன்னாட்டுத் தூதரகங்கள்  இ) மொழி நூல்கள்   ஈ) தொழில் மையங்கள்

16) பிற மொழி இலக்கியங்களை  அறிந்து கொள்ளவும், அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் பயன்படுவது-----------

அ) தாய்மொழி அறிவு  ஆ) இலக்கிய அறிவு  இ) மொழிபெயர்ப்பு  ஈ) கல்வியறிவு 

17) -------மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமான சேக்ஸ்பியர் அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

அ) ஆங்கிலம்    ஆ) பிரெஞ்சு   இ) இத்தாலி     ஈ) ஜெர்மன் 

18) மொழிபெயர்ப்பால் உலக மக்களுக்கு உரிய நூலாக மாறிய நூல்-----------

அ) வெனிஸ் நகர வணிகன்   ஆ) திருக்குறள்   இ) சாகுந்தலம்   ஈ) சிலப்பதிகாரம்

19) கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பு எழுதப்பட்ட மொழி--------

அ) தமிழ் ஆ) தெலுங்கு   இ) வங்க மொழி   ஈ) இந்தி

20) இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததால்தான் அவருக்கு---- பரிசு கிடைத்தது

அ) பத்மபூஷன்    ஆ) நோபல் பரிசு   இ) சாகித்திய அகாதமி   ஈ) ஞானபீட விருது 

21) ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை கொண்டு எவற்றை மதிப்பிடலாம்?

அ) பண்பாட்டையும் அறிவையும்       

ஆ) பொருளாதாரம், தொழில் வளர்ச்சி                                                 

இ) கலாச்சாரம், பண்பாட்டு வளர்ச்சி   

ஈ) நிர்வாகம், தொழில் வளர்ச்சி 

22) ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை பின்வரும் எதைக்கொண்டு முடிவு செய்வாய்?

அ) வருமானம்   ஆ) மக்கள் தொகை   இ) மின்னாற்றல் பயன்பாடு   ஈ) கல்வி

23) வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இயற்றியவர்------------

அ) ரவீந்திரநாத் தாகூர்  ஆ) அமர்சிங்   இ) ராபின் ஷர்மா   ஈ) ராகுல் சாங்கித்யாயன் 

24) வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை 1949 ல் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்

அ) இளங்குமரனார்  ஆ) கண முத்தையா இ) ரவீந்திரநாத் தாகூர்  ஈ) சந்தீப் சிங்

25) Hundred rail sleepers were washed away என்ற தொடரின் சரியான மொழிபெயர்ப்பு

அ) தொடர்வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த 100 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

ஆ) தொடர்வண்டியில் 100 பேர் துணித்து வைத்தனர்

) தண்டவாள குறுக்குக்கட்டைகள் அடித்துச்செல்லப்பட்டன

ஈ) இறங்கியவர்கள் துணி துவைத்தனர்

26) முறையான சொற்றொடரைக் கண்டுபிடிக்க

அ) ஊசி காதில் வடம் நுழையாது  ஆ) வடம் நுழையாது ஊசி காதில்

இ) நுழையாது காதில் வடம் ஊசி    ஈ) வடம் காதில்  ஊசி நுழையாது 

27) CAMEL என்ற சொல்லின் பொருள்-------

அ) பயிறு      ஆ) பயறு    இ) வடம்    ஈ) எருது 

28) UNDERGROUND DRAINAGE என்ற சொல்லுக்குச்  சரியான மொழிபெயர்ப்பான புதை சாக்கடை என்பது  எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) தமிழ்   ஆ) மலையாளம்    இ) கன்னடம்    ஈ) தெலுங்கு

29) Transcribe என்ற சொல்லின் தமிழாக்கம்-------

அ) படியெடுத்தல்   ஆ) மின்மாற்றி    இ) தொலைநகலி  ஈ) செறிவட்டை 

30) மொழிபெயர்ப்பு அதிகம்  உதவுவது-----------

அ) வளர்ந்த நாடுகளில்  ஆ) பின்தங்கிய நாடுகளில் 

இ) வளரும் நாடுகளில்  ஈ) வல்லரசு நாடுகளில்

31) ஜெர்மனியில்  ஓராண்டில்  பிற மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படும் நூல்கள்  எண்ணிக்கை

அ) 6000   ஆ) 4000   இ) 7000   ஈ) 5000 

32) பிறமொழிகளில்  அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள்---------

அ) ஆங்கில நூல்கள்  ஆ) தமிழ் நூல்கள்  இ) கிரேக்க நூல்கள் ஈ) இத்தாலிய நூல்கள்

33) கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு -----------எனப்படுகிறது

அ) பயன்கலை  ஆ) நுண்கலை   இ) திறன்கலை   ஈ) மொழிகலை

34) ’காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்

        கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி

        பேசி மகிழ்நிலை வேண்டும்என்று கூறியவர்

அ) பாரதியார்  ஆ) பாரதிதாசன்   இ) குலோத்துங்கன்    ஈ) நாமக்கல் கவிஞர் 

35) ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

        செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்‘  என்று முழங்கியவர் 

அ) பாரதியார்    ஆ) பாரதிதாசன்   இ) கவிமணி   ஈ) நாமக்கல் கவிஞர்

36) பொருந்தாத சொல்லைக் கண்டுபிடிக்க.

அ) மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் ஆ) மூவருலா 

இ) சரளிப்புத்தகம்  ஈ) புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் 

37)இராமாயண மகாபாரத தொன்மைச் செய்திகள் இடம்பெற்றுள்ள தமிழ் இலக்கியம் 

அ) சங்க இலக்கியம்  ஆ) பக்தி இலக்கியம்  இ) சிற்றிலக்கியம்  ஈ) நவீன இலக்கியம் 

38) மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக் கூடிய கொள்கை

அ) நடப்பியல்  ஆ) தத்துவவியல்  இ) இலக்கியத் திறனாய்வு  ஈ) திறனாய்வு

39) மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி--------- ஏற்படுகிறது.

அ) மொழி பிளவு    ஆ) மொழிவளம்    இ) மொழி சிதைவு  ஈ) மொழி மாற்றம் 

40) பிரான்ஸ் தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய -----------  பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.

அ) நூறு    ஆ) ஆயிரம்  இ) மூவாயிரம்    ஈ) பதினாயிரம்

41) கபிலரின் நண்பர்

அ) பரஞ்சோதி முனிவர்  ஆ) இடைக்காடனார்  இ) பாண்டியன்  ஈ) ஒட்டக்கூத்தர்

42) திருவிளையாடற் புராணத்தை  இயற்றியவர்-----------

அ) சமணமுனிவர்  ஆ) அகத்திய முனிவர்  இ) பரஞ்சோதி முனிவர்  ஈ) இடைக்காடனார்

43) மன்னனின் பிறையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி------------ல் சென்று தங்கினார்

அ) திருஆலவாய்   ஆ) திருஆலங்காடு  இ) திருக்கழுக்குன்றம் ஈ) திருப்பாதிரிப்புலியூர் 

44) கழிந்த பெரும்  கேள்வியினான் யார்

அ) இறைவன்   ஆ) இடைக்காடனார்  இ) குலேச பாண்டியன்   ஈ) சேக்கிழார் 

45) வேப்ப மாலையினை அணிந்தவன்----------

அ) சோழன்     ஆ) பாண்டியன்    இ) பல்லவன்   ஈ) சேரன் 

46) சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் -  யார், யாரிடம் கூறியது?

அ) இறைவன் இடைக்காடனாரிடம்  ஆ) இடைக்காடனார், பாண்டியனிடம் 

இ) பாண்டியன், இறைவனிடம்   ஈ) இடைக்காடனார், இறைவனிடம் 

47) சரியானவற்றை பொருத்துக

       அ)தார்          -   1. தலை

       ஆ)முடி         -  2. மாலை

       இ)முனிவு    -   3. உறவினர்

       ஈ) தமர்         -   4. சினம்

அ) 1,2,3,4      ஆ) 4,3,2,1       இ) 2,1,4,3      ஈ) 2,1,3,4

48) முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தவர்---------, அவருக்கு கவரி வீசியவர்---------- 

அ)மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை 

ஆ) பெருஞ்சேரல் இரும்பொறை, மோசிகீரனார்                        

இ) கபிலர், இடைக்காடனார்                               

ஈ) இறைவன், பாண்டியன் 

49) முரசு கட்டிலில்  கண்ணயர்ந்த மோசிக்கீரனாருக்குப் பெருஞ்சேரல் இரும்பொறை  கவரி வீசிய செய்தியை குறிப்பிடும் நூல்

அ) அகநானூறு   ஆ) புறநானூறு  இ) பதிற்றுப்பத்து    ஈ) முல்லைப்பாட்டு 

50) திருவிளையாடற் கதைகள் இடம்பெற்ற காப்பியம் ---------

அ) பெரியபுராணம்   ஆ) மகாபாரதம்    இ) சிலப்பதிகாரம்     ஈ) கம்பராமாயணம் 

51) திருவிளையாடற் புராணம்---- காண்டங்களையும்,----- படலங்களையும் உடையது.

அ) 4,20        ஆ) 3,30       இ) 5,35     ஈ) 3,64 

52) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர்-------

அ) திருவாலங்காடு    ஆ) திருமறைக்காடு     இ) திருவேற்காடு     ஈ) திருவிளையாடல் காடு 

53) பரஞ்சோதி முனிவர்-----ஆம்  நூற்றாண்டைச் சார்ந்தவர்.

அ) பதினேழாம்   ஆ) ஏழாம்    இ) பதினாறாம்    ஈ) பன்னிரண்டாம்

54) பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு

அ) கலிவெண்பா  ஆ) பதிற்றுப்பத்தந்தாதி   இ) ஏரெழுபது  ஈ) திருவிளையாடற் புராணம் 

55) மூரி தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக்கண்டு- தாரானை என்பது யாரைக் குறித்தது?

அ) சிவபெருமான்  ஆ) கபிலர்   இ) குலேச பாண்டியன்    ஈ) இடைக்காடனார் 

56) கடம்ப வனத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர்

அ) பாண்டியன்   ஆ) இறைவன்   இ) இடைக்காடனார்  ஈ) கபிலர்

57) திணையின் உட்பிரிவு----------

அ) உயர்திணை     ஆ) எண்     இ) பால்    ஈ) இடம்

58) உயர்திணைப் பால் பகுப்பில் அமைந்த சொல் வரிசையைத் தேர்ந்தெடுக்க

அ) வீரன், புறா, மலை   ஆ) யானை, ஆடவர், தலைவி 

இ) கல், மண், மரம் ஈ) ஆண், பெண், மகள் 

59) அஃறிணைக்குரிய பால்பகுப்புகள்-----------

அ) ஒன்றன்பால், பலவின்பால்  ஆ) ஆண்பால், பலர்பால்

இ) பெண்பால், பலவின்பால்  ஈ) பலர்பால், பெண்பால் 

60) இடம்--------வகைப்படும்

அ) 2      ஆ) 4      இ) 3     ஈ) 7

61) வந்தேன்,வந்தோம்  என்பன---------

அ) தன்மை பெயர்கள்   ஆ) தன்மை வினைகள்  

இ) முன்னிலைப் பெயர்கள்  ஈ) முன்னிலை வினைகள்

62) பொருத்துக

     அ) நான், யான். நாம், யாம்                   -  1. தன்மை வினைகள்

     ஆ) செய்தேன், செய்தோம்                  -  2. தன்மைப் பெயர்கள்

     இ) நீர், நீவிர், நீ, நீங்கள்                       -  3.முன்னிலை வினைகள்

     ஈ) நடந்தாய், வந்தீர், கேளுங்கள்          -  4. முன்னிலைப் பெயர்கள் 

அ) 2 3 1 4  ஆ) 2 1 4 3  இ) 3 1 4 2   ஈ) 3 4 1 2

63) இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்--------- ஆகும் .

அ) வழு    ஆ) வழாநிலை     இ) வழுவமைதி    ஈ) இயல்பு வழக்கு 

64)இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் ------------ஆகும்.

அ) வழு       ஆ) வழாநிலை     இ) இயல்பு வழக்கு   ஈ) தகுதி வழக்கு 

65) வழு--------வகைப்படும்

அ) 9     ஆ) 8      இ) 6      ஈ) 7

66) ஒரு விரலைக் காட்டிச்  சிறியதோ? பெரியதோ? என்று கேட்பது------------

அ) ஐய வினா   ஆ) வினா வழாநிலை    இ) வினா வழு    ஈ) வழுவமைதி 

67) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுவது………..

அ) மரபு வழாநிலை ஆ) மரபுவழு    இ) வழுவமைதி   ஈ) திணை வழு 

68) இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது--------

அ) வழுவமைதி    ஆ) வழாநிலை     இ) வழு     ஈ) மரபுவழி 

69) என் அம்மை வந்தாள்  என்று மாட்டை பார்த்து கூறுவது

அ) திணை வழாநிலை  ஆ) திணை வழு  இ) திணை வழுவமைதி   ஈ)பால்வழுவமைதி

70) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது--------

அ) திணை வழுவமைதி  ஆ) பால் வழுவமைதி  இ) இட வழுவமைதி   ஈ) கால வழுவமைதி 

71)  கத்துங் குயிலோசை -  சற்றே வந்து 

        காதிற் படவேணும் ‘  என்ற வரிகள் பாரதியார் கவிதையில் இடம் பெற்றிருப்பது

அ) கால வழுவமைதி  ஆ) மரபு வழுவமைதி  இ) பால் வழுவமைதி  ஈ)திணைவழுவமைதி


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை