10 TH STD TAMIL FIVE MARKS QUESTION BANK

 10.ஆம் வகுப்பு தமிழ் 

ஐந்து மதிப்பெண் வினாவங்கி

10.ஆம் வகுப்புதமிழ் வினாவங்கி

இயல் – 1

1. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக

கவிஞன் யானோர் காலக் கணிதம்.

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேவை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!                  -  கண்ணதாசன்

இயல் – 2

2. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

வளரும் விழி வண்ணமே வந்து

   விடித்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே

   நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இனந் தென்றலே - வளர்

    பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க

இயல் – 3

3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

4. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக எழுதிப் படித்துக் காட்டுக.

இயல் – 4

5. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

இயல் – 5

6. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!

இயல் – 6

7. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

8. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

இயல் – 7

9. கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

10. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

கடிதம் எழுதுதல்

1. மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

2. மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

3. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

4. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

5. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்` என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

6. பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த தையும் அதற்காகப் பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

7. உங்கள் தெருவில்  பழுதடைந்துள்ள  மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

படிவங்கள்

1. 22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள் கந்திற்பாவை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக.

2. கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

  தந்தை பெயர்: பிறைசூடன், மாணவர் பெயர்: செந்தூரன், முகவரி: 32 தேர் வீதி, எழில் நகர், மதுரை-1. சேர விரும்பும் விளையாட்டு: சிலம்பாட்டம்.

3. எழில்குமரனின் மகன் தமிழ்மேகன் தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு வேண்டி திருத்தணி பகுதியிலுள்ள துணியகம் ஒன்றில் விண்ணப்பிக்க விரும்புகிறார். அவருக்கு தன்விவரப்பட்டியல்  நிரப்பி உதவுக.

4. மதிவதனியின் தந்தை பொற்கோ தனது மகளை தமிழாய்வுக்கூடம் ஒன்றில் தமிழ் தட்டச்சர் பணிக்காகச் சேர்க்க உள்ளார். அவருக்கு தன்விவரப் படிவத்தை நிரப்பித் தருக

5. பத்தாம் வகுப்பு பயிலும் கார்மேகன், அரக்கோணம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் தனது தந்தை கரிகாற்சோழனுடன் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச் செல்ல உள்ளார். அவருக்கு நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்பி உதவுக.

6. விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

7. 15, கோயில் தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில் வசிக்கும் இளங்கோவன் என்பவரின் மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில் 10. ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு, தமிழ் வ்ழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

8. .நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெரு, வடக்கு வீதி, சிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதேபகுதியில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,.வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவுக.

மொழி பெயர்ப்பு

இயல் – 1

1. If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

இயல் – 2

3. The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

இயல் – 3

4. Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

இயல் – 4

5. Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.

இயல் – 5

6. Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar.

இயல் – 6

7. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

இயல் – 7

     8.     Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

     9.     Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

  10.     It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

  11.     Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

நிற்க அதற்குத் தக

இயல் – 1

இன்சொல் வழி

தீய சொல் வழி

1.     இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

இயல் – 2

2.    புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

இயல் – 3

3.    "தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?"  - "கேரட்"

"பிடிச்ச பழம்?"  - "ஆப்பிள்"

பிடிச்ச காலை உணவு? - "நூடுல்ஸ்"

"மத்தியானத்துக்கு" - "ஃப்ரைடு ரைஸ்" ,

ராத்திரி”  - "பீட்ஸா அல்லது பாஸ்தா"

இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல." சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்" என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனிக் காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், 'ஆம், காணாமல் போய்விடும்'! உங்கள் குழந்தைகள், "ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா அம்மா? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்!

இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

இயல் – 4

4. பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

இயல் – 5

5. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தபின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.

இயல் – 7

மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடு

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை