10 TH STD TAMIL THREE MARKS QUESTION BANK

  10.ஆம் வகுப்பு தமிழ் 

மூன்று மதிப்பெண் வினாவங்கி

இயல் – 1

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

    இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க

3. அறிந்தது, அறிந்தது, புரிந்தது. புரியாதது. தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.  அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றுக

இயல் – 2

4. உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய் ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

5. உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

6. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.

இயல் – 3

7. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

8. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.

9. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

10. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.சிலர்மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த விட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தன் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே விடு சென்றேன்.


பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

11. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

   கோலொடு நின்றான் இரவு     - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

12. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக

13. கவிதையைத் தொடர்க.

இயல் – 4

14. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்? விளக்கம் தருக

15. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

16. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு.

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரித்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (cranslati) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது: ஆனாய் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வர்.

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக

17. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்' என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தான்.    இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக

இயல் – 5

18. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

19. கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.

சுறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ

 

20. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

21. 'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

வாழ்வியல் இலக்கியம் திருக்குறள்

22. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.

23.  தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

       மேவன செய்தொழுக லான்.   - இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக.

இயல் – 6

24. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

25. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

26. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்:

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்:

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

ஆ) பாடலில் உள்ள மோனையை எடுத்து எழுதுக.

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

ஈ) காருகர் - பொருள் தருக.

உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப்  பொருள்கள் யாவை?

27. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

மருவூர்ப் பாக்கம்

மருவூர்ப்பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டினப்பாக்கம் என்பது கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்: வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணி கலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்களைக் குவித்து விற்கும் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை, வாசனைப் பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய் விற்போர், பொன், வெள்ளி, செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர். பொம்மைகள் விற்போர். சித்திரவேலைக்காரர். தச்சர், கம்மாளர். தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இயல் – 7

28. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

29. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.

30. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

31. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

32. சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் செயலிலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும்.)

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

1.     தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும், சில்வகைப்பட்டவனவாகவும் இருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை. வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

(அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?

(ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

(இ) தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.

2.     அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

(அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை ?

(ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது ?

(இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது ?

3.    பருப் பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(இ) பெய்த மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4.    "போலச்செய்தல்" பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

(அ) எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது ?

(ஆ) பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

(இ) யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது ?

5.   ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

(அ) ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன ?

(ஆ) தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?

(இ) மொழிபெயர்ப்பின் பயன் என்ன ?

6.     தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ. ஆவூர் மூலங்கிழாரின் போர் அறம் யாது?

ஆ. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

இ. யாருக்கெல்லாம் தீங்கு வராதவண்ணம் போர் புரிய வேண்டும்?

7.      தற்போது வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது. உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது. இன்றைய தொழில்நுட்பம். செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?

ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?

இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?

8.      அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கருத்துகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன். யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச்செல்வம் பற்றி ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

ஆ. ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

9.    சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.

அ. பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?

ஆ. நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ. நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?

10. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. ‘இல்லொழுக்கங் கூறியபகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாகஇடம்பெற்றுள்ளது.

    முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தஇவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலானவெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்றபட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

1. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் யாது?

2. முத்துக்குளிக்கும் நகரம் எது?             

3. சீவலமாறன் என்பது யாருடைய பட்டப்பெயர்?

11.   1953–54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள(திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம். தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகின்ற பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டு வைத்திருந்தேன். அவர்களுள் பி.எஸ். மணி, . சங்கரலிங்கம், நாஞ்சில் மணிவர்மன், பி.ஜே.பொன்னையா ஆகியோர் முதன்மையானவர்கள்.

1. தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த அமைப்பு யாது?  

2. தெற்கெல்லைப் பகுதிகளைத் தனவசம் வைத்திருந்த அரசு எது ?

3. இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.

12.       மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது: ஷேக்ஸ்பியர் இருந்திருக்க முடியாது; கம்பன் இருந்திருக்க முடியாது. இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலக அளவில் உயரிய விருதுகளும், ஏற்பும் கிடைத்திருக்கும்.

அ) இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதை நூல் எது?

ஆ) இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்போது?

இ) மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் எவை கிடைத்திருக்கும்?

13.      வாய்மையே சிறந்த அறமாக சங்க இலக்கியங்கள் பேசப்படுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்று கருத்தை இலக்கியங்கள் கூறுகின்றன. நக்கு ஒரு அதிசய திறவுகோல் என்பார்கள். நாக்கு தான் இன்பத்தின் கதவை திறப்பதும் துன்பத்தின் கதவை திறப்பதுவும் ஆகும். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது.

1) எதை சிறந்த அறமாக சங்க இலக்கியம் பேசுகிறது?

2) நா என்பதன் பொருள். யாது?.

3) மனிதனை நா எப்பொழுது தாழ்த்துகிறது?

14.   ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள். கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்கின்றனர் தமிழர் பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல நூல்களை நாடிச் சென்று அறிவு பெற வேண்டும்.

அ) கல்வியைப் போற்றுதல் எக்காலத்தில் இருந்து தொடர்கிறது?

ஆ) நூல்களை நாடிச்சென்று அறிவு பெறுதல் எதனோடு ஒப்பிடப்படுகிறது.

இ) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம் எது?

15.     வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகிறார். உறவினர் வேறு. விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.

அ) விருந்தினர் என்போர் யாவர்?

ஆ) விருந்து குறித்துத் தொல்காப்பியர் கூறியது யாது?

இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

அணி இலக்கணம்

1)   வேலொடு  நின்றான் இடுஎன்றது போலும்

       கோலொடு நின்றான்  இரவு         - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

2)  ண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

      கண்ணோட்டம் இல்லாத கண்.           - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

3) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

     நச்சு  மரம்பழுத்  தற்று.              - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

இயல்-6

4) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருளல்ல தில்லை  பொருள்.             - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

5) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

    றுண்டாகச் செய்வான் வினை                 - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

6) தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

     அழுதகண் ணீரும் அனைத்து.                 - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

7) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

     இன்மையே  இன்னா தது.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

8) தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

     மேவனசெய்  தொழுக  லான்.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

9) சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்

    கொல்லப் பயன்படும் கீழ்.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

அலகிட்டு வாய்பாடு எழுதுக

(அலகிட்டு வாய்பாடு எழுதுதலுக்கு எந்த திருக்குறளும் தரப்படலாம்)

பயிற்சி திருக்குறள்கள்

1.     ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

2. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

    எய்துவர் எய்தாப் பழி.

3. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

    கல்லார் அறிவிலா  தார்.

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்


 

 

 

 


You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை