10 TH STD TAMIL 8 MARKS QUESTION BANK

  10.ஆம் வகுப்பு தமிழ் 

எட்டு மதிப்பெண் வினாவங்கி

இயல் – 1

1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

2. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

3. குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டுசான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

இயல் – 2

4. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

5. பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க

இயல் – 3

6. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

7. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

8. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

9. வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினரைப் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் இவைபோன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துவந்து கலந்துரையாடுக.

இயல் – 4

10. கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

11. தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் அறிவியல் கருத்துகள் பிற துறைக் கருத்துகள் தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

12. பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக. குறிப்பு: நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

இயல் – 5

13. போராட்டக் கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

14. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

15. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

இயல் – 6

15. நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

16. எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

17. உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.

18. உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை தொகுத்து எழுதுக.

குறிப்பு : பூவிற்பவர் , சாலையோர உணவகம் நடத்துபவர்

இயல் – 7

19. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

20. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.

21. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.


பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்




You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை