10.ஆம் வகுப்பு – தமிழ் அலகுத்தேர்வு இயல்-5
பலவுள்
தெரிக. 9×1=9
1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2:
அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2
தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ)
கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
2.
"மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ)
பழுப்பு ஈ) நீலம்
3.
தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை நாடகத்தில்
நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா? ஈ) யாருக்குப் பாராட்டுவிழா
நடத்தப்பட்டது?
4.
சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
5.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல்
நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை
நிலங்கள்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
"வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்
றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்
உண்மை யில்லைபொய்
யுரையி லாமையால்
வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்"
6. பாடலின் ஆசிரியர் அ)
வீரமாமுனிவர் ஆ) தமிழழகனார் இ) கம்பர் ஈ) இளங்கோவடிகள்
7. ---மிகுந்திருப்பதால் கோசல நாட்டில் அறியாமை இல்லை
அ) வறுமை ஆ) கொடை இ) பொய்மொழி ஈ. கேள்வி
8. எதுகையைத் தேர்ந்தெடுக்க.
அ) உண்மை, வெண்மை ஆ) உண்மை, பொய்யுரை இ) வண்மை, வறுமை ஈ) வெண்மை, கேள்வி
9. வண்மை - பொருளைத் தேர்க. அ) கொடை
ஆ) மெய்மை இ) அறியாமை ஈ) வறுமை
குறுவினா 7×2=14
10. சரயு ஆறு
பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
11. வறுமையின்
காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின்
கருத்து என்ன?
12
. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய்
எழுந்திராய்'
காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'
கும்பகன்னனை
என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
13.அ) ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில்
உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
ஆ) கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு
சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
14. தொடரில் விடுபட்ட
வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
அ.
வானம் ------ தொடங்கியது.
மழை வரும் போலிருக்கிறது.
ஆ.
அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம்
-------
16. கலைச்சொல் தருக: அ) PLAY WRIGHT ஆ) SCREENPLAY
இ) STORYTELLER ஈ) AESTHETICS
17. ”செயற்கை”
எனத்தொடங்கும் பொருளையும், “பொருள்” என முடியும் குறலையும் அடிமாறாமல் எழுதுக
சிறுவினா 3×3=9
18. மருத
நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
19. தமிழ்மொழிக்குக்
கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக
20. 'கடற்கரையில்
உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்
பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள்
நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள்
இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
21. ”தண்டலை” , “ வெய்யோன்”
எனத்தொடங்கும் பாடல்களை அடிமாறாமல் எழுதுக.
விரிவான
விடையளி 2×5=10
22. சந்தக்
கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும்
கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து
அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!
23. தமிழ்,
தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர்
கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது
தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை!
நீங்கள் படித்து முடித்தபின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச்
செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.
24. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.
நெடுவினா 1×8=8
25.அ)
போராட்டக் கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர்
இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக. (அல்லது)
ஆ)உங்கள்
பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி