10 TH STD TAMIL QUARTERLY EXAM MODEL QUESTION PAPER-1

 


காலாண்டுப் பொதுத்தேர்வு-மாதிரி வினாத்தாள்-1

10.ஆம் வகுப்பு                                         தமிழ்                                          100 மதிப்பெண்கள்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                             15X1=15

 1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்                                                                   

) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா  ) எம்+தமிழ்+நா  ) எந்தம்+தமிழ்+நா                   

2) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன 

) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்      

3) பரிபாடல் அடியில் ,”விசும்பில், இசையில்”' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்   ஈ) வானத்தையும் பேரொலியையும்

4) பாடினாள் கண்ணகி என்பது----தொடர்                                                    

) வினையெச்சத்தொடர்  ) வினைமுற்றுத்தொடர் 

) பெயரெச்சத்தொடர்  ) முற்றெச்சத்தொடர்

5) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

6) கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறன் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

7) கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர்

அ) வாடை   ஆ) கோடை  இ) தென்றல்  ஈ) கொண்டல்

8) காசிக்காண்டம் என்பது

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

9) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் - பொருளை வேறுபடுத்தக் காரணம்

) வேற்றுமை உருபு  ) எழுவாய்  ) உவம உருபு   ) உரிச்சொல்

10) பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

     கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் வரும் அடி எதுகைகள்

அ) பண்என்னாம் , கண்என்னாம்  ஆ) கண்என்னாம் , கண்ணோட்டம்

இ) பண்என்னாம் , கண்ணோட்டம் ஈ) இல்லாத, கண்

11) வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும். அடிக்கோடிட்டன ----தொகைகள்

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஈ) வேற்றுமைத்தொகை

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

      செம்பொனடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்

          திருவரை யரைஞாணரைமணி யொடுமொளி திகழரைவடமாடப்

      பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

          பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

      கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

          கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்த் தொடுமாட

      வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

           ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

1. பாடல் இடம்பெற்ற நூல்

) கனிச்சாறு  ) காசிக்காண்டம்  ) பரிபாடல்  ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

2. பாடலின் ஆசிரியர்

) பாவலரேறு  ) சீவலமாறன்   ) குமரகுருபரர்  ) கீரந்தையார்

3. குண்டலமும் குழை காதும் இலக்கணக்குறிப்பு

) உம்மைத்தொகை  ) எண்ணும்மை  ) பண்புத்தொகை  ) விளித்தொடர்

4. குகன் என்பது யாரைக்குறித்தது?

) குழந்தை  ) முருகப்பெருமான்  ) ஆசிரியர்  ) பக்தர்

 

பகுதி-2 (மதிப்பெண்கள்:18)

                                                               பிரிவு-1                                                       4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

        ) திருமூலர் திருமந்திரத்தை இயற்றினார்.

        ) மூசு என்பது பலாப்பிஞ்சைக் குறிக்கும்.

17) சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக

18) மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

19) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

20) கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான்யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

21) ”அருமை” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

                                                            பிரிவு-2                                                       5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.

23) எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

          அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை  ஆ. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

24) அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

25) கலைச்சொல் தருக: அ. Tempest , ஆ. Human Resource

26) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

         அ. நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

         ஆ. இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

27) “எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

28) இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க . மலை- மாலை

பகுதி-3 (மதிப்பெண்:18)

                                                                       பிரிவு-1                                                           2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

          -இது போல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களை எழுதுக.

30) பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

    மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது: ஷேக்ஸ்பியர் இருந்திருக்க முடியாது; கம்பன் இருந்திருக்க முடியாது. இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலக அளவில் உயரிய விருதுகளும், ஏற்பும் கிடைத்திருக்கும்.

அ) இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதை நூல் எது?

ஆ) இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்போது?

இ) மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் எவை கிடைத்திருக்கும்?

                                                             பிரிவு-2                                                                  2X3=6 

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?

33) வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.

34) ) தென்னன்---எனத்தொடங்கி ---வாழ்த்துவமே என முடியும் பாடலை எழுதுக.    (அல்லது)

      ) ”விருந்தினனாக” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

           பிரிவு-3                                                                    2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

      நச்சு மரம்பழுத் தற்று          - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

36) ஏதேனும் இரு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக

37) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்  

        மெய்ப்பொருள் காண்ப தறிவு.         – அலகிட்டு வாய்பாடு எழுதுக

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  5X5=25

38) ) ”ஆள்வினை உடைமை” குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக

(அல்லது)

    ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

39) மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

(அல்லது)

    ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்பாதுகாப்பு ஆணையருக்குக்கடிதம் எழுதுக.

40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41) விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42.)பள்ளியிலும், வீட்டிலும் உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை எழுதுக.(அல்லது)

) மொழி பெயர்க்க:

Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                             3X8=24

43) ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

(அல்லது)

 ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.

44) ) கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.                                                       (அல்லது)

  ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

45) ) குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி,கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,கோவை யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் சபுலவர்கள்.

     இக்கருத்தைக் கருவாக் கொண்டு ‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை

எழுதுக.                                                            (அல்லது)

   ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக. குறிப்பு: நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை