இலக்கிய மன்றப் போட்டிகள் - கட்டுரைகள் நிலை: 1 (வகுப்பு 6,7)

இலக்கிய மன்றப் போட்டிகள்  

கட்டுரைகள் 

நிலை :1  ( வகுப்பு 6 & 7)

தலைப்பு 1 : புவி வெப்பமடைதலின் காரணங்கள் மற்றும் விளைவுகள்

முன்னுரை:

    இன்றைய உலகில் மனிதன் அறிவியல் வளர்ச்சியில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகின்றான். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று புவி வெப்பமடைதல் ஆகும்.

புவி வெப்பமடைதலின் காரணங்கள்

    1. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் – காற்றில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற புகை வாயுக்கள் அதிகமாகச் சேர்கின்றன.

    2. காடுகளை அழித்தல் – மரங்கள் கார்பன் டை ஆக்சைடைக் குடித்து ஆக்சிஜனை வெளிப்படுத்துகின்றன. காடுகளை வெட்டுவதால் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது.

    3. பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்கள் – இவை நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துவதோடு வெப்பத்தையும் அதிகரிக்கின்றன.

    4. மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாடு – நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை அதிகம் எரிப்பதால் புவி சூடேறுகிறது.

புவி வெப்பமடைதலின் விளைவுகள்:

    1. பனிக்கட்டிகள் உருகுதல் – துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி, கடல்மட்டம் உயர்கிறது.

    2. வறட்சி மற்றும் பெரு மழை – காலநிலை மாறுபட்டு, சில இடங்களில் வறட்சி மற்றும் சில இடங்களில் பெரு மழை ஏற்படுகிறது.

    3. விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழிவு – சூழல் மாற்றத்தால் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

    4. மனிதர்களின் ஆரோக்கியப் பிரச்சினைகள் – வெப்பம் அதிகரிப்பதால் வெப்ப அலை, நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன.

தீர்வுகள்:

    • மரங்கள் அதிகமாக நடுதல்
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல்
    • சூரிய சக்தி, காற்றுச்சக்தி போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தல்
    • எரிபொருள் சேமிப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

முடிவுரை:

    புவி வெப்பமடைதல் மனித குலத்திற்கே ஒரு எச்சரிக்கை மணி. அனைவரும் சூழலுக்கான பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். பசுமை சூழலை காக்கும் பணியில் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும்.

தலைப்பு 2எரிசக்தி பாதுகாப்பு

முன்னுரை :

    மனித வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒன்றாக எரிசக்தி திகழ்கிறது. எரிசக்தி இல்லையெனில் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, தொழில்நுட்ப முன்னேற்றம் அனைத்தும் இயலாது. ஆகையால் எரிசக்தியை பாதுகாப்பது நம் கடமையாகும்.

எரிசக்தியின் முக்கியத்துவம் :

    இன்றைய உலகில் மின் உற்பத்தி, தொழிற்சாலை இயங்குதல், வாகன போக்குவரத்து, விவசாயம் போன்ற அனைத்துக்கும் எரிசக்தி தேவைப்படுகிறது. எரிசக்தி இல்லாமல் மனித சமூக வளர்ச்சி சாத்தியமில்லை.

எரிசக்தி வீணாவதின் விளைவுகள் :

    மின்சாரத்தை தேவையில்லாமல் வீணடித்தல், வாகனங்களில் எரிபொருள் அதிகம் பயன்படுத்துதல், தொழிற்சாலைகளில் கட்டுப்பாடற்ற எரிசக்தி பயன்பாடு போன்றவை எரிசக்தி பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசு, இயற்கை வளங்களின் தட்டுப்பாடு உருவாகின்றன.

எரிசக்தி பாதுகாப்பு வழிகள் :

  • மின்சாரத்தை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

  • தேவையில்லாமல் எரியும் மின் விளக்குகளை அணைக்க வேண்டும்.

  • சூரிய ஆற்றல், காற்றாலை, நீர்மின் ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

  • வாகனங்களில் எரிபொருளைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

  • வீட்டிலும், தொழில்துறையிலும் எரிசக்தி சேமிப்பு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை :

    எரிசக்தி சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் கடமை. "எரிசக்தி சேமிப்பு என்றால், எதிர்கால தலைமுறைக்கு வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே" எனலாம். எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் எரிசக்தியைப் பாதுகாப்போமாக.

தலைப்பு 2 : சுற்றுப்புறத் தூய்மை

முன்னுரை:
    சுற்றுப்புறத் தூய்மை என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். தூய்மையான சுற்றுப்புறம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடித்தளமாகும். நம் வீட்டை, தெருவை, பள்ளியை, நகரத்தை தூய்மையாக வைத்தால் மட்டுமே நாம் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில்...
    இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, குப்பைகளை சரியாக அகற்றாமை, தொழிற்சாலைகளின் புகை, வாகனங்களின் மாசு ஆகியவை சுற்றுப்புறத்தை மிகவும் மாசுபடுத்தி வருகின்றன. இதனால் காற்று, நீர், மண் போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டு, மனிதர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர்.
நமது கடமை:
  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மரங்களை நட்டல், மழைநீர் சேமித்தல் போன்ற சிறிய முயற்சிகளும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 
  • பள்ளிகளில், வீடுகளில், பொதுஇடங்களில் தூய்மை பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் நம் உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். தூய்மையான சூழல் ஒரு சுகமான வாழ்க்கையை மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சூழலையும் வழங்கும்.
முடிவுரை:
    சுற்றுப்புறத் தூய்மை என்பது ஒருவரின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரின் பொறுப்பும் ஆகும். "தூய்மையான சுற்றுப்புறம் – வளமான நாடு" என்ற கோட்பாட்டை மனதில் கொண்டு நாம் செயல்பட்டால், அழகும் ஆரோக்கியமும் கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும்.


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை