9 TH STD TAMIL FIRST MID TERM QUESTION PAPER & ANSWER KEY TIRUPPATHUR DISTRICT

 

முதல் இடைப்பருவத்தேர்வு 2025, திருப்பத்தூர் மாவட்டம்

9.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          8X1=8

வி. எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

இ) புலரி

1

2.     

ஆ) சிற்றிலக்கியம்

1

3.     

ஈ) பாரதியார்

1

4.     

) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

5.     

ஈ) ஓடி வா ஓடி வா

1

6.     

) தமிழோவியம் 

1

7.     

ஆ) அடுக்குத்தொடர்

1

8.     

) சித்தர் - சிந்தனை

1

                                                                                  

எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி                                                                       2X2=4

9

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

2

10

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு

2

11

ஏரி , குளம், குட்டை, கண்மாய்

2

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி                                                                        3X2=6

12

·        அளபெடை இரண்டு வகைப்படும். 

·        அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

2

13

. ஒலிப்பியல். மொழி ஆராய்ச்சி

2

14

அ. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆ. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

2

15

கொள்வார் - கொள்+ வ் + ஆர்

கொள்- பகுதி

வ் - எதிர்ககாலஇடைநிலை

ஆர் - பலர்பாால் வினைமுற்று விகுதி

2

16

அ. பேசப்படுகின்றன  ஆ. கலந்துகொள்வாள்

 

 

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க                                                               3X3=9

17

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ - திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

3

18

·        மூன்று -  தமிழ்

·        மூணுமலையாளம்

·        மூடு தெலுங்கு

·        மூருகன்னடம்

·        மூஜிதுளு

3

19

  • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டது.
  • நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • நீர் வெளியேறவும், சேற்றைத் தூர்வாரவும் பயன்படுத்தினர்.

3

20

·        புதுப்பொலிவுடன் தமிழ் வளர்ப்பேன்.

·        மொழிபெயர்ப்புகளை நிறைய செய்வேன்

·        அறிவியல் தமிழாய், கணினித் தமிழாய் புதுவடிவில் வளர்த்தெடுப்பேன்.

3

21

·        முத்தமிழாய் பிறந்தது

·        மூன்று பாவினங்களால் வளர்ந்தது

·        சிற்றிலக்கியங்களைத் தந்தது

·        தெளிந்த அறிவினால் முத்திக் கனியைத் தந்தது

·        நாளும் நலமுடன் வளர்ந்தது

3

             

 எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க                                                            3X5=15

22

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                           திருத்தணி,
                                                                                                                 09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளைஅறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                     

                                                                                                                                         முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

 

 

5

23

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

5

24

அனுப்புநர், பெறுநர், ஐயா, பொருள், கடிதச்செய்தி, இப்படிக்கு, இடம்,நாள், உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

25

திரண்ட கருத்து:

       பரந்து விரிந்து இருக்கின்ற நெடிய வானத்திலும், பரந்த கடற்பரப்பிலும், விண்ணைத் தொடுமாறு உயர்ந்து நிற்கும் உயரமான மலையிலும், பள்ளத்தாக்குகளில் பொழிகின்ற நீரருவியிலும், காடுகளிலும், புல்வெளிகளிலும், பசுமையான வயல்களிலும், விலங்குகளிலும், பறவைகளிலும் மட்டுமின்றி கண்ணிய தெரிகின்ற பொருட்களிலெல்லாம் நிறைந்து மனதில் தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மையான ஊற்றே, அழகு என்னும் ஒழுங்காய் அமைந்த பேரோவியமே, மெய்யே, மக்கள் மனதிலும் நீ குடியிருக்க வேண்டுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

மையக் கருத்து :

     இயற்கையின் சிறப்பையும், வளத்தையும், அழகையும் மக்களின் உள்ளத்தில் குடியிருக்கவேண்டும் எனக் கவிஞர் கூறுகிறார்.

மோனை நயம் :

     அடியிலோ, சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை ஆகும்.

    (எ.கா) விரிகின்ற- வின்னோங்கு

              பொழிகின்ற-புல்வெளியில்,

              தெரிகின்ற - தெவிட்டாத

எதுகை நயம் :

     அடிகளிலோ, சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை  ஆகும்.   

    (எ.கா) புல் வெளியில் - நல் வயலில்

இயைபு நயம் :

      அடிகளிலோ, சீர்களிலோ கடைசி எழுத்தோ, சொல்லோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

      (எ.கா) வானில், கடற்பரப்பில், பள்ளத்தாக்கில், காட்டில், புள்ளில், நெஞ்சில்

அணி நயம்:

    உள்ளதை உள்ளவாறு இயல்பாகக் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

    (எ.கா) இப்பாடலில் ஆசிரியர் இயற்கை அழகு எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை உள்ளதை உள்ளவாறு கூறியுள்ளார்.

5

26

உரிய விடைஒ எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

கட்டுரை வடிவில் இரண்டு பக்க அளவில் விடையளி                                                   1X8=8

27

ü  தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.

ü  தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ü  திராவிட மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.

ü  பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.

ü  ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ü  இந்திய நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.

ü  இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது

8

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

   நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

 

 பதிவிறக்கம் செய்ய

 

 

 

 

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை