10.ஆம் வகுப்பு - தமிழ் பகுபத உறுப்பிலக்கணம்

10.ஆம் வகுப்பு - தமிழ் 

பகுபத உறுப்பிலக்கணம் 

1. கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ

கிளர் - பகுதி

த்- சந்தி

த் ந்ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை      - பெயரெச்ச விகுதி

2. உரைத்தஉரை + த் + த் +

உரை - பகுதி

த்- சந்தி

த் -  இறந்த காலஇடைநிலை

- பெயரெச்ச விகுதி

3.வருக - வா(வரு) + க

வா - பகுதி

வரு எனத் திரிந்தது விகாரம்

- வியங்கோள் வினைமுற்று விகுதி

4. பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;

பதி - பகுதி

த் - சந்தி (ந் -ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

5. தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ+து

தணி - பகுதி, த் - சந்தி

த்(ந்) -ந் ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

அ - சாரியை,

6. அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர்-பகுதி

 த்-சந்தி

ந்-விகாரம்

த்-இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் விகுதி

7. கொண்ட – கொள்(ண்)+ட்+அ

            கொள் – பகுதி (’ண்’ ஆனது விகாரம்)

            ட் – இறந்தகால இடைநிலை

            அ – பெயரெச்ச விகுதி

8. அறியேன் - அறி + ய் + ஆ + ஏன்

அறி - பகுதி

            ய் -சந்தி

ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது

ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

9. ஒலித்து - ஒலி +த்+த்+உ

ஒலி - பகுதி;

த் -சந்தி;

த்- இறந்தகால இடைநிலை;

உ - வினையெச்ச விகுதி

 

பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை