10.ஆம் வகுப்பு தமிழ் நிற்க அதற்குத்தக

 



10.ஆம் வகுப்புதமிழ்

நிற்க அதற்குத் தக ( 5 மதிப்பெண்கள்)

இயல் - 1.

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்

இயல் – 2

வானொலி அறிவிப்பு....

          ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

1.       தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

இயல் – 3

மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

1.      நாகரிகம் கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது.

2.     நம் நாட்டிற்குப் புழுங்கல் அரிசியே ஏற்றது.

3.     பாரம்பரிய உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.

4.     பாரம்பரிய உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும்.

5.     பாரம்பரிய உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இயல் – 4

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.      

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 இயல் – 5

   தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.

விடை:                                                                                             

1.     என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்.

2.    என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவேன்.

3.    அனைத்து விளம்பரப்பலகைகளையும் தமிழில் மாற்றச்செய்வேன்

4.    நிகழ்கலைகளைப் பாதுகாக்க என்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்வேன்

5.    முத்தமிழையும் கற்பிக்க தனித்துவமான பள்ளிகளைத் துவங்குவேன்

இயல் – 6                                                 

   கல்வெட்டுகளைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

இயல் –7

மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

நாம் செய்ய வேண்டுவன

அறங்கள் தரும் நன்மைகள்

நல்ல் சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுதல்

நல்ல நண்பர்களைப் பெறலாம்: எதிரிகளையும் நண்பராக்கலாம்

ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல்

நம்மைப்பற்ரி நன்மதிப்பு அதிகமாகும்

பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல்

மனமகிழ்ச்சியும் மன நிறைவும் பெறலாம்

வயதில் மூத்தோரை மதிப்பது

நன்மதிப்பைப் பெற்றுத்தரும்

அனைவருடனும் நட்புடன் பழகுதல்

நட்பு வட்டம் விரிவடையும்

 பதிவிறக்க


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை