7 TH STD TAMIL FIRST MID TERM MODEL QUESTION PAPER

 


     முதல் இடைப்பருவத்தேர்வு -மாதிரி வினாத்தாள் (2025-2026)

ஏழாம் வகுப்பு                                       பாடம்- தமிழ்                                    மதிப்பெண்கள்: 50

அ) பலவுள்தெரிக:                                                                                                          5X1=5

1. நெறி என்ற சொல்லின் பொருள்      

அ) வழி  ஆ) மாரி  இ) அறம்   ஈ)  தவம்

2. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்  ஆ) பரிபாடல்  இ) பரணி   ஈ) அந்தாதி

3. ஒலியின் வரிவடிவம்-----ஆகும்      

அ) பேச்சு  ஆ)  எழுத்து   இ)  குரல்   ஈ) பாட்டு 

4. காடெல்லாம் எனும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

அ) கா+எல்லாம்  ஆ) காடு+எல்லாம்  இ) காடு+டெல்லாம் ஈ) கான்+எல்லாம் 

5. தொல்காப்பியம் கடற்பயணத்தை. வழக்கம் என்று கூறுகின்றது.                                                                     

அ) நன்னீர்    ) தண்ணீர்   ) முந்நீர்    ஈ) கண்ணீர்

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                 5X1=5

6. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது -------                                                        7. பேச்சுமொழியை------ வழக்கு என்றும் கூறுவர்

8. சிறுவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல்------

9. குறுக்கங்கள்------வகைப்படும்.   10. நாக்கு என்பது-----குற்றியலுகரம்

இ) தொகைச்சொல்லை விரித்து எழுதுக                                                                  3X1=3

11. இருதிணை 12. முக்கனி 13. முத்தமிழ் 

ஈ) நான்கு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:       4X2=8

12. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

13. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக

14. காட்டுப்பூக்களுக்கு உவமையாக சுரதா கூறுவது யாது?

15. யானைகள் மனிதனை ஏன் தாக்குகின்றன?

16. தோணி  என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக

17. சிறுவர்களுக்கு நாவல்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

உ) மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:             

18. ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?

19. மகரக்குறுக்கத்திற்கு இரண்டு சான்றுகள் தருக.

20. 'குற்றியலுகரம்' என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம்தருக.                                

21. குற்றியலிகரம் என்றால் என்ன?

ஊ) இரண்டு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக:                 

22. பேச்சுமொழிக்கும், எழுத்துமொழிக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?

23. எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுக்க.

24. காட்டினால் மனிதர்கள் பெறும் நன்மைகள் யாவை?

எ. அடிமாறாமல் எழுதுக:                                                                                                3+2=5

25.  அருள்நெறி எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக.

26. “வாய்மை” எனத்தொடங்கும் திருக்குறள்                                                                          

ஏ. இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக                                                       

27. .மழலை பேசும்----அழகுஇனிமைத்தமிழ்-----எமது

     ஆ.----ஊருக்குச் சென்றேன் ,----- முல்லையும் இருந்தது

ஐ. விரிவானவிடையளிக்க:                                                                                           2X5=10

28. . தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?    (அல்லது)

   ஆ. காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

29.. பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாகத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

    ஆ. நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

DOWNLOAD

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை