6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 14-07-25 முதல் 18-07-25
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : முதலெழுத்தும்,சார்பெழுத்தும் (கற்கண்டு)
1.கற்றல் நோக்கங்கள்:
@ எழுத்து வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
2.கற்பித்தல் துணைக்கருவிகள்:
சொல்லட்டைகள், வலையொளிப்பதிவுகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம்:
தமிழ் எழுத்து வகைகளைப் பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல்:
இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
8.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
முதலெழுத்து என்றால் என்ன? (MOT)
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? (LOT)
சார்பெழுத்து என்றால் என்ன? (HOT)
9. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
10.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
11.தொடர்பணி:
பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்
@ 620 - பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி