9 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-3 25-26

 

9.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

இயல்-3

 


திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக

அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம்  இ) எந்த ஓளியம்?  ) கொடிய விலங்கு

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான,

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

3. பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக

அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர்  இ) கருவியாகுபெயர்  ) கருத்தாவாகுபெயர்

4. தோரண வீதியும், தோமறு கோட்டியும் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ) ஏவல் வினைமுற்று  ஆ) வினைத்தொகை இ) எண்ணும்மை  ஈ) பண்புத்தொகை

5. பொருந்தாத தொடரைக் கண்டறிக.

அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்.

ஆ) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.

இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.

ஈ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்.

குறுவினா:

1. நீங்கள் வாழும் பகுதியில் எறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

விடை: 

·        மாடு பிடித்தல்

·        மாடு அணைதல்

·        மாடு விடுதல்

·        மஞ்சுவிரட்டு 

·        எருது கட்டி

·        சல்லிக்கட்டு

2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

விடை:

·        கலித்தொகை ஏறுதழுவுதல்  

·        புறப்பொருள் வெண்பாமாலை எருதுகோள்

·       பள்ளு எருட்துகட்டி

3. பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :

       மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர்.

பொருள் : விழா நடக்கும் ஊரில் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள்

விளக்கம் :

     முரசறைவோன் விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான்.

4. "கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ" இடஞ்சுட்டிப் பொருள் தருக.

இடம்: திருப்பாவையில் ஆண்டாள் கூறியது.

பொருள் : கீசு கீசு என்று குருவிகள் ஒலிக்கும் பேரொலி கேட்க வில்லையா?

விளக்கம் :

·        மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து தோழிகளை எழுப்புவார்கள்.

·        அப்போது ஒரு தோழி இன்னொரு தோழியை எழுப்பும்போது கரிக்குருவிகள் எழுந்து ஒலி எழுப்புகின்றன.

·        நீ இன்னும் எழாமல் தூங்குகிறாயே என்று துயிலெழுப்புகின்றாள்.

5. "கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

    உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்த" - இவ்வடிகளில் கண்ணுக் கினியான்

என்பது யாரைக் குறிக்கிறது?

விடை'கண்ணுக்கினியான்' என்ற சொல் சிவபெருமானைக் குறிக்கிறது.

6. காலவாகுபெயர் - குறிப்பு தருக.

விடை:

·        'கார் அறுத்தான்'

·        கார் என்னும் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளைந்த பயிருக்கு ஆகி வருவதால் இது காலவாகு பெயர் ஆகும்.

சிறுவினா:

1. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
விடை:
   

·        தமிழக உழவர்கள் மாடுகளுக்காக  மாட்டுப் பொங்கல்  கொண்டாடுவர்

·        தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

·        தங்கள் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.

3. திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக

·        மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் அதிகாலையில் எழுவர்

·        கண்ணனின் நாமத்தை பாடி அனைவரும் நீராடுவர்

·        பின்பு பாவை நோன்பு எடுப்பர்

3. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

அ) எங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:

      1. கோவிலையும், தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள்

      2. தென்னையோலையால் தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள்

      3. வாழை மரங்களைக் கட்டிவைப்பார்கள்

      4. நாடகம், இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்துவர்.

ஆ) இந்திர விழா நிகழ்வுகள்:

      1. தெருக்களிலும், மன்றங்களிலும் மங்கலப் பொருட்களை முறையாக அழகுபடுத்தி வைப்பார்கள்.

      2. பலவகை மரங்களை நட்டுவைத்தனர்.

      3. தெருத்திண்ணையில் இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்கவிட்டனர்.

      4. சொற்பொழிவு, பட்டிமண்டபம் நடத்தினார்கள்.

4. தோழியை எழுப்பும் நிகழ்வை திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?

·        தோழி ஒருத்தி மற்றொரு தோழியை பொழுது விடிந்து விட்டது எழுந்திரு என்கிறாள்

·        அதற்கு தோழி அனைவரும் வந்து விட்டனரா? என்று கேட்கிறாள்

·        அதற்கு மற்றொரு தோழி உனது கேள்விக்கு எண்ணிப் பார்த்து தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறாள்.

·        மூன்றாவது தோழி கண்களை மூடி நோன்பு நேரத்தை வீணடித்து விடாதே என்கிறாள்

·        நான்காவதாக ஒருத்தி இறைவனை புகழ்ந்து பாடிட வா என்று அழைக்கிறார்

·        அதைக் கேட்டும் அவள் உறங்கச் செல்கிறாள்

5. அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக

    I.      எண்ணலளவை ஆகுபெயர்:

                                                       "ஒன்று பெற்றார் ஒளிமயம்"

            ஒன்று என்னும் எண்ணுப்பெயர் அவ்வெண்ணுக்கு தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

   II.      எடுத்தலளவை ஆகுபெயர்:

                                                       "இரண்டு கிலோ கொடு"

       நிறுத்து அளக்கும் எடுத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது

  III.      முகத்தலளவை ஆகுபெயர்:

                                                       "அரை லிட்டர் வாங்கு"

        முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

  IV.      நீட்டலளவை ஆகுபெயர்:

                                                       "ஐந்து மீட்டர் வெட்டினார்"

         நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது.

நெடு வினா.

1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

விடை:

   1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

   2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு.

   3. அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

  4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.

  5. நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்.

  6. எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.

  7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்யவேண்டிய செயல்களைத்தொகுத்து எழுதுக.

விடை:

ü  உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப்போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப்பொங்கல்.

ü  இதன் தொடர்ச்சியாக வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்தமாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.

ü  கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

ü  சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல்முத்திரை தமிழர்களின் பண்பாட்டுத்தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக்குறிக்கிறது.

ü  பண்டைய வீர உணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும்  வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக்குறியீடாகும்.

ü  ஆகையால் நம்முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல்நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதிகொள்ளவேண்டும்.

3. ’தாய்மைக்கு வறட்சி இல்லை’ என்னும் சிறுகதையில்வரும் ஏழைத்தாயின் பாத்திரப்படைப்பை விளக்குக.

தாய்மைக்கு வறட்சி இல்லை

v  சு. சமுத்திரம் எழுதிய இக்கதையில், வறுமையிலும் தன் அன்பும் தன்னலமற்ற தன்மையும் குறையாத ஒரு ஏழைத்தாயின் உயர்ந்த மனிதநேயம் கதையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

v  மரண அபாயம் வந்தபோதும் கணவனை காப்பாற்றும் அவள், பசிக்குட்டிகளுக்குள் உணவை பகிரும் போது அன்பும் கண்டிப்பும் கலந்த தாயாக இருக்கிறார்.

v  அவளது தாய்மை உணவுப் பகிர்விலும், நாய்க்குட்டிகளையும் பராமரிப்பதிலும் வெளிப்படுகிறது.

v  தன்னால் பெற்றவரல்லாதவர்களையும் தாயன்புடன் பராமரிக்கும் அவளின் செய்கைகள் மனிதநேயத்தின் உச்சக்கட்டமாகக் கூறப்படுகிறது.

v  தாய்மை என்பது வறுமையைக் கடந்து மகத்துவமடைகிறது என்பதை இந்தக் கதை வலியுறுத்துகிறது.

மொழியை ஆள்வோம்

பொன்மொழிகளை மொழி பெயர்க்க 

1. A nation's culture resides in the hearts and in the soul of its people Mahatma Gandhi

    நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

2. The art of people is a true mirror to their minds Jawaharlal Nehru

    மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

3. The biggest problem is the lack of love and charity Mother Teresa

   அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

4. You have to dream before your dreams can come true A.P.J. Abdul Kalam

   உங்கள் களவு நளவாகும் வரை, களவு காணுங்கள்.

5. Winners don't do different things; they do things differently Shiv Khera

   வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.

வடிவம் மாற்றுக

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.

4 தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. 2 டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன, பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. 3 இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. 1 உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது

மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. மேடும் பள்ளமும்  - நடுத்தர மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டது

2. நகமும் சதையும் – எழிலும், தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.

3. முதலும் முடிவும் - தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர்  எச்சரித்தார்.

4. கேளிக்கையும் வேடிக்கையும்:

எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது.

5. கண்ணும் கருத்தும்- அன்பழகள் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.

தொகுப்புரை எழுதுக:

  பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

தமிழ் இலக்கிய மன்ற விழா

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023

      இராணிப்பேட்டை மாவட்டம், தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு  தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் .

      தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.

     சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.

      நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

வினாக்கள்:

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக

அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?

இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது ?

ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?

விடை: காங்கேயம் இனக் காளைகள் 

2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

   அ) கர்நாடகம் ஆ) கேரளா  இ) இலங்கை  ஈ) ஆந்திரா

விடை: இ) இலங்கை  

3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.    

    அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.  ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.

    இ) கண்டெடுக்க பட்டு + உள்ளன. ஈ) கண் + டெடுக்க + பட்டு உள்ளன.

விடை: அ) கண்டு + எடுக்கப்பட்டு உள்ளன.

4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது

எவ்வகைத் தொடர்?

அ) வினாத் தொடர்   ஆ) கட்டளைத்தொடர்  இ) செய்தித்தொடர்    ஈ) உணர்ச்சித்தொடர்

விடை: இ) செய்தித்தொடர்

மொழியோடு விளையாடு

பொருள் எழுதித் தொடரமைக்க.

 கரை,கறை; குளவி, குழவி, வாளை, வாழை, பரவை, பறவை; மரை, மறை '

1.கரை – கடற்கரை    கறை -அழுக்கு

  கடற்கரையில் அலையோடு விளையாடலாம் - ஆடையில் கறை படிந்தால் துவைக்க வேண்டும்

2.குளவி - பூச்சி - குழவி - குழந்தை

     தேனுக்காக பூக்களைக் குளவிகள் மொய்த்தன  - பொம்மையைப் பார்த்து அழுத குழவி சிரித்தது

3.வாளை – ஆயுதம் வாழை – மரம்

     போர்வீரன் வாளைச் சுழற்றிப் பயிற்சி செய்தான் - கோவில் திருவிழாவில் வாழைமரம் கட்டுவார்கள்

4.பரவை- கடல்    பறவை - பறவை

    கடலில் மீனவர்கள் மீன் பிடித்தனர்  - அதிகாலையில் பறவை எழுந்துவிடும்

5.மரை – மான்  மறை - வேதம்

    காட்டில் மான்கள் கூட்டமாக வாழும் - மறை நான்கு வகைப்படும்.

அகராதியில் காண்க.

1.     இயவை - வழி

2.    சந்தப்பேழை - அழகிய பெட்டி

3.    சிட்டம் - பெருமை வீண்

4.    தகழ்வு  - ஆடம்பரம்

5.    பௌரி - பெரும் பண் வகை.

பொருள் தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

    கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில்தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித்தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமையவேண்டும்

    காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக்குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழை மின் கம்பிகள்.

1. வைக்காதீர்கள்

2.-------- வைக்காதீர்கள்

3. --------    ---------- வைக்காதீர்கள்

4.----------

விடை:

1. வைக்காதீர்கள்

2. காலை வைக்காதீர்கள்                               

3. கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்

4. காப்புக் கம்பிகள், அறுந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்.

5. தெருவில் காப்புக் கம்பிகள், அறந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்.

6. மழைக்காலங்களில் தெருவில் காப்புக் கம்பிகள், அறுந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் மீதுகவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்.

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை