9 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-2 25-26


9.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

இயல்-2

திறன் அறிவோம்

பலவுள் தெரிக

I."மாடு" - என்பதன் பொருள் என்ன?

அ) கீழே  ஆ) மேலே  இ) பக்கம்  ஈ) தொலைவு

2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி  ஆ) ஆறு   இ)இஞ்சி  ஈ)புலரி

3. சரியான தொடரைத் தெரிவு செய்க.

அ. நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்

ஆ. நீரின்று அமையாது யாக்கை ஒளவையார்

இ. மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

அ) க    ஆ) உ   இ) க உ  ஈ) க உ 

4. பகுதி ,விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?

அ) வென்றார்  ஆ) நடந்த  இ) வளர்க   ஈ) பொருந்திய

5.மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை   ஆ) பூவரசு மரம்   இ) வளம்   ஈ) பெரிய

குறுவினா

1."கூவல்" என்று அழைக்கப்படுவது எது?

விடை: உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை : ஏரி , குளம், குட்டை, கண்மாய்

3. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

விடை : நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

விடை: வானவில்

5. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

    காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

விடை : மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.

சிறுவினா

1.அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவைஅதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

·        நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

  • நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும்.
  • இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

·        நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

·        நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

3. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

  • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டது.
  • நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • நீர் வெளியேறவும், சேற்றைத் தூர்வாரவும் பயன்படுத்தினர்.

4. வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி எழுதுக.

·        திருநாட்டில் உள்ள நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கின.

·        அதைக் கண்டு அஞ்சிய வாளை மீன்கள் துள்ளிக்குதித்தன

·        இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றுள்ளது.

நெடுவினா:

1. வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

   நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

2.பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

·        திருநாட்டில் காவிரி வளத்தைத் தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

·         வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள் சங்குகளால் இடருகின்றன.

·         குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன

·        நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால் அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன

·        திருநாட்டில் நெற்கட்டுகளும் மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன

·         பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து வளர்ந்துள்ளன

3. .‘தண்ணீர்கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
முன்னுரை :
            “நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “தண்ணீர்சிறுகதை சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே? :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

சற்று நேரத்தில் தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       “உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  “நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

மொழியை ஆள்வோம்

 

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக

1 .Every tower is a sout blossoming in nature-Gerant De Nerval

  ஒவ்வொரு மாரும் இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது.

2. Sunset is still my favourite colour, and rainbow is second- Mattle Stepanek

சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும்.

3 An early moming walk is blessing for the whole day- Henry David Thoreau

அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும்.

4. Just living is not enough. One must have sunshine, freedom, and a little flower Hans Christian Anderson                                                                                                 

வாழ்வது பட்டும் போதுமானதல்ல ஒவ்வொருவருக்கும் ஒளி, ஆற்றல், விடுதலை, மலரின் மென்மை அவசியம்

பிழை நீக்கி எழுதுக;

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக்

கட்டியது.

விடை: சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

விடை: மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

விடை: பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை

வைத்திருக்கிறோம்,

விடை: நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை. வைத்திருக்கிறார்கள்.

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

விடை : சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க,

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல,

விடை: நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்தீர் ஆனாலும் தெருப்பை அணைக்கும்.

விடை: நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

விடை: அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது.

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

விடை: தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன். 

வடிவ மாற்றம் செய்க:

  நீர் சுழற்சி குறித்த விளக்கப்படத்தின் உட்பொருளைப்புரிந்துணர்ந்து பத்தியை மாற்றி அமைக்க.

நீர் சுழற்சி

   மேற்காணும் படத்தில் உள்ளது போல, வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழைபொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது. மீண்டும். . இதுவே இப்படம் விளக்குடம் நீர்ச் சுழற்சி ஆகும்.

வரவேற்பு மடல் எழுதுக:

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும்  மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
விடை:

வரவேற்பு மடல்

இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

"சுத்தம் சோறு போடும்" 

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு" 

"கூழானாலும் குறித்துக் குடி"

        என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

   நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I

    ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

                                                                                                                                    நன்றி.

                                                                                                                                  இவண்,

இரா மணிமாறன்,

(மாணவர் செயலர்)

நயம் பாராட்டுக.

   கல்லும் மலையும் குதித்துவந்தேன்பெருங்
               காடும் செடியும் கடந்துவந்தேன்;
   எல்லை விரிந்த சமவெளிஎங்கும்நான்
              இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
   ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்பல
              ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
   ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்மணல்
               ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.               – கவிமணி 

திரண்ட கருத்து :
    இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன். ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மோனை நயம் :   

      சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :     ஏறாதஏறி
                   ஊறாதஊற்றிலும்

                  ஓடைகள்ஓடி வந்தேன்.

எதுகை நயம் :  

      அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும்.

     சான்று :    கல்லும் …. எல்லை
                      ஏறாத …… ஊறாத

இயைபு நயம்

       இச்செய்யுளின் ஈற்றடிகளில்தேன் தேன்என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

சொல் நயம்

இப்பாடல் பின்வரும் சொற்களைப் பெற்று சொல்நயம் மிக்கதாக உள்ளது

§  குதித்து வந்தேன்

§  கடந்து வந்தேன்

§  தவழ்ந்து வந்தேன்

§  ஏறி வந்தேன்

மொழியோடு விளையாடு:

சொல்லுக்குள் சொல் தேடுக.

எ.கா ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை ஓரம்

அ) கடையெழுவள்ளல்கள்   -   கடை / எழு / வள்ளல்

ஆ) எடுப்பார் கைப்பிள்ளை    -   எடுப்பார் / கை / பிள்ளை

இ) தமிழ்விடு தூது   -  தமிழ் / விடு / தூது

). பாய்மரக்கப்பல்  -  பாய் / மரம் / கப்பல்

உ) எட்டுக்கால்பூச்சி - எட்டு / கால் / பூச்சி

அகராதியில் காண்க:

1.     கந்திகந்தகம், கழுகு, தவப்பெண், வாசம்

2.    நெடில் நெட்டெழுத்து, மூங்கில்

3.    பாலி அணை, ஆலமரம், எல்லை, ஒரு மொழி, பாற்பசு, செம்பருத்தி, கறை

4.    மகி பூமி, பசு

5.    கம்புள் கம்பங்கோழி, சங்கு, வானம்பாடி

6.    கைச்சாத்து- கையெழுத்து

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக

எ.கா  : அரிசி போடுகிறேன்.

விடை :

        புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

        காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்,

        நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்,

        நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

        நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்

        நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

1. மழை பெய்தது.

மாலையில் மழை பெய்தது.

நேற்றுக் மாலையில் மழை பெய்தது.

நாள்தோறும் மாலையில் மழை பெய்தது.

நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்தது.

நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.

நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்தது.

2. வானவில்லைப் பார்த்தேன்

மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.

மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்,

நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.

நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

நாள் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

3. குழத்தை சிரித்தது.

தொட்டிலில் குழந்தை சிரித்தது.

தொட்டியில் அழுத குழந்தை சிரித்தது.

அம்மாவைப் பார்த்தது அழுத குழந்தை சிரித்தது.

அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.

அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.

அழுத குழந்தை தொடடிலை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

4. எறும்புகள் போகின்றன.

எறும்புகள் வரிசையாகப் போகின்றன.

எறும்புகள் வரிசையாகக் கல்லில் போகின்றன.

எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள் போகின்றன

சர்க்கரையை நோக்கி வரிசையாகப் போகின்றன.

அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

5. படம் வரைந்தான்.

படம் வரைந்தான்.

அவன் அழகாக வரைந்தான்.

விலங்குகளின் படங்களை வரைந்தான்.

இயற்கையைப் படம் வரைந்தான்.

இயற்கை மற்றும் மரங்களைப் படமாக வரைந்தான்.

படிக்கும் பறவைகளைப் படமாக வரைந்தான்.

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

     (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)

அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்

ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.

இ) கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?

) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும், வெளியில் அதனைக் கழுத்து    

     விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்,

உ எழுத்தாணிகொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோனிலும் ஏற்றுங்கள்.

ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.

1. மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன      

  மயில் தோகையை விரித்தது.

2.ஊர்த்திருவிழாவில் மக்கள் குவிந்தனர் வணிகர்கள்,

   பொருட்களைக் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.

3. நண்பர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்தனர் ஆசிரியர்,

    எங்களையெல்லாம் ஒன்று சேர்த்து மகிழ்ந்தார்

4.மேலாளரைக் கண்ட பணியாளர்கள் பணிந்து வணங்கினர்

   மேலாளர் அவர்களுக்குப் பணியைச் செய்யுமாறு பணித்தார்.

5. கட்டடம் கட்டுபவன் இரண்டு சுவர்களை பொருத்தினான்

    சுவர்கள் இரண்டும் பொருந்தியது.

பகுபத உறுப்பிலக்கணம் தருக.

செய்தனர், வருகின்றாள், போற்றுதும், கொடுத்தாய், பேசுதல், விரைந்து, வாழிய

 

1. செய்தனர் = செய் + த் + அன் + அர்

செய் - பகுதி

த் - இறந்த கால இடைநிலை

அன் சாரியை

அர் - பலர்பால் வினைமுற்று விகுதி

2. வருகின்றாள் -வா (வரு) + கின்று + ஆள்

வா -பகுதி

வா -'வரு' எனத் திரிந்தது விகாரம்

கின்று - நிகழ்கால இடைநிலை

ஆள் -பெண்பால் வினைமுற்று விகுதி

3. கொடுத்தாய்- கொடு + த் +த் +ஆய்

கொடு - பகுதி

த் – சந்தி

த் - இறந்தகால இடைநிலை

ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

4. பேசுதல் - பேசு + தல்

பேசு -பகுதி

தல் - தொழிற்பெயர் விகுதி

5. விரைந்து விரை + த் (ந்) +த் +உ

விரை - பகுதி

த் - சந்தி (த் - 'ந்' ஆனது விகாரம்)

த் - இறந்த கால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி

6. வாழிய - வாழ் + இய

வாழ் - பகுதி

இய - வியங்கோள் வினைமுற்று விகுதி.


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை