7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-3

 7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 14-07-25 முதல் 18-07-25        

மாதம்         ஜூலை

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்            

தலைப்பு: திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)     

1.கற்றல் நோக்கங்கள்:

       @ நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

2.கற்பித்தல் துணைக்கருவிகள்:

  வலையொளிப்பதிவுகள்,விளக்கக் காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம்:

யாரெல்லாம் பொய்யே பேசியதில்லை? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்:

                   திருக்குறளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

5.மனவரைபடம்:

திருக்குறள்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
@ திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
@ திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • திருக்குறலை இயற்றியவர் யார்?

  • வாய்மை என்றால் என்ன?

  • உலகப்பொதுமறை பெயர்க்காரணம் கூறி விளக்குக.

9. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

10.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

11.தொடர்பணி:

@ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்


12.கற்றல் விளைவு:


   @ 701,709 - பல்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில்


 கலந்துரையாடவும் செய்தல்.ஒன்றைப் படித்து முழுமையான

   

 பொருண்மையை  உணர்ந்து  அதன் பயன்பாட்டினைக் கூறுதல்           

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை