இயல்-7
10.ஆம் வகுப்பு தமிழ்
மெல்லக் கற்போர் வினா விடைகள் (2025-2026)
திறன் அறிவோம்
பலவுள்
தெரிக.
1.
மேன்மை தரும் அறம் என்பது-
அ) கைம்மாறு கருதாமல் அறம்
செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில்
அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்
செய்வது.
2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ) உதியன்: சேரலாதன் ஆ) அதியன்:
பெருஞ்சாத்தன்
இ) பேகன் கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்:
திருமுடிக்காரி
3.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்
4.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
5.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
குறுவினா
1.
குறிப்பு வரைக அவையம்.
விடை: அவையம் - தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.
2.
காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' - உவமை உணர்த்தும் கருத்து யாது?
விடை: இளம்பயிர் போல கருணையன்
தாயை இழந்து வாடினான்.
3.
குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
விடை: இரண்டு அடிகளில் வருவது
குறள் வெண்பா
(எ-கா)
வேலொடு
நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான்
இரவு.
4.
சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
v
நீர்நிலை
பெருக்குதல்
v
நிலவளம் பெருக்குதல்
v
உணவு
பெருக்குதல்
5.
பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?
விடை: அடுத்தவர் மீதான அக்கறை
சிறுவினா
1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
·
சங்க இலக்கியங்கள் காட்டும்
அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவை
·
பயன்
பார்க்காமல் அறம் செய்ய வேண்டும்.
·
நீர்நிலைகளைப் பெருக்குதல்
அரசனின்கடமை
2. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
·
வாய்மையை
சிறந்த அறம்.
·
”வாய்மை பேசும் நாக்கு உண்மையானது.
·
நாக்கு
இன்பன், துன்பம் இரணடையும் தரும்.
3.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
ü உயிர்பிழைக்கும்
வழி
ü உறுப்புகள்
இயங்கும் முறை
ü உணவினத்
தேடும் வழி
4. ஆசிரியப்பாவின்
பொது இலக்கணத்தை எழுதுக.
ü
ஓசை:
அகவல்
ü
தளை
: ஆசிரியத்தளை
ü
அடி:
மூன்று முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப வரும்
5.
சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற
தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான
உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
ü
வீட்டுத்தூய்மை
ü
மழைநீர் சேகரிப்பு
ü
பொதுப்போக்குவரத்து
ü
வீதி
தூய்மை
ü
மரங்களை
வளர்த்தல்
நெடுவினா
1.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்
பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
v கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்
v
கருணையன் தாயை இழந்து வாடினான்
v கருணையனின்
செய்வதறியாது
தவித்தான்
v பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன
2.
கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த
நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
இராமானுசர்
செய்த நிகழ்வு |
·
முடிவுரை |
முன்னுரை:
கிடைப்பதற்கரிய
திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு
காண்போம்.
இராமானுசர் செய்த நிகழ்வு:
v
பூரணர் இராமானுசரை அழைத்தார்
v
இராமானுசர் தனது சீடர்களுடன்
சென்றார்
v
பூரணர் அவர்களுக்கு மந்திரத்தைக்
கூறினார்
v
யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்
v
இராமானுசர் அனைவருக்கும் மந்திரத்தைக்
கூறினார்
v
பூரணர் கோபம் கொண்டார்
v
இராமானுசரின் விளக்கத்தை ஏற்றார்
முடிவுரை:
கிடைப்பதற்கரிய
திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு கண்டோம்
3.
பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும்
அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக்
கடிதம் எழுதுக.
உறவினருக்குக் கடிதம்
7, திருத்தணி,
14-05-2024
அன்புள்ள அத்தைக்கு,
நலம். நலமறிய ஆவல்.
எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக
ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்பாராட்டினர். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.
நன்றி!
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
வா.நிறைமதி.
மொழியை ஆள்வோம்
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
மனக்கோட்டை |
குமரன்
மனக்கோட்டை கட்டினான் |
அள்ளி இறைத்தல் |
ராமு
பணத்தை அள்ளி இறைத்தான் |
கண்ணும் கருத்தும் |
கனிமொழி
கண்ணும் கருத்துமாக படித்தாள் |
ஆறப்போடுதல் |
கோபத்தை
ஆறப்போட வேண்டும் |
பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப்பெயர்களில்
கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன்
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
சேரர்களின் பட்டப் பெயர்களில்
‘ கொல்லி வெற்பன்’, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்
‘ மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்.
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
கடிதம்
எழுதுக
உங்கள் தெருவில்
மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி
ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
மின்வாரிய அலுவலருக்குக்
கடிதம்
அனுப்புநர்
ப.இளமுகில்,
6,காமராசர் தெரு,
வளர்புரம்,
அரக்கோணம்-631003
பெறுநர்
உதவிப்பொறியாளர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
அரக்கோணம்-631001
ஐயா,
பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.
வணக்கம். எங்கள் பகுதியில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருட்டாக
உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய
நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி!!
இப்படிக்கு,
தங்கள்
பணிவுடைய, ப.இளமுகில்.
இடம்: அரக்கோணம்,
நாள்: 15-10-2022.
ஆ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-
கானடை |
கான் அடை
– காட்டைச் சேர் கான் நடை
– காட்டுக்கு நடத்தல் கால்நடை
– காலால் நடத்தல் |
வருந்தாமரை |
வரும் + தாமரை – வரும் தாமரை மலர் வருந்தா
+ மரை – துன்புறாத மான் வருந்து
+ ஆ + மரை – துன்புறும் பசுவும் மானும் |
பிண்ணாக்கு |
பிண் + நாக்கு – பிளவு பட்ட நாக்கு பிண்ணாக்கு
– எண்ணெய் எடுத்தப் பின் கிடைக்கும் பொருள் |
பலகையொலி |
பல + கை + ஒலி – பல கைகள் எழுப்பும் ஒலி பலகை + ஒலி – மரப் பலகையின் ஒலி
|
அகராதியில் காண்க:
1)
ஆசுகவி
– கூறியவுடன் பாடுவது
2)
மதுரகவி – சுவையுடன்
பாடுவது
3)
சித்திரகவி – எழுத்தைச்
சித்திரமாக வடித்து பாடுவது
4)
வித்தாரக்கவி – விரிவாகப்
பாடுவது
கலைச்சொற்கள் (படிப்போம்; பயன்படுத்துவோம்!)
1.
Happiness - மகிழ்ச்சி
2.
Gratuity - பணிக்கொடை
3.
Sceptor - செங்கோல்
4. Truth - வாய்மை
5. Charity – ஈகை
மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால்
ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.
1.
புரளி பேசாதிருத்தல் |
1.
தேவையற்றச் சண்டைகள் நீங்கும் |
2.
பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல் |
2.
மன அமைதிப் பெறலாம். |
3.
உண்மை பேசுதல் |
3.
நம் வாழ்வை உயர்த்தும்,
அச்சமின்றி வாழலாம் |
4.
உதவி செய்தல் |
4.
மன மகிழ்ச்சி கிடைக்கும் |
5.
அன்பாய் இருத்தல் |
5.
அனைவரும் நண்பராகிவிடுவர் |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி