இயல்-6
10.ஆம் வகுப்பு தமிழ்
மெல்லக் கற்போர் வினா விடைகள் (2025-2026)
திறன் அறிவோம்
பலவுள்
தெரிக.
1.
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு,
மண். ஏர். மாடு ஆ) மண், மாடு, ஏர். உழவு
இ) உழவு, ஏர்,
மண், மாடு ஈ) ஏர். உழவு, மாடு, மண்
2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
3. நச்சிலைவேல்
கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
4.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
5.
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது
எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே-
அ) திருப்பதியும்
திருத்தணியும் ஆ) திருக்கணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
குறுவினா
1.
பாசவர், வாசவர், பல்நிண
விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
விடை:
# பாசவர்- வெற்றிலை விற்பவர்.
# வாசவர்- நறுமணப் பொருள் விற்பவர்
# பல்நிண வினைஞர்-
இறைச்சி விற்பவர்
# உமணர் – உப்பு விற்பவர்
2. அள்ளல்
பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள்
யாவை?
விடை: அள்ளல்
– சேறு , பழனம் - வயல்
3. வறுமையிலும்
படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
விடை: வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.
4.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
விடை: வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி
, நொச்சி-உழிஞை
5.
பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
விடை: புறத்திணைகளில்
பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
6.
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சோன் ஆண்ட மாண்பினைக்
காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்
-ம.பொ.சி.
விடை: பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன்,
- ம.பொ.சி.
சிறுவினா
1. சேர,
சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம்
வழி விளக்குக.
விடை:
v
சேர
நாடு – சேர நாட்டின்
பகைவர்களும், பறவைகளும் அஞ்சின
v
சோழ
நாடு – சோழநாடு
நெல்வளமும், வீரமும் மிக்கது.
v
பாண்டியநாடு – பாண்டிய நாடு முத்துவளம்
உடையது
2. "தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
சிற்றகல் ஒளி கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம்.
விளக்கம்:
செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார்.
3. பின்வரும்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்:
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்:
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்"
அ) இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது?
விடை: சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் உள்ள
மோனையை எடுத்து எழுதுக.
விடை: பகர்வணர் - பட்டினும்
இ) எதுகைச் சொற்களை
அடிக்கோடிடுக.
விடை: பட்டினும் - கட்டு
ஈ) காருகர் -
பொருள் தருக.
விடை: நெய்பவர்
உ) இப்பாடலில்
குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
விடை: சந்தனம், அகில்
4. பின்வரும்
பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
மருவூர்ப் பாக்கம்
மருவூர்ப்பாக்கம் என்பது
நகரின் உட்பகுதியாகும். பட்டினப்பாக்கம் என்பது கடற்கரைக்கு அருகிலுள்ள
பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்: வாணிபம் செய்வோரும், தொழில்
செய்வோரும் வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு
என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி
இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும்,
அணி கலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்களைக்
குவித்து விற்கும் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை, வாசனைப் பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய் விற்போர், பொன்,
வெள்ளி, செம்புப் பாத்திரக் கடைகள்
வைத்திருப்போர். பொம்மைகள் விற்போர். சித்திரவேலைக்காரர். தச்சர், கம்மாளர். தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள்
செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில்
செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
மையக்கருத்து:
மருவூர்ப் பாக்கம்
என்பது தொழில்கள் மிகுந்த நகரின் ஒரு முக்கியமான பகுதியாகும்,
நெடுவினா
1.
நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க
அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
மாணவப்பருவமும்,
நாட்டுப்பற்றும் |
·
முடிவுரை |
முன்னுரை:
மாணவப்பருவமும், நாட்டுப்பற்றும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மாணவப்பருவமும்,
நாட்டுப்பற்றும்:
v நாட்டு
விழாக்கள் மூலம் நாட்டுப்பற்றைக் காட்ட வேண்டும்.
v விடுதலைப் போராட்ட வரலாற்றினை
அறிந்துகொள்ள வேண்டும்.
v நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு கொள்ள வேண்டும்.
v சமூகப்
பொறுப்புடன் இருக்க வேண்டும்.
முடிவுரை:
மாணவப்பருவமும்,
நாட்டுப்பற்றும் பற்றி இக்கட்டுரையில் கண்டோம்.
2. சிலப்பதிகார
மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு
எழுதுக.
|
மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் |
இக்கால வணிக வளாகங்கள் |
1 |
வீதிகளில்
வணிகம் செய்யப்பட்டன. |
கடைகளில்
மட்டுமே விற்கப்பட்டன. |
2 |
பட்டு, பருத்தி நூல்
ஆடைகள் விற்றனர் |
ஆயத்த ஆடைக;ளை
விற்கின்றனர் |
3 |
முத்து, பொன் நகைகள்
குவிந்திருந்தன. |
வெள்ளி
பொன் நகைகள் விற்கப்படுகின்றன. |
4 |
கூலக்கடை
வீதிகள் இருந்தன. |
பல்பொருள்
அங்காடிகள் உள்ளன. |
3.
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம்
கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை
ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
சமூகப்பணிகள் |
·
முடிவுரை |
முன்னுரை:
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால
சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை
ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து இங்கு காண்போம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி:
இசை மேதையாகச் சிறந்து விளங்கினார். பல விருதுகளைப்
பெற்றார்
பாலசரசுவதி:
பரதநாட்டியத்தில் சிறப்பு
பெற்றவர். நம் நாட்டுப் பண்ணிற்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.
இராஜம் கிருஷ்ணன்:
சமூகப்பிரச்சினைகளை கதையாக எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:
வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு
பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.
மதுரை சின்னப்பிள்ளை:
இவர் மகளிரின்
வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார்.
முடிவுரை:
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால
சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை
ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து இங்கு கண்டோம்
4.
நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா அறிக்கை
v
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து
கொண்டனர்.
v
தலைமை ஆசிரியர்
அனைவரையும் வரவேற்றார்.
v
இதழாளர் கலையரசி சிறப்புரை
நிகழ்த்தினார்.
v
விழா சிறப்பாக நடைபெற்றது.
பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான
தொடர் அமைக்க.
வரப் போகிறேன் |
இன்னும்
சற்று நேரத்தில் வரப்போகிறேன் |
இல்லாமல் இருக்கிறது |
பெரும்பாலான
கிணறுகளில் நீர் இல்லாமல் இருக்கிறது |
கொஞ்சம் அதிகம் |
இவனுக்கு
குறும்பு கொஞ்சம் அதிகம் |
முன்னுக்குப் பின் |
பாலன்
முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான் |
மறக்க நினைக்கிறேன் |
சோகங்களை
மறக்க நினைக்கிறேன் |
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக
மூவேந்தர்களால் நாற்றிசையும்
போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற
செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை
அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை
ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில்
பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை
ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
தொகைச்சொற்கள் |
பிரித்து
எழுதுக |
தமிழ்
எண்ணுரு |
மூவேந்தர் |
மூன்று + வேந்தர் |
௩ |
நாற்றிசை |
நான்கு + திசை |
ச’ |
முத்தமிழ் |
மூன்று + தமிழ் |
௩ |
இருதிணை |
இரண்டு + திணை |
உ |
முப்பால் |
மூன்று + பால் |
௩ |
ஐந்திணை |
ஐந்து + திணை |
ரு |
நானிலம் |
நான்கு + நிலம் |
ச’ |
அறுசுவை |
ஆறு + சுவை |
௬ |
பத்துப்பாட்டு |
பத்து + பாட்டு |
க0 |
எட்டுத்தொகை |
எட்டு + தொகை |
அ |
கடிதம் எழுதுக
நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில்
“ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள்
கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
நாளிதழ்
ஆசிரியருக்கு கடிதம்
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
திருத்தணி .
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்ப்பொழில் நாளிதழ்,
திருவள்ளூர்-1
ஐயா,
பொருள்: கட்டுரையை வெளியிட
வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையை பொங்கல் மலரில் வெளியிட வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு:
இப்படிக்கு,
1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள,
இடம் : திருத்தணி
அ அ அ அ அ.
நாள் : 04-03-2024
பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1
தொடரைப்
படித்து விடையைக் கண்டறிக:-
1. நூலின் பயன் படித்தல் எனில் , கல்வியின் பயன் கற்றல்
2. விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை கரு
3. கல் சிலை ஆகுமெனில்,நெல் சோறு ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து எழுத்து
5. மீன் இருப்பது நீரில் ; தேன் இருப்பது பூவில்
கலைச்சொற்கள் (படிப்போம்; பயன்படுத்துவோம்! )
1.
Agreement - ஒப்பந்தம்
2.
Discourse - சொற்பொழிவு
3.
Monarchy - முடியாட்சி
4. Border - எல்லை
5. Rebellion - கிளர்ச்சி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி