இயல்-4
10.ஆம் வகுப்பு தமிழ்
திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2:
அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2
தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ)
கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
2.
"மையோ மர கதமோ மறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம்
3. தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
4.
சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
5.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம்,
நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல்,
பாலை நிலங்கள்
குறுவினா
1.
சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை: சோலை, காடு,
ஏரி, குளம், வயல்
2.
அயற்கூற்றாக எழுதுக.
"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட
எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.
விடை: கலைஞரைப்
பேராசிரியர் அன்பழகனார்,
பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும்
பாராட்டியுள்ளார்.
3
. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய்
எழுந்திராய்'
காலதூதர் கையிலே 'உறங்குவாய்
உறங்குவாய்'
கும்பகன்னனை என்ன சொல்லி
எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
விடை:
ü
பொய்யான
வாழ்வு முடியப்போகிறது.
ü காலனின் தூதர் கையில்
உறங்குவாய்
4. கீழ்வரும்
தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில்
உழுதனர்.
முல்லைப் பூச்
செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
விடை:
# உழவர் வயலில்
உழுதனர்.
# நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச்
சென்றனர்.
சிறுவினா
1.
மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின்
கலைநயத்துடன் எழுதுக.
விடை:
v மயில்கள் ஆடுகின்றன.
v தாமரை - விளக்கு.
v குவளை - கண்
v அலைகள் - திரைச்சீலைகள்
2. கம்பராமாயணப்
பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.
சுறங்கு போல விற்பி
டித்த கால தூதர் கையிலே
விடை: எமனின் தூதர்
கையிலே
தெண்டிரை எழினி
காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட
விடை: இசை போல் வண்டுகள்
பாடுகின்றன
வேழ நெடும்படை
கண்டு விலங்கிடும் வில்லாளோ
விடை: யானைப்படை கண்டு
புறமுதுகாட்டி பயந்து ஓடும் வில் வீரனோ?
3.
தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட
இரண்டினை எழுதுக.
விடை:
ü
தமிழ்வளர்ச்சித்
துறையை உருவாக்கினார்
ü
தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்
ü
உலகத்
தமிழ் மாநாடு நடத்தினார்
4.'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப்
பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல
மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத்
தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
விடை:
ü
திணையின்
அடிப்படையில் நிலம்
ü
தனித்தனியே
தொழில்களை மேற்கொண்டனர்.
ü
இன்றைய
சூழலில் மாறவில்லை.
நெடுவினா
1. போராட்டக்
கலைஞர் - பேச்சுக் கலைஞர்- நாடகக்
கலைஞர்- திரைக் கலைஞர்- இயற்றமிழ்க்
கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
·
போராட்டக்
கலைஞர் |
·
பேச்சுக்
கலைஞர் |
·
நாடகக்
கலைஞர் |
·
திரைக்
கலைஞர் |
·
இயற்றமிழ்க்
கலைஞர் |
போராட்டக் கலைஞர்
இந்தித் திணிப்பை
எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் ஊர்வலம் சென்றார்.
பேச்சுக் கலைஞர்:
மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்டவர் கலைஞர்,
நாடகக் கலைஞர்:
தனது சிறப்பான தனிநடையால் பல நாடகங்களை எழுதினார்.
திரைக் கலைஞர்
தனது
திறமையால் திரைக்கலையில் சிறந்து விளங்கினார்.
இயற்றமிழ்க் கலைஞர்
கலைஞர் பல சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதினார்
2. சந்தக்
கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும்
கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து
அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!
விடை:
ü
கவியில் சிறந்தவர் கம்பர்
ü
சிறந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
ü
சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.
ü
”சந்தக் கவிதையில்
சிறக்கும் கம்பன்”
என்பது உண்மை
3. பாய்ச்சல்
கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
அனுமார்
ஆட்டம் |
·
அழகுவின்
ஆர்வம் |
·
முடிவுரை |
முன்னுரை:
பாய்ச்சல்
கதையைச் சுருக்கமாக இங்கு
காண்போம்.
அனுமாரின் ஆட்டம்:
·
ஒரு மனிதர் அனுமார் வேடமிட்டு
ஆடினார்.
·
இசைக்கேற்ப மக்கள் மகிழும்
வண்ணம் ஆடினார்.
·
அழகு என்ற சிறுவன் அதைப்பார்த்தான்
அழகுவின்
ஆர்வம்:
·
அழகுக்கு அனுமாரைப்போலவே ஆடுவதற்கு ஆர்வம்
வந்தது.
·
அழகு அனுமார் ஆட்டத்தைச் சிறப்பாக ஆடினான்
·
அந்த மனிதருக்கு மகிழ்ச்சி அளித்தது.
முடிவுரை:
பாய்ச்சல் கதையைச் சுருக்கமாக இங்கு காண்போம்.
பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
பிறமொழிச்
சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச்
சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட்
பிஸ்கட் |
தங்கக்கட்டி |
வெயிட் |
எடை |
யூஸ் |
பயன்படுத்தி |
எக்ஸ்பெரிமெண்ட்
ரிப்பீட் |
சோதனை
மீண்டும் |
ஆல்
தி பெஸ்ட் |
வாழ்த்துகள் |
ஈக்வலாக |
சரிசமமாக |
பட் |
ஆனால் |
ஆன்சரை |
விடையை |
கட்டுரை
எழுதுக
உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
கலைத்திருவிழா |
·
முடிவுரை |
முன்னுரை:
எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக காண்போம்
கலைத்திருவிழா:
v எங்கள் ஊரில் கலைத்திருவிழா
நடைபெற்றது
v நாங்கள் குடுமபத்துடன் சென்றோம்
v கலைத்திருவிழாவில் வண்ண விளக்குகள்
இருந்தன.
v கலைத்திருவிழாவில் பல கலைகள்
நிகழ்ந்தன
v கலைத்திருவிழாவில் விளையாட்டுகள்
இருந்தன
v கலைத்திருவிழாவில் நாங்கள் மகிழ்ச்சியாக
இருந்தோம்
முடிவுரை:
எங்கள் பகுதியில் நடைபெற்ற
கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக கண்டோம்
மொழியோடு விளையாடு
தொடரில்
விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1. வானம் கருக்கத்
தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது
3. வெள்ளந்தி
மனம் உள்ளவரை
அப்பாவி என்கிறோம்.
4.கண்ணுக்குக்
குளுமையாக இருக்கும் பசும்புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் கறுத்து விடும்.
பொருத்தமானவற்றைச்
சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு,
அவிழும், தயங்கும்,மரவீடு,
பார்ப்பவர், விருது, தோற்பவர்,கவிழும்,விருந்து |
1. விரட்டாதீர்கள்
– பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு
2. காலை ஒளியினில்
மலரிதழ் அவிழும்
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்
3. மலைமுகட்டில்
மேகம் தங்கும் அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்
4. வாழ்க்கையில்
தோற்பவர் மீண்டும் வெல்வர்- இதைத்
தத்துவமாய்ப் பார்ப்பவர் முயற்சி
மேற்கொள்வர்.
5. கைதட்டலே
கவிஞர்க்கு விருது - அவையோரின்
ஆர்வமே அவருக்கு விருந்து.
கலைச்சொல் தருக (படிப்போம்! பயன்படுத்துவோம்!)
1. PLAY WRIGHT
– நாடக ஆசிரியர்
2. SCREENPLAY
– திரைக்கதை
3. STORYTELLER
– கதை சொல்பவர்
4. AESTHETICS
– அழகியல்
வாழ்வியல்
இலக்கியம் – திருக்குறள்
குறுவினா
1.
கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.
விடை: : மறைத்து வைக்கும் துன்பத்தைச் செய்யாதவர்
2.
தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
எழுதுக.
விடை:
1. தஞ் / சம் - நேர் நேர் - தேமா
2. எளி / யன் - நிரை நேர் - புளிமா
3. பகைக் / கு - நிரைபு - பிறப்பு.
3.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை
எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
விடை: கொடுப்பவரைக்
கண்டால், பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும்.
4.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?
ஏன் என்பதை எழுதுக.
(பெரிய கத்தி,இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்)
விடை:
ü உழைத்ததால் கிடைத்த
ஊதியம்
ü பகைவரின் ஆணவத்தை
அழிக்கும்
சிறுவினா
1.
வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய
இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
விடை:
ü கருவி,
காலம் அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார்.
ü மனவலிமையுடன்
குடிகளைக் காப்பவர் அம்மைச்சர் ஆவார்.
2.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான். இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி
அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக.
வஞ்சப் புகழ்ச்சி அணி:
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி
அணி.
அணிப்பொருத்தம்
கயவரைப் புகழ்ந்து
கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி