10.ஆம் வகுப்பு - தமிழ்
மெல்லக் கற்போர் கற்றல் கட்டகம்
2025-2026
திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1.
பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்'
ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில்,
பேரொலியில்
இ)
வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
2.
செய்தி 1- ஒவ்வோர் ஆண்டும் சூன் 3 ஐ உலகக் காற்று நாளாகக்
கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில்
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத்
தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ)
செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1.2 ஆகியன சரி
இ)
செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1.3 ஆகியன சரி
3.
பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல்
- 1. மேற்கு
ஆ)
கோடை -
2. தெற்கு
இ)
வாடை -
3. கிழக்கு
ஈ)
தென்றல்
– 4. வடக்கு
அ) 1.2.3.4 ஆ) 3.1.4.2
இ) 4.3.2.1 ஈ) 3,4,1,2
4.
மகிழுந்து வருமா?' என்பது -------
அ)
விளித்தொடர் ஆ) எழுவாய்ந்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
5.
அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -
அ)
வேற்றுமை உருபு
ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
குறுவினா
1.
நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு
வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு
முழக்கத்தொடர்களை எழுதுக
விடை:
·
காற்று உயிருக்கு
நாற்று
·
நட்டு வளர்ப்போம்! நட்டு வளர்ப்போம்!
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்!
2.
எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக,
'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு
அடுக்குத்தொடராகும்?
விடை: 'சிரித்துச் சிரித்துப் பேசினார்'
3.
கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப்
பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக
விடை: கட்டுரையைப் படித்த
4.
மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும்
கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
விடை:
ü
முதுகினால்
சூரியனை மறைக்கும்
ü தாகம் தீர்க்கும்
5
.தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு
காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
விடை:
ü
கிழக்கு – கொண்டல்
ü
மேற்கு – கோடை
ü
வடக்கு– வாடை
ü
தெற்கு - தென்றல்
சிறுவினா
1.
உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு
திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய்
ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர்
தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை
எழுதுக.
விடை:
1.
உயிராய்
நான் ; மழையாய் நான்
2.
நான்கில் மூன்று நான்
3.
அனைத்தையும்
தருவேன் நான்
2.
உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி
அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
விடை:
ü ஐம்பூதங்களும் தோன்றின
ü தொடர் மழையால் பூமி மூழ்கியது
ü உயிர்கள் உருவாகி வளர்ந்தன.
3.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப்
பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட
பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள்
கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும்
ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக
விடை:
1.
பாடிக்
காட்டினார் - வினையெச்சத்தொடர்
2.
கேட்டுப்
பாடினர் - வினையெச்சத்தொடர்
3.
கேட்ட
பாடலில் - பெயரெச்சத்தொடர்
4.
சிறுவினாக்களைக்
கேட்டார் - வேற்றுமைத்தொடர்
5.
எழுதுபவருக்குப்
பரிசு - வேற்றுமைத்தொடர்
நெடுவினா
1.
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் |
·
முடிவுரை |
முன்னுரை:
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்
காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:
ü
நிறைய
மரங்களை நடவேண்டும்
ü
நிறைய
மரங்களை வெட்டக் கூடாது
ü
தனித்தனி
வாகனங்களில் செல்லக்கூடாது
ü
பொதுப்போக்குவரத்தில்
செல்ல வேண்டும்
ü
உயரமான
புகைபோக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்
முடிவுரை:
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் கண்டோம்
2.
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத்
தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்க.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
பிற
உயிர்களை நேசிக்கும் பண்பு |
·
முடிவுரை |
முன்னுரை:
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம்
உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் காண்போம்.
பிற
உயிர்களை நேசிக்கும் பண்பு:
ü
ஒரு
வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது.
ü
அங்கு
முருங்கை நட்டு வளர்த்தனர்.
ü
அனைவரும்
பயன்பெற்றனர்
ü
மகிழ்ச்சியாக
இருந்தனர்
ü
காற்றில்
முருங்கை சாய்ந்தது
ü
மிகவும்
வருந்தினர்
ü
மீண்டும்
முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்
முடிவுரை:
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம்
உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் கண்டோம்
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும்
விழி வண்ணமே வந்து
விடித்தும் விடியாத காலைப்
பொழுதாக
வினைந்த
கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலைசீவி
துந்த
இனந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர்
கண்டு
பொலிந்த
தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும்
பாராட்டி உரைசெய்க
திரண்ட
கருத்து
: காற்றைப் பாராட்டல்
மோனை
நயம்: மலர்ந்தும் - மலராத
எதுகை
நயம்: நதியில் - பொதிகை
இயைபு
நயம்: வண்ணமே - அன்னமே - மன்றமே
அணி
நயம்: உவமையணி கற்பவை கற்றபின்
மொழியை ஆள்வோம்:
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப்
பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-
அ) இயற்கை
– செயற்கை |
செயற்கையை
விட இயற்கை சிறந்தது |
ஆ) கொடு
- கோடு |
கொடுப்பதற்கு
கோடு இடக் கூடாது |
இ) கொள்
- கோள் |
கோள்களை
அறிந்து கொள்
|
ஈ) சிறு
- சீறு |
சிறு
பூனையும் சீறும் |
உ) தான்
- தாம் |
தான்
என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும் |
ஊ) விதி
- வீதி |
விதியால்
வீதிக்கு வந்தான் |
வாழ்த்து மடல் எழுதுக:
மரம் இயற்கையின் வரம் என்னும்
தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை
வாழ்த்தி மடல் எழுதுக.
வாழ்த்து மடல்
அ அ அ,
26-12-2021.
அன்புள்ள
நண்பா/தோழி,
மரம் இயற்கையின் வரம் என்னும்
தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை
வாழ்த்தி மடல் எழுதுகிறேன். வாழ்த்துகள்! நீ இன்னும் நிறைய பரிசு பெற வேண்டும்.
இப்படிக்கு,
உனது
அன்பு நண்பன்,
ஆ ஆ ஆ
உறைமேல்
முகவரி:
இ இ இ,
86, மருத்துவர் நகர்,
ஈ ஈ ஈ -2.
மொழியோடு விளையாடு:
சொல்லைக்
கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும். |
நறுமணம் |
பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும் |
புதுமை |
இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. |
காற்று |
நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். |
விண்மீன் |
ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம் |
காடு |
நிற்க அதற்குத்
தக:
புயல் முன்னெசரிக்கை
1.
புயல்
வந்தால் பாதுகாப்பாக இருப்பேன்
2.
புயல்
வந்தால் உணவை எடுத்து வைப்பேன்
3.
புயல்
வந்தால் குடிநீரை எடுத்து வைப்பேன்
4.
புயல்
வந்தால் மின்சாரம் துண்டிப்பேன்
கலைச்சொற்கள்
1.
Storm
- புயல்
2.
Land
Breeze - நிலக்காற்று
3.
Tornado
– சூறாவளி
4.
Sea
Breeze - கடற்காற்று
5. Tempest – பெருங்காற்று
6. Whirlwind - சுழல்காற்று
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி