10.ஆம் வகுப்பு - தமிழ்
மெல்லக் கற்போர் கற்றல் கட்டகம்
2025-2026
10.ஆம் வகுப்பு தமிழ்
மெல்லக் கற்போர் வினா விடைகள் (2025-2026)
மதிப்பீடு
பலவுள் தெரிக.
1.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ)
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ)
இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது
இகழ்ந்தால்
2.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.
இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ)
இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
அ)
எந்+தமிழ்+நா ஆ) எந்த + தமிழ் +நா இ) எம் + தமிழ் +நா ஈ) எந்தம் + தமிழ் +நா
4.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் விளையாலணையும் பெயரும் முறையே -
அ)
பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல் : கேட்டவர்
5.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -
அ)
குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை இ) கிளைப்பெயர் வகை ஈ)
இலைப்பெயர் வகை
குறுவினா
1.
பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்
காட்டுக.
ü
பல
கை - தொடர்மொழி
ü
பலகை – தனிமொழி
ü
எனவே
பொதுமொழி
2.
மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!
முன்னும் தினைவால் முடிதாழ
வாழ்த்துவமே! -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக
விடை: சிலப்பதிகாரம்,
மனிமேகலை
3.
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு
வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்
உள்ளன.
மேற்கண்ட
தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய
தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
விடை:
சரியான தொடர்கள்:
ü
ஒரு
தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
ü
ஒரு
சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழை: சீப்பு
4.
"கொள்வோர் கொள்சு: குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு
தொடாது
பாடல்
அடிகளில் உள்ள மோனை. எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
மோனைச்சொற்கள்:
கொள்வோர் , கொள்க
குரைப்போர், குரைக்க
எதுகைச்
சொற்கள்:
கொள்வோர் , உள்வாய்
5.
சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
·
செந்நெல்
·
வெண்ணெல்
·
கார்நெல்
சிறுவினா
1.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
ü நறுங்கனி
ü பாண்டியன் மகள்
ü சிறந்த நூல்களை
உடைய மொழி
2.
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின்
பெயர்களைத் தொடர்களில் அமைக்க
விடை:
அ) நாற்று - நாற்று பார்த்தேன்.
ஆ) கன்று - கன்று நட்டேன்
இ) பிள்ளை- பிள்ளை வளர்த்தேன்
ஈ) வடலி – வடலியை ரசித்தேன்
உ) பைங்கூழ் - பைங்கூழ் எடுத்தேன்
3.
அறிந்தது, அறியருந்து, புரித்தது.
புரியாதது. தெரிந்தது, தெரியாதது, பிறந்தது,
பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.
இக்கூற்றில்
அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
விடை:
v அறிதல்-அறியாமை
v புரிதல்-புரியாமை
v தெரிதல்-தெரியாமை
v பிறத்தல்-பிறவாமை.
நெடுவினா
1.
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று
விளக்குக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
நாட்டு
வளம் |
·
சொல்வளம் |
·
தொடர்பு |
முன்னுரை:
நாட்டுவளமும் சொல்வளமும்
தொடர்புடையது என்பதைக்
காண்போம்
நாட்டுவளம்:
v
தமிழ்
மொழி மிகவும் பழமையானது
v
நாட்டின்
வளமும், அங்கு பேசும் சொற்களின் வளமும் தொடர்புடையது
v
நாட்டு
வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது.
சொல்வளத்திற்கான சில
சான்றுகள்:
ü
தமிழில் இலையைக் குறிக்க பல சொற்கள் உள்ளன
ü
விளை
பொருட்களின் மிகுதி
ü
பயிர்களின்
பல பகுதிகள்
ü
நெல்லின்
பல வகைகள்
முடிவுரை:
நாட்டுவளமும் சொல்வளமும்
தொடர்புடையது என்பதைக் காண்போம்
2. காலக்கணிதம்
கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
கவிஞன் யானோர்
காலக் கணிதம்.
கருப்படு பொருளை
உருப்பட வைப்பேன்!
நானோர் புகழுடைத்
தெய்வம்
பொன்னிலும்
விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால்
இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின்
எதிர்ப்பதென் வேவை!
ஆக்கல் அளித்தல்
அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே
அறிந்தவை;
அறிக! - கண்ணதாசன்
திரண்ட கருத்து: பாடலைப்
பத்தி வடிவில் எழுதுக.
மோனை நயம்: கவிஞன்- கருப்படு
எதுகை நயம்: கருப்படு - பொருளை - உருப்பட
இயைபு நயம்: தெய்வம் - செல்வம்
அணி நயம்: உருவக அணி
3.
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
கனமழை |
·
கப்பல்
நிலை |
·
பயணிகள் |
·
முடிவுரை |
முன்னுரை:
புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும்
புயவில், தோணி படும்பாட்டையும் இங்கு காண்போம்
கனமழை:
பாண்டியன் பயணம் செய்த
கப்பலில், வெயில் மறைந்து மழை பெய்யத்
தொடங்கியது. மீண்டும் மீண்டும் மழை பெய்தது.
கப்பல் நிலை:
v மழை பெய்வது அதிகரித்தது .
v கப்பல் தள்ளாடியது.
v மலைத்தொடர் போன்ற அலைகள் வீசின.
பயணிகளின்:
v பாண்டியன் கடலை பார்த்து வியந்து நின்றான்.
v கப்பல் தடுமாறிச் சென்றது.
v பயணிகள் பயந்தனர்
முடிவுரை:
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள
வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி
படும்பாட்டையும் இங்கு காண்போம்
மொழிப்பயிற்சிகள்
1.
தேன், நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத்
தொடர் மொழிகளாக்குக.
1.
தேன்
- தேன் எடு
2.
நூல்
- நூல் படி
3.
பை
– பை கொடு
4.
மலர் - மலர் பறி
5.
வா
- வா போகலாம்
ஆ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை தேரும்
சிலப்பதி காறமதை ஊனிலே
எம்முயிர் உல்லலவும் – நிதம் ஓதி
யுனர்ந்தின் புருவோமே” கவிமணி தேசிக விநாயகனார்
|
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே” கவிமணி தேசிக விநாயகனார்
|
இ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
( குவியல், குலை,மந்தை,கட்டு )
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
கற்குவியல் |
புல் |
புற்கட்டு |
பழம் |
பழக்குலை |
ஆடு |
ஆட்டுமந்தை |
ஈ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
விடை: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு
உணவு உண்டார்.அவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார்.
விடை: ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று
என்னைச் சந்தித்தார். அவர்
என் நண்பர்.
விடை: நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.
4.பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித்
தேர்வில் வென்றார்.
விடை: பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
பொதுக்கட்டுரை
1. குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும்
எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும்
அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம்
சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு,
உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.
குறிப்புச்சட்டகம் |
·
முன்னுரை |
·
சிற்றிலக்கியம் |
·
காப்பியம் |
·
நீதி
இலக்கியம் |
·
முடிவுரை |
முன்னுரை:
குமரிக்கடல்
முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப்
புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர்
கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம்
கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,
கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை
காண்போம்.
சிற்றிலக்கியம்:
சிற்றிலக்கியங்களான
பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து,
அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்
காப்பியம்:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
நீதி இலக்கியம்:
திருக்குறள் போன்ற நீதி இலக்கியங்களை இயற்றினர்
முடிவுரை:
முன்னுரையைத் திரும்ப எழுதி
கண்டோம் என முடிக்கவும்
மொழியோடு விளையாடு
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
தேன்மழை |
பூ
விலங்கு |
பொன்செய் |
பொன்விலங்கு |
மணிவிளக்கு |
பூமழை |
மணிமேகலை |
வான்மழை |
எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ்
எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
நான்கு |
ச’ |
எறும்புந்தன் கையால் எண் சாண் |
எட்டு |
அ |
ஐந்து சால்பு ஊன்றிய தூண் |
ஐந்து |
ரு |
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
நான்கு,இரண்டு |
ச’ , உ |
ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
ஆயிரம் |
க000 |
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
பார்! பார்! காட்சி பார்!
கண்ணைக் கவரும் காட்சி பார்!
கருத்தைக் கவரும் காட்சி பார்!
கவினுற எழுத காட்சி பார்!
எழுத எழுத மகிழ்ச்சி பார்!
பார்! பார்! காட்சி பார்!
(அனைத்து காட்சிகளுக்கும் இதையே எழுதலாம்)
கலைச்சொல் அறிவோம்
1.
Vowel
- உயிரெழுத்து
2.
Consonant
– மெய்யெழுத்து
3.
Homograph
– ஒப்பெழுத்து
4.
Monolingual
– ஒரு மொழி
5.
Conversation
- உரையாடல்
6.
Discussion
– கலந்துரையாடல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி