10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON AUGUST WEEK-4

  10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 18-08-2025 முதல் 22-08-2025        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. திருவிளையாடற் புராணம் 2. புதிய நம்பிக்கை

1.கற்றல் நோக்கங்கள்   :

    Ø கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.

Ø      @ படித்துப் பொருள் உணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்கும் திறன்பெறுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

திருவிளையாடற்புராணம்


புதிய நம்பிக்கை

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  திருவிளையாடல் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

      # கல்வியின் அவசியம் குறித்த பழமொழிகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

    # இடைக்காடனார் குலேச பாண்டியனின் அவையில் பாடலைப் பாடுதல்

     # பாண்டியன் இடைக்காடனாரின் பாடலை அவமதித்தல்

     # இடைக்காடனார் இறைவனிடம் முறையிடல்

     # இறைவன் பாண்டியனின் தவறை உணரச்செய்தல்

     #  கல்வி கற்கத்துடிக்கும் கருப்பினப்பெண்ணின் வாழ்க்கையில் கல்வி எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது? என்பதே “ புதிய நம்பிக்கை” என்ற சிறுகதையாகும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  ஆசிரியர் குறிப்பை விளக்குதல்

       Ø  நூல்வெளி பகுதியை விளக்குதல்

       Ø  பாடற்கருத்தை நயத்துடன் விளக்குதல்

       #  விரிவானப்பகுதியைச் சுருக்கி ,எளிமையாக மாணவர்க்குப் புரியும் வகையில் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

திருவிளையாடற் புராணம்


புதிய நம்பிக்கை

7.மாணவர் செயல்பாடு:

      Ø  கற்றவர் பெறும் சிறப்புகளைச் செய்யுளின்வழி அறிதல்.
     Ø செய்யுட்பகுதியைப் பிழையின்றி  படித்தல்
     Ø  அருஞ்சொற்களின் பொருளறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. பரஞ்சோதி முனிவர் - குறிப்பு வரைக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.. நீங்கள் மேரியாக இருந்தால் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       Ø 1024-  புராண இலக்கியத்தின் மொழிதொடர் அமைப்புகளை அறிதல்அறிவால் பெறப்படும் சமூகம் மதிப்பு காலந்தோறும் மாறாதிருப்பதைப் படித்துச் சுவைத்தல்

Ø          @ 1025 - மொழி பெயர்க்கப்பட்ட நிகழ்வைகதையைப் படித்துப் பொருள் உணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்குதல்.


👉 முந்தைய வார பாடக்குறிப்புகள்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை