8 TH STD TAMIL ANNUAL EXAM ANSWER KEY

  


இராணிப்பேட்டை – முழு ஆண்டுத்தேர்வு 

(இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான வினாத்தாள் & விடைக்குறிப்பு)

முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2025 , இராணிப்பேட்டை மாவட்டம்

                                                     8. ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்

பகுதி-1

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                                                7X1=7

வி.எண்

விடைகள்

மதிப்பெண்

1

ஆ. அம்பேத்கர்

1

2

. கைக்குழந்தைகள்

1

3

. அசை

1

4

. வைப்பு

1

5

அ. குலம்

1

6

அ. தாவரங்களை

1

7

இ. பனையோலைகள்

1

கோடிட்ட இடங்களை நிரப்பு                                                                                                                     4X1=4

8

போர்த்து

1

9

சேலம்

1

10

சின்னாளப்பட்டி

1

11

ஓடையாட

1

பொருத்துக                                                                                                                                               4X1=4

12

மதம் - கொள்கை

1

13

மையல் - விருப்பம்

1

14

நிறை - மேன்மை

1

15

பொறை - பொறுமை

1

 

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                                                                 5X2=10

16

ü  மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.

ü   எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.

ü  அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

2

17

செய்யுளில் திணை, பால், வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல்

வேண்டும்.  மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

2

18

சலசலவென

2

19

வானம் , காற்றின் தூய்மை , நீரின் உயர்வு

2

20

v  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

v  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்

2

21

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை விட யானைக்குக் குறிவைத்துத் தவறிய அம்பு

2

22

மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

2

23

நடுவுநிலைமையோடு செயல்படுதல்

2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                                                                 5X2=10

24

4 வகை – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

2

25

காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி)

2

26

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில்  பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

2

27

தவறு செய்தால் கண்டித்து திருத்துதல்

2

28

ஐம்பூதங்கள்

2

29

v  உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்

v  ஆதரவற்றமகளிருக்குத்திருமண உதவித்திட்டம்

v  தாய்சேய்நல இல்லங்கள்

v  நலிவடைந்தபிரிவைச் சேர்ந்தமாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்

v  முதியோருக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம்

2

30

பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

2

31

வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெயயிட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை என்று கூறுவர்.

2

VI

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                                

5X3=15

32

ü  இயற்கையை விட்டு விலகியமை

ü  மாறிப்போன உணவு முறை

ü  மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

ü  மன அழுத்தம்

2

33

ü  இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.

ü  பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

ü  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

ü  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

ü  அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.

ü  செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

ü   நிறைஎனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.

ü  நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனைவழங்குதல்

2

34

மனத்தை அடக்கும் வல்லமைஇல்லாதவர் மேற்கொண்டவலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரைமேய்ந்ததைப் போன்றது.

2

35

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை

வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்

2

36

v  காலையும் ,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

v  தூய்மையான காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும்.

v  குளித்த பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

v  அளவுடன் உண்ண வேண்டும்.

2

37

    பெயரெச்சம்: நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த

    வினையெச்சம்: படுத்து, பாய்ந்து, கடந்து, , பிடித்து, பார்த்து.

2

38

ü  எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

ü  குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.   (எ.கா.) ந, நம், நா, நாம்.

ü  இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.    (எ.கா.) கட, கடல், கடா, கடாம்.

2

39


2

VII

அடிமாறாமல் எழுதுக

2+5=7

40

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

2

41

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே

5

VIII

இரண்டு வினாக்களுக்கு விடையளி

2 X 4=8

42


4

43

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

4

44

v  முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.

v  சூடான நிலையில் நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையில் செலுத்தி வளைக்கவேண்டும்.

v  வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும்.  இவ்வாறே பிரம்பால் பொருட்களைச் செய்ய இயலும்

4

45

ü  இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.

ü  மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.

ü  மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்

4

IX

மொழிப்பயிற்சி

 

46

1. நோய்   2. மேகம்  3. விருப்பம்

3

47

1. நெடுந்தேர்  2. வானமறிந்து  3. தாமினி

3

48

1. நலம் + எல்லாம்  2. போவது+இல்லை 3. இனிமை+ ஓசை

3

49

1. குறைவற்ற செல்வம் 2. கோடி நன்மை

2

50

1. பருகு  2. கொக்கரிக்கும்

2

51

1. நட 2. பயில்

2

52

1. விழைவுத்தொடர்   2. செய்தித்தொடர்

2

53

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

54

1. நோய்   2. கல்வெட்டியல்

2

55

1. உரு   2. க

2

 

X. ஒன்றனுக்கு மட்டும் விடையளி                                                                                                               1X6=6

56

v  தமிழரது நிலம்,நிறைந்த பண்பா டுகளும் தத்துவங்க ளும் அடங்கியது.நோய்கள் எல்லாம் பேய்,பிசாசுகளால் வருகின்றன; பாவ, புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களா ன சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

v  நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை,சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறா க ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

6

அதியமானின் அரண்மனையில் ஒளவையார் நீண்டகாலம் தங்கியிருந்தார். அப்போது தொண்டைமான், அதியமான் இருவருக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி இக்கதையில் காண்போம்.

    ஒருநாள் அதியமான் காட்டுவளத்தைக் காணச் சென்றான். திரும்பி வரும்போது அரிய நெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஒளவையாரிடம் கொடுத்தான். சுவைத்துப் பார்த்த ஒளவையார் இதுவரை இவ்வளவு சுவையுள்ள கனியை தான் சுவைத்ததே இல்லை என்று கூறினார்.

    அமைச்சர் “இது அரிய நெல்லிக்கனி , நமது வீரர்களால் பறிக்க இயலவில்லை . நம் மன்னரே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறிப் பறித்தார்” என்று கூறினார். மேலும் “இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்” என்றும் கூறினார்.

   அதனைக் கேட்ட ஒளவையார் வியந்து அதியமானிடம் “நீ உண்ணாமல் எனக்கு ஏன் கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அதியமான் “என்னைப் போன்ற அரசன் இறந்து போனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால், அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது” என்று கூறினான். அதியமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கண்டு ஒளவையார் மனமுருகினார்.

    மறுநாள் அதியமானின் கவலைகொண்ட முகத்தைக் கண்டு ஒளவையார் காரணம் கேட்டார். அதியமானும் “தொண்டைமான் போர்ச் செய்தி அனுப்பியுள்ளான்” என்று கூறினான். ஔவையார் அதியமானிடம் “எதற்கும் அஞ்சாத நீ போரைக் கண்டு அஞ்சலாமா?” என்று கேட்டார்.

   அதியமான் தான் போரைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுவதாகவும் கூறினான். அதியமானின் உள்ளத்தை அறிந்த ஒளவையார், அதியமானின் ஒப்புதலோடு தொண்டைமானைக் காணச் சென்றார்.

   தொண்டைமானின் அரண்மனையில் படைத் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது படைத்தலைவர் “அதியமான் நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அதிர்ந்துபோய், சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார்” என்று கூறினான்.

   தொண்டைமான் ஒளவையாரை வரவேற்றான். போர்க்கருவிகள் நிறைந்த படைக்கலக் கொட்டிலைப் பார்க்க அழைத்துச் சென்றான். அப்படைக் கருவிகளைப் பார்த்து ஒளவையார் “அளவுக்கதிகமான கருவிகள், அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறை, புத்தம் புதியனவாய் நெய் பூசப்பெற்று மாலையும் மயில் தோகைகளும் அணிவிக்கப்பட்டு அழகாக உள்ளன” என்றார்.

    மேலும், ‘அதியமான் எப்போதும் போர் புரிந்து கொண்டே இருப்பதால் அவனது படைக்கருவிகள் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக் களத்தில் கிடக்கின்றன” என்று கூறினார்.

     ஒளவையாரின் பேச்சில் இருந்த உட்பொருளை உணர்ந்த தொண்டைமான். ‘தான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை என்றும், அதியமான் பல போர்களைக் கண்டுள்ளான்’ என்றும், கூறி அதியமானுடன் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தான். இதனை அதியமானிடம் தெரிவிக்கும்படியும் கூறினான்.

    ஒளவையாரின் அறிவு சார்ந்த செயலினால் இழப்புகளின்றி நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்பட்டனர்.

6

XI

ஒன்றனுக்கு மட்டும் விடையளி

 

58

கட்டுரை அமைப்பில் உரிய டஹ்லைப்புகளுடன் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

6

59

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

12,தென்றல் நகர்,

திருத்தணி-1.

12-03-2022.

அன்புள்ள அண்ணனுக்கு,

       தங்கள் அன்பு தம்பி தமிழ்வேந்தன் எழுதும் மடல்.நலம், நலமறிய ஆவல்.தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகியிருப்பினும்,தங்களை அவ்வப்போது நினைவு கூர்வதுண்டு.எனது தமிழ் தேடலுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒன்று தேவைப்படுகிறது.எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை. தாங்கள் வசிக்கும் திருவல்லிக்கேணி வள்ளுவர் பதிப்பகத்தில் கிடைப்பதாக அறிந்தேன்.ஒரு பிரதியை வாங்கி தூதஞ்சல் மூலம் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் அன்பு தம்பி,

கா.கொற்றவன்.

உறைமேல் முகவரி:

    பூ.சொற்கோ

    54,மறவன் வீதி,

    திருவல்லிக்கேணி,

    சென்னை-14

6

 

DOWNLOAD PDF

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை