இராணிப்பேட்டை – முழு ஆண்டுத்தேர்வு
விடைக்குறிப்புகள் 2024-2025
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
|||||||||||||||||||||||||||||
வி.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
||||||||||||||||||||||||||
1. |
இ. சிற்றிலக்க்கியம் |
1 |
|
||||||||||||||||||||||||||
2. |
இ. வளம் |
1 |
|
||||||||||||||||||||||||||
3. |
ஈ. புலரி |
1 |
|
||||||||||||||||||||||||||
4. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
||||||||||||||||||||||||||
5. |
அ. ஆராயாமை, ஐயப்படுதல் |
1 |
|
||||||||||||||||||||||||||
6. |
ஆ. தொடு உணர்வு |
1 |
|
||||||||||||||||||||||||||
7. |
ஈ. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை |
1 |
|
||||||||||||||||||||||||||
8. |
ஈ. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான் |
1 |
|
||||||||||||||||||||||||||
9. |
இ. மோகன்சிங், ஜப்பானியர் |
1 |
|
||||||||||||||||||||||||||
10. |
இ. துணிவு |
1 |
|
||||||||||||||||||||||||||
11. |
ஈ. ஒன்றே உலகம் |
1 |
|
||||||||||||||||||||||||||
12. |
அ. சிறுபஞ்சமூலம் |
1 |
|
||||||||||||||||||||||||||
13. |
ஆ. காரியாசான் |
1 |
|
||||||||||||||||||||||||||
14. |
அ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
|
||||||||||||||||||||||||||
15. |
ஆ. பூவாது
- மூவாது |
1 |
|
||||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||
16. |
அ, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
2 |
|
||||||||||||||||||||||||||
17. |
திராவிட
மொழிக்குடும்பம் |
1 |
|
||||||||||||||||||||||||||
18. |
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும்
உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். |
2 |
|
||||||||||||||||||||||||||
19 |
பந்தலின்
கீழ் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது |
2 |
|
||||||||||||||||||||||||||
20. |
எச்செயலையும் அறிவியல்
கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி?
என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே
சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும் |
2
|
|
||||||||||||||||||||||||||
21
|
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். |
2
|
|
||||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||
22 |
அ. செய்ய - வனைய
ஆ. அடித்தது - வீசியது |
2 |
|
||||||||||||||||||||||||||
23 |
அ. நீர் மேலாண்மை
ஆ. கரும்புச்சாறு (அ) கருப்பஞ்சாறு |
2 |
|
||||||||||||||||||||||||||
24 |
அ. அகல் ஆ. கால் |
2 |
|
||||||||||||||||||||||||||
25. |
அ. உடல் ஆ. கடல் |
2 |
|
||||||||||||||||||||||||||
26. |
பொருந்திய தொடர் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
||||||||||||||||||||||||||
27. |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
||||||||||||||||||||||||||
28.
|
வீணையோடு வந்தாள் – வேற்றுமைத் தொடர் கிளியே பேசு – விளித்
தொடர். |
2
|
|
||||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||||
29 |
# மொட்டைக்கிளையாக நின்று பெருமூச்சுவிடுகிறது
பட்டமரம். * தன்னை
வெட்டப்படும் ஒருநாள் வருமென்று கவலை அடைந்தது. * உட்கார நிழலும், நறுமணம் கமழும் மலர்களும் கூரை போன்று விரிந்த இலைகளும் வெந்து கருகி நிறமாறிவிட்டதற்கு
வருந்துகிறது. * பசுமையாக
இல்லாததால் கட்டை என்னும் பெயர் பெற்று கருகி விட்டது. இழந்தது. * உடையாக
இருந்த மரப்பட்டைகள் கிழிந்ததால் அழகை காலம் மாறும் புயலின் தாக்கத்தால்
துன்பப்பட்டது. |
3
|
|
||||||||||||||||||||||||||
30
|
அ. மொழி ஆ. தனிப்பெரும் வளம் இ. நாகரிகம் |
3 |
|
||||||||||||||||||||||||||
31. |
|
3 |
|
||||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
|||||||||||||||||||||||||||||
32 |
ü நடுவண் அரசும் மாநில
அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி
விண்ணப்பிக்கலாம். ü பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம்
வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய
வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச்
செய்யப்பட்டு வருகிறது. ü பள்ளிக்கல்வி முடித்த
மாணவர்கள் கல்லூரிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், கல்லூரிக்
கட்டணம் ஆகியவற்றையும் இணையம் வழியாகவே செலுத்த முடியும் |
3 |
|
||||||||||||||||||||||||||
33. |
|
3
|
|
||||||||||||||||||||||||||
34. |
அ. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே. ஆ) ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்
தினரே |
3 |
|
||||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
|||||||||||||||||||||||||||||
35 |
தன்வினை : வினையின் பயன் எழுவாயைச்
சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா: பந்து உருண்டது. பிறவினை : வினையின் பயன் எழுவாயை
இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான் காரணவினை : எழுவாய் தானே வினையை
நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது எ.கா. பந்தை உருட்ட வைத்தான். |
3 |
|
||||||||||||||||||||||||||
36. |
புகழ்வதுபோலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும்
வஞ்சப்புகழ்ச்சியணி. |
3 |
|
||||||||||||||||||||||||||
37 |
|
3 |
|
||||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
|||||||||||||||||||||||||||||
38 |
1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்: மதுரையில்
கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி,
தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான். 2. தூது செல்வோரின் தகுதி : தூது
செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல்
செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக்
குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல்
வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய
சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய
பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ்,
இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை
அனுப்புகிறாள், தலைவி. |
5 |
|
||||||||||||||||||||||||||
38 |
இணைய வணிகம்
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத
பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில்
விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இணைய பயன்பாடு : தற்காலத்தில் பேருந்து,
விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி
போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப்
பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு
நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது
கூட இணையம் மூலம்
நடைபெறுகின்றது. வரி செலுத்துதல் அரசுக்குச் செலுத்த
வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய
படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம்
வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி
உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது. ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின்
வழியாகச் செயல்பட்டு வருகிறது. |
5 |
|
||||||||||||||||||||||||||
39 |
அ.
uரிய விடை எழுதியிருப்பொன் மதிப்பெண் வழங்குக |
5 |
|
||||||||||||||||||||||||||
39 |
ஆ. அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண்
, ஐயா,பொருள்-1 மதிப்பெண்
, இடம்,நாள்-1/2 மதிப்பெண்
, உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2 மதிப்பெண். |
5 |
|
||||||||||||||||||||||||||
40 |
·
திரண்ட கருத்து ·
மையக்கருத்து ·
சொல் நயம் ·
தொடை நயம் ·
அணி நயம் ·
பொருள் நயம் |
5 |
|
||||||||||||||||||||||||||
41 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று
சொன்னது இந்த காட்சி
இது அர்த்தமுள்ள காட்சி
விழிப்புணர்வுக்கான காட்சி ( மாதிரி) |
5 |
|
||||||||||||||||||||||||||
42 |
1 .Every tower is a sout blossoming in nature-Gerant De Nerval
ஒவ்வொரு மாரும்
இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது. 2. Sunset is still my favourite colour, and rainbow is second-
Mattle Stepanek சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த
நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும். 3 An early moming walk is blessing for the whole day- Henry
David Thoreau அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள்
முழுவதும் ஆசியைத் தரும். 4. Just living is not enough. One must have
sunshine, freedom, and a little flower Hans Christian Anderson |
5 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|
||||||||||||||||||||||||||
43
அ. |
முன்னுரை: பண்டித ரமாபாய்: ஐடாஸ் சோபியா: மூவலூர் இராமாமிர்தம் : சாவித்திரிபாய் பூலே : மலாலா : முடிவுரை : “புவி வளம் பெறவே புதிய
உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே” |
8 |
|
||||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை : நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர்
மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன்
நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர்
கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. களை பறிக்கும்
பருவம்: நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக்
கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்
பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள்
உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும்
கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வானவில் : அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள்
வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை
மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும்.
இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும். பொன்மாலைச் சாரல் : நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச்
செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும்
இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற
காட்சி போல உள்ளது. செழித்து
வளர்ந்துள்ளவை : சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குளிர்ந்த
மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை,
சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம்,
நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள்
நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன. முடிவுரை : காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது
பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது. |
8 |
|
||||||||||||||||||||||||||
44. அ. |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன்
உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
|
||||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி: குழந்தைகளுக்குப் பரிமாறுதல்: மனிதநேயம் புரிந்தாள்: நாய்க்குட்டிகளை விரட்டுதல்: சுவைத்து உண்டாள்: நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்: முடிவுரை : வறுமையிலும் அன்பு குறையாத
மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி
தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி
உணர்த்தியுள்ளார். |
8 |
|
||||||||||||||||||||||||||
45
அ. |
திருத்தணி, அன்புள்ள நண்பன்
எழிலனுக்கு, என்
பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க
மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம்
எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல
வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!! அன்புடன்,
முகிலன். முகவரி: த/பெ மதியரசன், |
8 |
|
||||||||||||||||||||||||||
45. ஆ. |
இயற்கையின் தாய்மடி- உதகை கடந்த 2018 சனவரி மாதம்
இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு
வண்டியில் முன்பதிவு செய்து,உதகமண்டலத்தின்
அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது.மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு
தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம்.மலைகள்,கடுகள்,ஆறுகளைக்
கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும்
அனுபவமாக அமைந்தது. 3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா
சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர்
உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன. |
8 |
|
||||||||||||||||||||||||||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி