10 TH STD TAMIL QUESTION & ANSWER UNIT-3

 10.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)



பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.        

2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

அ) சுட்டி  ஆ) கிண்கிணி இ) குழை   ஈ) சூழி

3. காசிக்காண்டம் என்பது

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) கரசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

4. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால்தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ) நிலத்திற்கேற்ற விருந்து  ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து  ஈ) உற்றாரின் விருந்து.

5. நன்மொழி என்பது

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  (ஈ) உம்மைத்தொகை

குறுவினா

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

விடைவாருங்கள்நலமா?, நீர் அருந்துங்கள்

2. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த கினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவிஎன்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாஉங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விடைஇல்லைவிருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை.

3. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

விடை:  சிலம்பு , கிண்கிணிஅரைஞாண்அரைவடம்சுட்டிகுண்டலம்.

4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

விடைகல்வி செல்வம் , விருந்து ஈகை

5. தண்ணீர் குடிதயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

விடை:

ü  தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை

ü  தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சிறுவினா

1. 'இன்மையிலும் விருந்தோம்பல்குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

விடை:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

2, வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.

விடை:

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

3. 'தனித்து உண்ணாமைஎன்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

விடை:

ü  பகிர்ந்துண்ணும் வழக்கமே குறைந்து விட்டது.

ü  நெருங்கிய உறவினர்களை மட்டுமே விருந்தினர்களாகக் கருதுகின்றனர்.

ü  வாயிலை அடைக்கும் முன் உணவு வேண்டி யாராவது இருக்கிறார்களாஎன்று பார்த்த தமிழர் இன்று வாயிலை அடைத்த பிறகே உண்னுகின்றனர்.

4. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.சிலர்மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த விட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தன் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே விடு சென்றேன்.

பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

விடை:

1.     மார்கழித் திங்கள் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள் – பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

நெடுவினா

1. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

விடை:

தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.

தனித்து
உண்ணாமை:

தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.

விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:

            விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை

அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” 

என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

வறுமையிலும் விருந்தோம்பல்:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

நிலத்திற்கேற்ற விருந்து:

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:

வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”

 என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி பெருமிதம் கொள்வோம்.

 

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

விடை:

முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும்இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோபரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்” என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கிநிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:                                 

 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோலஅந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசிஅந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

விடை:

வரவேற்பு:

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.     எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம்.        அவர்கள் அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க நீர் தந்தோம்.

கலந்துரையாடல்:

நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின்வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்புபாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது.

விருந்து உபசரிப்பு :

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.

நகர்வலம்:

விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்

இரவு விருந்து :

நகர்வலம் முடிந்துஇரவு விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில்இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர்.

பிரியா விடை :

இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.

கற்பவை கற்றபின்:

(பக்க எண்: 51)

நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.

விடை:

v  உறவினரை முகமலர்ச்சியுடன் நோக்கினேன்.

v   வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன்.

v  உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறினேன்  

v  தலைவாழை இலையில் உணவிட்டேன்.

v  அவர் செல்லும் போது வாயில் வரை சென்று வழியனுப்பினேன்.

வண்ணமிட்ட  தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக. (பக்க எண்: 60)

1. அன்புச்செல்வன்திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

   அன்புச்செல்வன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகைதொடுதிரை - வினைத்தொகை

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.

    மோர்ப்பானை -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை;

    மோர் கொடுக்கவும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை.

3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

    வெண்டைக்காய்மோர்க்குழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்.

4. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடு கின்றன.

   தங்கமீன்கள் -உவமைத்தொகை.

   தண்ணீர்த்தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.

மொழியை ஆள்வோம்:

மொழி பெயர்க்க:                                            

            Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

            மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறதுமொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளதுநம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளதுநாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்எல்லோருக்கும் நன்றி.

பழமொழியை நிறைவு செய்க:-                                 

1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று வேளை

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

 

கதையாக்குக.

மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டிகற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராகயாருமற்றவராக.... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.

"அன்பின் ஒளி"

இளையன் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். வாழ்வில் யாரிடமும் நெருக்கம் இல்லாமல்நாள்களை ஏக்கத்துடனும் ஆசைகளுடனும் கடத்திக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தின் ஆழத்தில்ஒருவன் ஏதோ சிறிய அன்பு பார்வைக்காகக் காத்திருந்தான்.

ஒருநாள்வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதுஅவன் செல்லும் பாதையில் ஒரு மூதாட்டி தெருவோரத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். கால்களும் கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. பசியோடு நடுங்கிய அந்த உருவம், இளையனின் மனதை வேதனையாக்கியது.

தன்னிடம் இருந்த சிறிது பணத்தைக் கொண்டு அருகில் இருந்த சிற்றுண்டி கடைக்கு ஓடிச் சென்றுவெறும் இடியாப்பம் மற்றும் தேநீர் வாங்கி வந்தான். அதனை அன்புடன் மூதாட்டியின் முன் வைத்தான். முதலில் குழம்பியபடி பார்த்த மூதாட்டியின் கண்களில்ஒரு நிமிடம் கழித்து ஒளி மலர்ந்தது..

அவள் கைகளை உயர்த்தி இளையனின் கைகளை பற்றிக் கொண்டு சொன்னாள்,

"மகனேநீ எனக்கு இன்று உணவு மட்டும் இல்லை... உயிரும் தந்தாய்!"

அந்த வார்த்தைகள் இளையனின் உள்ளத்தை நனைத்தது. பெறாமல் இருந்த அன்பின் உணர்வைஇன்று அவன் தரும் செயலின் மூலமாகப் பெற்றான்.

"அன்பை எதிர்பார்க்காமல் கொடுத்தால்அது சுழன்று நம்மை எங்கேயாவது வந்து சேரும்."

அந்த நாள் முதல்ரமேஷ் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும்ஒரு சின்ன அன்பு செயலில் செலவழிக்கத் தொடங்கினான்.

கடிதம் எழுதுக

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

             வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

                                                                                                                          அ. எழில்வேந்தன்.

இடம்: அரக்கோணம்,

நாள்: 08-01-2022.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,  

         அரக்கோணம்.

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

வினா

குறிப்பு

விடுபட்ட எழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

 

 

 

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

ரு

வா____

மன்னரிடம் இருப்பது

ள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

கு

 

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                                       

1

சிலை - சீலை

சிலைக்கு சீலை கட்டினர்

2.

தொடு - தோடு

தோட்டினைத் தொட்டான்

3

மடு - மாடு

மடுவின்மேல் மாடு நின்றது

4

மலை - மாலை

மாலையில் மலைக்குச் சென்றான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றான்

அகராதியைக் கண்டு பொருள் எழுதுக

ஊண் – உணவு  , ஊன் – உடல்இறைச்சி

திணை – ஒழுக்கம்  , தினை – சிறுதானியம்

அண்ணம் – மேல்வாய்  , அன்னம்சோறு , பறவை

வெல்லம் – இனிப்பு , வெள்ளம் – நீர்ப்பெருக்கு

கலைச்சொற்கள்

1.     Hospitality - விருந்தோம்பல்

2.    Wealth - செல்வம்

3.    Baby shower - வளைகாப்பு

4.    House warming - புதுமனைபுகுவிழா

5.    Feast – விருந்து

நிற்க அதற்குத்தக

"தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?"  - "கேரட்"

"பிடிச்ச பழம்?"  - "ஆப்பிள்"

பிடிச்ச காலை உணவு? - "நூடுல்ஸ்"

"மத்தியானத்துக்கு" - "ஃப்ரைடு ரைஸ்" ,

” ராத்திரி”  - "பீட்ஸா அல்லது பாஸ்தா"

இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல." சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்" என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படிஇட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனிக் காணாமல் போய்விடுமாஅதிர்ச்சியான பதில், 'ஆம்காணாமல் போய்விடும்'! உங்கள் குழந்தைகள், "ஆடுமாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா அம்மாஎன எதிர்காலத்தில் கேட்கக்கூடும்!

இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

v  அனைவரும் நாட்டு காய்கறிகளையே உண்ண வேண்டும்.

v  செயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத காய்கறிகளை வீட்டுத் தோட்டத்தில் விளைய வைத்து பயன்படுத்த வேண்டும்.

v  கீரைகளின் நன்மைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

v  விரைவு உணவுகளை உண்ணுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை