10 TH STD TAMIL QUESTION & ANSWER UNIT-2

 

10.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

இயல்-2

பலவுள் தெரிக.

1. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்   ஈ) வானத்தையும் பேரொலியையும்

2. செய்தி 1-   ஒவ்வோர் ஆண்டும் சூன் 3 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

   செய்தி 2 -  காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

   செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

அ) செய்தி 1 மட்டும் சரி  ஆ) செய்தி 1.2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி  ஈ) செய்தி 1.3 ஆகியன சரி

3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு

ஆ) கோடை - 2. தெற்கு

இ) வாடை - 3. கிழக்கு

ஈ) தென்றல் – 4. வடக்கு

) 1.2.3.4  ) 3.1.4.2   ) 4.3.2.1   ) 3,4,1,2

4. மகிழுந்து வருமா?' என்பது -------

அ) விளித்தொடர்  ஆ) எழுவாய்ந்தொடர்  இ) வினையெச்சத்தொடர்   ஈ) பெயரெச்சத்தொடர்

5. அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

அ) வேற்றுமை உருபு  ஆ) எழுவாய் இ) உவம உருபு    ஈ) உரிச்சொல்

 

குறுவினா

1. நமக்கு உயிர் காற்று

   காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக

விடை: காற்று உயிருக்கு நாற்று , தூய காற்று அனைவரின் உரிமை

2. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

விடை:  'சிரித்துச் சிரித்துப் பேசினார்' என்பது அடுக்குத்தொடராகும்.

3. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக

விடை:  கட்டுரையைப் படித்த (வேற்றுமை உருபு)

4. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

விடை:                                                                                 

ü  முதுகினால் சூரியனை மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை.

ü  தாகம் தீர்க்கும்போது மேகங்கள் கருணை மிக்கவை

5 .தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

விடை:

ü  கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்

ü  மேற்கிலிருந்து வீசும் காற்றுகோடை

ü  வடக்கிலிருந்து வீசும் காற்றுவாடை

ü  தெற்கிலிருந்து வீசும் காற்று - தென்றல்

சிறுவினா

1. உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய் ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

விடை:

1.     உயிராய் நான்மழையாய் நான்

2.     நானின்றி பூமியே சுழலாது  

3.    பூமித்தாயின் குருதி நான்.

2. உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

விடை:

ü  வானமும், உருவமில்லாக் காற்றும், பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும்.

ü  பூமி உருவாகி, ஊழிக்காலம் தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.

ü  மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி, அவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது

3. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக

விடை:

1.     பாடிக் காட்டினார் - வினையெச்சத்தொடர்

2.    கேட்டுப் பாடினர் - வினையெச்சத்தொடர்

3.    கேட்ட பாடலில் - பெயரெச்சத்தொடர்

4.    சிறுவினாக்களைக் கேட்டார் - வேற்றுமைத்தொடர்

5.    எழுதுபவருக்குப் பரிசு - வேற்றுமைத்தொடர்

நெடுவினா

1. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை:

நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

பசுமை பரப்புகளை அதிகரித்தல்:

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல்:

ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.

எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது

தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:

ü  தொழிற்சாலைகள் வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

ü  மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.

குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:

குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது  செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!

2. 'பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினை விவரிக்க.

பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

வளரும் விழி வண்ணமே வந்து

   விடித்தும் விடியாத காலைப் பொழுதாக

வினைந்த கலை அன்னமே

   நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

துந்த இனந் தென்றலே - வளர்

    பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க

திரண்ட கருத்து (காற்றைப் பாராட்டல்) :

     பாதி மலர்ந்த மலரைப்போலவும், பாதி விடிந்த காலைப் பொழுதைப்போலவும் உள்ள காற்றே, நீ இளந்தென்றலாக வரும் போது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் வருகிறாய். உன்னைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. பொதிகை மலையில் தோன்றி, மதுரையிலே சங்கத்தில் வளர்ந்த அழகிய தமிழை ஒத்த காற்றே என்கிறார் கவியரசர்.

மோனை நயம்:

லர்ந்தும் - மலராத; ளரும் - வண்ணமே

   போன்ற சொற்களில் முதலெழுத்து ஒன்றி வந்து மோனை நயத்துடன் இப்பாடல் சிறக்கின்றது.

எதுகை நயம்:

நதியில் - பொதிகை;        விடிந்தும் - விடியாத

     போன்ற சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து எதுகை நயம் எழிலுடன் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

முரண் நயம்:

மலர்ந்தும் ×  மலராத; விடிந்தும் × விடியாத

     போன்ற சொற்கள் எதிர்சொற்களாக அமைந்து முரண்நயத்தை வெளிப்படுத்துகின்றன.

இயைபு நயம்:

வண்ணமே - அன்னமே - மன்றமே

   என இப்பாடலின் இறுதியெழுத்துகள் ஒன்றாய் அமைந்து இயைபு நயத்துடன் காணப்படுகின்றது.

அணி நயம்:

    'மலர்ந்தும் மலராத பாதிமலர் போல' என்னும் அடிகள் இப்பாடலில் உவமையணி இடம்பெற்றுள்ளதை உணர்த்துகின்றது.

கற்பவை கற்றபின்

(பக்க எண்:27)     

காற்று பேசியதைப்போல , நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக

நிலம் பேசுகிறது

முன்னுரை :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை

என்று வள்ளுவன் என்னை பெருமைப்படுத்தி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பல்வேறு வகைகளில் மனிதர்கள் என்னை மாசுபடுத்துவது என்னை வருத்தம் அடையச் செய்கிறது.

வேறு பெயர்கள்:

நிலமாகிய எனக்கு அசும்பு, காசினி, வட்டகை, கழனி, களர் கொல்லை, சுரம், தகர் ,நத்தம் என்று பலவகைப் பெயர்கள் உண்டு. எனது மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப நான் பெயரிட்டு அழைக்கப்படுகின்றேன்.

ஐவகை நிலங்கள்:

நில மகளாகிய எனக்கு பழந்தமிழர் குறிஞ்சி ,முல்லை ,மருதம்நெய்தல், பாலை என்று பெயரிட்டு, எனது தன்மைக்கு ஏற்ப என்னை ஐவகை நிலங்களாக வகைப்படுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு நான் இரண்டற கலந்து இருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?

இலக்கியங்களில் நான்:

v  " நீலத் திரை கடல் ஓரத்திலே - நின்று

            நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை"

என்று மகாகவி கவிதையால் கொஞ்சியது என்னைத்தான்.

v  " சிறு பல் தொல்குடி பெறுநீர் சேர்ப்பன்" என்று அகநானூறு எனது வேறு வடிவமாகிய கடல் பகுதியை குறித்தது. இவை போன்று இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் என்னைப்பற்றி இருப்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது.

எனது வருத்தம்:

v  நான் மனிதர்களாகிய உங்களுக்கு மரம், செடி ,கொடி வளரவும் பயிர்கள் விளையவும் வேளாண்மைக்கு உற்ற நண்பனாகவும் விளங்குகின்றேன்.

v  வற்றாத ஆறுகளையும் குளங்களையும் ஏரிகளையும் தந்து மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறேன்.

v  மேலும் எண்ணிலடங்கா வளங்களை என்னுள் கொண்டிருக்கிறேன். அதை மனிதர்களாகிய நீங்களும் மிகுதியாகப் பயன்படுத்துகிறீர்கள்.

v  ஆனால் மனிதர்களாகிய நீங்களோ ரசாயன உரங்களை பயன்படுத்துதல், நெகிழிப்பைகளை மிகுதியாகப் பயன்படுத்துதல், மேலும் ஆலைக் கழிவுகளை என்னுள் பாய்ச்சுதல் என்று பல வகைகளில் என்னை மாசுபடுத்துவது என்னை ஆழ்ந்த துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.

எனது வேண்டுகோள்:

v  மனிதர்களின் சுயநலத்திற்காக என்னை மாசுபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.

v  நெகிழி பயன்பாட்டை முற்றிலும் குறைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த  துவங்குங்கள்

v  மரங்களை வெட்டாமல் இன்னும் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முற்படுங்கள்.

v  என்னிலிருந்து அதிக கனிம வளங்களைத் தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள்.

முடிவுரை:

மனிதர்களே என்னுள் இருக்கும் வளங்களை எடுத்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக எண்ணிக் கொண்டால், எதிர்காலச் சந்ததியினருக்கு என்னால் கிடைக்கும் எந்த நன்மையையும் என்னால் தர இயலாமல் போய்விடும். எனவே என்னை மாசுபடுத்தாமல் என்னை முறையாகப் பயன்படுத்துங்கள் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழி செய்யுங்கள்!!

(பக்க எண் : 36)

2. வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.

·        பழகப் பழகப் பாலும் புளிக்கும் - அடுக்குத்தொடர்

·        வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் - பெயரெச்சத் தொடர்

·        மேடையில் நன்றாகப் பேசினான் - வினையெச்சத் தொடர்

·        வந்தார் அண்ணன் - வினைமுற்றுத் தொடர்

·        அரிய கவிதைகளின் தொகுப்பு இது - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

2. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

விடை:

1.     இறங்கினார் முகமது - வினைமுற்றுத் தொடர்

2.    அவர் பாடகர் - எழுவாய்த் தொடர்

3.     பாடுவது கேட்பது - கூட்டு வினையெச்சத் தொடர்

4.    கேட்ட பாடல்கள் - பெயரெச்சத் தொடர்

5.    கேட்காத பாடல்கள் - எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்

6.    அடுக்கு அடுக்காக - அடுக்குத் தொடர்

மொழியை ஆள்வோம்:

கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

) இயற்கைசெயற்கை

செயற்கையை விட இயற்கை சிறந்தது

) கொடு - கோடு

கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது

) கொள் - கோள்

கோள்களை அறிந்து கொள்

) சிறு - சீறு

சிறு பூனையும் சீறும்

) தான் - தாம்

தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்

) விதி - வீதி

விதியால் வீதிக்கு வந்தான்

மொழிபெயர்க்க:

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை:

          பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.                          

வாழ்த்து மடல் எழுதுக:

மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க. இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

மொழியோடு விளையாடு:

 சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

புதுமை

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விண்மீன்

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

காடு

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

காற்றின் பாடல்

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

மொட்டின் வருகை.

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

மிதக்கும் வாசம்.

4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.

உயிர்ப்பின் ஏக்கம்.

5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

நீரின் சிலிர்ப்பு.

6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.

வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு.

அகராதியில் காண்க.

(அகன்சுடர், ஆர்கலி, கட்புள், கொடுவாய், திருவில்)

·        அகன்சுடர் - (அகல் என்பதன் திரிபு) அகல்சுடர், அகன்ற சுடர்.

·        ஆர்கலி -  கடல், மழை, வெள்ளம், பேரொலி, ஆரவாரம்.

·        கட்புள் - ஓர் புலவன்.

·        கொடுவாய்  - ஒரு மிருகம், பழிச்சொல், புலி, குறளை, வளைந்த வாய்.

·        திருவில்  - இந்திரவில்.

 

நிற்க அதற்குத் தக:

புயல் முன்னெசரிக்கை

1.       தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

கலைச்சொற்கள்

1.     Storm - புயல்

2.    Land Breeze - நிலக்காற்று

3.    Tornado – சூறாவளி

4.    Sea Breeze - கடற்காற்று

5.    Tempest – பெருங்காற்று

6.    Whirlwind - சுழல்காற்று

 

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை