10.ஆம் வகுப்பு - தமிழ்
உரைநடை நெடுவினா - நிலம் பேசுதல்
காற்று
பேசியதைப்போல , நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக
நிலம் பேசுகிறது
முன்னுரை
:
”அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை”
என்று வள்ளுவன் என்னை
பெருமைப்படுத்தி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பல்வேறு வகைகளில்
மனிதர்கள் என்னை மாசுபடுத்துவது என்னை வருத்தம் அடையச் செய்கிறது.
வேறு
பெயர்கள்:
நிலமாகிய எனக்கு
அசும்பு, காசினி, வட்டகை, கழனி, களர் கொல்லை, சுரம்,
தகர் ,நத்தம் என்று பலவகைப் பெயர்கள் உண்டு.
எனது மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப நான் பெயரிட்டு அழைக்கப்படுகின்றேன்.
ஐவகை
நிலங்கள்:
நில மகளாகிய எனக்கு
பழந்தமிழர் குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல், பாலை
என்று பெயரிட்டு, எனது தன்மைக்கு ஏற்ப என்னை ஐவகை நிலங்களாக
வகைப்படுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு நான் இரண்டற கலந்து இருப்பது
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இலக்கியங்களில்
நான்:
v " நீலத்
திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை"
என்று மகாகவி கவிதையால் கொஞ்சியது என்னைத்தான்.
v
"
சிறு பல் தொல்குடி பெறுநீர் சேர்ப்பன்" என்று
அகநானூறு எனது வேறு வடிவமாகிய கடல் பகுதியை குறித்தது. இவை
போன்று இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் என்னைப்பற்றி இருப்பது எனக்கு பெருமிதம்
அளிக்கிறது.
எனது
வருத்தம்:
v நான் மனிதர்களாகிய
உங்களுக்கு மரம்,
செடி ,கொடி வளரவும் பயிர்கள் விளையவும்
வேளாண்மைக்கு உற்ற நண்பனாகவும் விளங்குகின்றேன்.
v வற்றாத ஆறுகளையும்
குளங்களையும் ஏரிகளையும் தந்து மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறேன்.
v மேலும் எண்ணிலடங்கா வளங்களை
என்னுள் கொண்டிருக்கிறேன். அதை மனிதர்களாகிய நீங்களும்
மிகுதியாகப் பயன்படுத்துகிறீர்கள்.
v ஆனால் மனிதர்களாகிய
நீங்களோ ரசாயன உரங்களை பயன்படுத்துதல், நெகிழிப்பைகளை மிகுதியாகப் பயன்படுத்துதல், மேலும் ஆலைக் கழிவுகளை என்னுள் பாய்ச்சுதல் என்று
பல வகைகளில் என்னை மாசுபடுத்துவது என்னை ஆழ்ந்த துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.
எனது
வேண்டுகோள்:
v
மனிதர்களின்
சுயநலத்திற்காக என்னை மாசுபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.
v
நெகிழி
பயன்பாட்டை முற்றிலும் குறைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த துவங்குங்கள்
v
மரங்களை
வெட்டாமல் இன்னும் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முற்படுங்கள்.
v
என்னிலிருந்து அதிக கனிம வளங்களைத் தோண்டி எடுப்பதை
நிறுத்துங்கள்.
முடிவுரை:
மனிதர்களே என்னுள்
இருக்கும் வளங்களை எடுத்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக எண்ணிக் கொண்டால், எதிர்காலச்
சந்ததியினருக்கு என்னால் கிடைக்கும் எந்த நன்மையையும் என்னால் தர இயலாமல்
போய்விடும். எனவே என்னை மாசுபடுத்தாமல் என்னை முறையாகப் பயன்படுத்துங்கள் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழி செய்யுங்கள்!!
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி