மாதிரி பொதுத்தேர்வு-4
2025
மொழிப்பாடம் - பகுதி I
- தமிழ்
கால அளவு : 3.00 மணி
நேரம் மொத்த மதிப்பெண்கள் : 100
பகுதி
- I (மதிப்பெண்கள் : 15)
குறிப்பு : (i) அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15x1=15
(ii) ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்.
1. மேன்மை
தரும் அறம் என்பது
அ) கைமாறு
கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில்
பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ புகழ் கருதி
அறம் செய்வது ஈ) பதிலுதவி
பெறுவதற்காக அறம் செய்வது
2. 'விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்
சிரியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்' என்கிறது
புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
அ) நிலத்திற்கேற்ற
விருந்து ஆ) இன்மையிலும் விருந்து இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
3. --------- உடைத்தென் றசாவாமை வேண்டும்.
பெருமை --------- தரும்.-திருக்குறளின் விடுபட்ட சீர்களைத் தேர்க.
அ) முயற்சி, புகுத்தி ஆ) அருமை, முயற்சி
இ) பெருமை, ஒழுக்கம் ஈ) எப்பொருள்,
கொளல்
4. கீரை
என்ற சொல்லின் கூட்டப் பெயரைத் தேர்க,
அ கட்டு
ஆ) குலை இ) குவியல்
ஈ) தாறு
5. "இங்கு
நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது அதோ
அங்கே நிற்கும்" என்று மற்றொருவர் கூறியது விடை. வினா
அ) ஐய வினா, வினா எதிர் வினாதல்
விடை ஆ) அறிவினா,
மறைவிடை
இ) அறியா வினா, கட்டுவினா ஈ) கொளல் வினா, இனமொழி விடை
6.பாரத
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்
அ) துலா
ஆ) சீலா இ) குலா ஈ)
இலா
7. மரபுத்தொடருக்கான
பொருளைத் தேர்க. ஆறப்போடுதல்
அ)
தாமதப்படுத்துதல் ஆ) ஆற்றில் போடுதல் இ) ஆறவைத்தல் ஈ) ஆற்றில் இறங்குதல்
8. "வீட்டைத்
துடைத்துச் சாயம் அடித்தல்" இவ்வடி குறிப்பிடுவது
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை இ) இடையறாது அறப்பணி செய்தலை ஈ) வண்ணம் பூகவதை
9. எய்துவர்
எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா
மலர் ஆ) கூவிளம் புளிமா நாள் இ) தேமா
புளிமா காக ஈ)
புளிமா தேமா பிறப்பு
10. "உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள்
கூறுகிறோம்" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
அ) உருவகம், எதுகை ஆ) மோனை, எதுகை இ) முரண்,
இயைபு ஈ) உவமை, எதுகை
11. எழுகதிர்
-தொகையின் வகையைத் தேர்க.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
பாடலைப்
படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,
13, 14, 15) விடை தருக.
"பூக்கையைக்
குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப்
பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்"
12. இப்பாடலின்
ஆசிரியர் அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ) சுரதா
13.இப்பாடல்
இடம் பெற்றுள்ள நூல் அ)கம்பராமாயணம் ஆ)தேம்பாவணி இ)இரட்சண்ய யாத்திரிகம் ஈ) சீறாப்புராணம்
14. பாடலில்
உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க
அ) பூக்கையை, புரியொடு ஆ) சேக்கையை,திருந்திய இ) பூக்கையை சேக்கையை ஈ) சேக்கையை, பாப்பி
15. சேக்கை
என்ற சொல்லின் பொருள் அ) உடல் ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்
பகுதி-II (மதிப்பெண்கள் : 18) பிரிவு-1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க. (21 கட்டாய வினா) 4x2=8
16.விடைகளுக்கேற்ற
வினாக்கள் எழுதுக.
அ) உலகத் தமிழ்
கழகத்தின் தலைவராக இருந்தவர் தேவநேயப்பாவாணர்.
ஆ)
சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாக இலக்கிய அறிவு பெற்றார் ம.பொ.சி.
17. வறுமையின்
காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின்
கருத்து என்ன?
18. குறிப்பு
வரைக -அவையம்
19. சாந்தமானதொரு
பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் -
இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக
20.காலக்கழுதைக்
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?21.'செயற்கை' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க. 5x2=10
22. குறிப்புகளைக்
கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க
அ) காப்பியச் சுவை ஆ)
விடுமுறைநாள் 23. மயங்கிய - பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
24.தொடரில்
விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.
அ. கண்ணுக்குக்
குளுமையாக இருக்கும் ----- புல்வெளிகளில் கதிரவனின் வெயில்
பாவிக் கிடக்கிறது.
ஆ) வானம்-------தொடங்கியது.
மழைவரும் போலிருக்கிறது.
25. பழமொழியை
நிறைவு செய்கட அ) அளவுக்கு மீறினால்------ ஆ) ஒரு பானை சோற்றுக்கு------
26.கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் -
இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்துக எழுதுக.
27. தண்ணீர்
குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக. தொடரில்
அமைக்க.
28. கலைச்சொல்
தருக அ)
Emblem ஆ) Sea
breeze
பகுதி-III
(மதிப்பெண்கள் : 18)
பிரிவு-1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்க.
2x3=6
29. இன்றைய
அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை
முன்வைத்துச்
சுருக்கமாக எழுதுஉ
30. புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது'. இதுபோல் இளம் பயிர் வகை பெயர்களைத்
தொடர்களில் அமைக்க.
31.உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
"ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டதை வேதொரு மொழியில் வெளியிடுவது பொழிபெயர்ப்பு" என் மணவை
முஸ்தபா. மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு
இன்றியமையாததாகும் என்கிறார் மு.கு.ஜகந்தாதர், மொழிபெயர்ப்பைக்
கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறியையும் தம் எளிதாகப் பெற முடியும்.
தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம்,
இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் வளர்ச்சி பெறுகின்றன.
அ)
மொழிபெயர்ப்பாய் வளர்ச்சி பெற்ற ஊடகங்கள் எவை?
ஆ) மு.ரு.
ஜகந்தாதரின் மொழிபெயர்ப்பு குறித்த கருத்தை எழுதுக இ)
மொழிபெயர்ப்புக் கல்வியின் பயன் யாது?
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்க. (34 -
கட்டாய வினா) 2x3=6
32. கூத்தனைக்
கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
33,"சித்தாளின்
மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது" -
இடம் கட்டிப் பொருள் விளக்குக.
34. அடிபிறழாமல்
எழுதுக.
அ) 'அன்னை மொழியே'(அல்லது) 'மாற்றம்' எனத்தொடங்கி
'அட்சயப் பாத்திரம்" என முடியும் காலக்கணிதப் பாடல்
பிரிவு-3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்க. 2x3=6
35. அவந்திநாட்டு
மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்தாட்டைக்
கைப்பற்ற நினைக்கிறாள், அப்போர் நிகழ்வைப் புறப்பொருள்
வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின்வழி எழுதுக.
36. முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்-
இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
37. பின்வரும்
திருக்குறளை அலகிட்டு வாய்பாடு காண்க.
கருமம் சிதையாமல் கண்ணோட
வல்லார்க்
குரிமை உடைத்தில் வுலகு.
பகுதி-IV
(மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5x5=25
38.அ)
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விரித்து
எழுதுக (அல்லது)
ஆ) சிறந்த
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி
விளக்குக.
39. அ)
பல்பொருள் அங்காடி ஒன்றில் உறையில் அடைத்து விற்கப்பட்ட உணவுப்பொருள் குறிப்பிட்ட
கெடுநாள் தாண்டியதாகவும் கெட்டுப்போனதாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன்
உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது)
ஆ) மாநில அளவில்
நடைபெற்ற "இயற்கையை போற்றுவோம்" எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி
பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. எண்-28, முல்லை நகர், கம்பர்
தெரு, மதுரை மாவட்டம்-10 என்ற
பகுதியில் குடியிருக்கும் செங்குட்டுவன் என்பவரது மகள் குமரன் அப்பகுதியில் உள்ள
அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்கிறார். குமரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்
உறுப்பினராகச் சேர்ந்து, சதுரங்க விளையாட்டில் பயிற்சிபெற
விரும்புகிறார். தேர்வர் தன்னைக் குமரனாகக் கருதி, கொடுக்கப்பட்ட
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேருவதற்கான சேர்க்கை விண்ணப்பப்
படிவத்தினை நிரப்புக.
42.அ)
மாணவர் பருவத்தில் நீங்கள் செய்ய வேண்டிய அறங்களையும் அதனால் ஏற்படும்
நன்மைகளையும் பட்டியலிடுக. (அல்லது)
ஆ) மொழிபெயர்க்க.
Malar: Devi, switch
off the ights when
you l eave the room
Devi
:
Yeah! We have to save
electricity
Malar
:
Our nation spends a
lot o f electricity for lighting
up our streets in the night.
Devi: Who knows? In
future our country may launch artificial moons to
light our night time sky!
Malar: I have read some
other countries are going to launch
these types of illumination
satellites near future.
Devi: Superb news!
If we launch
artificial moons, they can assist
in disaster relief by
beaming light on
areas that lost
power!
பகுதி -V
(மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3x8=24
43. அ)
நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில்
மாணவர்களின் பங்கு -குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப்
பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக. (அல்லது)
ஆ) பன்முகக்
கலைஞர் என்னும் தலைப்பில் கலைஞரின் பன்முகத்திறமைகளை விவரித்து எழுதுக.
44. அ) 'அழகிரிசாமியின்' ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து விவரித்து எழுதுக. (அல்லது)
ஆ)
"அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்" என்னும்
தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
45. அ)
உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக்
குறிப்புகளைக் கொண்டு கட்டுரையாக்குக.
குறிப்புகள் :
முன்னுரை - விழா ஏற்பாடு -இடம்பெற்ற கலைகள் - கலைகள் நிகழ்த்தும் முறைகள்
புதிதாக
அறிந்துகொண்ட கலைகள் - கலைகள் உணர்த்தும் கருத்துகள் - முடிவுரை. (அல்லது)
ஆ)
குறிப்புகளைப் பயன்படுத்திச் சுற்றுச்சூழல் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று
எழுதுக.
குறிப்புகள் :
முன்னுரை - இயற்கையோடு வாழ்வோம் -நில,
நீர், காற்று மாசு - மழைநீரைச் சேமிப்போம் மரங்களை
வளர்ப்போம் - மண்வளம் காப்போம் - முடிவுரை.
👉 மற்ற 3 மாதிரிவினாத்தாட்களைப் பதிவிறக்க
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி