அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம் கற்பனைக் கதை ( கட்டுரை)

அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்

கற்பனைக் கதை ( கட்டுரை) 

அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்  என்ற தலைப்பில் கற்பனைக் கதை ஒன்றை எழுதுக.

முன்னுரை:

   அறிவியல் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது ஐயங்களை நீக்குகிறது எண்ணங்களை மாற்றுகிறது அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த பயண அனுபவத்தை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி.

பேரண்டம் பற்றிய விளக்கம்:

     பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானது என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு அவர் விளக்கினார்.

     இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்றார்.

பால் வீதி விண்மீன்கள்:

    விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது அப்போது ஹாக்கிங், நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் காலம் முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது விண்மீன் சுருங்க சுருங்க அதன் ஈர்ப்பு ஆற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றது ஆகிறது என்று விளக்கினார்.

கருந்துளை விளக்கம்:

    கருந்துளை என்பது ஒரு படைப்பின் ஆற்றல் கழிந்து கருந்துளையில் செல்லக்கூடிய எந்த ஒன்றும் வெளியில் வரவே முடியாது கருந்துளையின் ஈர்ப்பு பகுதியில் இருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டே இருந்தன கருந்துளை கருப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரில் பார்த்த போது தான் அறிந்து கொண்டேன் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை படைப்பின் ஆற்றலை என்பதை நான் உணர்ந்தேன்.

முடிவுரை:

   நாங்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புதுமையான அனுபவமாகவும் இருந்தது. எனக்குத் தெரியாத நிகழ்வுகளை நன்கு பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். மனமகிழ்வோடு பூமிக்கு வந்து சேர்ந்தோம். எங்களை அனைவரும் வரவேற்று, பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை