10.ஆம் வகுப்பு - தமிழ் புதிய நம்பிக்கை கட்டுரை - துணைப்பாடக்கட்டுரை

10.ஆம் வகுப்பு - தமிழ் 

புதிய நம்பிக்கை - கட்டுரை

           ”கற்கை நன்றே கற்கை நன்றே

      பிச்சை புகினும் கற்கை நன்றே”   என்கிறது வெற்றிவேற்கை.மேரியிடமிருந்து படிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை விவரிக்க.                                   

 முன்னுரை:

               வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்  தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம்.

மேரியின் குடும்பச்சூழல்:

    பருத்திப்பூ எடுத்த அந்தப் பூவுக்குத் தெரியும்

    நிச்சயம் ஒருநாள் மணம் வீசுவோம் என்று

     மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். 

மேரிக்கு நடந்த துன்பம்:

   ” நீ அதைத் தொடக்கூடாது,

     உன்னால் அதைப் படிக்க முடியாது

        மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தை கையில் எடுத்து  அதைப் புரட்டத்தொடங்குகிறாள்.

          அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாதுஎன்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில்  பேசினர்.அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக  ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

மேரியின் மனநிலை:

   கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

     மாடல்ல மற்றை யவை

        அந்த நாள் முழுவதும் அவள் துயரத்துடன் இருந்தாள்.நான் படிக்க வேண்டும். நான் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நான் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ளப் போகிறேன்என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.பள்ளிக்குச் செல்ல விரும்பும் எண்ணத்தைப் பற்றி தனது தந்தையிடம் கூறினாள்.இங்கே நமக்கென்று பள்ளிக்கூடம் இல்லையே?” என்று அவர் கூறினார். 

தூண்டுகோல்- மிஸ்வில்சன் :

       ”சுடர்விளக்காயினும் தூண்டுகோல் தேவை

ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து  நின்றாள். பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.

சிறப்பாகக் கல்விகற்ற மேரி:

  மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.

முடிவுரை:

           மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை  இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள். 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை