10.ஆம் வகுப்பு - தமிழ் பாய்ச்சல்
துணைப்பாடக்கட்டுரை
தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிற போது, ஏற்படும் கலைஞனின் மன உணர்வுகளைப் பாய்ச்சல் என்ற கதையின் மூலம் விளக்குக
முன்னுரை:
”ஊருக்காக ஆடும் கலைஞன்
தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்”
ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது அவன்
கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.
அனுமார்:
”போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது”
நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன.
சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள்
மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில்
இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான்.
அனுமாரின்
நெருப்பாட்டம்:
“தீப்பிடத்தது அனுமாரின் வாலில் மட்டுமன்று
அழகுவின் அளவுகடந்த ஆர்வத்திலும்தான்”
திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத்
தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து
பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அழகுவின் உதவி:
சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது
அழகுவின் ஆட்டம்:
“பெயரில் மட்டும் அழகில்லை
அவன் விரும்பிய கலையிலும்தான் அழகு”
அனுமார் கழற்றி
வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்
போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு
என்றார்”. அவனும் நன்றாக ஆடினான்.
அனுமார் அடைந்த
மகிழ்ச்சி:
அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த
வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று, வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.
முடிவுரை:
“என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில்
மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி