10.ஆம் வகுப்பு - தமிழ்
ஒருவன் இருக்கிறான் - துணைப்பாடக்கட்டுரை
அழகிரிசாமியின்" ஒருவன்
இருக்கிறான்" என்னும் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர்
குறித்து எழுதுக
முன்னுரை:
”முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”
அறிவியல் வளர்ச்சியால்,
உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத்
தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து வரும் இவ்வுலகில், எங்கேயாவது
எப்போதாவது மனிதநேயம் அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர
நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும்
வகையில்,கு.அழகிரிசாமி தனது "ஒருவன் இருக்கிறான்"
என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம் ஆகிய
இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
காஞ்சிபுரத்தில்
ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி.
குப்புசாமிக்குத் தாய்,
தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி.
நோயுற்ற குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து
குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக்
கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான்.
அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு
வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு
இருந்தான்.
கடிதத்தில் இருந்த செய்தி:
”அடுத்த பிறவியில் உனது இதயமாகப் பிறப்பேன்
ஆயுள் முழுதும்
உனக்கெனத் துடிப்பேன்”
அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன் உயிரே போய்விட்டது போல இருந்தது என்று
கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று
சாமி கும்பிடுவதாகவும் எழுதியிருந்தான். கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும்
வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின் பக்கத்து வீட்டு
நபரையும் மனமாற செய்தது.
ஆறுமுகம் :
குப்புசாமி வேலைசெய்த
சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை ஒன்றில் கூலி வேலை செய்யும்
ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன்
அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
"பண்புடையார்ப் பட்டுண் டுலகம்
அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்"
பண்புடையவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி