10.ஆம் வகுப்பு - தமிழ்
கோபல்லபுரத்து மக்கள் - துணைப்பாடக்கட்டுரை
அன்னமய்யா என்னும் பெயருக்கும்
அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி
கொண்டு விவரிக்க.
முன்னுரை:
”அகனமர்ந்து செய்யாள் உறையும்
முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்” - குறள் 84.
கிராமத்து வெள்ளந்தி
மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு
தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து
விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின்
கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.”இவன்
துறவியோ? பரதேசியோ?” என்ற
ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அருகில்
சென்று பார்த்து அவன் ஓர் இளைஞன் என்பதை உறுதி செய்து கொண்டார். அவனது முகம்
பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை
காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று
பார்த்தார்.அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?”
என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து
நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன்
பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ”விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” குறள்- 82 ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு
சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும்
தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது
அன்னமய்யாவின்
மனநிறைவு: “பொங்கியது அன்னமய்யாவின் அன்பு மட்டுமன்று இளைஞனின் ஜீவ ஊற்றும்தான்” புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு
அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு
நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப் பார்ப்பதுபோல,
அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.S
அன்னமய்யாவின் பெயர்
பொருத்தம்: ”அன்பில் சிறந்தவர் அன்னமய்யா! அனைவரும் பசியின்றி இருக்க வேண்டுமென
அவருக்கு நல்ல எண்ணமய்யா!” இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?,
எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா
கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில் இருந்து
வருகிறேன்” என்று கூறிவிட்டு,” உங்கள்
பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா”
என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி
பார்த்துக்கொண்டான்.”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.அந்த
இளைஞன் தன்னுடைய சொந்தப் பெயர்” பரமேஸ்வரன்” என்றும், புதுப் பெயர்”மணி”
என்றும் அன்னம் ஐயாவிடம் கூறினான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான்
முடிவுரை: “பொங்கியது அன்னமய்யாவின் அன்பு
மட்டுமன்று இளைஞனின் ஜீவ ஊற்றும்தான்” தானத்தில் சிறந்தது
அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா
அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து
மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி