10.ஆம் வகுப்பு - தமிழ்
புயலிலே ஒரு தோணி - துணைப்பாடக்கட்டுரை
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும்,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
”தரைமேல்
பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்”
முன்னுரை:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்
ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர்
இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு
காண்போம்
விடாது பெய்த மழை:
கடுமையான வெயில் மறைந்து,இமை நேரத்தில் புழுக்கம்
ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது மீண்டும் மீண்டும் மழை
பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.இடி
முழக்கம் மின்னல் ஒளி அதேசமயம் விரைவும் பளுவும் கொண்ட மோதல் கப்பலையும் உலுக்கியது.
தள்ளாடிய கப்பல் (தொங்கான்):
மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று
கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி
வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்” என்று கத்துகிறான். பாண்டியன்
எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல்
தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..
பயணிகளின் தவிப்பு:
மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். கப்பலின்
இருபுறமும் தேயிலை பெட்டிகளும், புகையிலை சிப்பங்களும் மிதந்தன.பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல்
கூத்து நீண்ட நேரம் தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி,
தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும்
முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு
முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான். அதற்கு கப்பித்தான்
இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.
கரையைக் காணுதல்:
ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக
மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி
நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள்
கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர கப்பல்கள்
கரை முழுவதும் நின்றிருந்தன.
முடிவுரை:
சுமத்ரா பயணிகள் துடுப்பு
படகில் இறங்கிப்போய் நடை பாலத்தில் ஏறி நடந்து சுங்க
அலுவலகத்திற்குச் சென்று பயண அனுமதிச் சீட்டினை
நீட்டினர்.”தமிரோ?” என்று ஜப்பானிய
அதிகாரி கேட்டார்.” யா மஸ்தா” இன்று
தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில்
முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத்
தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி
படும்பாட்டை தெளிவுற விளக்கின.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி