10.ஆம் வகுப்பு- தமிழ்
ஒருமதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 1 முதல் 11)
1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ)எந்+தமிழ்+நா ஆ)எந்த+தமிழ்+நா இ)எம்+தமிழ்+நா ஈ)எந்தம்+தமிழ்+நா
2) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ)இலையும் சருகும் ஆ)தோகையும் சண்டும் இ)தாளும் ஓலையும் ஈ)சருகும் சண்டும்
3) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை….
அ)குலைவகை ஆ)மணிவகை இ)கொழுந்துவகை ஈ)இலைவகை
4) கேட்டவர்மகிழப்பாடியபாடல் இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும்,வினையாலணையும் பெயரும்முறையே
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
5) தென்னன் என்று குறிப்பிடப்பட்ட மன்னன்
அ)பாண்டியன் ஆ)சேரன் இ)சோழன் ஈ)பல்லவன்
6) சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……
அ)பாரதியார் ஆ)ஜி.யு.போப் இ)க.சச்சிதானந்தன் ஈ)பாவலரேறு
7) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
அ) துரை.செந்தில் ஆ) துரை.வேலு இ) துரை.செல்வம் ஈ)துரை.மாணிக்கம்
8) தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்
அ) திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆ) கனிச்சாறு இ) பாவியக்கொத்து ஈ) மகபுகுவஞ்சி
9) எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக்குறிக்கும் சரியான சொல்
அ) எள் கசடு ஆ) பிண்ணாக்கு இ) ஆமணக்கு ஈ) எள்கட்டி
10) வெஃஃகுவார்க்கில்லை, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ) ஒற்றளபெடை , சொல்லிசை அளபெடை ஆ)இன்னிசை அளபெடை , சொல்லிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை ஈ) ஒற்றளபெடை , இன்னிசை அளபெடை
11. "மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது -
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
12. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு
அ) சிங்கப்பூர் ஆ) மலேசியா இ) இந்தியா ஈ) இலங்கை
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"
13. பாடலின் ஆசிரியர்-
அ) பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) தமிழழகனார்
14. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.
அ) செந்தாமரை ஆ) வீசுதென்றல் இ) உணர்வெழுப்ப ஈ) சிறகார்ந்த
15. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.
அ) கனல் ஆ) உந்தி இ) யாண்டும் ஈ) வண்டு
16. பாடல் இடம்பெற்றுள்ள நூல் -
அ) உலகியல் நூறு ஆ) பாவியக் கொத்து இ) கனிச்சாறு ஈ) எண்சுவை
"முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு."
17. பாடல் இடம்பெற்ற நூல் -
அ) நற்றிணை ஆ) முல்லைப்பாட்டு இ) குறுந்தொகை ஈ) தனிப்பாடல் திரட்டு
18. பாடலில் இடம்பெற்றுள்ள அணி
அ) இரட்டுற மொழிதல் அணி ஆ) தீவக அணி இ) வஞ்சப் புகழ்ச்சி அணி ஈ) நிரல் நிறை அணி
3. தமிழுக்கு இணையாகப் பாடலில் ஒத்திருப்பது
அ) சங்கப் பலகை ஆ) கடல் இ) அணிகலன் ஈ) புலவர்கள்
19. பாடலின் ஆசிரியர்
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) நப்பூதனார்
இ) சந்தக்கவிமணி தமிழழகனார் ஈ) பெருங்கௌசிகனார்
20) ’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
அ)உருவகம்,எதுகை ஆ)மோனை,எதுகை இ)முரண்,இயைபு ஈ)உவமை,எதுகை
21) செய்தி1-ஒவ்வோர் ஆண்டும் ஜூன்15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2-காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் 2.ஆமிடம் பெற்றுள்ளது.
செய்தி பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி 3-காற்றின் ஆற்றலைப்பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்தனர் தமிழர்.
அ)செய்தி 1 மட்டும் சரி ஆ)செய்தி 1,2 ஆகியன சரி
இ)செய்தி 3 மட்டும் சரி ஈ)செய்தி 1,3 ஆகியன சரி.
22) பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டுஅடி உணர்த்தும் அறிவியல் செய்தி
அ)கடல்நீர் ஆவியாகி மேகமாதல் ஆ)கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
இ)கடல்நீர் ஒலித்தல் ஈ)கொந்தளித்தல்.
23) பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?
அ)பண்புத்தொகை ஆ)உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ)உம்மைத்தொகை
24) பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)கொண்டல்- 1.மேற்கு
ஆ)கோடை - 2.தெற்கு
இ)வாடை - 3.கிழக்கு
ஈ)தென்றல் - 4.வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
25) திருமூலர் இயற்றிய நூல்………
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ) திருமந்திரம் ஈ) புறநானூறு
26) பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) பிளேட்டோ ஆ) ஹிப்பாலஸ் இ) அரிஸ்டாடில் ஈ) சாக்ரடீஸ்
27) வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்……..
அ) பாரதிதாசன் ஆ)பாரதியார் இ) கவிமணி ஈ) வாணிதாசன்
28)’பிராண ரஸம்’ என்பதன் பொருள்……
அ) உயிர்வளி ஆ) பழச்சாறு இ) உயிர்வலி ஈ) துன்பம்
28)’விரிச்சி’ என்ற சொல்லின் பொருள்
அ) விரித்தல் ஆ) மலர் இ) நற்சொல் ஈ) தொழுதல்
29) தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.
அ) ஐந்து ஆ) ஏழு இ) ஒன்பது ஈ) ஆறு
30) தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்த தொகை
அ) வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன் தொக்க தொகை இ) பண்புத்தொகை ஈ) உம்மைத்தொகை
31) மலர்க்கை – தொகையின் வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
32) காலம் கரந்த பெயரெச்சம் என்பது
அ) வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன் தொக்க தொகை இ) பண்புத்தொகை ஈ) உம்மைத்தொகை
33) எழுகதிர், முத்துப்பல் இவற்றில் வந்த தொகைகள் முறையே
அ) வினைத்தொகை, பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை, வினைத்தொகை
இ) உம்மைத்தொகை , வினைத்தொகை ஈ) வினைத்தொகை , உவமைத்தொகை
34) தமிழ்த்தொண்டு எனும் தொடர்------
அ) வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன் தொக்க தொகை
இ) பண்புத்தொகை ஈ) உம்மைத்தொகை
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
35. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
அ) காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும் வாசம் ஈ) உயிர்ப்பின் ஏக்கம்
36. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
அ) காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும் வாசம் ஈ) உயிர்ப்பின் ஏக்கம்
37. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்: பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
அ) காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும் வாசம் ஈ) உயிர்ப்பின் ஏக்கம்
38. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்: மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்: கசகசத்த உயிரினங்கள்.
அ) காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும் வாசம் ஈ) உயிர்ப்பின் ஏக்கம்
39. நின்றுவிட்ட மழை தரும் குளிர்: சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
அ) காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) நீரின் சிலிர்ப்பு ஈ) வனத்தின் நடனம்
40. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், குறைக்காற்றின் ஆலோலம்.
அ) காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) நீரின் சிலிர்ப்பு ஈ) வனத்தின் நடனம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்."
41. பாடலை இயற்றியவர் -
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வைரமுத்து ஈ) சுரதா
42. லயத்துடன் பொருளைத் தேர்க.
அ) சீராக ஆ) வேகமாக இ) அழுத்தமாக ஈ) மெதுவாக
43. மோனைச் சொற்களைத் தேர்க.
அ) நெருப்பு - தருமாறு ஆ) அவித்துவிடாதே - மடித்துவிடாதே
இ) உனக்கு - உன்னை ஈ) சக்தி – குறைந்து
44. இயைபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) நெருப்பு - நீடித்து ஆ) அதனை - அவித்து
இ) பாட்டுகள் - பாடுகிறோம் ஈ) பாடுகிறோம் - கூறுகிறோம்
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு"
45. பாடல் இடம்பெற்ற நூல்-----
அ) சிலப்பதிகாரம் ஆ) திருவிளையாடற் புராணம் இ) முல்லைப்பாட்டு ஈ) குறிஞ்சிப்பாட்டு
46. பாடலை இயற்றியவர் -
அ) காரியாசான் ஆ) நல்லந்துவனார் இ) நக்கீரனார் ஈ) நப்பூதனார்
47. நேமி- பொருளைத் தேர்ந்தெடுக்க.
அ) முத்து ஆ) கடல் இ) சங்கு ஈ) சக்கரம்
48. பாடலில் உள்ள மோனைச் சொற்களைத் தேர்க.
அ) நனந்தலை - உலகம் ஆ) நீர் – நிமிர்ந்த இ) வலம்புரி - தடக்கை ஈ) வலம்புரி -பொறித்த
49. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
50) ’சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ –என்னும் அடியில் பாக்கம் என்பது
அ)புத்தூர் ஆ)மூதூர் இ)பேரூர் ஈ)சிற்றூர்
51) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்துவது
அ)வேற்றுமை உருபு ஆ)எழுவாய் இ)உவம உருபு ஈ)உரிச்சொல்
52) காசிக்காண்டம் என்பது-----------
அ)காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ)காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ)காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ)காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
53) ’விருந்தினரை பேணுவதற்குத் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறநானூறு.இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றும் நிலை
அ)நிலத்திற்கேற்ற விருந்து ஆ)இன்மையிலும் விருந்து இ)அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
54) ’விருந்தே புதுமை’ என்று விருந்தினருக்கு விளக்கமளித்தவர்
அ)அதிவீரராம பாண்டியன் ஆ)ஒட்டக்கூத்தர் இ)நப்பூதனார் ஈ)தொல்காப்பியர்
55) மலைபடுகடாம்----------நூல்களுள் ஒன்று.
அ) நீதிநூல்கள் ஆ) எட்டுத்தொகை இ) பத்துப்பாட்டு ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
56) கூத்தராற்றுப்படை என அழைக்கப் படும் நூல்---------
அ) பட்டினப்பாலை ஆ)மலைபடுகடாம் இ)முல்லைப்பாட்டு ஈ)குறிஞ்சிப்பாட்டு
57) தொகாநிலைத்தொடர்--------வகைப்படும்.
அ) 6 ஆ) 9 இ) 8 ஈ) 10
58) பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத்தொடர்?
அ) பெயரெச்சத்தொடர் ஆ) வினையெச்சத்தொடர் இ) வேற்றுமைத்தொடர் ஈ) விளித்தொடர்
59) ”குழந்தை வந்தது” என்ற எழுவாய்த்தொடரின் விளித்தொடரைத் தேர்க
அ) குழந்தையுடன் வா ஆ) வந்த குழந்தை இ) குழந்தையே வா! ஈ) குழந்தை வந்தது
60) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் இ) தேமா புளிமா காசு ஆ) கூவிளம் புளிமா நாள் ஈ) புளிமா தேமா பிறப்பு
61) மலைபடுகடாம்----அடிகளை உடையது
அ) 783 ஆ) 583 இ) 103 ஈ) 133
62) ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடிவது---
அ) பெயரெச்சம் ஆ) முற்றெச்சம் இ) கூட்டுநிலைப் பெயரெச்சம் ஈ) வினையெச்சம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி"
63. அசைஇ -இலக்கணக்குறிப்பைத் தேர்க.
அ) இன்னிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை
இ) செய்யுளிசைஅளபெடை ஈ) ஒற்றளபெடை
64. அல்கி என்ற சொல்லின் பொருள் -
அ) சுற்றம் ஆ) இளைப்பாறி இ) தங்கி ஈ) பள்ளம்
65. பாடலின் ஆசிரியர்
அ) பெருங்கௌசிகனார் ஆ) நக்கீரர் இ) நத்தத்தனார் ஈ) அதிவீரராமபாண்டியர்
66. பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) காசிக்காண்டம் ஆ) மலைபடுகடாம் இ) நற்றிணை ஈ)குறுந்தொகை
67) ’உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யார்,யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம்,நோயாளி ஈ) நோயாளி,மருத்துவரிடம்
68) தலைப்புக்கும்,குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி,அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
69) பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ)வானத்தையும்,பாட்டையும் ஆ)வானத்தையும்,புகழையும்
இ) வானத்தையும்,பூமியையும் ஈ)வானத்தையும்,பேரொலியையும்
70) குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்- ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி ஆ) இடவழுவமைதி,மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி ,திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி,இட வழுவமைதி
71) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் யாது?
அ)துலா ஆ)சீலா இ)குலா ஈ)இலா
72) ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்-----------
அ)வாட்சன் ஆ) பெப்பர் இ) டொனால்டு ஈ) மெக்கன்சி
73) பெருமாள் திருமொழி பாடியவர்
அ) பொய்கையாழ்வார் ஆ) நம்மாழ்வார் இ) குலசேகர ஆழ்வார் ஈ) பெரிய ஆழ்வார்
74) பெருமாள் திருமொழியில்------- பாடல்கள் உள்ளன
அ) 105 ஆ) 104 இ) 205 ஈ) 106
75) பரிபாடல்------------நூல்களுள் ஒன்று.
அ) பத்துப்பாட்டு ஆ) பதினெண் கீழ்க்கணக்கு இ) எட்டுத்தொகை ஈ) நீதி நூல்கள்
76) இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்--------- ஆகும் .
அ)வழு ஆ) வழாநிலை இ) வழுவமைதி ஈ) இயல்பு வழக்கு
77) இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் ------------ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) இயல்பு வழக்கு ஈ) தகுதி வழக்கு
78) ’கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும் ‘ என்ற வரிகள் பாரதியார் கவிதையில் இடம் பெற்றிருப்பது
அ) கால வழுவமைதி ஆ) மரபு வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ)திணைவழுவமைதி
79) தென்னை மரங்கள் நிறைந்த பகுதியைக் குறிப்பிடும் வழாநிலை
அ) தென்னந்தோட்டம் ஆ) தென்னஞ்சோலை இ) தென்னந்தோப்பு ஈ) தென்னங்காடு
80) பின்வருவனவற்றுள் திணை வழுவமைதி எது?
அ) ’இந்தப் பாப்பா தூங்கமாட்டாள்’ என்று குழந்தை தன்னையே குறிப்பிடுவது
ஆ) இரவெல்லாம் நாய் கத்திக்கொண்டே இருந்தது.
இ) ‘வாடாச் செல்லம்’ எனத் தாய் மகளை அழைப்பது
ஈ) ‘ என் தங்கை வந்தாள்’ என்று பசுவைக் குறிப்பிடுவது
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி.
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
81. பாடல் இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து
82. பாடலை இயற்றியவர்-
அ) கீரந்தையார் ஆ) குலசேகராழ்வார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பெருங்கெளசிகனார்
83. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.
அ) கரு வளர் - உரு அறிவாரா ஆ) உரு அறிவாரா - உந்து வளி
இ) விசும்பில் – கருவளர் ஈ. விசும்பில் – வானத்து
84. விசும்பு என்ற சொல்லின் பொருள்-
அ) மழை ஆ) காற்று இ) வானம் ஈ) நீர்
85) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேடு உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
இ) பக்தி இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
86) அருந்துணை என்பதைப் பிரித்தால்- -------------என வரும்
அ)அரு+துணை ஆ)அருமை +துணை இ)அருமை+இணை ஈ)அரு+இணை
87) ’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர் கேட்பது----------வினா.
‘அதோ அங்கு நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது--------------விடை
அ)ஐய வினா, வினா எதிர் வினாதல் ஆ) அறியா வினா, மறை விடை
இ)அறியா வினா, சுட்டு விடை ஈ)கொளல் வினா, இனமொழி விடை
88) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது
அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
89) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்----இடைக்காடனாரிடம் அன்புவைத்தவர்---
அ) அமைச்சர், மன்னன் ஆ)அமைச்சர்,இறைவன் இ) இறைவன், மன்னன் ஈ)மன்னன், இறைவன்
90) ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர்
அ) அகத்தியலிங்கம் ஆ)மணவை முஸ்தபா இ) கால்டுவெல் ஈ) மா பொ சி
91) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்’ என்னும் குறிப்பு எந்த செப்பேட்டில் உள்ளது?
அ)உத்திரமேரூர் செப்பேடு ஆ) ஆதிச்சநல்லூர் செப்பேடு இ) சின்னமனூர் செப்பேடு
92) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளிப்பது--
அ) தசாவதானம் ஆ) சதாவதானம் இ) பதின்மம் ஈ) பதின் கவனம்
93) செய்குத்தம்பி பாவலர்----------என அழைக்கப்படுகிறார்
அ) நாஞ்சில் கவிஞர் ஆ) மக்கள் கவிஞர் இ) சதாவதானி ஈ) தசாவதானி
94) வினா---------- வகைப்படும்.
அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது
95) விடை----------- வகைப்படும்
அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது
96) பொருள்கோள்------------ வகைப்படும்
அ)5 ஆ)6 இ)7 ஈ)8
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா."
97. பாடல் இடம் பெற்ற நூல்-
அ) பெரியபுராணம் ஆ) திருவிளையாடற்புராணம் இ) கந்தபுராணம் ஈ) பரிபாடல்
98. பாடலின் ஆசிரியர்
அ) பரஞ்சோதி முனிவர் ஆ) கம்பர் இ) சேக்கிழார் ஈ) குலசேகராழ்வார்
99. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க.
அ) ஓங்கு – பனை ஆ) நீங்குவம் –அல்லோம் இ) ஓங்கு - நீங்குவம் ஈ) நீத்து - நீயும்
100. நீபவனம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க.
அ) ஆலவனம் ஆ) இடும்பவனம் இ) முல்லை வனம் ஈ) கடம்பவனம்
101. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம் நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
102. கூற்று 1 போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2:அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
103. மலர்கள் தரையில் நழுவும் - எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால் இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்
104. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது -இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா? ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
105. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமை இல்லாததால்
106) முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்---------
அ) குமரகுருபரர் ஆ) முத்துக்குமாரசாமி இ) ஒட்டக்கூத்தர் ஈ) தமிழழகனார்
107) பிள்ளைத்தமிழ்-------- வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
அ)108 ஆ)96 இ)133 ஈ)81
108) கொடிவேலி உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி பாய்வது
அ) காவேரி ஆறு ஆ) சரயு ஆறு இ) பாலாறு ஈ) வைகை ஆறு
109) கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி……….எனப் பெயரிட்டார்
அ) பெரியபுராணம் ஆ)இராமாவதாரம் இ) இராமாயணம் ஈ)இராம காதை
110) கம்பராமாயணம்--------- காண்டங்களை உடையது
அ) நான்கு ஆ) ஏழு இ) எட்டு ஈ) ஆறு
111) கம்பரை ஆதரித்தவர்
அ) சீதக்காதி ஆ)குமண வள்ளல் இ) சடையப்ப வள்ளல் ஈ) பாண்டித்துரை
112. சங்க இலக்கியங்கள், ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் எடுத்தியம்புகின்றன. இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக்கண்டறிக.
அ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை - நல்வினை, தீவினை
ஆ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - உயர்திணை, அஃறிணை
இ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் - அறம்,பொருள், இன்பம்
ஈ) குறிஞ்சி,முல்லை,மலை,காடு, வயல்- பனை, திணை
"வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்
றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்
உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்
வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்"
113. பாடலின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர் ஆ) தமிழழகனார் இ) கம்பர் ஈ) இளங்கோவடிகள்
114. --------மிகுந்திருப்பதால் கோசல நாட்டில் அறியாமை இல்லை
அ) வறுமை ஆ) கொடை இ) பொய்மொழி ஈ. கேள்வி
115. எதுகையைத் தேர்ந்தெடுக்க.
அ) உண்மை, வெண்மை ஆ) உண்மை, பொய்யுரை இ) வண்மை, வறுமை ஈ) வெண்மை, கேள்வி
116. வண்மை - பொருளைத் தேர்க.
அ) கொடை ஆ) மெய்மை இ) அறியாமை ஈ) வறுமை
117) சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடு
அ) உழவு, மண், ஏர், மாடு ஆ) மண், மாடு, ஏர், உழவு இ) உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர்,உழவு,மாடு,மண்
118) ”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ”மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பது முறையே
அ)தி ருப்பதியும், திருத்தணியும் ஆ) திருத்தணியும், திருப்பதியும்
இ) திருப்பதியும், திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும்
119)”தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்த அரசன்” என்னும் தொடர் உணர்த்தும் பொருள்
அ)மேம்பட்ட நிர்வாகத் திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர் ஈ)நெறியோடு நின்று காவல் காப்பவர்
120) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------
அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
121) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா பொ சி கருதுவது------------
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
122) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ.உ.சி தொடங்கிய கப்பல் நிறுவனம்--------
அ)சுதேசி ஆ) தமிழக கப்பல் நிறுவனம் இ) வ.உ.சி ஈ) மாடன் இந்தியா
123. சிலம்புச் செல்வர் என்று போற்றப்பட்டவர்---------
அ) இளங்கோவடிகள் ஆ) பாவாணர் இ) சுகி சிவம் ஈ) ம பொ சி
124) மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாக திகழும் சங்க இலக்கியப் பாடல்கள்
அ)புறநானூறு ஆ) பதிற்றுப்பத்து இ) குறுந்தொகை ஈ) அகநானூறு
125) கைக்கிளை என்பது-------
அ) போர் அறம் ஆ) ஈகை பண்பு இ) ஒருதலைக் காமம் ஈ) பொருந்தாக் காமம்
126) ஆநிரை பற்றிய திணைகள்
அ) வெட்சி,கரந்தை ஆ) பாடாண்,பொதுவியல் இ) நொச்சி ,உழிஞை ஈ) கைக்கிளை, பெருந்திணை
பாடலைப்படித்து வினாக்களுக்கு (வினா எண்:12,13,14,15) விடையளிக்க
"பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
127. மோனைச் சொற்களைத் தேர்க.
அ) பகர்வனர், கட்டு ஆ) வீதியும், நூலினும் இ) பருத்தி, காருகர் ஈ) பகர்வனர், பட்டினும்
128. காருகர் என்னும் சொல்லின் பொருள் -
அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்
129. எதுகைச் சொற்களைத் தேர்க.
அ) பகர்வனர், திரிதரு ஆ) பட்டினும், கட்டு இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்
130. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்
அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம் இ. சிலப்பதிகாரம் ஈ. திருவிளையாடற் புராணம்
131) மேன்மை தரும் அறம் என்பது-----------
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது இ)புகழ் கருவி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
132) வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்- இவ்வடி குறிப்பிடுவது
அ) காலம் மாறுவதை ஆ) வீட்டைத் துடைப்பதை இ) இடையறாது அறப்பணி செய்தலை ஈ)வண்ணம் பூசுவதை
132) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ) உதியன், சேரலாதன் ஆ) அதியன், பெருஞ்சாத்தன்
இ) பேகன், கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
133) காலக்கணிதம் கவிதை இடம்பெற்ற தொடர்-------
அ)இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ)என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ)இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
134) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
135) கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்-------
அ) கால்டுவெல் ஆ) அர்னால்டு இ) மூ.வ ஈ) பாவாணர்
136) அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமையைப் பற்றிக் கூறியவர்-------
அ)ஏணிச்சேரி முடமோசியார் ஆ) ஔவையார் இ) கபிலர் ஈ) பரணர்
137) கண்ணதாசனின் இயற்பெயர்
அ) சுப்பையா ஆ) முத்தையா இ) வேணுகோபாலன் ஈ) சுப்புரத்தினம்
138) யாப்பின் உறுப்புகள் மொத்தம்-----
அ) 5 ஆ) 6 இ ) 7 ஈ) 8
139) பா-------- வகைப்படும்
அ) 6 ஆ) 5 இ) 4 ஈ) 8
140) வெண்பாவின் இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளால் வருவது
அ) சிந்தியல் வெண்பா ஆ) நேரிசை வெண்பா இ) குறள் வெண்பா ஈ) கலிவெண்பா
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க (வினா எண்:12,13,14,15)
"உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்"
141. பாடலின் ஆசிரியர் -
அ) கண்ணதாசன் ஆ) பாரதிதாசன் இ) வண்ணதாசன் ஈ) பாரதியார்
142. கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.
அ) வண்டு ஆ) காற்று இ) அன்னம் ஈ) மழை
143. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க?
அ) தருவேன், தட்டுவேன் ஆ) உண்டா, வண்டா இ) இல்லா, இல்லம் ஈ) சொல்லா, சொல்லிட
144. பாடல் இடம் பெற்றுள்ள கவிதையின் பெயர்---
அ) ஞானம் ஆ) காலக்கணிதம் இ) பூத்தொடுத்தல் ஈ) சித்தாளு
145) ’இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ -இதில் கற்காலம் என்பது
அ) தலைவிதி ஆ) பழைய காலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது
146) சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அ)அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ)அறிவியல் முன்னேற்றம்
இ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
147) பூக்கையைக் குவித்துப்பூவே புரிவொடு காக்க என்று---------,----------- வேண்டினார்
அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ)கருணையன் பூக்களுக்காக ஈ)எலிசபெத் பூமிக்காக
148) வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
149) கலையின் கணவனாகவும், சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது
அ)தம்வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ)சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
150) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம்
அ) கங்கை எங்கே போகிறாள்? ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள் ஈ) இமயத்துக்கு அப்பால்
151) நாகூர் ரூமியின் இயற்பெயர்
அ) முகம்மது அலி ஆ) முகமது அஸ்ரப் இ) முகம்மது ரஃபி ஈ) உமர்
152) அருளப்பனுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில்------- எனப் பெயரிட்டுள்ளார்.
அ) கருணாகரன் ஆ) கருணையன் இ) சூசையப்பர் ஈ) பேதுரு
153) வீரமாமுனிவரின் இயற்பெயர்
அ) அரிஸ்டாட்டில் ஆ)கான்சுடான்சு சோசப் பெசுகி இ) மேத்யூ ஹைடன் ஈ) பிராவோ
154) இயல்பான நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
அ) தன்மை அணி ஆ) தீவக அணி இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) நிரல்நிறை அணி
155)தீவகம் என்ற சொல்லுக்கு--------- என்பது பொருள்
அ ) விளக்கு ஆ) தீமை இ) துன்பம் ஈ) பகை
156) தன்மையணி--------- வகைப்படும்
அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க(வினா எண்:12,13,14,15)
"பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்"
157. பாடலின் ஆசிரியர் -
அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ) அசோகமித்திரன்
158. பாடல் இடம் பெற்றுள்ள நூல்
அ) கம்பராமாயணம் ஆ) தேம்பாவணி இ) இரட்சண்ய யாத்திரிகம் ஈ) சீறாப்புராணம்
159. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை. திருந்திய
இ) பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை, பரப்பி
160. சேக்கை என்ற சொல்லின் பொருள்
அ) உடல் ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி