10 TH STD TAMIL IMPORTANAT QUESTIONS

 

10.ஆம் வகுப்புதமிழ் முக்கிய வினாக்கள்

இயல்-1

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28) 

1) 'வேங்கைஎன்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2) மன்னும் சிலம்பேமணிமேகலை வடிவேமுன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமேஇவ்வடிகளில் இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை

3) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4) உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

5) தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக

5) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

       “தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

            தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

             ஓதி யுனர்ந்தின் புருவோமே

6) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

        (குவியல்குலைமந்தைகட்டு)   கல், புல்பழம், ஆடு

7) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன்விளக்குமழைவிண்மணிவிலங்குசெய்மேகலைவான்பொன்பூ)

8. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

      சொற்கள் -ஆடுகல்புல்பழம்

9. செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டுதமிழ் எண்ணில் எழுதுக.

நாற்றிசையும் செல்லாத நாடில்லை  எறும்புந்தன் கையால் எண் சாண்

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி  ஐந்து சால்பு ஊன்றிய தூண்

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி ஊஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

10. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைக்க.

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்..

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

11. தேன்நூல்பைமலர்வா இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழியாக்குக.

12. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் சிலவற்றை எழுதுக.

இயல்-2

 16) 'நமக்கு உயிர் காற்று

    காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

    வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

17. வசன கவிதை – குறிப்பு வரைக

விடை:  செய்யுளும்உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை.

18) தண்ணீர் குடிதயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுகதொடரில் அமைக்க.

 4) பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் ஊஊரும் ஆறுதல் சொற்களை எழுதுக

19. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

20.சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

 

பழமைக்கு எதிரானதுஎழுதுகோலில் பயன்படும்

 

இருக்கும் போது உருவமில்லைஇல்லாமல் உயிரினம் இல்லை.

 

நாலெழுத்தில் கண் சிமிட்டும்கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

 

ஓரெழுத்தில் சோலைஇரண்டெழுத்தில் வனம்

 

21) கலைச்சொல் அறிக :  Storm , Land Breeze ,Tornado ,Sea Breeze ,Tempest ,Whirl wind

இயல்-3

 24. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

25. 'தானியம் ஏதும் இல்லாத நிலை யில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவிஎன்ப து இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாஉங்கள் கருத்தைக்  குறிப்பிடுக.

26. ' எழுது என்றாள் என்பது விரைவு காரணமாகஎழுது எழுது என்றாள் என

அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

27.'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

28. பாரதியார் கவிஞர்நூலகம் சென்றார்அவர் யார்ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும்பயனிலைகள் யாவை ?

29) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-

  சிலை – சீலை , தொடு – தோடு, மடு – மாடு,  மலை – மாலைவளி – வாளி, விடு - வீடு

30) பழமொழியை நிறைவு செய்க:-

  1. உப்பில்லாப் --- 2. ஒரு பானை---- 3. உப்பிட்டவரை---- 4. விருந்தும்---- 5. அளவுக்கு           

31) 'நச்சப் படாதவன்செல்வம் இத்தொடரில் நச்சப் படாதவன் என்னும் சொல்லுக்குப் பொருள் தருக.

32) கொடுப்பதூஉம்  துய்ப்பதூஉம்  இல்லார்க்கு அடுக்கிய

      கோடிஉண்  டாயினும்  இல்  – இக்குறளில் வரும் அளபெடைகளை எழுதுக

33) கலைச்சொல் தருக :

    செவ்விலக்கியம் ,காப்பிய இலக்கியம் ,பக்தி இலக்கியம் , ,பண்டைய இலக்கியம் ,வட்டார இலக்கியம்  நாட்டுப்புற இலக்கியம் ,, நவீன இலக்கியம் 

இயல்-4

 38. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக

     எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

39.வருகின்ற கோடைவிடுமுறையில் காற்றாலை மின்உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

40. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

41. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்த வற்றைக் குறிப்பிடுக.

42. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

43. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:-

காகத்திற்கு காது உண்டாஅதற்கு காது கேட்குமா?

44) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

இயற்கை – செயற்கை ஆகொடு - கோடு இகொள் - கோள் ஈசிறு - சீறு  உதான் - தாம் ஊவிதி - வீதி

45) குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-    குறிப்பு – எதிர்மறையான சொற்கள்

   மீளாத் துயர் , கொடுத்துச் சிவந்த, மறைத்துக் காட்டுஅருகில் அமர்கபெரியவரின் அமைதிபுயலுக்குப் பின்

46) கலைச்சொல் தருக

   Nanotechnology , Space Technology ,Biotechnology , Cosmic rays , Ultraviolet rays ,Infrared rays -

                                                    

இயல்-5

 49. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த

பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்“

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார் காதல்மிகு கேண்மை யினான் யார் ?

50. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

51. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

52. இந்த அறை இருட்டா க இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறதுஇதோ ... இருக்கிறதே ! சொடுக்கியைப் போட்டா லும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா இல்லையாமேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

53. வினா எத்தனை வகைப்படும்அவை யாவை?

54. விடை எத்தனை வகைப்படும்அவை யாவை?

55. கலைச்சொல் தருக:   Emblem , Intellectual , Thesis , Symbolism –

இயல்-6

 56. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள்கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

57.” கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

58. உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்எங்கு அவனை உறங்கச்  சொல்கிறார்கள்?

59. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ள ழகை எழுதுக.

60. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். 

61. 'கரப்பிடும்பை இல்லார்' - இத்தொடரின் பொருள் கூறுக.

62. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

63. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

64. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்ஏன் என்பதை எழுதுக.

      பெரிய கத்திஇரும்பு ஈட்டிஉழைத்ததால் கிடைத்த ஊதியம்வில்லும் அம்பும்

65. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

1.அழைப்பு மணி ஒலித்ததுகயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )

2. இன்னாசிரியார்புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார்புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர்சொற்றொடராக மாற்றுக)

3. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர்எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

3. முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வார இதழாக்கிநாளேடாக்கினார் கலைஞர்.   (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)

4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன்அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)

66. கலைச்சொல் தருக : PLAY WRIGHT , SCREENPLAY , STORYTELLER , AESTHETICS –

67. மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காணும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

68.குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகப் போற்றுவர் என்னும் பொருளைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

 

இயல்-7

 69. பாசவர்வாசவர்பல்நிண விலைஞர்உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்  யாவர்?

70. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

71. வறுமையிலும் படிப்பின்மீது நா ட்டம்  கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

72. புறத்திணை களில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

73. பொருத்தமான இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு

தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.

74) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக

            மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழேஉலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்குதமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும்முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.

75) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-     

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

புதுக்கோட்டை

 

கோயம்புத்தூர்

 

கும்பகோணம்

 

திருச்சிராப்பள்ளி

 

நாகப்பட்டினம்

 

திருநெல்வேலி

 

உதகமண்டலம்

 

புதுச்சேரி

 

மன்னார்குடி

 

மயிலாப்பூர்

 

சைதாப்பேட்டை

 

தஞ்சாவூர்

 

76) கலைச்சொல் தருக:  Consulate , Patent , Document , Guild , Irrigation , Territory 

இயல்-8

 77. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

  உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

அடியெதுகையை எடுத்தெழுதுக.                  

)இலக்கணக்குறிப்பு எழுதுககொள்க,குரைக்க 

78. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

79. குறிப்பு வரைக:- அவையம்

80.காலக்கழுதை கட்டெறும்பானதும்  கவிஞர் செய்வது யாது?

81. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும்துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியதுஇத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

82) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-

  மனக்கோட்டை அள்ளி இறைத்தல்கண்ணும் கருத்தும் ,ஆறப்போடுதல்

83) கலைச்சொல் அறிக     Belief ,PhilosopherRenaissance , Revivalism

இயல்-9

 84. தீவக அணிகளின் வகைகள் யாவை?

85. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

86. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

87. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

88.'வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வுஎன்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

89) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

            சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

90) கலைச்சொல் தருக    Humanism ,Cultural Boundaries ,Cabinet , Cultural values

இயல்-1

 மூன்று மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 29 முதல் 37 வரை)

1) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

2) ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளதுஇதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

3) 'அறிந்ததுஅறியாததுபுரிந்ததுபுரியாததுதெரிந்ததுதெரியாததுபிறந்ததுபிறவாததுஇவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

                இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

4) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

இயல்-2

 5) உயிராக நான்பல பெயர்களில் நான்நான்கு திசையிலும் நான்இலக்கியத்தில் நான்முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்தன் னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை  எழுதுக.

6. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க .

7. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடிவரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில்  குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள் . இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டுவிரித்து எழுதுக.

இயல்-3

 8. 'கண்ணே கண்ணுறங்கு!

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பெய்கையிலே

     மாம்பூவே கண்ணுறங்கு!

     பாடினேன் தாலாட்டு!

     ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' -இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

9. “ பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – வினவுவது ஏன்?

10. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதை சில இடங்களில் காணமுடிகிறது.காலமாற்றம்தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

11.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

12. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.

13. வாழை இலை விருந்து தமிழர் பண்பாட்டுடன் எங்ஙனம் பிணைந்திருந்தது?

14. வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு   -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இயல்-4

 15. "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமைசுட்டும்செய்தியைவிளக்குக.

16. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

17. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்த து. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியதுதந்தை என்னிடம், "இலச்சுமி கூப்பிடுகிறாள் போய்ப் பார்" என்றார் . "இதோ சென்றுவிட்டேன்" என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளை யாடவேண்டுமா?" என்று கேட்டேன்.என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

     - இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.      

இயல்-5

 18. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்விளக்கம் தருக.

19. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் ?

20. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பா வில் அமைந் துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

இயல்-6

 21.தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள்  நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

22. சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி விளக்குக.

23. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர்அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

இயல்-7

25. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

26. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

இயல்-8

 27.சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

28. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

29. அலகிட்டு வாய்பாடு (மாதிரி)

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

    வேளாண்மை என்னும் செருக்கு

இயல்-9

 30. "சித்தாளின் மனச்சுமைகள்

    செங்கற்கள் அறியாது" – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

31. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார்இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “ தர்க்கத்திற்கு அப்பால் “ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

32. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

33. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

34. தன்மையணியை விளக்குக. 

35. தீவக அணியை விளக்குக.

36.”தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

     மேவன செய்தொழுக லான்”    -  குறளில் வந்த அணியை விளக்குக

37. நிரல் நிரையணியைச் சான்றுடன் விளக்குக.

இயல்-1

 ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42 வரை)

1) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

2) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

3) மொழி பெயர்ப்பு:

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

இயல்-2

 4 .முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

5) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

6) மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

7) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-

            The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.          

8) நிற்க அதற்குத் தக

வானொலி அறிவிப்பு....

            ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீதொலைவில்      மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

    மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

இயல்-3

 9. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக

10. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக (வினா எண்: 40)

11. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக. (வினா எண்: 39)

12. மொழி பெயர்க்க:-                                                 

            Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

13. நிற்க அதற்குத் தக    (வினா எண் : 42)                                                                                  

   மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

இயல் - 4

 14. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக ( வினா எண்: 40)

15) மொழி பெயர்க்க:-  வினா எண்:42)                                                        

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

16) நிற்க அதற்குத் தக  வினா எண்:42)

      தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பிதிறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கைகாணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழிஇவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.

17) தமிழர் மருத்துவமுறைக்கும்நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக ( வினா எண் 38)

இயல்-5

                                                  

18. இறைவன்புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.  (வினா எண்:38)

19) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக(வினா எண்:40)

20) நிற்க அதற்குத் தக   (வினா எண்:42)

      பள்ளியிலும்வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

21. நூலக உறுப்பினர் படிவம்.   (வினா எண்:41)

இயல்-6

   விழுப்புரம் மாவட்டம்பெரியார் நகர்கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணிகொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

 22) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.   (வினா எண்: 40)

23) மொழி பெயர்க்க:-    (வினா எண்: 42)

    Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar.

24) நிற்க அதற்குத் தக  (வினா எண்: 42)

நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.

இயல்-7

25) மெய்க்கீர்த்தி பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக. (வினா எண்: 38)

26) சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும் அங்காடிகளோடும்  ஒப்பிட்டு எழுதுக.    (வினா எண்: 38)

27) கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவைஇவற்றைப் பராமரிக்கவும் ,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.     

28நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.   (வினா எண்: 39)

29.  மொழிபெயர்க்க:-    (வினா எண்: 42)

            Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

இயல்-8

 30. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

31. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும்அதற்குப்  பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.  (வினாஎண்:39)

32. மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

33. மொழிபெயர்க்க:-  (வினாஎண்:42 )

            Once upon a time there were two beggars in Rome. The  first begger used to cry  in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.

இயல்-9

35) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப் பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கான வாழ்த்துரை ஒன்றை உருவாக்கி தருக.   . (வினா எண்:39)

36. நீங்கள் செய்த , பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.  . 

40.     15, காமராசர் நகர்பெரியார் தெருவிருத்தாசலம் 10 என்ற முகவரியில் வசிக்கும் தமிழ்வேந்தன் என்பவரின் மகள் பூந்தளிர்அரசு உயர்நிலைப்பள்ளிவிருத்தாசலம்கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை பூந்தளிராகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

41.     12, அழகர் நகர்பெரியார் தெருவிருத்தாசலம்-1 என்ற முகவரியில் வசிக்கும் எழில்மாறன் என்பவரின் மகள் பூம்பாவை, அரசு உயர்நிலைப்பள்ளிவிருத்தாசலம்கடலூர் மாவட்டத்தில் 10.ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், சதுரங்கப்போட்டியில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறார். தேர்வர் தன்னை பூம்பாவையாகக் கருதி. கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

42.      கதவு எண். 25, திலகர் தெருமதுரை வடக்கு – என்ற முகவரியில் வசிக்கும் நலங்கிள்ளியின் மகள் வேல்விழி அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் தகவல் உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்தேர்வர் தன்னை வேல்விழியாகக் கருதி , தன் விவரப் பட்டியலைக்  கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு நிரப்புக.

இயல்-1

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42 வரை)

 

1) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.  

2) குமரிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமைதகைசா ல் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்குபிள்ளைத் தமிழ் பேசிசதகம் சமைத்துபரணி பாடிகலம்பகம் கண்டுஉலாவந்துஅந்தாதி கூறிகோவை யாத்துஅணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

இயல்-2

 4.  புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில்தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

இயல்-3

 5. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

 6. அன்னமய்யா  என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

7. வீட்டில் திண்ணை அமைத்த காரணம்விருந்தினர் பேணுதல்தமிழர் பண்பாட்டில் ஈகைபசித்தவருக்கு உணவிடல் – இவைபோன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க.

இயல்-4

 8. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமாவெறும் வணிகத்துடன் நின்றுவிடுமாஇக்கருத்துகளை ஒட்டிச்செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

9. "அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்" என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.  ( வினா எண்: 44)

10. பொதுக்கட்டுரைவிண்வெளியும் கல்பனா சாவ்லாவும்  ( வினா எண்: 45)

இயல்-5

                                                 

11.  தமிழின் இலக்கிய வளம் - கல்விமொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் -அறிவியல் கருத்துகள் - பிறதுறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.

      மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.    வினா எண்: 43)

12. ’கற்கை நன்றே கற்கை நன்றே

     பிச்சை புகினும் கற்கை நன்றே ’ என்கிறது வெற்றிவேற்கை . மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்அச்சிறுமியின் வாழ்க்கை யில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க .

வினா எண்: 44)

13. .மதிப்புரை எழுதுதல்

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

இயல்-6


14) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக்கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.   (வினா எண்: 43)

15) “பாய்ச்சல்” என்ற சிறுகதையைக் கருப்பொருளும்சுவையும் குன்றாமல் சுருக்கி எழுதுதுக.

16) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

(வினா எண்: 45)

இயல்-7

(வினா எண்: 43)                                          

18) உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்பு மிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து எழுதுக.

19. எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.

இயல்-8

 20. குறிப்புகளைக்  கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

  மாணவன் – கொக்கைப் போல கோழியைப் போல – உப்பைப் போல –இருக்க வேண்டும்– கொக்கு காத்திருந்து கிடை க்கும் வாய்ப்பைப் பயன்ப டுத்திக்கொள் ளும் – குப்பையை க் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள் ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி .

21. குறிப்புகளைப் பயன்படுத்தி , “ சாலைப்பாதுகாப்பு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக

  முன்னுரைசாலை விதிகளை அறிவோம் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளுக்கான காரணங்கள் – தேவையான விழிப்புணர்வு – நமது கடமை – முடிவுரை.

இயல்-9

 22) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழைவார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

23) அழகிரிசாமியின்” ஒருவன் இருக்கிறான்” என்னும் சிறுகதையில்  மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக                             

 பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை