10.ஆம் வகுப்பு தமிழ்
(10.ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் மொழியை ஆள்வோம், பொதுக்கட்டுரை, கடிதங்கள், மொழியோடு விளையாடு,நிற்க அதற்குத்தக்க உள்ளிட்ட தேர்வுக்குரிய முக்கியப் பகுதிகள் ஒவ்வொரு இயலுக்கும் தொகுத்து விடையுடன்
வழங்கப்பட்டுள்ளன)
மொழியை
ஆள்வோம்
இயல் -1
அ) :- மொழி பெயர்ப்பு:-
1.If you talk to a man in a language he
understand,thats goes to his head. If you talk to him in his own language that
goes to his heart – Nelson Mendela
விடை :
ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில்
பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர்
தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா
2. Language is the road map of a culture. It tells you
where its people come from and where they are going – Rita Mae Brown
விடை: மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி
பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக்
ப்ரெளன்
ஆ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காறமதை ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம் ஓதி யுனர்ந்தின் புருவோமே” கவிமணி தேசிக விநாயகனார் |
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே” கவிமணி தேசிக விநாயகனார் |
இ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
( குவியல், குலை,மந்தை,கட்டு )
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
கற்குவியல் |
புல் |
புற்கட்டு |
பழம் |
பழக்குலை |
ஆடு |
ஆட்டுமந்தை |
ஈ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
1.கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.
விடை: கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு
உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
விடை: ஊட்டமிகு உணவு
உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று என்னைச்
சந்தித்தார்.அவர் என் நண்பர்.
விடை: நேற்று என்னைச்
சந்தித்தவர் என் நண்பர்.
4.பொது அறிவு
நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.
விடை: பொது அறிவு
நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
ஈ) தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய
வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்
போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
விடை: பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப்
போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால்
வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
விடை: வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைக் தந்து மங்காப் புகழ் பெற்றான்.
3. நளனும் அவனது துணைவியும்
நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில்
கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.
விடை: நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு
வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமேகம்
கண்ட மயில் போலக் மகிழ்ச்சிக் கொண்டனர்.
4. சோலையிற் பூத்த
மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி
மதுவுண்டன.
விடை: பூங்காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.
5. பசுப்போல்
சாந்தமும் புலிபோல் தீரமும் யானை
போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
விடை: ஆவைப்போல் அமைதியும்
வேங்கைபோல் வீரமும்
களிற்றைப் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
உ) நயம் பாராட்டுக:-
தேனினும்
இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும்
ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
வானினும்
ஓங்கிய வண்டமிழ் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி
தோங்குவாய் தண்டமிழ் மொழியே
திரண்ட கருத்து:
தேனை விட இனிய செந்தமிழ் மொழியே! தென்னாடு பெருமைக் கொள்ளும் தென்மொழியே! உடம்பில் ஒளிவிட்டு விளங்கும் உயர்ந்த மொழியே! உணர்வுக்கு உணர்வாக விளங்கும் மொழியே! வானை விட புகழைக் கொண்ட மொழியே! மாந்தர்களுக்கு இரு கண்களாக விளங்கும் நன்மொழியே! தானாகவே சிறப்புற்று விளங்கும் தனித்தமிழ் மொழியே! தழைத்து இனிது உயர்வாய் எம்மொழியே.
மையக் கருத்து:
தமிழ்மொழியின் சிறப்புகளை கூறி, மொழி தழைத்து வளரும் தன்மையினைக் கூறுகிறார்.
மோனை :
சீர் தோறும் அடி தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
தேனினும் – தென்னாடு
ஊனினும் – உணர்வினும்
எதுகை :
சீர் தோறும் அடி தோறும் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி
வருவது எதுகை.
இயைபு :
அடிதோறும் சீரோ,எழுத்தோ,ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
மொழியே – மொழியே
சந்த நயம் :
எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
அணி:
மொழியின் சிறப்பாக உயர்வாக கூறியுள்ளமையால் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
இயல் -1
மொழியோடு விளையாடு
ஊ) சொற்களை
இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
தேன்மழை |
பூ விலங்கு |
பொன்செய் |
பொன்விலங்கு |
மணிவிளக்கு |
பூமழை |
மணிமேகலை |
வான்மழை |
எ) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-
குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச்
சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்
குறளின்பம் |
குறளின்பத்தை அறியாதவர் உண்டோ? |
சுவைக்காத இளநீர் |
உழவன் சுவைக்காத இளநீர் உண்டா? |
காப்பியச் சுவை |
சிலப்பதிகார காப்பியச் சுவைக்கு ஈடு உண்டா? |
மனிதகுல மேன்மை |
விருந்தோம்பல் மனித குல மேன்மையை உயர்த்தக் கூடிய பண்பு
அல்லவா? |
விடுமுறைநாள் |
சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா? |
ஏ) எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ் எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
நான்கு |
ச’ |
எறும்புந்தன் கையால் எண் சாண் |
எட்டு |
அ |
ஐந்து சால்பு ஊன்றிய தூண் |
ஐந்து |
ரு |
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
நான்கு,இரண்டு |
ச’ , உ |
ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
ஆயிரம் |
க000 |
மொழியை
ஆள்வோம் ௪ ௪
இயல் -2
அ) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-
The
Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away
the dark.The milky clouds start their wandering.The colourful birds start
twitting their morning melodies in percussion.The cute butterflies dance around
the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows
everywhere and makes everything pleasant.
விடை:
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள்
காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென
உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.
ஆ) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-
சொற்கள் |
தொகை |
தொடர் |
இன்சொல் |
பண்புத்தொகை |
முகில் அனைவரிடமும்
இன்சொல் பேசினான் |
எழுகதிர் |
வினைத்தொகை |
வாழ்க்கையில்
துன்பங்கள் மறைந்து இன்பம் எழுகதிராய் வரும் |
கீரிபாம்பு |
உம்மைத்தொகை |
நானும் அவனும்
கீரியும் பாம்பும் போல இருப்போம் |
பூங்குழல்
வந்தாள் |
அன்மொழித்
தொகை |
பூங்குழல்
நந்தவனத்திற்கு வந்தாள் |
மலைவாழ்வார் |
வேற்றுமைத்
தொகை |
மலைவாழ்வார்
காடுகளை பாதுகாக்கின்றனர். |
முத்துப்பல் |
உவமைத் தொகை |
அவள் முத்துப்பற்களால்
சிரித்தாள் |
இ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும். |
நறுமணம் |
பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும் |
புதுமை |
இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. |
காற்று |
நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். |
விண்மீன் |
ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம் |
காடு |
செய்திகளைப்
படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப்
பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும்
மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.
மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள்
இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.
பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை
அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
1.
மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.
விடை: மலருக்கு பெயர் உண்டு
2.
அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
விடை: அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல்
உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.
3.
நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.
விடை: 1. மல்லிகைப் பூ. – வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.
2. சூரிய காந்திப் பூ – எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.
4.
அரிய மலர் –
இலக்கணக் குறிப்புத் தருக.
விடை: பெயரெச்சம்
5.
தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
இலுப்பைப்
பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.
விடை: இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.
இயல் – 3
மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்க்க:-
Respected ladies and
gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a
few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were
best in culture and civilization about two thousand years ago. Tamils who have
defined grammer for language have also defined grammer for life. Tamil culture
is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia,
Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been
updates consistently. We should feel proud about our culture. Thank you one and
all.
மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க
இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம்
வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி
உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி
உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.
ஆ) பழமொழியை நிறைவு செய்க:-
1 |
உப்பில்லாப் |
பண்டம் குப்பையிலே |
2. |
ஒரு பானை |
சோற்றுக்கு ஒரு சோறு பதம் |
3 |
உப்பிட்டவரை |
உள்ளளவும் நினை |
4 |
விருந்தும் |
மருந்தும் மூன்று வேளை |
5 |
அளவுக்கு |
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் |
இ) கதையாக்குக:-
மனித
வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகுற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின்
உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
ஒரு
வயதான முதியவரை போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின்
மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு
பணம் பெற்றுக் கொடுத்த அந்த தருணம் அந்த முதியவர் என்னை கையெடுத்து கும்பிட்டு நன்றி
எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.
ஈ) நயம் பாராட்டுக:-
“ கத்துகடல்
சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட
ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட
வெள்ளி எழும் “
காளமேகப் புலவர்
திரண்ட
கருத்து:
கருத்து – 1
கடல்
சூழ்ந்த நாகப்பட்டிணத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலையில் அரிசி வரும். அதனை குத்தி உலையில் போட ஊரே அடங்கும். சமைத்து பரிமாறும் போது விடிந்து விடும். இது சத்திரமா? என குறிப்புத் தருகிறது.
கருத்து-2
நாகப்பட்டிணத்தில்
காத்தான் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டு வரை அரிசி இருக்க்கும். அரிசி குத்தி உலையிடுவதும்,அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பது ஊராரின் பசியை அடக்கும்.அன்னம் இலையிலிட வெள்ளி முளைக்கும்.
பொருள்
நயம்:
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட
ஊரடங்கும்
இலையிலிட
வெள்ளி எழும். ஆகியன ஆழமான பொருள் உடையன.
சந்த நயம் :
பாடுவதற்கேற்ற
சந்த நயம் பயின்று வந்துள்ளது.
மோனை
நயம் :
முதலெழுத்து
ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கத்துக்கடல் - காத்தான்
அத்தமிக்கும் - அரிசி
எதுகை
நயம் :
முதலெழுத்து அளவொத்து இருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.
கத்துகடல் - சத்திரத்தில்
உலையிலிட - இலையிலிட
முரண்
நயம் :
முரண்பட்ட
சொற்களால் அமைவது முரண் நயம்.
அத்தமிக்கும் × வெள்ளி எழும்.
இயைபு
நயம் :
பாடலில்
கடைசி எழுத்தோ,சீரோ,அசையோ,ஓசையோ இயைந்து வருவது.
அரிசி
வரும் – வெள்ளி எழும்.
அணி
நயம்:
சொற்கள்
பிரிவுபடாமல் நின்று இரு பொருளை தருவதால் இதில் செம்மொழிச் சிலேடை அணி பயின்று
வந்துள்ளது.
இயல் – 3
மொழியோடு
விளையாடு
அ) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து
ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-
வினா |
குறிப்பு |
விடுபட்ட
எழுத்து |
நூலின் பெயர் |
இ____கு |
பறவையிடம் இருப்பது |
இறகு |
திருக்குறள் |
கு____தி |
சிவப்பு நிறத்தில் இருக்கும் |
குருதி |
|
வா____ |
மன்னரிடம் இருப்பது |
வாள் |
|
அ____கா |
தங்கைக்கு மூத்தவள் |
அக்கா |
|
ம_____ |
அறிவின் மறுபெயர் |
மதி |
|
பட_____ |
நீரில் செல்வது |
படகு |
ஆ) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-
1 |
சிலை - சீலை |
சிலையை சீலையால் மறைத்தான் |
2. |
தொடு - தோடு |
தோடினை தொட்டு பார்த்தாள் கமலா |
3 |
மடு - மாடு |
மடுவில் மாடு நீர் குடித்தது. |
4 |
மலை - மாலை |
மலை மீது மாலையில் ஏறினான் |
5 |
வளி - வாளி |
வளியை வாளியால் அள்ள முடியாது |
6 |
விடு - வீடு |
விடு அவன் வீடு செல்லட்டும் |
இயல் – 4 மொழியை ஆள்வோம் - 1
அ) மொழிபெயர்க்க:-
Malar:
Devi,switch off the lights when you leave the room
Devi : Yeah! We
have to save electricity
Malar : Our
nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch
artificial moons to light our night time sky!
Malar: I have
read some other countries are going to launch these types of illumination
satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons,they can
assist in disaster relief by beaming light on areas that lost power!
விடை:
மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு
வா.
தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது.
தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம்.
மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி
வெளிச்சம் பரப்புகிறார்கள்
தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும்.
2. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:-
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காது
கேட்கும்.
பறவைகளுக்குப் பார்த்தல்,கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
ஆ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-
அ) இயற்கை – செயற்கை |
இயற்கைக் காடுகளில் செல்ல செயற்கை கருவிகள் பயன்படுகின்றன. |
ஆ) கொடு - கோடு |
கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது |
இ) கொள் - கோள் |
கோள்களை அறிந்து கொள் என ஆசிரியர் கூறினார் |
ஈ) சிறு - சீறு |
சிறு பூனையும் சீறும் |
உ) தான் - தாம் |
தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும் |
ஊ) விதி - வீதி |
விதி அவனை வீதியில் கொண்டு வந்து சேர்ந்தது. |
இயல் – 4 மொழியை ஆள்வோம் -
2
அ) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள்
சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து
மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து
திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
1.
பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
மீண்டும்
மீண்டும்
2.
புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
தொடர்ந்து
பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
3.
பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பெய்மழை
4.
இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
உயிர்கள்
தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
5.
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு
2.
நயம் பாராட்டுக:-
நிலாவையும்
வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும்
அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும்
மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின்
கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? - பாரதியார்
திரண்ட
கருத்து:
Ø நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்
Ø அமுத குழம்பினை குடிப்போம்
Ø பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்
Ø பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையை கேட்போம்.
மையக்
கருத்து:
Ø
நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவின் சுவையை
சுவைத்து இன்பம் பெறுவோம்.
மோனை:
முதலெழுத்து
ஒன்றி வருவது மோனை
நிலாவையும் – நேர்ப்பட
எதுகை :
முதலெழுத்து
அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.
நிலாவையும் - குலாவும்
இயைபு :
செய்யுளில்
ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதவெறிபடைத்தோம் - மகிழ்ந்திடுவோம்
அணி
நயம்:
இப்பாடலில்
மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.
தலைப்பு:
இயற்கை
இன்பம்
இயல் – 4
மொழியோடு விளையாடு
அ) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-
1.
நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____கற்றல்___
2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____கரு__
3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______சோறு____ ஆகும்.
4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து _____எழுத்து____
5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________பூவில்________
2.
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-
குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர் |
மீண்ட இன்பம் |
கொடுத்துச் சிவந்த |
கொடுக்காது கருத்த |
மறைத்துக் காட்டு |
விரித்து மூடு |
அருகில் அமர்க |
தொலைவில் நிற்க |
பெரியவரின் அமைதி |
சிறியவரின் கூச்சல் |
புயலுக்குப் பின் |
மழைக்கு முன் |
இயல் – 5
மொழியை
ஆள்வோம்
அ) மொழி பெயர்ப்பு:-
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக:-
யாழிசை |
It’s like new lute music |
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.
பாரதிதாசன் |
Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand – daughter Learning by rote the verses Of a didactic compilation Translated by Kavingar Desini |
Lute music |
யாழிசை |
Grand - daughter |
பேத்தி |
chamber |
அறை |
rote |
நெட்டுரு |
To look up |
பார்த்தல் |
Didactic compilation |
நீதிநூல் திரட்டு |
2.
அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.
வேர்ச் சொல் |
எழுவாய்த் தொடர் |
பெயரெச்சத் தொடர் |
வினையெச்சத் தொடர் |
விளித் தொடர் |
வேற்றுமைத் தொடர் |
ஓடு |
அருணா ஓடினாள் |
ஓடிய அருணா |
ஓடி வந்தாள் |
அருணா ஓடாதே! |
அருணாவிற்காக ஓடினாள் |
சொல் |
அம்மா சொன்னார் |
சொன்ன அம்மா |
சொல்லிச் சென்றார் |
அம்மா சொல்லாதே! |
கதையைச் சொன்னார் |
தா |
அரசர் தந்தார் |
தந்த அரசர் |
தந்து சென்றார் |
அரசே தருக! |
புலவருக்குத் தந்தார் |
பார் |
துளிர் பார்த்தாள் |
பார்த்த துளிர் |
பார்த்துச் சிரித்தாள் |
துளிரே பார்க்காதே |
துளிருடன் பார்த்தேன் |
வா |
குழந்தை வந்தது |
வந்த குழந்தை |
வந்து பார்த்தது |
குழந்தையே வா |
குழந்தைக்காக வந்தாள் |
3. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
விடை: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்
2. மரத்தை
வளர்ப்பது நன்மை பயக்கும்.
விடை: நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
3. வாழ்க்கைப்பயணமே
வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
விடை: இன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
4. கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும்.
விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
5. குழந்தைகள்
தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்
இயல் – 5 மொழியோடு
விளையாடு
அ) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:-
தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை
பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை
சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை
சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை
வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்
.நான் யார்?________காகம்_____________
ஆ. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை
செய்க
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்
____புதையல் _____யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ புதைத்தல்
__ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)
2.
காட்டு விலங்குகளைச்
____ சுடுதல் ____தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச்
_______ சுட்டல் ____திருத்த உதவுகிறது.( சுட்டல்,சுடுதல் )
3.
காற்றின் மெல்லிய
__ தொடுதல் ____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ____ தொடுத்தல்
____பூக்களை மாலையாக்குகிறது.
( தொடுத்தல்,தொடுதல் )
4.
பசுமையான ____ காட்சி ___ஐக்____ காணுதல் ______ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)
5.
பொது வாழ்வில்__ நடித்தல்____கூடாது ____நடிப்பு ____இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ( நடித்தல்,நடிப்பு )
இயல் – 6
மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்க்க:-
Kalaignar
Karunanidhi is known for his contributions to Tamil literature. His
contributions cover a wide range: poems, letters, screenplays, novels,
biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has
written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as
many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also
contributed to the Tamil language through art and architecture. Like the
Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the
construction of Valluvar Kottam he gave an architectural presence to
Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a
133-foot-high statue of Thiruvalluvar in
honour of the scholar.
தமிழாக்கம்:
தமிழ் இலக்கியத்திற்கு தான்
செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில்,
கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள்,
புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம்.
திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள்
மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள்
தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, "குறளோவியம்"
எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர்
கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை
சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி
திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.
ஆ. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1.
அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
1.அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக
)
விடை: அழைப்பு
மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்
2. இன்னாசிரியார், புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி
வைத்தார்; புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு
எடுத்துக்கொடுத்தார். (தொடர்சொற்றொடராக மாற்றுக)
விடை : இன்னாசிரியார், புத்தகங்களை
வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்து,
புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
3. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக்
கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக்
கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச்
சொற்றொடராக மாற்றுக)
விடை : எழுத்தை ஆயுதமாகக்
கொண்டு வாழ்ந்த கலைஞர்,
தமது எண்ணங்களை எழுத்து வழியாகக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு
சென்றார்.
3. முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத்
தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர். (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
விடை: கலைஞர் முரசொலி
ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை வார இதழாக்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை
நாளேடாக்கினார்
4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென
நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.
(தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
விடை : ஒடிக்கொண்டிருந்த
மின்விசிறி சட்டென நின்றது அறையில் உள்ளவர்கள் பேச்சுத் தடைப்பட்டது.
பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
புதிர்
உங்களிடம்
ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி
வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின்
இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள்.இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால்,கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட்
குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை
ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!.
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட் பிஸ்கட் |
தங்கக்கட்டி |
வெயிட் |
எடை |
யூஸ் |
பயன்படுத்தி |
எக்ஸ்பெரிமெண்ட் ரிப்பீட் |
சோதனை மீண்டும் |
ஆல் தி பெஸ்ட் |
வாழ்த்துகள் |
ஈக்வலாக |
சரிசம்மாக |
பட் |
ஆனால் |
ஆன்சரை |
விடையை |
பத்தியைப்
படித்து வினாவிற்கு விடையளிக்க.
கண்ணுக்குக்
காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன
நிகழ்த்துக்கலைகள். கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களாக இருப்பவை இவை. வடிவங்களைக்கொண்டு நிகழ்த்துகலைகளை நான்கு வகைகளாகப்
பிரிக்கலாம்.
அ) கரகாட்டம், காவடியாட்டம்- தலையில் / தோளில் கருவியைச் சுமந்தபடி
ஆடுபவை.
ஆ) மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் வேடம்கட்டி ஆடுபவை.
இ) ஒயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம். சேர்வையாட்டம் - குழுவாக ஆடுபவை.
ஈ) தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து - கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள்.
தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக்கொண்டு ஆடும்
கரகாட்டமும் தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மக்களால்
விரும்பப்படும் மரபார்ந்த கலைவடிவங்கள். மயில்வடிவக் கூட்டுக்குள் இருந்துகொண்டு, நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் மயிலாட்டமும்
குதிரைவடிவக் கூட்டுக்குள் இருந்து பாதத்துக்குக்கீழ் கட்டையைக் கட்டிக்கொண்டு 'டக்டக்' என்று ஆடும் குதிரையாட்டமும் புலி வேடமிட்டு ஆடும்
புலியாட்டமும் காண்பதற்கு உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகள். இசைக்கேற்ப
துணியைவீசிக் குழுவாக ஆடும் ஒயிலாட்டம், தப்பு என்னும் தோற்கருவியின் தாளத்திற்கு ஆடும் தப்பாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம் ஆகியவை கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள்.
இவற்றுக்கெல்லாம் சிகரமாகத் திறந்தவெளிகளையும் தெருமுனைகளையும் மேடையாக்கி எளிய
ஒப்பனைகளுடன் நிகழ்த்தப்படும் கலையாகத் தெருக்கூத்து விளங்குகிறது. கதையொன்றில்
இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவை இணைந்தவடிவமே தெருக்கூத்து ஆகும். இதே
கதை, பாடல், ஆடல்களுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத்
திரைச்சீலையில் ஒளி ஊடுருவும்வகையில் பொருத்தி, அவற்றை நாடகம்போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்தாகும். குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கலையிது. ஊரக மக்களின் வாழ்வியலில் கலந்தவை
நிகழ்த்துகலைகள். இவை உழைப்பாளிகளின் உணர்வு வெளிப்பாடு; வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி ; மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத
பண்பாட்டுக்கூறு.இத்தகைய சிறப்புகளைக்கொண்டுள்ள நிகழ்த்து கலைகளை நாம்
பாதுகாக்கவேண்டும்.
வினாக்கள்:
அ) நிகழ்த்துக்கலைகள் எத்தகைய
சிறப்புகளைக் கொண்டவை?
விடை: உழைப்பாளிகளின் உணர்வு வெளிப்பாடு; வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி ; மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத
பண்பாட்டுக்கூறு.இத்தகைய சிறப்புகளைக் கொண்டவை
ஆ) மரபார்ந்த
கலைவடிவங்கள் யாவை?
விடை: தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக்கொண்டு ஆடும் கரகாட்டமும் தோளில்
காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மக்களால் விரும்பப்படும்
மரபார்ந்த கலைவடிவங்கள்.
இ)
நிகழ்த்துக்கலைகளில் முத்தமிழும் உள்ளடங்கி உள்ளன- கருத்தை விளக்குக.
விடை: கதையொன்றில் இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவை இணைந்தவடிவமே தெருக்கூத்து ஆகும்
ஈ) பத்தியில் இருந்து
இரண்டு வினாக்களை உருவாக்குக.
விடை:
1. தோளில் கருவியைச் சுமந்தபடி ஆடுபவை எவை?
2.
வேடம்கட்டி ஆடுபவை. எவை?
3.
மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத
பண்பாட்டுக்கூறு எது?
4.
குழுவாக ஆடுபவை எவை?
5.
கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள் யாவை?
உ)
நிகழ்த்துக்கலைகளைப் பாதுகாக்க நம்மால் செய்ய இயலும் எவையேனும் இரண்டு
செயல்பாடுகளைக் குறிப்பிடுக.
விடை:
·
பொது
விழாக்கள் மற்றும் இல்ல விழாக்களில் நிகழ்கலைகளை நிகழ்த்தச்செய்தல்
·
நிகழ்கலைகள்
கற்பதைப் பாடமாக ஆக்குதல்
மனிதனுக்கும்
மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;- (வினா எண்: 40)
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
தென்றலின் வருடலில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே
இறகை விட மென்மைக் கொண்ட
பூக்களில் மயங்குவது மனிதர்களே.
தொடரில் விடுபட்ட
வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1.
வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2.
அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம்
சிவந்தது
3.
வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி
என்கிறோம்.
4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும்புல்வெளிகளில்
கதிரவனின் மஞ்சள் வெயில்
பரவிக்கிடக்கிறது.
5.
வெயில் அலையாதே;உடல் கறுத்து
விடும்.
அ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது
3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும் புல்வெளிகளில்
கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் கருத்து விடும்
ஆ. பொருத்தமானவற்றைச்
சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை,கவிழும்,விருந்து |
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம்
வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு
2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்
3. மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்
4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்.
5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.
நிற்க அதற்குத்தக
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர்
எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின்
உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை
வரிசைப்படுத்துக.
விடை:
1. என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்.
2. என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பொதுப்
பயன்பாட்டிற்குக் கொண்டுவருவேன்.
3. அனைத்து விளம்பரப்பலகைகளையும் தமிழில் மாற்றச்செய்வேன்
4. நிகழ்கலைகளைப் பாதுகாக்க என்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்வேன்
5. முத்தமிழையும் கற்பிக்க தனித்துவமான பள்ளிகளைத் துவங்குவேன்
இயல் – 7 மொழியை
ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
Among the five geographical divisions of the Tamil
country in Sangam literature, the Marutam region was the fit for cultivation,
as it had the most fertile lands. The
properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains
and the fertility of the soil.Among these elements of nature,sunlight was
considered indispensible by the ancient Tamils.
விடை: சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆ) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
வரப் போகிறேன் |
இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறேன் |
இல்லாமல் இருக்கிறது |
பெரும்பாலான கிணறுகளில் நீர் இல்லாமல் இருக்கிறது |
கொஞ்சம் அதிகம் |
இவனுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம் |
முன்னுக்குப் பின் |
பாலன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான் |
மறக்க நினைக்கிறேன் |
சோகங்களை மறக்க நினைக்கிறேன் |
இ) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக
மூவேந்தர்களால்
நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில்
அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
தொகைச்சொற்கள் |
பிரித்து எழுதுக |
தமிழ் எண்ணுரு |
மூவேந்தர் |
மூன்று + வேந்தர் |
|
நாற்றிசை |
நான்கு + திசை |
ச’ |
முத்தமிழ் |
மூன்று + தமிழ் |
|
இருதிணை |
இரண்டு + திணை |
உ |
முப்பால் |
மூன்று + பால் |
|
ஐந்திணை |
ஐந்து + திணை |
ரு |
நானிலம் |
நான்கு + நிலம் |
|
அறுசுவை |
ஆறு + சுவை |
|
பத்துப்பாட்டு |
பத்து + பாட்டு |
க0 |
எட்டுத்தொகை |
எட்டு + தொகை |
அ |
இயல் – 7
மொழியோடு விளையாடு
அ) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-
ஊர் பெயர் |
மரூஉ |
ஊர் பெயர் |
மரூஉ |
ஊர் பெயர் |
மரூஉ |
புதுக்கோட்டை |
புதுகை |
கோயம்புத்தூர் |
கோவை |
கும்பகோணம் |
குடந்தை |
திருச்சிராப்பள்ளி |
திருச்சி |
நாகப்பட்டினம் |
நாகை |
திருநெல்வேலி |
நெல்லை |
உதகமண்டலம் |
உதகை |
புதுச்சேரி |
புதுவை |
மன்னார்குடி |
மன்னை |
மயிலாப்பூர் |
மயிலை |
சைதாப்பேட்டை |
சைதை |
தஞ்சாவூர் |
தஞ்சை |
இயல் – 8
மொழியை ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
Once upon a time there were two beggars in Rome. The first begger used to cry in the streets of the city,”He is helped whom
God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”.
This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that
he decided to help the begger who popularized him in the streets of Rome. He
ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the
begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as
he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found
sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But
the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour,
the Emperor summoned him to his presence and asked him,” What have you done
with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold
it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the
Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the
beggar out his palace.
விடை:
ரோம் நகரத்தில் இரண்டு யாசகர்கள் ( பிச்சைக்காரர்கள் ) இருந்தார்கள்.அவர்கள் தினமும் ஒருவன் கடவுள் என்னை காப்பார் எனக் கூறிக்கொண்டே இருந்தான். இன்னொருவன் அரசன் தன்னை காப்பாற்றுவான் எனக் கூறிக்கொண்டே
இருப்பான்.ரோம் நகர அரசர் தன் புகழை பரப்புகின்றவனுக்கு உதவலாம் என
முடிவெடுத்தார். தங்க கட்டிகள் கொண்ட ரொட்டி தயாரித்து அதனை அந்த யாசகருக்குக்
கொடுத்தார். அந்த யாசகர் அந்த ரொட்டியை தனது சக யாசகருக்கு விற்று விட்டார். வீட்டுக்கு சென்று அவர் அந்த ரொட்டியை வெட்டும் போது அதனுள்
தங்க கட்டிக் கண்டார். உடனே அவர்கடவுளுக்கு நன்றிக் கூறி விட்டு பிச்சை எடுப்பதை
நிறுத்திக் கொண்டார்.
அரசர் பரிசளித்த ரொட்டியைப் பெற்ற யாசகர் மறுபடியும் யாசகம் கேட்பதைக் கண்டு
அதிர்ச்சியுற்றார். அவரை அழைத்து “ நான் அணுப்பிய ரொட்டியை என்ன செய்தாய்?”
என கேட்க அந்த யாசகர், அந்த ரொட்டி மிகவும் கனமாக இருந்ததாலும், மேலும் அது வேகமாலும் இருந்ததாலும் தன் நண்பன சக யாசகனுக்கு விற்று விட்டதாக
கூறினார். “ உண்மையில் கடவுள் தான் யாருக்கு உதவுகிறாரோ அவரே உதவி பெற்றவர் “ என கூறிவிட்டு, அந்த யாசகரையும் அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
ஆ) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
மனக்கோட்டை |
கந்தன் தொழில் ஆரம்பித்ததும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என
மனக்கோட்டைக் கட்டுகிறான் |
அள்ளி இறைத்தல் |
பணத்தை அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான் |
கண்ணும் கருத்தும் |
கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப்
பெற்றாள். |
ஆறப்போடுதல் |
கோபத்தை ஆறப்போட வேண்டும். |
இ) பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக
மாற்றுக;-
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு
!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே !
அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.!
ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.
“சரிங்கண்ணே.”
“ தம்பி? எங்கே நிற்கின்றாய்?”
“ நீங்கள் சொன்ன இடத்திலே தான் அண்ணே! எதிர்ப்பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை இருக்கின்றது”.
“ அங்கேயே தேநீர் குடித்து விட்டு, செய்தித்தாள் படித்துவிட்டு இரு......நான் சீக்கிரமாக வந்துவிடுவேன்
“ அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டுவாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்தே நீண்ட நாள்களாயிற்று!”.
“ அவன் பாட்டியுடன் வெளியூர் சென்று உள்ளான்.உன் ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்”.
“ மிகவும் சிறுவயதில் பார்த்தது அண்ணா! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!”.
“ இப்போது உயரமாக வளர்ந்து விட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது!ஊருக்கு எங்களுடன் வருவான்.
“பார்த்துக்கொள்!.சரி,தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன்..”
“ சரிங்கண்ணே”.
ஈ) நயம் பாராட்டுக:-
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
-
வள்ளலார்.
திரண்ட கருத்து :
கோடை வெப்பத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு இளைப்பாற ஏற்ற
குளிர்ந்த மரம் போன்றவனாகவும்,அம்மரம் தரும் நிழல் தருபவனாகவும், அந்நிழலிடத்தில் மரத்தில் பழுத்த பழமாகவும், அதனை ஒட்டி அமைந்த் நீரோடையில் ஓடும் இன்சுவை நீராகவும், அந்த ஓடையில் மலர்ந்த நறுமணமிக்க மலராகவும், மென்மையாக வீசுகின்ற பூங்காற்றாகவும், அந்த காற்றினால் சுகத்தை தருபவனாகவும், சுகத்தில் உண்டான இன்ப பயனாகவும், சிறு வயதில் என்னை மணந்த மணவாளனாகவும் இருக்கும் அம்பலத்தில் ஆடும் அரசே என்
பாமாலையை ஏற்றுக் கொள்க.
மையக் கருத்து:
வள்ளலார் அனைத்துப் பொருட்களிலும் இறைவனைக் காணுகிறார். அதனை பாமலையாக சூட்டுகிறார்.
மோனை :
சீர்தோறும் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கோடையிலே - குளிர்தருவே
ஓடையிலே - உகந்ததண்ணீர்
மேடையிலே - மென்காற்றில்
ஆடையிலே - ஆடுகின்ற
எதுகை :
சீர் தோறும் அடி தோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம்
எழுத்து ஒன்றி வருவது எதுகை.
கோடையிலே - ஓடையிலே
மேடையிலே - ஆடையிலே
இயைபு
:
அடிதோறும் இறுதியில் உள்ள எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது இயைபு.
கனியே
– தண்ணீரே
மலரே - காற்றே
பயனே - அருளே
அணி நயம்
:
இப்பாடல் இறைவன மரமாகவும், நிழலாகவும், கனியாகவும், மலராகவும்,
தென்றலாகவும் பாடியிருப்பதால் உருவக அணி வந்துள்ளது.
சந்த நயம்
:
அடிதோறும் எட்டு சீர்களைப் பெற்றுள்ளதால் எண் சீர்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இயல் – 8 மொழியோடு விளையாடு
அ) கண்டுபிடித்து எழுதுக:-
ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....
ஒன்று |
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் |
இரண்டு |
தானம் தவமிரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின் |
மூன்று |
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் |
நான்கு |
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் |
ஐந்து |
கண்டுகேட்டு
உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி
கண்ணே உள |
ஆறு |
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு |
ஏழு |
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் |
எட்டு |
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை |
பத்து |
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் |
ஆ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-
கானடை |
கான் அடை – காட்டைச் சேர் கான் நடை – காட்டுக்கு நடத்தல் கால்நடை – காலால் நடத்தல் |
வருந்தாமரை |
வரும் + தாமரை – வரும் தாமரை மலர் வருந்தா + மரை – துன்புறாத மான் வருந்து + ஆ + மரை – துன்புறும் பசுவும் மானும் |
பிண்ணாக்கு |
பிண் + நாக்கு – பிளவு பட்ட நாக்கு பிண்ணாக்கு – எண்ணெய் எடுத்தப் பின் கிடைக்கும் பொருள் |
பலகையொலி |
பல + கை + ஒலி – பல கைகள் எழுப்பும் ஒலி பலகை + ஒலி – மரப் பலகையின் ஒலி |
இயல் – 9 மொழியை
ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
1. Education is what remains after one has forgotten what one has
learned in school – Albert Einstein
ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன!
– ஆல்பிரட் ஐன்ஸ்டின்
2. Tomorrow is often
the busiest day of the week – Spanish proverb
பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி
3. It is during our darkest
moment that we must focus to see the light – Aristotle
இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில்
4. Success is not
final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston
Churchill
வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது – வின்ஸ்டன் சர்ச்சில்
ஆ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-
தாமரை இலை நீர்போல |
துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும். |
மழைமுகம் காணாப் பயிர்போல |
தந்தையை இழந்த குடும்பம் வருமானம் இன்றி மழைமுகம் காணாப்
பயிர்போல வாடி இருக்கிறது. |
கண்ணினைக் காக்கும் இமைபோல |
பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை கண்ணினைக் காக்கும் இமைபோல
காக்க வேண்டும். |
சிலை மேல் எழுத்து போல |
மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்துப் போல நிலையானது. |
இ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து
எழுதுக;-
கம்பனும்
கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும்
பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப்
பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
1.
கம்பன் 2. உமறுப்புலவர் 3. ஜவாது புலவர் 4 காசிம் புலவர் 5.
குணங்குடி 6. சேகனாப்புலவர் 7.செய்குத்
தம்பி பாவலர்.
ஈ) பொருத்தமான
நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப்பெயர்களில்
கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன்
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
சேர்ர்களின் பட்டப் பெயர்களில்
‘ கொல்லி வெற்பன்’, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்
‘ மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்.
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
இயல் – 9 மொழியோடு விளையாடு
அ) கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக்
கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-
ஞாயிறு |
திங்கள் |
செவ்வாய் |
புதன் |
வியாழன் |
வெள்ளி |
சனி |
|
|
|
க |
உ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கலைச்சொல் அறிவோம்
1.
Vowel
- உயிரெழுத்து
2.
Consonant
– மெய்யெழுத்து
3.
Homograph
– ஒப்பெழுத்து
4.
Monolingual
– ஒரு மொழி
5.
Conversation
- உரையாடல்
6.
Discussion
– கலந்துரையாடல்
7.
Storm
- புயல்
8.
Land
Breeze - நிலக்காற்று
9.
Tornado
– சூறாவளி
10.
Sea
Breeze - கடற்காற்று
11.
Tempest
– பெருங்காற்று
12.
Whirlwind
- சுழல்காற்று
13.
செவ்விலக்கியம்
- Classical
literature
14.
காப்பிய
இலக்கியம் - Epic
literature
15.
பக்தி
இலக்கியம் - Devotional
literature
16.
பண்டைய
இலக்கியம் –
Ancient literature
17.
வட்டார
இலக்கியம் - Regional
literature
18.
நாட்டுப்புற
இலக்கியம் - Folk
literature
19.
நவீன
இலக்கியம் - Modern
literature
20.
Nanotechnology
– மீநுண்தொழில்நுட்பம்
21.
Space
Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
22.
Biotechnology
– உயிரித் தொழில்நுட்பம்
23.
Cosmic
rays - விண்வெளிக் கதிர்கள்
24.
Ultraviolet
rays - புறஊதாக் கதிர்கள்
25.
Infrared
rays - அகச்சிவப்புக் கதிர்கள்
26.
Emblem
- சின்னம்
27.
Intellectual
- அறிவாளர்
28.
Thesis
- ஆய்வேடு
29.
Symbolism
– குறியீட்டியல்
30. PLAY
WRIGHT – நாடக ஆசிரியர்
31. SCREENPLAY
– திரைக்கதை
32. STORYTELLER
– கதை சொல்பவர்
33. AESTHETICS
– அழகியல்
34.
Consulate
– துணைத்தூதரகம்
35.
Patent
– காப்புரிமை
36.
Document
- ஆவணம்
37.
Guild
- வணிகக் குழு
38.
Irrigation
- பாசனம்
39.
Territory
– நிலப்பகுதி
40.
Belief
- நம்பிக்கை
41.
Philosopher
- மெய்யியலாளர்
42.
Renaissance
- மறுமலர்ச்சி
43.
Revivalism
– மீட்டுருவாக்கம்
44.
Humanism
- மனிதநேயம்
45.
Cultural
Boundaries - பண்பாட்டு எல்லை
46.
Cabinet
- அமைச்சரவை
47.
Cultural
values – பண்பாட்டுவிழுமியங்கள்
அகராதியில் காண்க.
அடவி |
காடு |
அவல் |
பள்ளம் |
சுவல் |
மேடு |
செறு |
வயல் |
பழனம் |
வயல் |
புறவு |
காடு |
அகன்சுடர் |
அகன்ற தீபம் |
ஆர்கலி |
கடல்,மழை |
கட்புள் |
விழித்திருக்கும் பறவை |
கொடுவாய் |
பழிச்சொல்,வாளின் வளைந்த வாய் |
திருவில் |
வானவில் |
ஊண் |
உணவு |
ஊன் |
தசை,உடம்பு |
திணை |
ஒழுக்கம் |
தினை |
சிறுதானிய வகை |
அண்ணம் |
மேல்வாய் |
அன்னம் |
சோறு,பறவை |
வெல்லம் |
கரும்பின் கட்டி |
வெள்ளம் |
நீர்ப்பெருக்கு |
அவிர்தல் |
ஒளிர்தல்,பீறுதல் |
அழல் |
நெருப்பு,வெப்பம் |
உவா |
முழுமதி நாள்,கடல் |
கங்குல் |
இரவு,இருள் |
கனலி |
சூரியன்,நெருப்பு |
மன்றல் |
திருமணம்,நீண்ட தெரு |
அடிச்சுவடு |
காலடிச்சுவடு |
அகராதி |
சொற்கோவை |
தூவல் |
மழை,எழுதும் இறகு |
மருள் |
மயக்கம்,வியப்பு |
தால் |
நாக்கு |
உழுவை |
புலி |
அகவுதல் |
குரல் எழுப்புதல் |
ஏந்தெழில் |
மிகுந்த அழகு |
அணிமை |
அண்மை,பக்கம் |
மிரியல் |
மிளகு |
வருத்தனை |
தொழில்,பிழைப்பு |
அதசி |
சணல் |
துரிஞ்சில் |
வெளவால் வகை |
ஆசுகவி |
கொடுத்தப் பொருளைப் பற்றி உடனே பாடும் பாட்டு |
மதுர கவி |
சொற்சுவை,பொருட்சுவை நிரம்பிய பாட்டு |
சித்திர கவி |
சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு |
வித்தாரகவி |
விரித்துப் பாடும் பாட்டு |
குணதரன் |
நற்குணம் உள்ளவன் |
செவ்வை |
நேர்மை,மிகுதி |
நகல் |
சிரிப்பு,ஏளனம் |
பூட்கை |
கொள்கை,மனவுறுதி |
நிற்க அதற்குத் தக
இயல் - 1.
இன்சொல் வழி |
தீய சொல் வழி |
பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் |
பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் |
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
1.
நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2.
என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4.
பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5.
பிறருக்கு நன்மை செய்வேன் |
இயல் – 2
வானொலி அறிவிப்பு....
ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை
வரிசைப்படுத்துக.
1. தேவையான
உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன். 2. குடிநீரைச்
சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3. உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 4. நீரைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 5. வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி நடப்பேன். |
இயல் – 3
மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
1.
நாகரிகம்
கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது. 2.
நம்
நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது. 3.
பாரம்பரிய
உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும். 4.
பாரம்பரிய
உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும். 5.
பாரம்பரிய
உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். |
இயல் – 4
தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை
பட்டியலிடுக.
1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று
விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல்,
அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல். |
இயல் – 5
பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.
பள்ளியில்
நான் |
வீட்டில்
நான் |
1.
நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன் |
1.
அதிகாலையில் எழுதல். |
2.
ஆசிரியர் சொல்படி நடப்பேன்.. |
2.
பெற்றோர் சொல்படி நடப்பேன். |
3.
ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன். |
3.
பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன். |
4.
நண்பர்களுடன் கலந்து உரையாடுவேன். .. |
4.
உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன். |
5.
நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன். |
5.
பெற்றோருக்கு உதவிகள் செய்வேன் |
இயல் – 6
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர்
எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின்
உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை
வரிசைப்படுத்துக.
விடை:
1. என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்.
2. என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பொதுப்
பயன்பாட்டிற்குக் கொண்டுவருவேன்.
3. அனைத்து விளம்பரப்பலகைகளையும் தமிழில் மாற்றச்செய்வேன்
4. நிகழ்கலைகளைப் பாதுகாக்க என்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்வேன்
5. முத்தமிழையும் கற்பிக்க தனித்துவமான பள்ளிகளைத் துவங்குவேன்
இயல் – 7
கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.
1.
கல்வெட்டுகளின் வழி அறியலாகும்
செய்திகளை அனிவருக்கும் கூறுதல். 2.
கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி
எதுவும் கூற,
அனுமதிக்காமை. 3.
கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம்
அடையச் செய்தல். 4.
கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய
உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு
மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல். |
இயல் – 8
மாணவ
நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.
1.
குறளை பேசாதிருத்தல் |
1.
தேவையற்றச் சண்டைகள் நீங்கும் |
2.
பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல் |
2.
மன அமைதிப் பெறலாம். |
3.
உண்மை பேசுதல் |
3.
நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம் |
4.
உதவி செய்தல் |
4.
மன மகிழ்ச்சி கிடைக்கும் |
5.
அன்பாய் இருத்தல் |
5.
அனைவரும் நண்பராகிவிடுவர் |
இயல் – 9
நீங்கள் செய்த,பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.
1.
வகுப்பறையில்
எழுதுகோல் கொடுத்து உதவியபோது |
1.
இக்கட்டான
சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு, அவருக்கு மகிழ்ச்சி |
2.
உறவினருக்கு
என் அம்மா பணம் கொடுத்து உதவியபோது |
2.
கல்லூரி
படிப்பை தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு. |
3.
முதியவருக்கு,
பயணச்சீட்டு எடுத்து கொடுத்தேன் |
3.
அவரது
முகத்தில் காணப்பட்ட, மனநிறைவும்,
மனஅமைதியும் மகிழ்ச்சியும், என்னை மகிழச் செய்தது. |
4.
ஒருவேளை
உணவு வழங்கியபோது |
4.
பசிப்பிணி
தீர்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது |
5.
மயங்கி
விழுந்த முதியவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினேன். |
5.
என்னாலும்,
உதவி செய்ய முடியும் என்ற உணர்வு எழுந்தது |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி