QUARTERLY EXAM QUESTION PAPER & ANSWER KEY RANIPET DISTRICT 10 TH STD TAMIL

(இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கானது)


காலாண்டுப்பொதுத் தேர்வு-2026 இராணிப்பேட்டை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மணிப்பெயர் வகை

1

2.     

. 3 , 1 ,4 ,2

1

3.     

. வான்வெளியில், பேரொலியில்

1

4.     

. வினையெச்சத்தொடர்

1

5.     

. திருக்குறள் மெய்ப்பொருளுரை

1

6.     

. கம்பராமாயணம்

1

7.     

. உயிர்ப்பின் ஏக்கம்

1

8.     

. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

9.     

. வேற்றுமை உருபு

1

10.   

. பண் என்னாம், கண்ணோட்டம் 

1

11.    

. பண்புத்தொகை

1

12.   

. கனிச்சாறு

1

13.   

. பாவலரேறு

1

14.   

. ஆறாம் வேற்றுமைத்தொகை

1

15.   

. வீரமாமுனிவர்

1

                        பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?

. யாருடைய ஆட்சிக்காலங்களில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன? (மாதிரி விடை)

(வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

2

17

·        செந்நெல்  

·        வெண்ணெல்

·        கார்நெல்

·        சம்பா  மற்றும் உள்வகைகள்

·        மட்டை

2

18

ü  முதுகினால் சூரியனை மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை.

ü  தாகம் தீர்க்கும்போது மேகங்கள் கருணை மிக்கவை

2

19

வாருங்கள், நலமா? நீர் அருந்துங்கள்

2

20

·        செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5 -6 மாதங்களில் மென்மையாக அசையும்.

·       இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் கைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி ,மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைத்தும் ஆடும்.

2

21

பல்லார்   பகைகொளலின்   பத்தடுத்த தீமைத்தே

நல்லார்  தொடர்கை  விடல்

2

                                             

                                                                     பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

ü  பல கை என்று வந்தபோது கையைக் குறித்தது.

ü  பலகை என்று வந்தபோது மரப்பலகையைக் குறித்தது.

ü  தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது.

2

23

. நான்கு -       . ஆயிரம் 000

2

24

அமர்+த்(ந்)+த்+ஆன்

     அமர்-பகுதி, த்-சந்தி,  ந்-விகாரம், த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி

2

25

. வன்புயல்  . மனிதவளம்

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா  : . சோறு   . கரு   

2

26

. விண்மீன்  . காற்று

2

27

வளைந்து வளைந்து சென்றனர்

2

28

பள்ளி விட்டதும் வீட்டுக்குச் சென்றான்    ( மாதிரி விடை)

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

 ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

30

·        தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர்.

·        உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும்.

·        ஏனென்றால், வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம்.

·        இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.

1

1

1

31

. மீண்டும் மீண்டும்

. தொடர்ந்து பெய்த மழை

. பெய் மழை                 

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

33

ü  ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும்.

ü  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர்.

ü  உலகத்தோடு இணைந்து வாழாதவர், கற்றவராயினும் அறிவு இல்லாதவரே

3

34

 

.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

.

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைஊரின் நடுவில் பழுத்த நச்சு மரம்

v  உவமேயம்உதவி செய்ய விரும்பாதவர் பெற்ற செல்வம்

v  உவம உருபுஅற்று

இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

3

36

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

3

37

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.      வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

·        ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோறு சோர்வு அடையாதெ இருக்க வேண்டும் நற்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்

·        விடாமுயற்சி என்ற உயர் பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்

·        முயற்சி செய்தால் ஒருவருக்கு செல்வம் பெருகும் முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்

·        ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருப்பினும் அது இழிவன்று: அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

·        இடைவிடாமல் சோர்விலாவது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றி அடைவர்.

(அல்லது)

)

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

5

39

.

(மாதிரிக் கடிதங்கள்)

வாழ்த்து மடல்

 அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                                         இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      . இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      இ இ  -2.

) முறையீட்டுக்கடிதம்

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12, கம்பர் தெரு,

         இ இ இ .

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         இ இ இ .

ஐயா,

    பொருள்: செயற்லை நிறமூட்டிகள் கலந்து உணவுப்பொருள் தயாரித்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

      வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை அடுமனைக்கு நேற்று தின்பண்டங்கள் வாங்கச் சென்றிருந்தேன். அங்கு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி உணவுப்பொருட்கள் தயாரிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். .அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். அந்த அடுமனையின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                     இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

                                                                                                             அ அ அ.

இடம்: இ இ இ

நாள்: 16 -09-2026.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         இ இ இ.

(வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

5

40

வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

41

நூலக உறுப்பினர்  படிவம்

இராணிப்பேட்டை மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் அரக்கோணம்

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண்:   12345                                                    உறுப்பினர் எண்: 6789410                                    

1.    பெயர்                                                        :           வெ. முத்துக்குமரன்

2.   தந்தை பெயர்                                            :           வெற்றிவேந்தன்

3.   பிறந்த நாள்                                               :           XX – XX - XXXX

4.   வயது                                                         :           15

5.   படிப்பு                                                        :           பத்தாம் வகுப்பு

6.   தொலைபேசி / அலைபேசி எண்           :           XXXX XXXX12

7.   முகவரி                                                     :           6 கபிலன் தெரு,

                                                                           அரக்கோணம்,

                                                                           இராணிப்பேட்டை மாவட்டம்.

             

                 நான் கிளை நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. 100 சந்தா தொகை ரூ. 20 ஆக மொத்தம் ரூ. 120 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

 

இடம்:   அரக்கோணம்

நாள்:    20-03-2026                                                                                                                                                   

                                                                                          தங்கள் உண்மையுள்ளவெ. முத்துக்குமரன்

திரு / திருமதி / செல்வி / செல்வன் வெ. முத்துக்குமரன் அவர்களை எனக்கு நன்கு  தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

         

(பதவி மற்றும் அலுவலகம்)

5

42

) (மாதிரி விடை)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம்பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து, சுகந்தம் வீசியதால். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

செவி மாற்றுத் திறனாளர் வினா:

I. அனைத்து சமயங்களுக்கும் பொதுமறையாக விளங்குகிறது

II. 70

III. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

IV. இன்பத்துப்பால்

 V. உலகப்பொதுமறை திருக்குறள் 

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

நாட்டுவளமும் சொல்வளமும்

முன்னுரை:

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்'

            என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம்.

தேவநேயப்பாவாணர்:

          தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

            ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

ü  ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

ü  விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.

ü  பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ü  செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது.

ü  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

       சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்

(அல்லது)

முன்னுரை:

            விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர் கூறியதைத் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.

தனித்து உண்ணாமை:

தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.

விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:

            விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை

அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” 

என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

வறுமையிலும் விருந்தோம்பல்:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

நிலத்திற்கேற்ற விருந்து:

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும், உணவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:

வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”

 என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலைப் போற்றி பெருமிதம் கொள்வோம்.

8

44

பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்?  என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

(அல்லது)

 )  முன்னுரை: 

            பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று. நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்

விடாது பெய்த மழை:

கடுமையான வெயில் மறைந்து, இமைக்கும் நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கின. மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள  கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தள்ளாடிய கப்பல் (தொங்கான்):

           மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான்ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான். இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல் தள்ளாடியது. மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..

பயணிகளின் தவிப்பு:  

பாண்டியன் கடலைப் பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம்  தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும், கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். அதற்குக் கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையைப் பார்க்கலாம்: இனி பயமில்லை என்றார்.

கரையைக் காணுதல்:

            ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக   மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூரக்  கப்பல்கள்  கரை முழுவதும் நின்றிருந்தன.

முடிவுரை:

தமிரோ?” என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.யா மஸ்தாஇன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளைச் சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார்புயலிலே ஒரு தோணி கதையில்  இடம்பெற்றுள்ள வருணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின.

8

45

) தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:    

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

 (அல்லது)

) முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

             மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

  மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

             'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

8

 பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை