10.ஆம் வகுப்பு - தமிழ் 100 மதிப்பெண் தேர்வு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
1) தென்னன்
என்று குறிப்பிடப்பட்ட மன்னன்
அ) பாண்டியன் ஆ) சேரன் இ) சோழன் ஈ) பல்லவன்
2) முன்னும்
என்ற சொல்லின் பொருள்…..
அ) முந்தும் ஆ) முன்னர் இ) முன்னரும் ஈ) பொங்கியெழும்
3) சாகும்போதும்
தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……
அ) பாரதியார் ஆ) ஜி.யு.போப்
இ) க.சச்சிதானந்தன் ஈ) பாவலரேறு
4) பாவலரேறு
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
அ) துரை.செந்தில் ஆ) துரை.வேலு இ) துரை.செல்வம் ஈ)
துரை.மாணிக்கம்
5) தமிழுக்குக் கருவூலமாய்
அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்
அ) திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆ) கனிச்சாறு இ)
பாவியக்கொத்து ஈ) மகபுகுவஞ்சி
6) தும்பி என்பதன் பொருள்
அ) வண்டு ஆ) தம்பி இ) ஈசல் ஈ) கரையான்
7) மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்………
அ) இளங்குமரனார் ஆ) தேவநேயப்பாவாணர் இ) தாமோதரனார் ஈ) சுந்தரனார்
8) பன்மொழிப்புலவர் எனப்
போற்றப்படுபவர்……..
அ) ம.பொ.சிவஞானம் ஆ)
கா.அப்பாதுரையார் இ) சந்தக்கவிமணி ஈ) பெருஞ்சித்திரனார்
9) நாடும்,மொழியும் நமதிரு கண்கள் எனப்பாடியவர்………..
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) தமிழழகனார்
10) ’பொன்னினும் விலைமிகு
பொருளென்செல்வம்’ -என்று கண்ணதாசன் குறிப்பிடுவது
அ) செல்வம் ஆ) கவிதை இ) பொருள் ஈ) அறம்
அ) சுப்பையா
ஆ) வேணுகோபாலன் இ) முத்தையா
ஈ) சுப்புரத்தினம்
12)
கண்ணதாசன்
திரைப்படப் பாடல்களின் மூலம் மக்களிடையே கொண்டு சேர்த்தது
அ) அரசியலை ஆ) ஆன்மீகத்தை இ) இன்பத்தை ஈ) மெய்யியலை
13) எழிலன் படித்தான் என்பது…….மொழி
அ)
தொடர்மொழி ஆ) தனிமொழி
இ) பொதுமொழி ஈ) மூவகைமொழி
14) வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் எனக்கூறியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கண்ணதாசன் ஈ) கவிமணி
15) வினையே,பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது……..
அ) தொழிற்பெயர் ஆ)
வினையாலணையும்பெயர் இ)
சினைப்பெயர் ஈ) காலப்பெயர்
16) ”பழம்”
என்ற சொல்லுக்கான சரியான கூட்டப்பெயர்
அ) குவியல் ஆ) மந்தை இ) குலை ஈ) கட்டு
17) அவரை,
துவரை ஆகிய தானியங்களைக் குறிக்கும் சொல்
அ) கூலம் ஆ) முத்து இ) முதிரை ஈ) விதை
18) கீரை
என்ற சொல்லின் கூட்டப் பெயரைத் தேர்க.
அ) கட்டு ஆ) குலை இ) குவியல் ஈ) தாறு
19.
தமிழ்மொழிக்காக மாநாடு நடத்திய முதல் நாடு
அ) அமெரிக்கா ஆ) மலேசியா இ) சிங்கப்பூர் ஈ) சீனா
20) உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்………
அ)
தொல்காப்பியர் ஆ) திருமூலர் இ) பவணந்தி ஈ) போகமுனிவர்
21) திருமூலர் இயற்றிய நூல்………
அ)
தொல்காப்பியம் ஆ) நன்னூல்
இ) திருமந்திரம் ஈ) புறநானூறு
22) உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று
திருமந்திரம் குறிப்பிடுவது
அ)
உணவு ஆ)
உடை இ)
உறையுள் ஈ) மூச்சுப்பயிற்சி
23) ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ என்று காற்றைக் குறிப்பிடும் நூல்……
அ)
சிலப்பதிகாரம் ஆ) புறநானூறு இ) குறுந்தொகை ஈ) அகநானூறு
24) தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு…….சதவீதம் மழைபொழிவைத் தருகிறது.
அ)
ஐம்பது ஆ) அறுபது
இ) எழுபது ஈ) எண்பது
25) முந்நீர் என்ற சொல்லின் பொருள்
அ) கடல் ஆ) ஆற்றுநீர் இ) ஊற்றுநீர் ஈ) மழைநீர்
26) பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க
அறிஞர்
அ)
பிளேட்டோ ஆ) ஹிப்பாலஸ் இ) அரிஸ்டாடில் ஈ) சாக்ரடீஸ்
27) மெது உருளைகளைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்………
அ)
soft cylinder ஆ)
roller இ)
tyre ஈ) softees
28) உலகக் காற்றுநாள்…………
அ)
செப்டம்பர் 15 ஆ) ஆகஸ்டு 15 இ) ஜூலை
15 ஈ) ஜூன் 15
29) பரிபாடல்------------நூல்களுள் ஒன்று.
அ) பத்துப்பாட்டு ஆ)
பதினெண் கீழ்க்கணக்கு இ) எட்டுத்தொகை ஈ) நீதி நூல்கள்
30) தண்பெயல் என்ற சொல்லின் பொருள்----------
அ) குளிர்ந்த மழை ஆ) தனது மழை இ) இளவேனில் ஈ) முதுவேனில்
31) ஓங்கு
என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல்---------
அ) கலித்தொகை ஆ)
பரிபாடல் இ)
நற்றிணை ஈ) குறுந்தொகை
32) ’கருவளர்
வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்‘
இவ்வடிகளில் இடம்பெற்ற நயம்
அ) மோனை ஆ) எதுகை இ)
இயைபு ஈ) முரண்
33) தொகாநிலைத்தொடர்--------வகைப்படும்.
அ)
6 ஆ) 9 இ) 8 ஈ) 10
34) தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில்
அவர்களது தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடப்படுபவை
அ)
திருப்பாவை, திருவெம்பாவை ஆ) திருக்கோவை,
திருச்சேவை
இ)
திருச்சுனை, திருவேரகம் ஈ) திருவருட்பா, திருக்கோத்தும்பி
35) இறங்கினார் முகமது என்பது---------
அ)
வினைமுற்றுத்தொடர் ஆ) வினையெச்சத் தொடர்
இ)
பெயரெச்சத்தொடர் ஈ) முற்றெச்சத்தொடர்
36.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக்
காற்று வீசியது. தொடருக்குப் பொருந்திய தலைப்பு
அ)
காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும்
வாசம் உயிர்ப்பின்
ஏக்கம்.
37.
புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு
மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப்
பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
அ)
காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும்
வாசம் உயிர்ப்பின்
ஏக்கம்.
38.
சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள்
அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில்
வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
அ)
காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும்
வாசம் உயிர்ப்பின்
ஏக்கம்.
39.
இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட
வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப்
பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
அ)
காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும்
வாசம் ஈ. உயிர்ப்பின் ஏக்கம்.
40.
நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச்
சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச்
சிலிர்க்கும் உயிரினம்.
அ)
காற்றின் பாடல் ஆ) மொட்டின் வருகை இ) மிதக்கும்
வாசம் ஈ. நீரின் சிலிர்ப்பு.
41.
குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்.
இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
அ)
வனத்தின் நடனம் ஆ) மிதக்கும் வாசம் இ) காற்றின்
பாடல் ஈ) மொட்டின் வருகை
42. நண்பா
எழுது! தொடர்வகையைத் தேர்க
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) அடுக்குத்தொடர்
43. கூட்டுநிலைப்
பெயரெச்சம் இடம்பெற்ற தொடரைத் தேர்க
அ) விளித்தொடர் ஆ) வருக! வருக! இ) சொல்லத் தக்க செய்தி ஈ) மற்றொன்று கிடைத்தது
44. அன்பால்
கட்டினார் என்பது'
அ) எழுவாய்த் தொடர் ஆ) வினைமுற்றுத் தொடர்
இ) பெயரெச்சத் தொடர் ஈ) வேற்றுமைத் தொடர்
45.
இடைச்சொல் தொடரைத் தேர்ந்தெடுக்க
அ) சாலச் சிறந்தது ஆ) பாடி மகிழ்ந்தனர் இ) அவரே சொன்னார் ஈ) காற்று
வீசியது
46.ஒன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள் ச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது
அ) அடுக்குத்தொடர் ஆ) எழுவாய்த் தொடர் இ) விளித்தொடர் ஈ) கூட்டுநிலை பெயரெச்சம்
47.
வடித்த கஞ்சி என்பது
அ) பெயரெச்சத் தொடர் ஆ) வினையெச்சத் தொடர்
இ) வினைமுற்றுத்தொடர் ஈ) உரிச்சொற்றொடர்
48.’ விருந்தே புதுமை’ என்று
விருந்தினருக்கு விளக்கமளித்தவர்
அ)
அதிவீரராம பாண்டியன்
ஆ) ஒட்டக்கூத்தர் இ) நப்பூதனார் ஈ) தொல்காப்பியர்
49’மோப்பக் குழையும் அனிச்சம்’ –என்ற குறள் எடுத்துரைப்பது
அ)
அனிச்சம் ஆ) மோப்பம்
இ) விருந்தோம்பல் ஈ) கொல்லாமை
50. ’விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’
என்று வருந்தியவள்----------
அ)
ஆதிரை ஆ) கண்ணகி
இ) மாதவி ஈ) காயசண்டிகை
51. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும்
ஈகையும் செய்வதாகக் கூறியவர்---
அ)
கம்பர் ஆ) ஒட்டக்கூத்தர் இ) இளங்கோவடிகள் ஈ) பாரதியார்
52. ’விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண
மேன்மேலும்
முகம் மலரும் மேலோர் போல’ என்று செயங்கொண்டார் குறிப்பிடுவது
அ) மேலோர் ஆ) முகமலர்ச்சி இ) வரவேற்றல் ஈ) பணிவிடை
53. ’அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்’
என்று கூறும் நூல்
அ)
கலித்தொகை ஆ) நற்றிணை
இ) மதுரைக்காஞ்சி ஈ) பட்டினப்பாலை
54.’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ என்று குறிப்பிடும் நூல்---.குறிப்பிடுபவர்----
அ)
குறிஞ்சிப்பாட்டு,கபிலர் ஆ) உலகநீதி,உலகநாதர்
இ)
பரணர்,புறநானூறு ஈ) கொன்றைவேந்தன்,ஔவையார்
55. ’காலின் ஏழடிப்பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் முறையைக் குறிப்பிடும் நூல்
அ)
பரிபாடல் ஆ) காசிக்காண்டம் இ) நற்றிணை ஈ) பொருநராற்றுப்படை
56. முத்துக்குளிக்கும் நகரம்---------
அ)
வஞ்சி ஆ) பூம்புகார் இ) கொற்கை ஈ) மதுரை
57.
பிள்ளைத்தமிழ்-------- வகைச்
சிற்றிலக்கியங்களுள் ஒன்று
அ) 108 ஆ) 96 இ) 133 ஈ)
81
58. தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.
அ)
ஐந்து ஆ) ஏழு
இ) ஒன்பது ஈ) ஆறு
59. காலம் கரந்த பெயரெச்சமே---------ஆகும்.
அ)
பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) வினையெச்சம் ஈ) பெயரெச்சம்
60. முறுக்குமீசை வந்தார் என்பது------------தொகை
அ)
பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ)
அன்மொழித்தொகை ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
61 முறுக்குமீசை வந்தார் என்பது------------தொகை
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
62. பொருந்திய விடையைத் தேர்க.
(A)
Hospitality - (i) புதுமனை
புகுவிழா
(B)
House warming - (ii) செல்வம்
(C)
Feast - (iii) விருந்தோம்பல்
(D)
Wealth - (iv) விருந்து
அ) A-ii, B-i, C-iv, D-iii ஆ) A-iii. B-iv, C-1,
D-ii இ) A-iii.
B-iv, C-ii, D-I ஈ)
A- iii, B-I, C- IV, D-II
63. 'விருந்தே
புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்விடைகேற்ற
பொருத்தமான வினாவைத் தேர்க
அ) தொல்காப்பியர் கூறிய விருந்து குறித்த கருத்து
இன்று பொருந்துமா?
ஆ) விருந்து குறித்து தொல்காப்பியர் குறிப்பிட்ட
கருத்துகள் யாவை?
இ) புதுமையான விருந்தோம்பல் என்பது எது?
ஈ) விருந்து பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள கருத்து
யாது?
64. பழமொழிகளைப்
பொருத்துக:
(A)
உப்பிட்டவரை - (i) மூன்று நாள்
(B)
விருந்தும் மருந்தும் - (ii) அமிர்தமும் நஞ்சு
(C)
ஒரு பானை சோற்றுக்கு
- (iii) உள்ளளவும் நினை
(D)
அளவுக்கு மீறினால் - (iv) ஒரு சோறு பதம்
அ) A-ii. B-1, C-iv, D-iii ஆ) A-ii, B-iv, C-i,
D-iii இ) A-iii.
B-i, C-iv, D-li ஈ)
A-iv, B-iii, C-i, D-ii
65.
ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது என்ற தொடருக்குப்
பொருத்தமான பொருளைத் தரும் திருக்குறள் அடியைத் தேர்க
அ) மெய்ப்பொருள் காண்ப தறிவு ஆ) நடு ஊருள் நச்சு மரம்
பழுத்தற்று
இ) நாள்தொறும் நாடு கெடும் ஈ) உயிரினும் ஓம்பப் படும்
66. 'எழுது
என்றாள்' என்ற தொடர் அடுக்குத்தொடர் இடம்பெறுமாறு அமைந்து
வருவதைத் தேர்க
அ) எழுது எழுது என்றாள் ஆ) எழுதிப் படி என்றாள்
இ) எழுதிக்காட்டு என்றாள் ஈ) விரைவாக எழுது என்றாள்
67. குண்டலமும்
குழைகாதும் என்பதற்குரிய இலக்கணக்குறிப்பை தேர்க
அ) வியங்கோள் வினைமுற்று ஆ) எண்ணும்மை இ) உம்மைத்தொகை ஈ) பெயரெச்சம்
68 செங்கீரை
பருவத்திற்குரிய மாதம்
அ) 3-4 ஆ) 4-5 இ) 5-6 ஈ) 6-7
69. மலர்க்கை
என்பது
அ) உவமைத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை
70. " நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று " இக்குறளில் இடம்பெற்றுள்ள
அ) உவமையணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) வஞ்சப்புகழ்ச்சி அணி
71. கொற்கையின்
அரசர்
அ) இளங்கோவடிகள் ஆ) செயங்கொண்டார்
இ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ஈ) அதிவீரராம
பாண்டியன்
72.
சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்
அ) குமரகுருபரர் ஆ) அதிவீரராம பாண்டியர் இ) கம்பர் ஈ) திருவள்ளுவர்
73) ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டதை வேறொருமொழியில்
வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர்
அ) அகத்தியலிங்கம் ஆ)
மணவை முஸ்தபா இ) கால்டுவெல் ஈ) மா பொ சி
74) ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் தொடர்பு
கொள்ளவும் மொழிபெயர்ப்பு அவசியம் என்றவர்
அ) மணவை முஸ்தபா ஆ)
அகத்தியலிங்கம் இ) மு.கு. ஜகந்நாதராஜா ஈ) பாவாணர்
75) மொழிபெயர்த்தல்
என்ற தொடரை தொல்காப்பியர்---------- குறிப்பிடுகிறார்.
அ) மரபியலில் ஆ)
கிளவியாக்கத்தில் இ) எழுத்தியலில் ஈ) தொடரியலியல்
76) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்’ என்னும்
குறிப்பு எச்செப்பேட்டில் உள்ளது?
அ)உத்திரமேரூர் செப்பேடு ஆ)
ஆதிச்சநல்லூர் செப்பேடு
இ) சின்னமனூர் செப்பேடு ஈ) வேள்விக்குடி
செப்பேடு
77)சங்க
காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு
அ) ஆதிச்சநல்லூர்
செப்பேடு ஆ) சின்னமனூர் செப்பேடு
இ) மாமல்லபுரத்து
செப்பேடு ஈ)
வேள்விக்குடி செப்பேடு
78) வடமொழிக்
காப்பியத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியத்தைத் தேர்ந்தெடு
அ) பெரியபுராணம் ஆ)
சிலப்பதிகாரம் இ) கலிங்கத்துப்பரணி ஈ) சீவக சிந்தாமணி
79. வால்காவிலிருந்து
கங்கை வரை என்ற நூலை இயற்றியவர்------------
அ) ரவீந்திரநாத் தாகூர் ஆ)
அமர்சிங் இ) ராபின் ஷர்மா ஈ) ராகுல் சாங்கித்யாயன்
80. Hundred
rail sleepers were washed away என்ற தொடரின் சரியான மொழிபெயர்ப்பு
அ) தொடர்வண்டியில்
உறங்கிக்கொண்டிருந்த 100 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
ஆ) தொடர்வண்டியில் 100 பேர்
துணித்து வைத்தனர்
இ) தண்டவாள
குறுக்குக்கட்டைகள் அடித்துச்செல்லப்பட்டன
ஈ) இறங்கியவர்கள் துணி
துவைத்தனர்
81. கருத்துப்
பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு -----------எனப்படுகிறது
அ) பயன்கலை ஆ)
நுண்கலை இ) திறன்கலை ஈ)
மொழிகலை
82. ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்‘ என்று
முழங்கியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) நாமக்கல் கவிஞர்
11. வேப்ப மாலையினை அணிந்தவன்----------
அ) சோழன் ஆ) பாண்டியன் இ) பல்லவன்
ஈ) சேரன்
83. சொல்
நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் - யார், யாரிடம் கூறியது?
அ) இறைவன்
இடைக்காடனாரிடம் ஆ) இடைக்காடனார், பாண்டியனிடம்
இ) பாண்டியன், இறைவனிடம்
ஈ) இடைக்காடனார், இறைவனிடம்
84 முரசுக்
கட்டிலில் கண்ணயர்ந்தவர்---------, அவருக்கு கவரி வீசியவர்----------
அ) மோசிகீரனார், பெருஞ்சேரல்
இரும்பொறை ஆ) பெருஞ்சேரல் இரும்பொறை, மோசிகீரனார் இ) கபிலர்,
இடைக்காடனார் ஈ) இறைவன், பாண்டியன்
85. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும்
எழுதுவதும்--------- ஆகும் .
அ) வழு ஆ) வழாநிலை இ) வழுவமைதி ஈ) இயல்பு வழக்கு
86. இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும்
------------ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) இயல்பு வழக்கு ஈ) தகுதி வழக்கு
87. வழு--------வகைப்படும் அ) 9 ஆ) 8 இ)
6 ஈ) 7
88. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது--------
அ) திணை வழுவமைதி ஆ)
பால் வழுவமைதி இ) இட
வழுவமைதி ஈ) கால வழுவமைதி
89. ’கத்துங்
குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்
‘ என்ற வரிகள் பாரதியார் கவிதையில் இடம் பெற்றிருப்பது
அ) கால வழுவமைதி ஆ) மரபு வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ) திணைவழுவமைதி
90. பசுமையான--யைக்--கண்ணுக்கு நல்லது தொடருக்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தேர்க
அ) மரம்; குளிர்ச்சி ஆ)
பூக்கள்; காட்சி
இ) காட்சி; காணுதல் ஈ) புல்வெளி கண்டு
91. அம்மா சொன்னார்
– இத்தொடரில் அடிக்கோடிட்ட வினைமுற்றுக்கான வேர்ச்சொல்
அ) அம்மா ஆ) சொன்ன இ) சொல் ஈ)
சொல்ல
92. ஒடிய அருணா
– இப்பெயரெச்சத் தொடருக்கான எழுவாய்த்தொடர்
அ) ஓடும் அருணா ஆ) ஓடி விட்டாள் இ) ஓடப் பார்த்தாள் ஈ) அருணா ஓடினாள்
93.
செழியன்
வந்தது என்பது
அ) திணைவழு ஆ) இடவழு இ) மரபுவழு ஈ) பால் வழு
94. என்
அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது
அ) மரபு வழுவமைதி ஆ) திணை வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ)
இடவழுவமைதி
95.
அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் என்பது
அ) கால வழுவமைதி ஆ) திணை வழுவமைதி இ) பால் வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
96. திருவிளையாடல்
புராணத்தில் இடம்பெறாத காண்டம்
அ) பாலகாண்டம் ஆ) மதுரைக் காண்டம் இ) கூடற்
காண்டம் ஈ)
திருவாலவாய்க் காண்டம்
97.
அமர்ந்தான் சொல்லுக்கான சரியான பகுபத உறுப்பிலக்கணத்தைத் தேர்க
அ) அமர்+த்(ந்)+த்+ஆன் ஆ) அமர்ந்+த்)+த்+ன் இ) அமர்+ந்(த்)+த்+ஆன் ஈ)
அமர்ந்+த்(ந்)+த்+ன்
98. திருவிளையாடற் புராணத்தை
இயற்றியவர்
அ) சேக்கிழார் ஆ) குலேச பாண்டியன்
இ) பரஞ்சோதி முனிவர்
ஈ) இடைக்காடனார்
99. பயன்கலை எது?
அ) ஓவியக்கலை ஆ) நடனக்கலை இ) மொழிபெயர்ப்பு
ஈ) சமையற்கலை
100. கதலி என்ற சொல் குறிப்பது------
அ) நடனம் ஆ) தேங்காய் இ) பாக்கு ஈ) வாழை
👉 வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
👉 விடைக்குறிப்பைப் பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி