9 TH STD TAMIL QUARTERLY EXAM ANSWER KEY CHENNAI DISTRICT

  9 ஆம் வகுப்பு - தமிழ்

காலாண்டுத்தேர்வு வினாத்தாள் & விடைக்குறிப்பு

சென்னை & செங்கல்பட்டு மாவட்டம்

10ஆம் வகுப்புதமிழ்

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காலாண்டுப் பொதுத்தேர்வு – 2026

உத்தேச விடைக்குறிப்பு

                                  பகுதி – I                                                                  15×1=15

1.  ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

2.  ) சிற்றிலக்கியம்.

3.  ஈ) புலரி

4.  ) வளம்.

5.  அ) ஆராயாமை, ஐயப்படுதல்

6. ஆ) காரியவாகுபெயர் 

7.  முதுமையில் இன்பம். ( சரியான விடை தரப்படவில்லை. 4 தெரிவுகளுமே தவறு)

8. இ) மலையாளம்

9. இ) பக்கம்

10. ) எண்ணும்மை.

11.  ) கரிகாற் சோழன்.

12.  ) புறநானூறு.

13. இ) மல்லல் - செல்லும்

14. ) பாண்டியன் நெடுஞ்செழியன்.

15. ) குடபுலவியனார்.

பகுதி – II     பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்                                     4×2=8

16 ()  நாம் வாழும் தமிழ்நாடு எந்தப் பகுதியில் உள்ளது?

    ()  காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு எது?

17.  இரண்டிரண்டு அடிகளில் எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

18.  மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, எருது கட்டி, சல்லிக்கட்டு.

19.  செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

20.  இடம்: மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது.

பொருள்: விழா நடக்கும் ஊரில் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள். முரசறைவோன் விழாக்கள் நிறைந்த மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புமாறு அறிவிக்கிறான்.

21. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
      தகுதியான் வென்று விடல்.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்                                   5×2=10

22

()  மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

() பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

23.  “கார் அறுத்தான்.” “கார்என்னும் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளைந்த பயிருக்கு ஆகி வருவதால் இது காலவாகுபெயர் ஆகும்.

24. நிறுத்தல் = நிறுத்து + தல். “நிறுத்து” – பகுதி; “தல்” – தொழிற்பெயர் விகுதி.

25.  வாளைஆயுதம்; வாழைமரம். எடுத்துக்காட்டு: போர்வீரன் வாளைச் சுழற்றிப் பயிற்சி செய்தான். கோவில் திருவிழாவில் வாழைமரம் கட்டுவார்கள்.

26. Vowels – உயிரொலிகள். Water Management – நீர் மேலாண்மை.

27. அளபெடை இரண்டு வகைப்படும். அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

28. () எழுதி, எழுதி. () கால், கால்.

பகுதி – III : பிரிவு – 1

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                     2×3=6

29.  ) உலகச் சுகாதார நிறுவனம் உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரிக்கிறது.
) ஏரிகளைத் தூர்வாரி பராமரிப்புப் பணிகளைச் செய்தல் வேண்டும்; இதனை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
) நிலத்தடி நீர்வளத்தையும் நீர்நிலைகளையும் பாதுகாத்து, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகளில் மக்கள் உடனடியாக ஈடுபட வேண்டும்.

30. மூன்றுதமிழ்; மூணுமலையாளம்; மூடுதெலுங்கு; மூருகன்னடம்; மூஜிதுளு.

31. தமிழக உழவர்கள் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவர். தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டுவர். தங்கள் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதல்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                    2×3=6

32.  

·        திருநாட்டில் உள்ள நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கின.

·        அதைக் கண்டு அஞ்சிய வாளை மீன்கள் துள்ளிக்குதித்தன.

·        இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றுள்ளது.

33.

·        தோழி ஒருத்தி மற்றொரு தோழியைப் பொழுது விடிந்துவிட்டது, எழுந்திரு என்கிறாள். மற்றொரு தோழி அனைவரும் வந்துவிட்டனரா எனக் கேட்கிறாள்.

·        மற்றொருத்தி கேள்விக்கு எண்ணிப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும் என்கிறாள்.

·        இன்னொருத்தி கண்களை மூடி நோன்பு நேரத்தை வீணடிக்காதே என்கிறாள். இறைவனைப் புகழ்ந்து பாட வா என்று அழைக்கிறாள்.

34 .அ)

நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே.

()

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்-அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்

பிரிவு –3

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                    2×3=6

35. உவமையணி. தம்மைத் தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவரைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பு எனக் கூறப்பட்டுள்ளது.

36.  எண்ணலளவை ஆகுபெயர் – “ஒன்று பெற்றார் ஒளிமயம்”;

      எடுத்தலளவை ஆகுபெயர் – “இரண்டு கிலோ கொடு”;

      முகத்தலளவை ஆகுபெயர் – “அரை லிட்டர் வாங்கு”;

      நீட்டலளவை ஆகுபெயர் – “ஐந்து மீட்டர் வெட்டினார்”.

37.  அளபெடை என்பது செய்யுளில் ஓசை நிறைவு பெறுவதற்காக எழுத்து நீண்டு ஒலித்தல். இது இரண்டு வகைப்படும்: உயிரளபெடை, ஒற்றளபெடை.

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் மட்டும் விடையளிக்கவும்                                                     5×5=25

38 ()

·        முத்தமிழாய் பிறந்தது; மூன்று பாவினங்களால் வளர்ந்தது;

·        சிற்றிலக்கியங்களைத் தந்தது;

·        தெளிந்த அறிவினால் முத்திக் கனியைத் தந்தது;

·        நாளும் நலமுடன் வளர்ந்தது.

38 ()

·        திருநாட்டில் காவிரி வளத்தைத் தருவதற்காகக் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

·        வயல்களில் களை எடுக்கும் உழவர்களின் கால்கள் சங்குகளால் இடறுகின்றன.

·        குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன.

·        நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால் அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்கின்றன.

·        நெற்கட்டுகளும் மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன. பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து வளர்ந்துள்ளன.

39 (). நண்பர் பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எஸ். இராமகிருஷ்ணனின்கால் முளைத்த கதைகள்நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

நண்பனுக்குக் கடிதம்

                                                                                                                                           திருத்தணி,
                                                                                                                              09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளைஅறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

39 ()அனுப்புநர், பெறுநர், ஐயா, பொருள், கடிதத்தின் உடல், இப்படிக்கு, இடம், நாள் என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

40. உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

41. கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலகப் பணம் பெறும் படிவத்தை நிரப்புக.

42 (). நீங்கள் பாராட்டுப் பெற்ற சூழல்களில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

1. தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றபோது.

2. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றபோது.

3. கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றபோது.

4. பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்றபோது.

5. பிறருக்கு உதவி செய்து பாராட்டுப் பெற்றபோது. (மாதிரி விடைகள்)

42 ().

1. ஒரு நாட்டின் பண்பாடு அதன் மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் குடிகொண்டுள்ளதுமகாத்மா காந்தி.
2. மக்களின் கலை அவர்களின் உள்ளங்களுக்கு உண்மையான கண்ணாடியாகும்ஜவஹர்லால் நேரு.
3. அன்பும் தர்மமும் இல்லாததே மிகப்பெரிய பிரச்சினையாகும்அன்னை தெரசா.
4. உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்.பி.ஜே. அப்துல் கலாம்.
5. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்சிவ் கேரா.

                       பகுதி – V : 8 மதிப்பெண் வினாக்கள்     3×8=24

43 ().

·        தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண, இலக்கிய வளமும் உடையது.

·        தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது.

·        பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது. ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

·        இந்திய நாட்டின் பல பழங்காலக் கல்வெட்டுகளில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.

·        இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது.

43 ()

·        நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்குப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

·        நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.

·        மழைநீரைப் பயன்படுத்தும் முறையை அறிய வேண்டும். இளம் தலைமுறையினருக்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

44 (). “தாய்மைக்கு வறட்சி இல்லை

·        சு. சமுத்திரம் எழுதிய இக்கதையில், வறுமையிலும் தன் அன்பும் தன்னலமற்ற தன்மையும் குறையாத ஒரு ஏழைத்தாயின் உயர்ந்த மனிதநேயம் வெளிப்படுத்தப்படுகிறது.

·        மரண அபாயம் வந்தபோதும் கணவனை காப்பாற்றுகிறாள். பசிக்குட்டிகளுக்குள் உணவைப் பகிரும்போது அன்பும் கண்டிப்பும் கலந்த தாயாக இருக்கிறாள்.

·        அவளது தாய்மை உணவுப் பகிர்விலும் நாய்க்குட்டிகளைப் பராமரிப்பதிலும் வெளிப்படுகிறது.

·        தன்னால் பெற்றவரல்லாதவர்களையும் தாயன்புடன் பராமரிக்கிறாள். தாய்மை வறுமையைக் கடந்து மகத்துவமடைகிறது என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

44 (). “தண்ணீர்

·        நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் சமூக அவலங்கள், மானுடப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர்.

·        தண்ணீர்சிறுகதை குடிநீரற்ற ஊரின் அவலத்தை எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் குடங்களுடன் தொலைதூரம் சென்று நீர் எடுத்து வந்தனர்;

·        கிணற்று நீரும் உவர்ப்பாக இருந்தது. தினமும் வரும் பயணிகள் இரயிலில் தண்ணீர் கிடைக்கும் என்பதால் மக்கள் இரயில் நிலையத்துக்கு ஓடினர்.

·         இளம்பெண் இந்திராவும் தண்ணீர் பிடிக்க இரயிலில் ஏறினாள்; இரயில் நகர்ந்தபோதும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் அவள் இராமநாதபுரம் வரை சென்றுவிட்டாள்.

·         பின்னர் குடத்துடன் திரும்பி வந்து, நாளைக்கு குடிக்க என்ன செய்வது எனக் கேட்டாள்.

·        தண்ணீரின் தேவையையும் நீர் இல்லாத ஊரின் அவலத்தையும் இக்கதை உணர்த்துகிறது.

45 ().

முன்னுரை:

நீர் இன்றி உலக வாழ்க்கை அமையாது. திருவள்ளுவர் நீரின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார்.
நீரின் இன்றியமையாமை:

உணவு உற்பத்திக்கு நீரே அடிப்படை. மழை மண்ணை வளப்படுத்தி பயிர்களை விளைவிக்கிறது. ஏரி, குளம், வாய்க்கால் வழியாகப் பாசன வசதி ஏற்படுகிறது.
நீர்நிலைகள்:

ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
நீர் பற்றாக்குறை:

நிலத்தடி நீர் குறைதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகும்.
நீரைச் சேமித்தல்:

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; மழைநீரைச் சேமிக்க வேண்டும்; நீர்நிலைகளைத் தூர்வாரிப் பாதுகாக்க வேண்டும்.
முடிவுரை:

எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக நீரைப் பாதுகாப்போம்; நீர் மேலாண்மையை கட்டமைப்போம்; மழைநீர் சேகரிப்போம்.

45 () முன்னுரை:

சுத்தம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியம்: உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நோய்களைத் தடுக்கும். தினமும் குளித்து, கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
உணவுத் தூய்மை:

தூய்மையான உணவையும் குடிநீரையும் பயன்படுத்த வேண்டும். உணவை மூடி வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் தூய்மை:

வீடு, பள்ளி, தெரு ஆகிய இடங்களில் குப்பைகளைச் சிதறவிடாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும். மட்கும், மட்காத குப்பைகளைப் பிரிக்க வேண்டும்.
மனத்தூய்மை:

நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதே மனத்தூய்மை.
சுத்தத்தின் அவசியம்:

தூய்மையான சூழல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. எனவே அனைவரும் தூய்மையைப் பேண வேண்டும்.
முடிவுரை:

சுத்தம் சோறு போடும்என்ற பழமொழியை நினைவில் கொண்டு சுத்தமாக வாழ்வோம்; நலமாக வாழ்வோம்.

 👉 விடைக்குறிப்பைப் பதிவிறக்க



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை