8 TH STD QUARTERLY EXAM MODEL QUESTION PAPER-1

 


காலாண்டுப் பொதுத்தேர்வு-மாதிரி வினாத்தாள்-1

8.ஆம் வகுப்பு          தமிழ்         மதிப்பெண்கள்:100         கால அளவு: 2.30 மணி நேரம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

1. அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                             10x1-10

1. மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல்        

அ) வைப்பு  ஆ) கடல்  இ) பரவை  ஈ) ஆழி

2. பெரிய கப்பல்கள் -----மீது செல்லும்.                

அ) ஊழி  ஆ) ஆழி   இ) நாழி  ஈ) தாழி

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

அ) பாரதிதாசன்  ஆ) தந்தை பெரியார்  இ) வ.உ.சிதம்பரனார்  ஈ) பெருஞ்சித்திரனார்

4. கழுத்தில் சூடுவது.             

அ) தார்  ஆ) கணையாழி  இ) தண்டை  ஈ) மேகலை

5. கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கிழிந்துஎழில்  ஆ) கிழிந்தெழில்  இ) கிழிந்தொழில் ஈ) கிழிந்தழில்

6. சமையலறையில் செலவிடும் நேரம் ----- செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காகாக ஈ) உணவுக்காக

7. புகழாலும், பழியாலும் அறியப்படுவது

அ) அடக்கமுடைமை  ஆ) நாணுடைமை  இ) நடுவு நிலைமை ஈ) பொருளுடைமை

8. நம்மை ------ பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அ) இகழ்வாரைப் ஆ) அகழ்வாரைப்  இ) புகழ்வாரைப் ஈ) மகிழ்வாரைப்

9. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது    

அ) விளக்கு  ஆ) கல்வி இ) விளையாட்டு  ஈ) பாட்டு

10. என் நண்பர் பெரும்புலவராக இருந்த போதும் இன்றி வாழ்ந்தார்.

அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம்  ஈ) வெகுளி

ஆ) பொருத்துக                                                                            4x1=4

11. க், ங்  - நாவின் இடை, அண்ணத்தின் இடை

12. ບໍ່, ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப் பல்லின் அடி

13. ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி

14. த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

11. எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                        6x2=12

15. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?  

16. இரட்டுற மொழிதல் அணி என்பது யாது?

17. ஓவிய எழுத்து என்றால் என்ன ?  

18. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

19. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?20. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

21. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

22. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில், போன்றது?

23. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?

III எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                       4x2=8

24. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?  

25. மயங்கொலி எழுத்துகள் யாவை?

26. வினைமுற்று என்றால் என்ன?   

27. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் எவை?

28. எழுத்துகளின் பிறப்பு பிறப்பு என்றால் என்ன?   

 29. பிறிது மொழிதல் அணி என்பது யாது?

IV. அடிபிறழாமல் எழுதுக                                                                   4+2=6

30, "வாழ்க நிரந்தரம்" - எனத் தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை எழுதுக.

31. "விலங்கொடு" எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக

V எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை விடையளி                                  4x4=16

32.தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.33.ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?

34. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

35. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

36. தமிழ் தமிழ் வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக.

37. நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

VI விரிவான விடையளி                                                                     2x6-12

38. அ) எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.                                    (அல்லது)

ஆ) தமிழர் மருத்துவத்தின் சிறப்புகள எழுதுக. சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து

39. அ) காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.     (அல்லது)

ஆ) இயற்கையை போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

VII எவையேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி                                                  1x8=8

40. அ) 'வெட்டுக்கிளியும், சருகுமானும்' கதையை சுருக்கி எழுதுக.                      (அல்லது)

ஆ) தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுக்க.

VIII கட்டுரை ஒன்றுக்கு மட்டும் விடையளி                                                     1x8=8

41. அ) நூலகம்    (அல்லது)    ஆ) நான் விரும்பும் கவிஞர்

IX கடிதம் ஒன்றுக்கு மட்டும் விடையளி                                                        1x8=8

42.அ) கலைத்திருவிழாப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற தோழியைப் பாராட்டிக் கடிதம் எழுதுக                                                                                   (அல்லது)

ஆ) விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

X அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                      8x1=8

43. ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக. - ஆறு

44. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக. அ) பேசினாள் ஆ) சென்றனர்

45. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) பறவை வானில் (பறந்தது / பரந்தது)  ஆ) வீட்டு வாசலில் இட்டனர். (கோலம் / கோளம்)

46. தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

அ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.  ஆ) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்:

47. பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது

48. மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரிலுள்ள வினைமுற்றை எடுத்து எழுதுக.

49. பொருள் வேறுபாடு உணர்க. ஏரி, ஏறி

50. கலைச்சொல் - எழுதுக. அ) Translation ஆ) Punctuation

PDF DOWNLOAD

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை