8.ஆம் வகுப்பு - தமிழ்
அலகுத்தேர்வு இயல்-1
8. ஆம் வகுப்பு – தமிழ் அலகுத்தேர்வு இயல்-1 மொத்த மதிப்பெண்கள் : 50
பலவுள் தெரிக. 8×1=8
1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக்
குறிக்கும் சொல்
அ)
வைப்பு
ஆ)கடல் இ) பரவை ஈ) ஆழி
2.
அறிந்தது+அனைத்தும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ)அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
3.
பெரிய கப்பல்கள்
------- மீது செல்லும்.
அ)
ஊழி ஆ) ஆழி இ) நாழி ஈ) தாழி
4.
'முத்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) மூன்று + தமிழ் ஆ) முத்து + தமிழ் இ) மு +தமிழ் ஈ) முத் + தமிழ்
5.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய
தமிழ் எழுத்து அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து ஆ)
வட்டெழுத்து இ)
சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
6. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்
பணியில் ஈடுபட்டவர்
அ) பாரதிதாசன் ஆ)
தந்தை பெரியார் இ)
வ.உ.சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்.
7. இதழ்களைக்
குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ)
உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆ
8. நாவின்
நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ)
க், ங் ஆ) ச், ஞ்
இ) ட், ண் ஈ) ப், ம்
கோடிட்ட இடங்களை
எழுதுக
4×1=4
9.
வல்லின
எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
10.
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
11. கடைச்சங்க
காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ------- எனஅழைக்கப்பட்டன.
12. எழுத்துகளில்
புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் -------
பொருத்துக
4×1=4
13.
க், ங் – அ) நாவின் இடை,
அண்ணத்தின் இடை
14.
ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின்
அடி
15.
ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின்
அடி
16.
த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின்
நுனி
குறுவினா
(5 க்கு மட்டும்)
5×2=10
17.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது? 18.
இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?
19.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
20.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச்
சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
21.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
22. மெய்எழுத்துகள் எவற்றை இடமாகக்
கொண்டு பிறக்கின்றன?
23. எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
சிறுவினா (3 க்கு மட்டும்)
3×3=9
24.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை
குறித்து எழுதுக.
25.
தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
26.
ழகர, லகர, ளகர மெய்களின்
முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
27. ”வாழ்க நிரந்தரம்” எனத்தொடங்கும் தமிழ்மொழி
வாழ்த்துப் பாடலை அடிமாறாமல் எழுதுக
விரிவான விடையளி (2 க்கு
மட்டும்) 2×5=10
28. எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
29. தமிழில்
ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
30. ”நான் விரும்பும் தலைவர்”
என்ற தலைப்பில் பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக
குறிப்புகள்: முன்னுரை – பெயர்க்காரணம்
– பாரதிதாசனின் படைப்புகள்- தமிழ் உணர்வு- சமுதாய உணர்வு- முடிவுரை
விடையளி 5×1=5
31.
தொகைச்சொற்களை விரித்தெழுதுக. அ) முத்தமிழ்
ஆ) முச்சங்கம்
32.
பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்து எழுதுக
அ) மரம் ஆ) சொல்
33. ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய
சொற்களை உருவாக்குக.
தேன்
மலர்
செம்மை
சிட்டு
கனி
குருவி
இலை
காய்
கூடு
முட்டை
மரம்
34.
சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
அ. வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ்
எழுத்து வடடெழுத்து எனப்படும்.
ஆ. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி
வாழட்டும்.
35 கலைச்சொல் எழுதுக
அ) Consonant ஆ)
Vowel
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி