SECOND REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY TIRUPPATHUR DISTRICT

 


இரண்டாம் திருப்புதல் தேர்வு-2025 திருப்பத்தூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஆ. மணிவகை

1

2.     

ஆ. எழுவாய்த்தொடர்

1

3.     

அ. கணையாழி

1

4.     

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

5.     

. திணை வழுவமைதி

1

6.     

அ. பாரதியார்

1

7.     

. சிலப்பதிகாரம்

1

8.     

ஈ. கற்றல்  

1

9.     

ஈ. இளவேனில்

1

10.   

. கருணையன் ,எலிசபெத்துக்காக

1

11.    

இ. எழுவாய்த்தொடர்

1

12.   

அ. சிலப்பதிகாரம்

1

13.   

. நெய்பவர்

1

14.   

இ. சந்தனம்,அகில்

1

15.   

ஆ. எண்ணும்மை

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

·       காற்று உயிருக்கு நாற்று

·       நட்டு வளர்ப்போம்! நட்டு வளர்ப்போம்! வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்!

2

17

அ. கலைஞர் எழுதிய ‘பழநியப்பன்’ எனும் முதல் நாடகம் எப்போது அரங்கேற்றப்பட்டது?

ஆ. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

2

18

குலேசபாண்டியன், இடைக்காடனார்

2


19

சோலை, காடு, ஏரி, குளம், வயல்

2


20

இல்லை,  நன்றாக உபசரிக்க வேண்டும்

2

21

அருமை  உடைத்தென் றசாவாமை  வேண்டும்

பெருமை முயற்சி  தரும்.

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

2

23

அ. உள்ளளவும் நினை  ஆ. மூன்று நாளுக்கு

2

24

வருக - வா(வரு) + க

வா - பகுதி

வரு எனத் திரிந்தது விகாரம்

- வியங்கோள் வினைமுற்று விகுதி

2

25

அ. வளைகாப்பு  ஆ. விருந்தோம்பல்

2

26

ü        பல கை - தொடர்மொழி

ü  பலகைதனிமொழி

ü  எனவே பொதுமொழி

2

27

. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென்று நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது

. எழுத்தை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்த கலைஞர், தமது எண்ணங்களை எழுத்து வழியாகக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.

2

28

# உழவர் வயலில் உழுதனர்.

          # நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

30

. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது

. போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்

3

31

ü  வீட்டுத்தூய்மை

ü  மழைநீர் சேகரிப்பு

ü  பொதுப்போக்குவரத்து

ü  வீதி தூய்மை

ü  மரங்களை வளர்த்தல்

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

v  மயில்கள் ஆடுகின்றன.

v  தாமரைவிளக்கு.

v  குவளை - கண்

v  அலைகள் - திரைச்சீலைகள்

3

33

ü  உயிர்பிழைக்கும் வழி

ü  உறுப்புகள் இயங்கும் முறை

ü  உணவினத் தேடும் வழி

3

34

 

.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.    குட்டி- மரபு வழுவமைதி

2.   இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி

3.   இதோ சென்றுவிட்டேன்கால வழுவமைதி

4.   அவனைபால் வழுவமைதி                           

3

36

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைவேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்.

v  உவமேயம்செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபுபோலும்

         இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

3

37

சீர்

அசை

வாய்பாடு

ஆள்வினையும்

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

ஆன்ற

நேர்+நேர்

தேமா

அறிவு

நிரை+நேர்

புளிமா

மெனவிரண்டின்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

நீள்வினையால்

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

நீளும்

நேர்+நிரை

கூவிளம்

குடி

நிரை

மலர்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  பாடலை மதிக்கவில்லை

ü  புலவர் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் தென்கரையில் தங்கினார்.

ü  மன்னன் இறைவனைக் காணச்சென்றார்

ü  இறைவன் தவறைச் சுட்டிக்காட்டினார்.

ü  மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 (அல்லது)

)

v  கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்

v  கருணையன் தாயை இழந்து வாடினான்

v  கருணையனின் செய்வதறியாது தவித்தான்          

v  பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன    

5

39

.

மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

காந்தி தெரு.

10.06.2025

அன்புள்ள நண்பன் அமுதனுக்கு,

          வணக்கம். நான் நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில் அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய்.

      தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்' பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய். உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

      இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு.

உன் அன்புள்ள நண்பன்,

உறைமேல் முகவரி

பெறுநர்

    ஆ. தமிழ்ச்செல்வன்.

    30,அன்னை இல்லம்.

    கபிலர் தெரு.

    கோயமுத்தூர் 641 0014

மா.குறளரசன்.

) பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

உறைமேல் முகவரி:

பெறுநர்

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

செ.தமிழரச

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

) பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

)   1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

5

                                                           

                                                                  பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

. முன்னுரை:

          எங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நான் செய்த விருந்தோம்பலை அழகுற காண்போம்

நான் செய்த விருந்தோம்பல் :

v  விருந்தினரை வரவேற்றேன்

v  கலந்துரையாடினேன்

v  விருந்து உபசரிப்பு செய்தேன்

v  நகர்வலம் சென்றோம்           

v  இரவு விருந்துஅளித்தேன்

v  பிரியா விடை அளித்தேன்

முடிவுரை:

எங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நான் செய்த விருந்தோம்பலை அழகுற கண்டோம்.

) முன்னுரை           

            மாணவப்பருவமும், நாட்டுப்பற்றும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாணவப்பருவமும், நாட்டுப்பற்றும்:

v  நாட்டு விழாக்கள் மூலம் நாட்டுப்பற்றைக் காட்ட வேண்டும்.

v  விடுதலைப் போராட்ட வரலாற்றினை அறிந்துகொள்ள வேண்டும்.

v  நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு கொள்ள வேண்டும்.

v  சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

முடிவுரை:

மாணவப்பருவமும், நாட்டுப்பற்றும் பற்றி இக்கட்டுரையில் கண்டோம்.

8

44

முன்னுரை:

          புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டையும் இங்கு காண்போம்

கனமழை:

பாண்டியன் பயணம் செய்த கப்பலில், வெயில் மறைந்து மழை பெய்யத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் மழை பெய்தது.

கப்பல் நிலை:

v மழை பெய்வது அதிகரித்தது .

v கப்பல் தள்ளாடியது.

v மலைத்தொடர் போன்ற அலைகள் வீசின.

பயணிகளின்:             

v  பாண்டியன் கடலை பார்த்து வியந்து நின்றான்.

v  கப்பல் தடுமாறிச் சென்றது.

v  பயணிகள் பயந்தனர்

முடிவுரை:

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டையும் இங்கு காண்போம்

) இராமானுசர் நாடகம்

 முன்னுரை:

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சிதலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில்நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர்அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தண்டும் கொடியுமாக:

    திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும்கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்திபூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர்கூரேசர்முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,

ஆசிரியரின் கட்டளை:

      பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் "திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக் கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.

திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:

     திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டுஉரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை கூறினார்கள்.

குருவின் சொல்லை மீறுதல்:

      குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிடநான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.

குருவின் ஆசி:

       இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர்அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.

முடிவுரை:

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர்தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்

8

45

) முன்னுரை:

வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி!

மக்கள் மனதில் நிலையாய் நிற்பவர் யாரோ?”

     படிப்பால் உயர்ந்தோர், உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா?

பிறப்பும் இளமையும்:

விருதுப்பட்டிக்கு இவரை விட பெரிய விருது தேவையா?”

     விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15 -7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்:

      சுதந்திரப்போராட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.

தூய்மையும் எளிமையும்:

எளிமையின் இலக்கணம்இவர்

மனதில் கொண்டது பெருங்குணம்

     பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத் தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக  திகழ்ந்தவர் காமராஜர்,

மக்கள் பணியே மகத்தான பணி:

     1954 இல்முதல்வராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள் அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.

முடிவுரை:                         

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவன்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

      'கல்விக் கண் திறந்த காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது "ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற தலைவர் இவரே.                                               (அல்லது)

) முன்னுரை:

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

        என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உழவுத் தொழிலும் உழவர்களும்:

நித்தமும் உழவே அவன் நினைப்பு

              நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

      உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.

தமிழர் வாழ்வில் உழவு

தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு

        உழவன் இன்றி உலகோர்க்கு ஏது உணவு?”

       பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

                 உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்'

     என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன

உழவின் சிறப்பு:

       உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

        உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

முடிவுரை:                                                                                             

      'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.

8

 பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை