10 TH STD TAMIL ONE MARK QUESTION BANK ANSWER KEY 2025-2026

 

10.ஆம் வகுப்பு தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடை - தேர்வு தொகுப்புகள்

தேர்வு-1

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை-------

அ) 34   ) 25    இ) 24    ஈ) 54

2. கல்வியும் , செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர்

அ) இளங்கோவடிகள்  ஆ) திருவள்ளுவர்   இ) கம்பர்  ஈ) சேக்கிழார்

3. ”திராவிட நாடுஎன்ற இதழின் ஆசிரியர்

அ) தந்தை பெரியார் ஆ) கலைஞர் மு.கருணாநிதி   இ) அறிஞர் அண்ணா  ஈ) பாவலரேறு

4. கருவியும்  காலமும்  செய்கையும்  செய்யும்

   அருவினையும் மாண்ட தமைச்சு  - இத்திருக்குறளில் வந்த சீர் மோனைகள்

அ) கருவி-அருவினை ஆ) கருவியும்- காலமும் இ) காலமும்- செய்கையும்  ஈ) மாண்டது -அமைச்சு

5. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் எனக் கூறும் நூல் எது?

அ) தென்றல் விடு தூது ஆ) சிலப்பதிகாரம்  இ) மணிமேகலை  ஈ) புறநானூறு

6. வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்

அ) கமலாயன் ஆ) கண.முத்தையா இ) கலைஞர் கருணாநிதி  ஈ) பாரதியார்

7. நன்மொழி என்பது

அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  ஈ) உம்மைத்தொகை

8. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல்  ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

9. வினையே,பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது……..                      

) தொழிற்பெயர்  ) வினையாலணையும்பெயர்  ) சினைப்பெயர் ) காலப்பெயர்

10. ”இஸ்மத் சன்னியாசிஎன்ற  பாரசீகச் சொல்லுக்கு----என்று பொருள்

அ) தூய ஆவி ஆ) தூய யோகி இ) தூய துறவி  ஈ) தூய கர்மா

11. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது.     அ) சுட்டி ஆ) கிண்கிணி  இ) குழை  ஈ) சூழி

பாடலைப் படித்துப் பின் வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா.

12. நீபவனம் என்பதன் பொருள்      

அ) பாலைவனம்  ஆ) நீண்ட வனம் இ) மலர்வனம் ஈ) கடம்பவனம்

13. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

அ) நீதி வெண்பா  ஆ) கம்பராமாயணம்  ) திருவிளையாடற் புராணம்  ஈ) மணிமேகலை

14. இப்பாடலின் ஆசிரியர் யார்?

) பரஞ்சோதி முனிவர் ஆ) குலசேகர ஆழ்வார் இ) செய்குதம்பிப் பாவலர் ஈ) இளங்கோவடிகள்

15. கண்டாய் என்பது-----வினைமுற்று                                                                

அ) வியங்கோள் ஆ) முன்னிலை பன்மை  ) முன்னிலை ஒருமை) ஏவல்

தேர்வு-2

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                          15×1=15

1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி  ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

2 . எழிலன் படித்தான் என்பது…….மொழி

) தொடர்மொழி  ) தனிமொழி  ) பொதுமொழி  ) மூவகைமொழி

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசை  ஆ) முன்பின்  இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப் பறக்கல்

4. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

5. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடி மகிழும் பூவைத் தேர்க.

அ) தும்பைப் பூ   ஆ) கரந்தைப்பூ  இ காஞ்சிப்பூ   ஈ) வாகைப்பூ

6. செங்கீரைப்பருவத்துக்குரிய மாதங்கள்     அ) 7-8   ஆ) 5-6   இ) 7-9  ) 11-12

7. நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்

    நாள்தோறும் நாடு கெடும்.        குறளில் உள்ள சீர் மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நாடி முறைசெய்யா   ஆ) நாள்தொறும் – மன்னவன்  

இ) நாள்தொறும் கெடும்    ஈ) நாள்தொறும் நாடி

8. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

) உழவு, மண், ஏர், மாடு  ஆ) மண், மாடு, ஏர், உழவு 

இ) உழவு, ஏர், மண், மாடு   ஈ) ஏர், உழவு, மாடு, மண்

9. ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்---------எனப்படும்

) நன்மொழி   ) வாய்ச்சொல்   ) முகமன்   ) நல்லுரை

10. மேன்மை தரும் அறம் என்பது-

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.

11. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

     மாணவனுக்கு வகுப்பது பரணி" - எண்ணுப் பெயரின் தமிழ் எண்ணைத்  தேர்க

) ரு00    ) 00    ) 00   ) 000

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

          "வண்ணமும் கண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்:

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு துண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"

12. பாடலடிகள் இடம்பெற்ற நூல் அ)நற்றிணை ஆ)சிலப்பதிகாரம்)கம்பராமாயணம் ஈ)குறுந்தொகை

13. இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள்

) துகிர், தூசு  ) ஆரம், பட்டு  ) சுண்ணம் , அகில்   ) பட்டு ,பருத்தி

14.வண்ணமும் கண்ணமும் இலக்கணக் குறிப்பு தருக.

அ) பண்புத்தொகை    ஆ) வினைத்தொகை   ) அடுக்குத்தொடர்   ) எண்ணும்மை

15. பாடலில் இடம்பெற்றுள்ள சிர்எதுகை, அடிஎதுகைச் சொற்கள்

) வண்ணமும் -கண்ணமும், பட்டினும் - கட்டு   ஆ) வண்ணமும் சாந்தமும், பகர்வனர் - பட்டினும்

) தூசும்- துகிரும் , ஆரமும்-அகிலும்      ) வண்ணமும்- அகிலும் , கட்டு- காருகர்

தேர்வு-3

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

அ) எந்+தமிழ்+நா  ஆ) எந்த + தமிழ் +நா   இ) எம் + தமிழ் +நா   ஈ) எந்தம் + தமிழ் +நா

2 . பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு

ஆ) கோடை -     2. தெற்கு

இ) வாடை -        3. கிழக்கு

ஈ) தென்றல்     4. வடக்கு

) 1.2.3.4  ) 3.1.4.2   ) 4.3.2.1   ) 3,4,1,2

3. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.

அ) கருணையன், எலிசபெத்துக்காக  ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக  ஈ) எலிசபெத், பூமிக்காக

4. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'

     மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

அ) திருப்பதியும் திருத்தணியும்  ஆ) திருத்தணியும் திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்  ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

5. மனைக்கிணறு,பொய்கை என்பன -----நிலத்துக்குரிய நீர்.

அ) மருதம்   ஆ) குறிஞ்சி  இ முல்லை   ஈ) நெய்தல்

6. ”இந்த மாறன் ஒருநாளும் பொய்கூறமாட்டான்என்பது---

அ) இடவழு   ஆ) திணை வழு   இ) இடவழுவமைதி  ) திணை வழுவமைதி

7. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

8. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளத்தைத் தேர்ந்தெடுக்க.

) நிலக்கரி   ) காற்று   ) பெட்ரோல்   ) டீசல்

9. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம் தொடருக்கேற்ற தலைப்பு

அ) காற்றின் பாடல் ஆ) நீரின் சிலிர்ப்பு  இ) மொட்டின் வருகை ஈ) உயிர்ப்பின் ஏக்கம்

10. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்

    பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

அ) உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்

இ) பேகன் கிள்ளிவளவன்  ஈ) நெடுஞ்செழியன்: திருமுடிக்காரி

11. உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று திருமந்திரம் குறிப்பிடுவது

) உணவு  ) உடை   ) உறையுள்  ) மூச்சுப்பயிற்சி

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

     காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி

     நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன்

     கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

     நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

12. பாடல் இடம்பெற்ற நூல்அ) பரிபாடல்  ) முத்தொள்ளாயிரம்  ) சிலப்பதிகாரம்  ) கம்பராமாயணம்

13. கொல் யானைஇலக்கணக்குறிப்பு

) உம்மைத்தொகை  ) எண்ணும்மை  ) பண்புத்தொகை  ) வினைத்தொகை

14. ”கிள்ளி என்பது யாரைக்குறிக்கும்?

) சேர மன்னன்  ) சோழ மன்னன்  ) பாண்டிய மன்னன்  ) பல்லவ மன்னன்

15. பாடலில் இடம்பெற்ற சீர் மோனையைத் தேர்ந்தெடுக்க

) நாவலோ நல்யானை  ) நாவலோ நாளோதை

 

 

தேர்வு-4

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. கீழ்காண்பவருள் எவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதென்று வள்ளுவர் கூறுகிறார்?

அ) வீரம் மிகுந்தவர்  ஆ) அன்புடையவர்  இ) நடுநிலையோடு இரக்கம் காட்டுபவர்  ஈ) பொருளுடையார்

2.கூற்று :வடமொழிக்குரிய இராமாயண,மகாபாரத தொன்மச்செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன

   காரணம் : பண்டைய தமிழ்மொழியில் மொழிபெயர்ப்பு இல்லை

அ) கூற்று தவறு , காரணம் சரி  ஆ) கூற்று , காரணம் இரண்டும் தவறு  

இ) கூற்று , காரணம் இரண்டும் சரி  ஈ) கூற்று சரி , காரணம் தவறு

3. ”பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகை பரமயோகிஎனும் தொடர் யாரைக்குறித்தது?

அ) குலேச பாண்டியன் ஆ) இறைவன்   இ) இடைக்காடனார்  ஈ) கபிலர்

4. கலைஞர் எழுதிய முதல் நாடகம்-------

அ) தூக்குமேடை ஆ) ராஜகுமாரி இ) பழநியப்பன்  ஈ) பராசக்தி

5. தாதுகு சோலை தோறும் சண்பகக்காடு தோறும்

    போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்இவ்வடிகளில் வரும் இயைபு நயம்

அ) தாதுகு-போதவிழ் ஆ) போதவிழ்-பொய்கை  இ) தடங்கள்- தோறும்  ஈ) தோறும் - தோறும்

6. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1931 ஆ) 1932  இ) 1934  ஈ) 1942

7. ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என வகைப்படுத்தப்படும் திணைகள்

அ) பொதுவியல், கைக்கிளை ஆ) பாடாண், பெருந்திணை 

இ) வெட்சி, கரந்தை  ஈ) கைக்கிளை, பெருந்திணை

8. பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் வெண்பாவகை

அ) நேரிசை வெண்பா  ஆ) இன்னிசை வெண்பா  இ) பஃறொடை வெண்பா ஈ) கலிவெண்பா

9. சரியானவற்றைப் பொருத்துக

i) தொலி – 1) பனையின் இளநிலை

ii) கழி  - 2) மிக மெல்லிய பழத்தோல் வகை

iii) காழ் – 3) கரும்பின் அடி

iv) மடலி – 4) தானியத்தைக் குறிக்கும் சொல்

அ) 2 , 1 , 3 , 4 ஆ) 2 , 4 , 3 , 1  ) 2 , 3 , 4 , 1  ) 2 , 3 , 1 , 4

10. கண்ணதாசன் தனது திரைப்படப்பாடல்கள் வழியே மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது

அ) இல்லறவியல் ஆ) அரசியல் இ) மெய்யியல்  ஈ) களவியல்

11. செங்கீரை ஆடும்போது சூழி எங்கு அசைந்தாடுவதாகக் குமரகுருபரர் கூறுகிறார்?

அ) தலை  ஆ) கால்  இ) இடை  ஈ) நெற்றி

பாடலைப் படித்துப் பின் வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று

உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்

12. இப்பாடலில் குறிப்பிடப்படும் இருநிலம் என்பதன் பொருள்      

அ) வானம், பூமி  ஆ) இரண்டு நிலங்கள் இ) பெரிய உலகம் ஈ) மருதம், நெய்தல்

13. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

அ) கனிச்சாறு  ஆ) கம்பராமாயணம்  ) திருவிளையாடற் புராணம்  ஈ) பரிபாடல்

14. தண்பெயல்- இலக்கணக்குறிப்பு

) ஆறாம் வேற்றுமைத்தொகை ஆ) பண்புத்தொகை) வினைத்தொகை ஈ) அன்மொழித்தொகை

15. மோனை நயத்தைத் தேர்க

அ) உள்முறை-வெள்ளம் ஆ) தண்பெயல்-தலைஇய  ) மீண்டும்-பீடு ஈ) வெள்ளம்-மூழ்கி

 

தேர்வு-5

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. காசிக்காண்டம் என்பது

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

2 . காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது  ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்

3. தார் வேம்பன் என்பது யாரைக்குறித்தது?

அ) குசேல பாண்டியன் ஆ) குலேச பாண்டியன்   இ) இறைவன்  ஈ) இடைக்காடனார்

4. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறன் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

5. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? 

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா? 

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

6. முத்துக்குளிக்கும் நகரம்---------

) வஞ்சி    ) பூம்புகார்    ) கொற்கை   ) மதுரை

7. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா

8. மெது உருளைகளைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்………

) soft cylinder   ) roller   ) tyre     ) softees

9. மனக்கோட்டை கட்டினான்என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள்

அ) புகழ்பெற்று விளங்குதல் ஆ) அழகாக இருத்தல்  இ) கற்பனை செய்தல்  ஈ) வீண் செலவு

10. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம் தொடருக்குப் பொருந்திய தலைப்பு

அ) வனத்தின் நடனம்  ஆ) காற்றின் பாடல்  இ) மிதக்கும் வாசம்  ஈ) மொட்டின் வருகை

11. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

    "உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

    செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

    அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

    முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"     

12. பாடலின் ஆசிரியர்-

அ) பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) தமிழழகனார்

13. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.

அ) செந்தாமரை  ஆ) வீசுதென்றல்  இ) உணர்வெழுப்ப  ஈ) சிறகார்ந்த

14. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.

அ) கனல்  ஆ) உந்தி  இ) யாண்டும்   ஈ) வண்டு

15. பாடல் இடம்பெற்றுள்ள நூல் -

அ) உலகியல் நூறு  ஆ) பாவியக் கொத்து  இ) கனிச்சாறு  ஈ) எண்சுவை

 

தேர்வு-6

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. 'மொழி ஞாயிறு' என்று போற்றப்படுபவர்

அ) தேவநேயப் பாவாணர்) முத்தையா  ) ப.சிங்காரம் ஈ) கா.நமச்சிவாயர்

2. 'மகிழுந்து வருமா?' என்பது -

அ) விளித்தொடர்  ஆ) எழுவாய்த்தொடர்  ) வினையெச்சத்தொடர் ஈ) பெயயெச்சத் தொடர்

3) காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது.

அ) சுட்டி  ஆ) கிண்கிணி) குழை  ஈ) சூழி

4.வளி மிகின் வலி இல்லை என்று காற்றைச் சிறப்பித்தவர்…………

) வெண்ணிக்குயத்தியார்  ) இளநாகனார்  ) ஐயூர் முடவனார்   ) ஔவையார்

5. கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய முதல் நாடகம்....

அ) பழநியப்பன்  ஆ)தூக்குமேடை இ) மணிமகுடம் ஈ) காகிதப்பூ

6. வருந்தாமரை என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

அ) வரும் தாமரை -வருகின்ற தாமரை  ஆ) வரும் தா மரை -தாவும் மான் வருகிறது

இ) வருந்தா மரை - வருந்தாத மான்  ஈ) வருந் தாம் அரை - வருந்தி தாம் பாதியாக

7. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி -இப்பழமொழியில் இருக்கும் தமிழ் எண்களைக் கண்டறிக.

அ) க,   ஆ) க,   )  , ஈ) ச,கஅ

8. குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கியம்

அ) முத்தொள்ளாயிரம்  ஆ) திருக்குறள்  இ) சிலப்பதிகாரம்  ஈ) தேம்பாவணி

9. பொ.ஆ.ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றசர்....

அ) போதிதர்மர்  ஆ) பெருஞ்சாத்தன்  ) குமண வள்ளல்  ஈ) நன்னன்

10. திருமால் குன்றம் என்பது தற்போது அழைக்கப்படும் பெயர்

அ) அழகர் மலை  ஆ) சுருளி மலை  இ) மதுரை  ஈ) குமரி

11. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எனும் நூலை இயற்றியவர்      

) வீரமாமுனிவர்  ) ஜி.யு.போப்  ) கிருட்டிணப்பிள்ளை  ) கால்டுவெல் 

பாடலைப் படித்து, பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

'மேகங்கள் மிகவும் மென்மையானவை

இதழ் முகிழ்க்கும் மழலையின்

கன்னம் போல

அல்லது காதுக் கருத்து போல

எனினும் மேகங்கள்

12. இப்பாடல் இடம் பெற்றுள்ள பாடப் பகுதி

அ) நதியின் கால்கள் ஆ) ஏழாவது சுவை  இ) மேகம்  ஈ) சொல்லாத சொல்

13. 'மழலையின் கன்னம் போல' - இருந்தது எது?

அ) வானவில் ஆ) மேகம்  ) நிலவு  ஈ) கதிரவன்

14. கொடுக்கப்பட்டுள்ள அடிகளில் இருந்து எதுகையை எடுத்து எழுதுக.

அ) மென்மையானவை – கன்னம்  ஆ) மேகங்கள் - கன்னம்

இ) மென்மையானவை – குருத்து  ஈ) மேகங்கள்- மேகங்கள்

15.இப்பாடலின் ஆசிரியர் யார்?

அ) நாகூர் ரூமி  ஆ) கண்ணதாசன்  ) கீரந்தையர்  ஈ) பெருஞ்சித்திரனார்

 

தேர்வு-7

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1 ஈதல் என்ற தொழிற்பெயரின் வினையடி                                        

) ஈகை   )   ) தல்  ) ஈக

2. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள்

) அக்டோபர் முதல் டிசம்பர் ஆ) ஜனவரி முதல் மார்ச்சு

) ஜூலை முதல் செப்டம்பர் ) ஜூன் முதல் செப்டம்பர்

3. முதற்பொருள் என்பது

அ) கருப்பொருள், உரிப்பொருள் ஆ) நிலமும், பொழுதும்

இ) கார் காலமும், குளிர்காலமும்  ஈ) அகப்பொருள், புறப்பொருள்

4. காற்றுமாசுபாட்டைக் குறைக்க தற்போது குளிர்பதனப் பெட்டிகளில் பயன்படுத்தப் படுவது……..

) அம்மோனியா   ) பாஸ்பீன்    ) ஹைட்ரோகார்பன்   ) அசிட்டிலின்

5. பன்மொழிப்புலவர் எனப் போற்றப்படுபவர்……..                                    

) .பொ.சிவஞானம்  ) கா.அப்பாதுரையார்  ) சந்தக்கவிமணி  ) பெருஞ்சித்திரனார்

6. இட்டலிப்பூ என்று அழைக்கப்படுவது

அ) வெட்சி  ஆ) வஞ்சி  இ) காஞ்சி  ஈ) கரந்தை

7.உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார் ...

அ) ஔவையார்  ஆ) கம்பர்  இ) தொல்காப்பியர்  ஈ) திருவள்ளுவர்

8. அடுக்குத்தொடரைக் கண்டறிக.

) பலபல       ) பற்பல    ) பளபள     ) சல சல

9. தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு…….சதவீதம் மழைபொழிவைத் தருகிறது.

) ஐம்பது   ) அறுபது   ) எழுபது    ) எண்பது

10. மேன்மை தரும் அறம் என்பது

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது  ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

11. நாகூர் ரூமியின் புகழ் பெற்ற நாவல்

ஆ) நதியின் கால்கள் ஆ) குமுதம்  இ) கணையாழி  ஈ) கப்பலுக்குப் போன மச்சான்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்கவும்

'காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி

நாவலோடு என்றிசைக்கும் நாளோதை, காவலன் தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

12. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) முத்தொள்ளாயிரம் ஆ) சிலப்பதிகாரம் இ) திருவிளையாடற்புராணம் ஈ) கம்ப இராமாயணம்

13. கொல்யானை - இலக்கணக்குறிப்பு

அ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை  ஆ) பண்புத்தொகை இ) வினைத்தொகை ஈ) உவமைத்தொகை

14. 'நாவலோ' என்பதன் பொருள்

அ) நாவால் உரைத்தல் ஆ) பாடுதல் இ) சங்கு ஈ) நாள் வாழ்க

15. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகை சொற்கள்

அ) காவல் - களத்து ஆ)நாவலோ – நாளேதை இ) கொல்யானை நல்யானை ஈ) மேலிருந்து – போலுமே

 

 

தேர்வு-8

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்………

) தொல்காப்பியர்  ) திருமூலர்   ) பவணந்தி   ) போகமுனிவர்

2. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும்  ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்  ஈ) வானத்தையும் பேரொலியையும்

3. மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் இந்தியமொழி                        

) சமற்கிருதம்   ) தமிழ்   ) இந்தி   ) பஞ்சாபி                                  

4. தொடருக்குப் பொருத்தமான வண்ணச்சொல்லைத் தெரிவு செய்க.

------மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

அ) பச்சை  ஆ) வெள்ளை  இ) சிவந்தது  ஈ) மஞ்சள்

5. ஐம்பூதங்களில் முதல் பூதமாக பரிபாடல் குறிப்பிடுவது-- அ) காற்று    ஆ) வானம்    இ) நிலம்   ஈ) நீர்

6. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

    இன்மையே இன்னா தது.    -இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

அ) உவமை அணி  ஆ) சொல் பின்வருநிலை அணி

இ) சொற்பொருள் பின்வருநிலை அணி  ஈ) வஞ்சப் புகழ்ச்சி அணி

7. 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற புதினத்தின் ஆசிரியர்

அ) பிரபஞ்சன்  ஆ) நாகூர் ரூமி  இ) கருணாநிதி  ஈ) கண்ணதாசன்

8. பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

) பிளேட்டோ   ) ஹிப்பாலஸ்  ) அரிஸ்டாடில்   ) சாக்ரடீஸ்

9. 'முறுக்கு மீசை வந்தார்' என்பது

அ) உவமைத்தொகை  ஆ) பண்புத்தொகை  இ) அன்மொழித்தொகை  ஈ) வினைத்தொகை

10. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" குறிப்பிடப்படாத நிறத்தைக்  கண்டறிக.

அ) கருமை  ஆ) பச்சை  இ) பழுப்பு  ஈ) நீலம்

11. தொடருக்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தேர்க.

காற்றின் மெல்லிய----- பூக்களைத் தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான-----

பூக்களை மாலையாக்குகிறது.

அ) நடித்தல், நடிப்பு ஆ) சுட்டல், சுடுதல் இ) தொடுதல், தொடுத்தல் ஈ) தொடுத்தல், தொடுதல்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

"வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்:

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்:"

12. இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ) முத்தொள்ளாயிரம் ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம் ஈ) காசிக்காண்ட தமிழ் பக்கம் 1

13. 'காருகர்' என்ற சொல்லின் பொருள் அ) ஓவியர் ஆ) நெய்பவர் இ) சிற்பி ஈ) வெற்றிலை விற்பவர்

14. 'வண்ணமும் சுண்ணமும்' இலக்கணக் குறிப்பைத் தேர்க.

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) எண்ணும்மை

15. இப்பாடலின் ஆசிரியர்

அ) பரஞ்சோதி முனிவர் ஆ) இளங்கோவடிகள் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) கம்பர்

தேர்வு-9

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1) வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது

அ) குலைப்பெயர் வகை  ஆ) மணிப்பெயர் வகை  இ) கிளைப்பெயர் வகை  ஈ) இலைப்பெயர் வகை

2) தமிழ்ச்சொல்வளம் எனும் கட்டுரை இடம் பெற்ற நூல்………

) சொல்லாய்வுக்கட்டுரைகள்  ) தேவநேயம்  ) மொழிமரபு  )ஆய்வியல் நெறிமுறைகள்

3) அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

அ) வேற்றுமை உருபு  ஆ) எழுவாய்  இ) உவம உருபு  ஈ) உரிச்சொல்

4) குரல் உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து இவ்வடியில் புறநானூறு குறிப்பிடும் பண்பு-

) தனித்துண்ணார்   ) அல்லிலாயினும் 

) இன்மையிலும் விருந்தோம்பல்  ) முகமலர்ச்சி

5) திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்

) 25  ஆ) 70   ) 38  ) 5

6) செய்தொழில் - இலக்கணக்குறிப்பு

அ) பண்புத்தொகை  ஆ) வினைத்தொகை  இ) அன்மொழித்தொகை  ஈ) உம்மைத்தொகை

7) 'உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்' என்று கூறியவர்

அ) கபிலர்  ஆ) நச்செள்ளையார்  இ) ஔவையார்  ஈ) சாத்தனார்

B) வினைத்தொகையைக் கண்டறிக

) நன்மொழி   ) மற்றொன்று   ) பள்ளிசெல்   ) அலங்கு கழை

9) 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே.......

அ) திருப்பதியும், திருத்தணியும்  ஆ) திருத்தணியும், திருப்பதியும்

இ) திருப்பதியும், திருச்செந்தூரும்  ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும்

10) சித்திரை, வைகாசி மாதங்களை காலம் என்பர்.

அ) முதுவேனில் ஆ) பின்பனி  இ) முன்பனி  ஈ) இளவேனில்

11) பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:

அ) கொண்டல்  - 1. மேற்கு

ஆ) கோடை  - 2, தெற்கு

இ) வாடை  - 3. கிழக்கு

ஈ) தென்றல்  - 4. வடக்கு

) 4, 3, 2, 1    ) 3, 4, 1.2  ) 1, 2, 3, 4   ) 3, 1. 4. 2.

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:

"தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைக்கண் விழித்து நோக்கத்

தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்      

வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ"

12) இப்பாடல் இடம்பெறும் நூல் அ) பெரியபுராணம் ஆ) கம்பராமாயணம்  இ) சிலப்பதிகாரம் ஈ) பரிபாடல்

13) இப்பாடலின் ஆசிரியர்         அ) சேக்கிழார்  ஆ) இளங்கோவடிகள் இ) கம்பர் ஈ) கீரந்தையார்

14) 'எழினி' என்ற சொல்லின் பொருள் ..........    அ) திரைச்சீலை ஆ) மேகம் இ) சூரியன் ஈ) கொடி

15) இப்பாடலில் இடம்பெறும் அடிஎதுகைச் சொற்களை எழுதுக.

அ)தண்டலை தாமரை ஆ)தெண்டிரை – தேம்பிழி  இ)தாங்கக் – ஏங்கக் ஈ)தண்டலை – கொண்டல்கள்

தேர்வு-10

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           15×1=15

1. "விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்" என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து  ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து  ஈ) உற்றாரின் விருந்து

2. முதனிலை திரிந்த தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க. அ) உரை  ஆ) நடத்தல்  இ) நடவாமை  ஈ) சூடு

3. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

அ) குண்டலம் ஆ) சூழி  இ) சிலம்பு  ஈ) அரைஞான்

4. உலகமே - வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட

அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவர் யாவர்?

அ) உதியன்: சேரலாதன் ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன்; கிள்ளிவளவன்  ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

5. உலகக்  காற்றுநாள்…………    ) செப்டம்பர் 15    ) ஆகஸ்டு 15    ) ஜூலை 15   ) ஜூன் 15

6. கண்ணுள் வினைஞர் எனக் குறிப்பிடப்படுபவர்

அ) நெய்பவர்  ஆ) பிட்டு விற்போர்  இ) ஓவியர் ஈ) அப்பம் விற்போர்

7. முன்னிலை வினையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) பறந்தன  ஆ) வந்தீர்  இ) நீவிர்  ஈ) வந்தேன்

8. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறள்  ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ஈ) சிலப்பதிகாரம்

9. மரபு வழுவமைதி----

அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.

ஆ) "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது.

இ) "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்' என்று கூறினான்.

ஈ) "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்" - பாரதியார்.

10. வளிதொழில் ஆண்ட உரவோன்எனப்  பாராட்டப் பட்டவன் யார்? பாராட்டியவர் யார்?

) வெண்ணிக்குயத்தியார்,கரிகால் பெருவளத்தான்  ) கோவலன்,இளங்கோவடிகள்

) கரிகால் பெருவளத்தான்,வெண்ணிக்குயத்தியார்  ) அதியமான்,ஔவையார்

11. பச்சை சட்டை ஓடினார் என்பது

அ) வேற்றுமைத்தொகை  ஆ) அன்மொழித் தொகை  இ) வினைத்தொகை  ஈ) பண்புத்தொகை

பாடலைப் படித்து பின்வரும் (12,13,14,15) வினாக்களுக்கு விடை தருக.

"சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்.

நல்நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்

பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக்கேட்டுச்

சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிதும் முடி துளக்கான் ஆகி.

12. இப்பாடல் இடம்பெற்ற நூல் .

அ) கம்பராமாயணம் ஆ) திருவிளையாடற்புராணம்  இ) சிலப்பதிகாரம் ஈ) தேம்பாவணி

 13. இப்பாடலின் ஆசிரியர்

அ) இளங்கோவடிகள் ஆ) பரஞ்சோதி முனிவர் இ) கீரந்தையார் ஈ) குமரகுருபரர்

14. நகுதார் வேம்பன் - எனக் குறிப்பிடப்படுபவர்

அ) புலவர் ஆ) பாண்டிய மன்னன் இ) நண்பர் ஈ) இறைவன்

15. சொல் நிறையும் கவி தொடுத்தேன் எனக் கூறுபவர்..........

அ) குலேசபாண்டியன் ஆ) இறைவன் இ) இடைக்காடனார் ஈ) கம்பர்

பதிவிறக்கம் செய்ய



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை