FIRST REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY CHENNAI DISTRICT

 


முதல் திருப்புதல் தேர்வு-2025 சென்னை & செங்கல்பட்டு மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

.

1

2.     

. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

3.     

. அகவற்பா.

1

4.     

ஈ. இளவேனில்

1

5.     

. கருணையன், எலிசபெத்துக்காக

1

6.     

. கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

1

7.     

. உழவு, ஏர், மண், மாடு 

1

8.     

. பண்புத்தொகை  

1

9.     

. திருப்பதியும் திருத்தணியும் 

1

10.   

. கற்பனை செய்தல்

1

11.    

. செய்தி 1.3 ஆகியன சரி

1

12.   

. திகழ்முத்தம்-நகைமுத்த & ஈ. நந்தின் -  ந்தர்

1

13.   

. பாக்கு

1

14.   

ஈ. உவமை அணி

1

15.   

. குவிமொட்டு,இளங்கமுகு

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

நடுநிலையாக்க் கடமை தவறாமல் இரக்கம் காட்ட வேண்டும்

2

17

காற்று உயிருக்கு நாற்று , தூய காற்று அனைவரின் உரிமை

2

18

வாருங்கள், நலமா?, நீர் அருந்துங்கள்

2


19

ü  முதுகினால் சூரியனை மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை.

ü  தாகம் தீர்க்கும்போது மேகங்கள் கருணை மிக்கவை

2


20

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

2

21

அருமை  உடைத்தென் றசாவாமை  வேண்டும்

பெருமை முயற்சி  தரும்.

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. விருந்து  ஆ. பல்துறை ஊடகம்

2

23

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

 (-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

               கோலொடு நின்றான் இரவு.

2

24

. துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும்.

. மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்துப் போல நிலையானது.

2

25

பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;

பதி - பகுதி

த் - சந்தி (ந் -ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

2

26

  . சோறு  . கரு

2

27

இதோ முடித்து விட்டேன்

2

28

அ. அடுக்குத்தொடர்   ஆ. பெயரெச்சத் தொடர்(தெரிநிலைப் பெயரெச்சம்)

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  தொலைக்காட்சி வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

ü  வணிக விளம்பரங்களை பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது.

ü  புதுவகையான சிந்தனைகள் மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது.

3

30

·        வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

·        வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.

·        நாக்கு ஒரு அதிசய திறவுகோல்; இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவைத் திறப்பதும் அது தான்

3

31

1. தமிழா துள்ளி எழு” எனும் தலைப்புடைய பின்தறிக்கை ஒன்றை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.                                      2. அவரது அன்னையார் இளமையிலேயே பயிற்றுவித்த பாக்கள்  மூலம்.                                            3. அவரது வாழ்நாளில் அவராக முயன்று சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் அவரிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறு இல்லை.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

33

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

3

34

 

.

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

.

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

36

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

3

37

சீர்

அசை

வாய்பாடு

அறனீனும்                      

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

இன்பமும்

நேர்+நிரை

கூவிளம்

ஈனும்

நேர்+நேர்

தேமா

திறனறிந்து

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

தீதின்றி

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

வந்த

நேர்+நேர்

தேமா

பொருள்

நிரை

மலர்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

வரவேற்பு:

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம்.     அவர்கள் அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க நீர் தந்தோம்.

கலந்துரையாடல்:

நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின், வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது.

விருந்து உபசரிப்பு :

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.

நகர்வலம்:

விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்

இரவு விருந்து :

நகர்வலம் முடிந்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர்.

பிரியா விடை :

இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.

(அல்லது)

)

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார்.

5

39

.

உறவினருக்குக் கடிதம்

7, திருத்தணி,

14-05-2024

அன்புள்ள அத்தைக்கு,

            நலம். நலமறிய ஆவல். எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்பாராட்டி, பரிசு வழங்கினர். எனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியைத் தங்களுடனும்  பகிர விரும்புகிறேன். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.

நன்றி!

இப்படிக்கு

தங்கள் அன்புள்ள

வா.நிறைமதி.

உறைமேல் முகவரி:

வே. தமிழ்மகள்,

2, தெற்கு வீதி,  

மதுரை-1

) பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

செ.தமிழரசன்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

) பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

)

    சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

 

                                                                  பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) முன்னுரை:

   கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.  “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர்  கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்

     தன் பதினான்காம் வயதில், பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.

பேச்சுக் கலைஞர்:

v  மேடைப்பேச்சினில் பெருவிருப்பம் கொண்ட கலைஞர், “நட்பு” என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது.

v  பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.

நாடகக் கலைஞர்:

v  தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார்.

திரைக் கலைஞர்

v  கலைஞரின் திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ராஜகுமாரி படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார்

v   சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்

இயற்றமிழ்க் கலைஞர்

   தமிழ் மீது திராத பற்றுகொண்ட கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.

முடிவுரை                                                                                          

 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.

. நாட்டுவளமும் சொல்வளமும்

முன்னுரை:

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்'

            என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம்.

தேவநேயப்பாவாணர்:

          தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

            ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

ü  ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

ü  விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.

ü  பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ü  செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது.

ü  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

       சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்

8

44

முன்னுரை:

              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:                            

              நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்: 

     திடீரென்று மேளமும்,நாகசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது

அழகுவின் ஆட்டம்:                                                                            

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார்..

முடிவுரை:

  “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுறஎன்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

 (அல்லது)

)  புயலிலே ஒரு தோணி

முன்னுரை:

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்

                                    தண்ணீரில் பிழைக்க வைத்தான்

            பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்

விடாது பெய்த மழை:

கடுமையான வெயில் மறைந்து,இமை நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள  கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தள்ளாடிய கப்பல் (தொங்கான்):

           மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான்ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல் தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..

பயணிகளின் தவிப்பு:  

பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம்  தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான். அதற்கு கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.

கரையைக் காணுதல்:

            ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக   மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர  கப்பல்கள்  கரை முழுவதும் நின்றிருந்தன.

முடிவுரை:

இயற்கையைப் போன்று யாராலும் கொடுக்க முடியாது

                             இயற்கை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது

 

தமிரோ?” என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.யா மஸ்தாஇன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார்புயலிலே ஒரு தோணி கதையில்  இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின.

8

45

) பொங்கல் திருநாள்

முன்னுரை:

         தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, இயற்கைநேயம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான திருநாள் பொங்கல் ஆகும். உழவுத்தொழிலின் மகத்துவத்தை உணர்த்தும் இத்திருநாள் தமிழர்களின் தனித்துவமான அடையாளமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல் மகிழ்ச்சி, ஒற்றுமை, நன்றி உணர்வு ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்துகிறது.

தமிழர் திருநாள்:

          பொங்கல் தமிழர்களின் தேசியத் திருநாளாகக் கருதப்படுகிறது. இயற்கை தந்த விளைச்சலுக்காக சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக இது அமைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து புதிய அரிசி, பால், வெல்லம் கொண்டு பொங்கல் சமைத்து மகிழ்வது இத்திருநாளின் முக்கிய அம்சமாகும்.

விழாவின் சிறப்பு:

       பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்தல், கோலம் போடுதல், புதிய ஆடைகள் அணிதல், உறவினர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்தல் போன்றவை விழாவின் சிறப்புகளாகும். இயற்கையோடு இணைந்து வாழும் தமிழர் பண்பாட்டை இந்த விழா வெளிப்படுத்துகிறது.

மாட்டுப் பொங்கல்:

        உழவுக்குத் துணைபுரியும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, பூஜை செய்து உணவு அளிப்பது வழக்கமாகும். விவசாயத்தில் மாடுகளின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறும் நாளாக இது அமைந்துள்ளது.

காணும் பொங்கல்:

          காணும் பொங்கல் அன்று மக்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து மகிழ்கிறார்கள். பூங்கா, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிப்பதும், ஒற்றுமையை வலுப்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும்.

சமத்துவ பொங்கல்:

         சமத்துவ பொங்கல் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நாளாகும். சாதி, மதம், ஏழைபணக்காரர் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றாக பொங்கல் கொண்டாடுவது இதன் சிறப்பாகும். இது மனிதநேயமும் சமத்துவமும் வளர உதவுகிறது.

முடிவுரை:

       பொங்கல் திருநாள் தமிழர்களின் பண்பாடு, உழைப்பின் மதிப்பு, இயற்கைநேயம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை உணர்த்தும் மகத்தான விழாவாகும். இவ்விழாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டு, அதை தலைமுறைதோறும் பேணிப் பாதுகாப்பதே நமது கடமையாகும்.

 (அல்லது)

) போதை இல்லாப் புது உலகைப் படைப்போம் - கட்டுரை

முன்னுரை

    உலக நாகரிகம் வளர வளர மனித வாழ்க்கை முறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச் செல்கின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் போதைப் பாவனை. உலகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. மது, போதைவஸ்து, சிகரட் பாவனை போன்ற தீய பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயர் வலிமை பெற்றுள்ளமை வேதனைக்குரியதாகும்.

போதைப் பொருட்கள் என்பவை

     உடல், உளப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுமான போதைக்காக நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும் பொருட்கள் போதைப் பொருட்கள் எனப்படும்.  உதாரணமாக அபின், கஞ்சா, ஹெரோயின், சாராயம், சிகரட், பீடி, கசிப்பு, சுருட்டு போன்றவற்றைக் கூறலாம்.

போதைப் பொருளும் சமுதாயமும்

    சமுதாயத்தில் மாணவர்களும், படித்தவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். இத்தகைய நல்ல சமூகத்துக்குச் சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் சவாலாக உள்ளது. போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள் இரையாவதன் மூலம் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது.

     போதைப் பாவனையால் ஏற்படும் சமுதாய பிரச்சனைகள் போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

      வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

போதை என்னும் ஆயுதம்

      ஒரு தேசத்தை அல்லது ஓர் சமுதாயத்தை அல்லது தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும். போதை எனும் ஆயுதம் மனித வாழ்க்கையை மட்டுமல்லாது தனிமனித கௌரவம், அந்தஸ்து, பணம் போன்றவற்றை அழிப்பது மட்டுமல்லாது உயிரையும் காவு கொள்கின்றது. எனவே இதனை ஒவ்வொரு மனிதர்களும் உணர்ந்து தமது உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து தீய வழிகளில் செல்லாமலும் போதைப் பாவனை தொடர்பாக விழிப்புடனும் இருத்தல் வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்

சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றது.

    சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

    கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.

முடிவுரை

     உலக அளவில் போதைப் பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும், சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம். போதைப் பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்!

8

 பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை